என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயக் சந்திரசேகரன்"

    • சிவகார்த்திகேயனின் மதராஸி படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
    • இதனையடுத்து குட் நைட் பட இயக்குனருடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த படத்திற்கு முன்பு பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இந்த படம் கஜினி படம் போன்ற திரை கதையையும் துப்பாக்கி படத்தின் ஆக்சனையும் சேர்த்து கதைக்களமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருதாஸ் கூறியிருந்தார். இதனால் இந்த படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்நிலையில் குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளார். இவருக்கு வில்லனாக நடிக்க நடிகர் ஆர்யாவை படக்குழு நாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹூரோவாக நடித்து அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஆர்யாவை, வில்லனாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் எவ்வித என்பதில் சந்தேகம் இல்லை. 

    • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்
    • சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்

    அமரன் படத்தை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் தற்பொழுது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து குட் நைட் திரைப்பட இயக்குநரான விநாயக் சந்திரசேகர் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    இப்படம் தந்தை மகனுக்கு இருக்கும் பந்தத்தை மையமாக வைத்து உருவாகும் கதையாகும். படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை கதாப்பாத்திரத்தில் மோகன்லால் நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    • இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘குட் நைட்’.
    • இப்படத்தில் 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'குட் நைட்'. இதில் 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், இயக்குனரும், நடிகருமான பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.


    குட்நைட் படக்குழு

    ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.

    'குட் நைட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் மணிகண்டனின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.


    குட் நைட் போஸ்டர்

    படத்தைப் பற்றி இயக்குனர் பேசியதாவது, '' குறட்டையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவமும் இடம் பிடித்திருக்கிறது. தூங்கும் போது ஒருவர் விடும் குறட்டை, எப்படி மற்றவர்களை பாதிக்கிறது என்பதை நகைச்சுவையாகவும் அர்த்தமுள்ள கதையாகவும் உருவாக்கி இருக்கிறோம்'' என்றார் கூறினார்.

    • இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் 'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘குட் நைட்’.
    • இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குட் நைட்
    குட் நைட்

    ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர்.


    குட் நைட் பட பாடல் அறிவிப்பு
    குட் நைட் பட பாடல் அறிவிப்பு

    இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் யுவன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் நைட்'.
    • இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குட்நைட்

    ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    குட்நைட் போஸ்டர்

    இந்நிலையில், 'குட் நைட்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹானா' திரைப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.





     


    • நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘குட் நைட்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குட் நைட்

    ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று (மே 12) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் மணிகண்டன், விஜய் சேதுபதி சொல்லி நான் கேட்காமல் இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "சமீபத்தில் நான் பிரச்சினையில் இருக்கும் போது திடீரென விஜய் சேதுபதி அண்ணா என்னை தொலைபேசியில் அழைத்து நான் மும்பையில் இருக்கிறேன். நீ சோகமாக இருப்பது போல் எனக்கு தோன்றியது அதனால் தான் அழைத்தேன் என்று கூறினார். அப்போது என் கஷ்டத்தை கூறினேன். அதற்கு விஜய் சேதுபதி எந்த பிரச்சினை என்றாலும் இரண்டு நாட்கள் தான் இருக்கும் மூன்றாவது நாள் அது சரியாகிவிடும் என்று என்னை தேற்றினார். இப்போது வரை அவர் எது சொல்லியும் நான் கேட்காமல் இருந்ததில்லை" என்று கூறினார்.

    • இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'குட் நைட்'.
    • இப்படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.



    இதில் நடிகர் மணிகண்டன் பேசியதாவது, இயக்குனரை சந்தித்து கதை கேட்டபோது, அவர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்தது. இவர் கதையை புரிந்து கொண்டிருக்கும் விதமும், அதனை தெளிவாக எடுத்துரைக்கும் பாணியும் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்கியது. இப்படத்தின் தயாரிப்பாளர்களிடம் சிலர், மணிகண்டனை வைத்து படமெடுக்கிறீர்களே..? தேவையா? என அச்சுறுத்திருக்கிறார்கள். அதற்கு அவர் இந்தக் கதை மீதும் மணிகண்டன் மீதும் இந்தப் பட குழுவினர் மீதும் நம்பிக்கை இருக்கிறது என பதிலளித்திருக்கிறார்.



    எனக்கே என் மீது இத்தகைய நம்பிக்கை இல்லாதபோது, என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் நட்புடனும், உரிமையுடனும் பழகினர். அந்த அனுபவம் மறக்க இயலாது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகு தான், இது ஒரு திரைப்படம் என்றே பலரும் ஏற்றுக் கொண்டனர். அவரும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இன்றைய வெற்றியை சாத்தியப்படுத்தி இருக்கிறார்'' என்று பேசினார்.

    • மணிகண்டன் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ‘குட்நைட்’.
    • இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கினார்.

    'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் 'குட்நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கினார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்தனர். மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'குட்நைட்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    குட்நைட் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'குட்நைட்' திரைப்படம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.



    • மணிகண்டன் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘குட்நைட்’.
    • இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் 'குட்நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கினார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



    ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவான இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்தனர். மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'குட்நைட்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.



    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'குட்நைட்' திரைப்படம் வருகிற ஜூலை 3-ஆம் தேதி டிஸ்னி+ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

    ×