என் மலர்
நீங்கள் தேடியது "விவோ"
- இது ஸ்மார்ட்போன்களின் கேமரா பயன்பாட்டில் உள்ள டெலி-கன்வெர்ட்டர் பயன்முறையைப் பயன்படுத்தி தானாகவே செயல்படுத்த முடியும்.
- விவோ X300 சீரிசில் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் வழங்கப்படும்.
விவோ நிறுவனத்தின் X300 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விவோX300 மற்றும் X300 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் இன்னும் இரு வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், விவோ X300 ஸ்மார்ட்போனின் விலை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் தகவலின் அடிப்படையில், இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனுடன் போட்டியிடக்கூடும். கூடுதலாக, ப்ரோ வேரியண்ட் உடன் தனித்தனியாக வாங்கக்கூடிய டெலி-கன்வெர்ட்டர் கிட் இந்திய விலையையும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.
விவோX300 இந்தியாவில் விலை விவரம்:
டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி தனது எக்ஸ் தள பதிவில் விவோ X300 பேஸ் மாடலின் விலையை பகிர்ந்துள்ளார். அதன்படி விவோX300 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89,999 என்று அவர் கூறியுள்ளார். இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 74,999 ஆகவும், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 80,999 ஆகவும் இருக்கலாம்.
இது தவிர, இந்தத் சீரிசுக்கான டெலி-கன்வெர்ட்டர் கிட் அல்லது டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட் விலை இந்திய சந்தையில் ரூ. 20,999 என கூறப்படுகிறது. இந்த கிட், கிளிக் செய்யப்படும் எந்தப் படத்தின் ஆப்டிகல் ஜூமையும் நீட்டிக்கும் Zeiss 2.35x டெலி-கன்வெர்ட்டர் லென்ஸ்களை வழங்குகிறது. இது ஸ்மார்ட்போன்களின் கேமரா பயன்பாட்டில் உள்ள டெலி-கன்வெர்ட்டர் பயன்முறையைப் பயன்படுத்தி தானாகவே செயல்படுத்த முடியும்.
புதிய விவோX300 ஸ்மார்ட்போன் சம்மிட் ரெட் நிறத்தில் வெளியாகும் என்று டிப்ஸ்டர் கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மிஸ்ட் ப்ளூ மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரீமியம் X300 ப்ரோ மாடல் டூன் பிரவுன் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
இது தவிர, விவோ X300 சீரிசில் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் வழங்கப்படும் என்றும், இது VS1 ப்ரோ இமேஜிங் சிப் மற்றும் V3+ இமேஜிங் சிப் உடன் இணைக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 இல் இயங்கும்.
- இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் 5,440mAh பேட்டரி கொண்டுள்ளது.
- விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம், ஆக்ஷன் பட்டன் கொண்டுள்ளது.
விவோ X300 ப்ரோ மற்றும் விவோX300 ஆகியவை உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன. சீனாவில் விவோX300 சீரிஸ் அறிமுகமான இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி இருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் முதன்மையான 3nm ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் கொண்டிருக்கின்றன.
மேலும், விவோX300 ப்ரோ மற்றும் விவோ X300 ஸ்மார்ட்போன்கள் மூன்று பின்புற கேமரா சென்சார்களை கொண்டுள்ளன. முன்பக்கத்தில், இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 50MP செல்ஃபி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பஞ்ச் டிஸ்ப்ளே கட்அவுட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய தகவல்களின்படி, விவோ X300 சீரிஸ் டிசம்பர் மாத தொடக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
விவோ X300 ப்ரோ அம்சங்கள்:
விவோX300 ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது. இது 6.78-இன்ச் 1,260×2,800 பிக்சல் ஃபிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப், மாலி G1-அல்ட்ரா GPU உடன் வருகிறது. மேலும், 16 ஜிபி LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512 ஜிபி UFS 4.1 மெமரியுடன் கிடைக்கும்.
