என் மலர்
நீங்கள் தேடியது "வருசநாடு மலைப்பகுதி"
- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.
- ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும்.
திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளரகளுக்காக ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.
தேர்தல் அதிகாரிகள் 3 மணி நேரம் பயணம் செய்து வெள்ளிமலை பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க உள்ளனர்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும். வாக்களிக்க வருபவர்கள் தங்கள் செல்போனை பத்திரமாக வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துச்செல்ல ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதிக்குட்பட்ட காந்திகிராமம், அஞ்சரப்புளி, வலஸ்தொழுவு, வெள்ளிமலை, கூடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம், கஞ்சா செடிகள் பயிரிடுதல், போதை பொருட்கள் பயிரிடப்படல் ஆகியவை உள்ளதா? என கண்டறிய மாவட்ட நக்சல் தடுப்பு, போதை தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மற்றும் வருசநாடு போலீசாருடன் இணைந்து வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
இவர்கள் மாறுவேடத்தில் சென்று மலைகிராம மக்களிடம் மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தினர். வருசநாடு வனப்பகுதி முதல் அரசரடி மலைகிராமம் வரை இந்த தேடுதல் வேட்டை நடந்தது.
வனப்பகுதியில் குழுக்களாக முகாமிட்டு அவர்கள் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முகம் தெரியாத நபர்கள் வனப்பகுதியில் உலவினால் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. #Maoist






