என் மலர்

  நீங்கள் தேடியது "15 Death"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் இன்று கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #25Passengersdied #Mandyabus #PMModi
  பெங்களூரு:

  கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று மதியம் பாண்டவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது.
   
  இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று கால்வாயில் தத்தளித்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைசேர்ந்தனர். நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கிய சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.  இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ள நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #25Passengersdied #Mandyabus #PMModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். #KarnatakaBusAccident #BusPlungedCanal
  மாண்டியா:

  கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து இன்று மதியம் பாண்டவபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

  இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று கால்வாயில் தத்தளித்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தி கரைசேர்ந்தனர். நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

  இந்த விபத்தில் 15 பேர் பலியானதாகவும், மேலும் சிலர் தண்ணீரில் தத்தளிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. #KarnatakaBusAccident #BusPlungedCanal
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீனாவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. #ChinaBusAccident #WomanAttacksDriver
  பீஜிங்:

  சீனாவின் வான்ஜோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் பேருந்து பாலத்தை உடைத்துக்கொண்டு யாங்ட்சே ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  டிரைவர் போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்றதால்  விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், விபத்துக்குள்ளான பேருந்து புறப்பட்டு வந்த இடத்தில் இருந்து விபத்து ஏற்பட்ட பகுதி வரையிலான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும், பேருந்து தாறுமாறாக ஓடியபோது அருகில் சென்ற ஒரு வாகனத்தின் டேஷ்போர்டு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், பேருந்து தவறான பாதையில் சென்றது மட்டும் தெரியவந்தது. அதற்கான காரணம் தெரியவில்லை.

  இந்நிலையில், ஆற்றில் மூழ்கிய பேருந்தில் இருந்த கேமரா பதிவு நீர்மூழ்கி வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தது விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவந்தது.  10 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பதிவை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், பேருந்து டிரைவருடன் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பயணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தன் செல்போனால் தாக்குவதும், பதிலுக்கு டிரைவர் தனது வலது கையால் தாக்குவதும், பேருந்து தாறுமாறாக ஓடுவதைப் பார்த்த பயணிகள் கத்தி கூச்சலிடுவதும் பதிவாகி உள்ளது. பேருந்தில் பயணி ஒருவர் டிரைவரை தாக்கியதால் விபத்துக்குள்ளாகி, 15 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. #ChinaBusAccident #WomanAttacksDriver  ×