புகைப்படங்களை எடுக்க விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் 50MP (f/1.57) பிரைமரி கேமரா, 50MP (f/2.0) அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 100x டிஜிட்டல் ஜூம் கொண்ட 200MP (f/2.67) பெரிஸ்கோப் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50MP (f/2.0) செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

சென்சார்களை பொருத்தவரை 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார், ஹால் எஃபெக்ட் சென்சார், ஐஆர் பிளாஸ்டர், ஃப்ளிக்கர் சென்சார் மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார் ஆகியவை அடங்கும். கனெக்டிவிட்டிக்கு வைஃபை 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் USB 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் 5,440mAh பேட்டரி கொண்டுள்ளது. விவோX300 ப்ரோ ஸ்மார்ட்போன் டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம், ஆக்ஷன் பட்டன் கொண்டுள்ளது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 சான்று பெற்றுள்ளது.
விவோ X300 அம்சங்கள்:
விவோX300 ஸ்மார்ட்போனிலும், ப்ரோ வேரியண்ட்டில் உள்ள அதே பிராசஸர், ஓஎஸ், கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. எனினும், இது சிறிய 6.31-இன்ச் 1,216×2,640 பிக்சல் ஃபிளாட் Q10+ LTPO AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது. மேலும், விவோX300 ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக, இது 5,360mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புகைப்படம் எடுக்க விவோ X300 மாடலில் OIS உடன் 200MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ப்ரோ மற்றும் ஸ்டாண்டர்ட் மாடல்கள் இரண்டும் ஒரே செல்ஃபி கேமராவுடன் வருகின்றன.
விவோ X300 சீரிஸ் விலை விவரங்கள்:
புதிய விவோ X300 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரியுடன் கூடிய ஒரே வேரியண்ட் விலை யூரோக்கள் 1,399 (இந்திய மதிப்பில் ரூ. 1,43,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவோ X300 விலை 1,049 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,08,000) இல் இருந்து தொடங்குகிறது.
விவோ X300 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் நவம்பர் 3ஆம் தேதி ஐரோப்பாவில் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனைக்கு வரும். விவோ X300 ப்ரோ டியூன் பிரவுன் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது. விவோ X300 ஸ்மார்ட்போன் ஹாலோ பிங்க் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
- IP68 மற்றும் IP69 தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது.
- ஸ்மார்ட்போன் குவாட் கர்வ்டு டிஸ்பிளே, செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட் அவுட் கொண்டிருக்கிறது.
சந்தைக்கு புதிதாக வந்திருக்கும் விவோ V60e, பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக, 200MP கேமராவுடன் ரூ.29,999 விலையில் கிடைக்கிறது. AI பெஸ்டிவல் போர்ட்ரெய்ட் என அழைக்கப்படும் இந்தியாவிற்கான பிரத்யேக புகைப்பட அம்சத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
6,500mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் புதிய விவோ V60e ஸ்மார்ட்போன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் IP68 மற்றும் IP69 தரச்சான்றுடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் கர்வ்டு டிஸ்பிளே, செல்பி கேமராவிற்கான பஞ்ச் ஹோல் கட் அவுட் கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன் டச் ஓஎஸ் கொண்டிருக்கும் விவோ V60e ஸ்மார்ட்போனிற்கு, ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்டுகள் வழங்குவதாக விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போன்றவை இதன் மதிப்பை உயர்த்துகிறது.
- புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது.
- ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட X300 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விவோ ஸ்மார்ட்வாட்ச் அலுமினிய அலாய் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் GT2 என அழைக்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 2.5D வளைந்த 2.07-இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் சதுரங்க டயல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ப்ளூடூத், இசிம் (eSIM) ஆப்ஷன்களில் வருகிறது.
விவோ வாட்ச் GT2 மாடல் ப்ளூ ஓஎஸ் 3.0 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் தொழில்முறை பயிற்சியாளர்கள் மற்றும் படிப்புகளுடன் 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை ஆதரிக்கிறது. இந்த வாட்ச் பல்வேறு வண்ணங்களில் வருகிறது. இத்துடன் பொருந்தக்கூடிய வாட்ச் டயல்கள் உள்ளன.
மேலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒரே கிளிக்கில் குயிக் ரிலீஸ் ஸ்டிராப் மெக்கானிசம் கொண்டிருக்கிறது. இசிம் பயன்படுத்தும் பட்சத்தில், இது 8 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் ப்ளூடூத் மட்டும், பயன்படுத்தும் போது இந்த வாட்ச் 33 நாட்கள் வரை பேக்கப் வழங்கும்.
விலை விவரங்கள்:
புதிய விவோ வாட்ச் GT2 புளூ, ஸ்பேஸ் வைட், பிளாக் மற்றும் பின்க் வண்ணங்களில் வருகிறது. இதன் ப்ளூடூத் வேரியண்ட் விலை CNY 499 (இந்திய மதிப்பில் ரூ. 6,220) ஆகவும், இசிம் வேரியண்ட் விலை CNY 699 (இந்திய மதிப்பில் ரூ. 8,710) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டிருக்கும். இருப்பினும் சிப்செட் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- 92 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (FoV) உடன் 50MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விவோ V60e ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ V60e ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய மாடலாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், அதன் சில சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது.
அதன்படி புதிய ஸ்மார்ட்போன் பின்புறம் இரட்டை கேமரா சென்சார்களை கொண்டிருக்கும். இதில் 200MP பிரைமரி சென்சார், OIS வழங்கப்பட்டுள்ளது. விவோ வி60இ ஸ்மார்ட்போன், AI ஃபெஸ்டிவல் போர்ட்ரெய்ட் என அழைக்கப்படும் இந்தியாவிற்கான பிரத்யேக புகைப்பட அம்சத்தை அறிமுகப்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
விவோ V60e அம்சங்கள்:
விவோ இந்தியா வலைத்தளத்தில் உள்ள ஒரு மைக்ரோசைட் புதிய, விவோ V60e ஸ்மார்ட்போன்: எலைட் பர்பிள் மற்றும் நோபல் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இத்துடன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 + IP69 சான்றுகளுடன் வரும். இந்த ஸ்மார்ட்போனில் குறைந்தபட்ச பெசல்களுடன் கூடிய குவாட் கர்வ்டு டிஸ்ப்ளே மற்றும் செல்ஃபி கேமராவிற்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 கொண்டிருக்கும். இருப்பினும் சிப்செட் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விவோ V60e ஸ்மார்ட்போனில் மூன்று ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று விவோ நிறுவனம் உறுதியளித்துள்ளது.
கேமராவை பொறுத்தவரை, விவோ V60e ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 92 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ (FoV) உடன் 50MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விவோ V60e ஸ்மார்ட்போன் 6,500mAh பேட்டரியுடன் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளியாகும்.
- இத்துடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.
- கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப் டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும்.
விவோ நிறுவனம் தனது T4 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸர், 90W அதிவேக சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி மற்றும் 6.77-இன்ச் குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. புகைப்படங்கள் எடுக்க 50MP சோனி IMX882 பிரைமரி கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா கொண்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஜெமினி லைவ், AI கேப்ஷன்ஸ் மற்றும் AI இமேஜ் எக்ஸ்பாண்டர் போன்ற AI அம்சங்களுடன் வருகிறது.
அம்சங்கள்:
விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் (1,080×2,392 பிக்சல்கள்) AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 12GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 இல் இயங்குகிறது, மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போனில் OIS உடன் 50MP சோனி IMX882 பிரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் உடன் 50MP சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 2MP பொக்கே லென்ஸ் ஆகியவை அடங்கும். இத்துடன் 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப் டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக, இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 மற்றும் IP69 சான்று பெற்றிருக்கிறது.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 27,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல்கள் முறையே ரூ. 29,999 மற்றும் ரூ. 31,999 விலையில் கிடைக்கின்றன.
புதிய விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளேஸ் கோல்ட் மற்றும் நைட்ரோ ப்ளூ வண்ணங்களில் விற்கப்படுகிறது.
- விவோ Y400 5ஜி ஸ்மார்ட்போன் ஆலிவ் கிரீன் மற்றும் கிளாம் ஒயிட் வண்ணங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
- விவோ Y400 ப்ரோ 5ஜி மாடலில் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் வரும் என்று தெரிகிறது.
விவோ Y400 5ஜி ஸ்மார்ட்போன் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூன் 20-ம் தேதி விவோ நிறுவனம் Y400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் புதிய ஸ்மார்ட்போன் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ப்ரோ-அல்லாத மாடலின் வெளியீட்டிற்கு முன்னதாக, அதன் இந்திய விலை மற்றும் ஸ்மார்ட்போனின் சாத்தியமான வண்ணங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இது ஒரு மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மாடல் என்று கூறப்படுகிறது, அதன் ப்ரோ-மாடலை விட ஒப்பீட்டளவில் குறைந்த விலை கொண்டது. இருப்பினும், சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் விவோ Y400 5ஜி மாடலின் வெளியீட்டு தேதியை இன்னும் வெளியிடவில்லை.
புதிய ஸ்மார்ட்போன் தொடர்பாக 91மொபைல்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி , விவோ Y400 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 20,000 வரம்பிற்குள் நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் மிட் ரேஞ்ச் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலை ரூ. 24,999 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26,999 என நிர்ணயம் செய்யப்படலாம்.
விவோ Y400 5ஜி ஸ்மார்ட்போன் ஆலிவ் கிரீன் மற்றும் கிளாம் ஒயிட் வண்ணங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு மாறாக, விவோ Y400 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஃப்ரீஸ்டைல் ஒயிட், ஃபெஸ்ட் கோல்ட் மற்றும் நெபுலா பர்பிள் வண்ண விருப்பங்களில் வழங்கும் என்று தெரிகிறது.
விவோ Y400 5ஜி அம்சங்கள்:
விவோ Y400 5ஜி ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. விவோ Y400 ப்ரோ 5ஜி மாடலில் 6.77-இன்ச் Full-HD+ 3D Curved AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது. இதுவும் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 nits பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும் என தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர், 8 ஜிபி LPDDR4X ரேம், 256 ஜிபி UFS 3.1 மெமரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 50MP சோனி IMX882 பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
விவோ Y400 ப்ரோ 5ஜி மாடலில் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,500mAh பேட்டரி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது.
- வெளியீட்டு தேதி குறித்து விவோ இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
விவோ V60 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. விவோ V சீரிஸ் ஸ்மார்ட்போன் மலேசியாவின் SIRIM சான்றிதழ் வலைத்தளத்திலும் TUV SUD தளத்திலும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்துகின்றன.
இவை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ V50 மாடலின் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட விவோ S30 போன்ற வன்பொருள் அம்சங்களுடன் இது அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது.
இதுவரை அறிவிக்கப்படாத விவோ V60, SIRIM மற்றும் TUV வலைத்தளங்களில் V2511 என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளதாக Xpertpick தெரிவித்துள்ளது . SIRIM சான்றிதழ் தொலைபேசியின் பெயரை உறுதிப்படுத்துகிறது, அதே நேரத்தில் TUV பட்டியல் 90W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று தெரிவிக்கிறது.
இந்த சான்றிதழ் வலைத்தளங்களில் ஸ்மார்ட்போனின் தோற்றம், விவோ V60 விரைவில் ஆசிய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், அதன் வெளியீட்டு தேதி குறித்து விவோ இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
கடந்த டிசம்பர் 2024 இல் சீனாவில் அறிமுகமான விவோ S20-இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக விவோ V50 பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறையை பின்பற்றி, வரவிருக்கும் விவோ V60 ஸ்மார்ட்போன் மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட விவோ S30-ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இது ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
விவோ S30 ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் 1.5K (1,260×2,800 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸரில் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இதில் 50MP பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா யூனிட் கொண்டுள்ளது. இதில் 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 90W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6,500mAh பேட்டரி கொண்டுள்ளது.
- விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
- ஸ்மார்ட்போன் 16 ஜிபி LPDDR5X ரேம், 1TB வரை UFS4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது.
விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ் ஃபோல்ட் 5 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நேற்று சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 8.03 இன்ச் உள்புற பேனலைக் கொண்டுள்ளது. இரண்டு டிஸ்ப்ளேக்களும் 4,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளன.
இந்த மொபைல் ஏற்கனவே விற்பனைக்கு கிடைக்கும் விவோ எக்ஸ் ஃபோல்ட் 3 ப்ரோ மாடலை விட இலகுவானதாகவும், அளவில் மெலிதாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்திய விவோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் செய்ஸ் பிராண்டின் கேமரா சென்சார்கள்- இரண்டு 20MP செல்ஃபி கேமரா, மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதற்காக இந்த ஸ்மார்ட்போன் IPX8+IPX9+IPX9+ மற்றும் IP5X ரேட்டிங் பெற்றிருக்கிறது.
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 சிறப்பம்சங்கள்:
சிறப்பம்சங்களை பொருத்தவரை புதிய விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 மாடல் 8.03-இன்ச் 8T LTPO டிஸ்ப்ளே, 6.53-இன்ச் 8T LTPO வெளிப்புற ஸ்கிரீன் கொண்டுள்ளது. இதில் உள்ள பேனல்கள் 120Hz ரிப்ரெஷ் ரேட், 4,500 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளன. இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி LPDDR5X ரேம், 1TB வரை UFS4.1 ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஓரிஜின் ஓஎஸ் 5 கொண்டுள்ளது. புகைப்படம் எடுக்க விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 மாடலில் செய்ஸ் பிரான்டின்- 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, மற்றும் 20MP செல்ஃபி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் ஐபோன், ஏர்போட்ஸ், மேக்புக், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐக்ளவுட் உள்ளிட்ட ஆப்பிளின் சாதனங்களுடன் சீராக இயங்கும். பயனர்கள் தங்கள் தரவை தடையின்றி அணுக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்த சாதனங்கள் மற்றும் சேவைகளுடன் இணைக்க முடியும்.
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 மாடல் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 80W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 விலை விவரங்கள்:
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் 12GB + 256GB மாடல் CNY 6,999 (தோராயமாக ரூ. 83,800) விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் 12GB + 512GB மாடல் CNY 7,999 (தோராயமாக ரூ. 96,000) விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் 16GB + 512GB மாடல் CNY 8,499 (தோராயமாக ரூ. 1,02,000)
விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போனின் 16GB + 1TB மாடல் CNY 9,499 (தோராயமாக ரூ. 1,14,000)
புதிய எக்ஸ் ஃபோல்ட் 5 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் Baibai (பச்சை), Quingsong (வெள்ளை) மற்றும் Titanium (கருப்பு) வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. இது ஜூலை 2 முதல் அதிகாரப்பூர்வ இ-ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்லைன் வலைத்தளங்கள் வழியாக சீனாவில் விற்பனைக்கு கிடைக்கும்.
- விவோ X200 FE-யின் வலது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் இருப்பது போல் தெரிகிறது.
- நான்கு வண்ணங்களில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய விவோ X200 FE விரைவில் சர்வதேச சந்தைகளில் அறிமுகமாக உள்ளது. நிறுவனம் சமீபத்தில் அதன் மலேசிய வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவை தொடங்கியது. மேலும் அதன் வெளியீட்டு தேதியை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. விவோ X200 FE இன்று முதல் ஒரு வாரத்திற்குள் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மர்ட்போன் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் உட்பட நான்கு நிறங்களில் விற்பனை செய்யப்படும். விவோ X200 FE கேமரா சென்சார்கள் மாத்திரை வடிவில் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள அலகில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறம் செல்ஃபி கேமராவிற்கு ஒரு பஞ்ச்-ஹோல் கட்-அவுட் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
விவோ X200 FE வெளியீட்டு தேதி, வண்ண விருப்பங்கள்
விவோ நிறுவனத்தின் தைவான் பிரிவு, விவோ X200 FE அறிமுகத்திற்காக ஒரு மைக்ரோசைட்டை உருவாக்கி இருக்கிறது. இந்த போன் வருகிற 23-ந்தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துவதோடு, "விரைவில் வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டீசர் படங்களில், விவோ X200 FE பின்புறத்தில் Zeiss-பிராண்டட் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களுடன் காணப்படுகிறது, இரண்டு கேமரா சென்சார்கள் ஒற்றை மாத்திரை வடிவ யூனிட்டில் வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வளைய வடிவ LED ஃபிளாஷுக்கு மேலே ஒரு தனித்துவமான மூன்றாவது லென்ஸும் உள்ளது.
விவோ X200 FE-யின் வலது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் இருப்பது போல் தெரிகிறது. அதன் முன்பக்கத்தில் மெல்லிய பெசல்கள் மற்றும் முன்பக்க கேமராவிற்கான மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்-அவுட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ S30 ப்ரோ மினியுடன் பலவிதங்களில் ஒற்றுப்போகிறது. அதன்படி புதிய விவோ X200 FE அந்த ஸ்மார்ட்போனின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
விவோ நிறுவனம் வரவிருக்கும் இந்த போனை கருப்பு, நீலம், இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் என மொத்தம் நான்கு வண்ணங்களில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
விவோ X200 FE அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இன்னும் ரகசியமாகவே இருந்தாலும், மலேசிய இணையதளத்தில் சமீபத்தில் வெளியான விவோ X200 FE, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9300+ சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- டிஸ்ப்ளே பேனல்கள் அருகருகே இருப்பது போல் உள்ளது.
- கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
விவோ நிறுவனம் சீனாவில் S30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த மாடல் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். இந்த சீரிசில் பேஸ் விவோ எஸ்30 மற்றும் விவோ எஸ்30 ப்ரோ மினி என இரண்டு வேரியண்ட்கள் அடங்கும். இந்த மாடல்கள் முறையே 6.31-இன்ச் மற்றும் 6.67-இன்ச் பிளாட் ஸ்கிரீன்களைக் கொண்டிருக்கும். இரண்டு மாடல்களும் தலா 6,500mAh பேட்டரிகளைக் கொண்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விவோ எஸ்30 ப்ரோ மினி மற்றும் விவோ எஸ்30 ஆகியவற்றின் டிஸ்ப்ளே பேனல்கள் அருகருகே இருப்பது போல் உள்ளது. இரண்டு போன்களிலும் தட்டையான திரைகள், மெல்லிய பெசல்கள் மற்றும் முன் கேமராவிற்காக திரையில் நடுவில் பஞ்ச் ஹோல் ஸ்லாட் காணப்படுகின்றன. இரண்டு மொபைல்களிலும் உள்ள பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர் வலதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் ஏற்கனவே வழங்கிய தகவலின் படி, விவோ எஸ்30 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் வயர்லெஸ் மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொண்டு இருக்கும். மற்றொரு டிப்ஸ்டர் கூறும் போது, இந்த ஸ்மார்ட்போனில் "உயர் செயல்திறன் கொண்ட பிராசஸர்" மற்றும் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார்.
விவோ எஸ்30 சீரிசின் வெளியீட்டு தேதி உட்பட கூடுதல் விவரங்களை வரும் நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.
- விவோ நிறுவனத்தின் புதிய X சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
- புதிய விவோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
விவோ நிறுவனம் தனது X90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விவோ ஸ்மார்ட்போன் விவரங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. முந்தைய தகவல்களில் புதிய விவோ ஸ்மார்ட்போன் சோனி IMX989 பிரைமரி கேமரா மற்றும் விவோ V2 ISP சிப் கொண்டிருக்கும் என கூறப்பட்டு வந்தது.
அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய விவோ X90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதில் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் சார்ந்த ஒரிஜின் ஒஎஸ் 3 கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. விவோ X90 ப்ரோ பிளஸ் மாடல் சிங்கில் கோரில் 1485 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 4739 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இதுதவிர புதிய விவோ X90 ப்ரோ பிளஸ் மாடலில் 6.78 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், UFS4.0 ஸ்டோரேஜ், LPDDR5X ரேம் மற்றும் 4700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது.






