என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்கா நிரந்தர குடியுரிமை"

    • பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும்.
    • குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக குடியேற்றத்துக்கு கடும் கட்டுபாடுகளை விதித்தார். அமெரிக்காவில் வெளிநாட்டினர் தங்கி பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கும் கட்டுபாடுகளை கொண்டு வந்தார்.

    இதற்கிடையே அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற கோல்டு கார்டு(தங்க அட்டை) விசா திட்டம் கொண்டு வரப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார். 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.44.98 கோடி) செலுத்தினால் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்றும் இதற்கான நடைமுறைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அதன்பின் கோல்டு கார்டு விசாவுக்கான கட்டணத்தை குறைத்தார்.

    இந்தத் திட்டத்தின் கீழ் 1 மில்லியன் டாலர் செலுத்தும் தனிநபர்களுக்கும், வெளிநாட்டு ஊழியருக்கு 2 மில்லியன் டாலர் செலுத்தும் நிறுவனங்களுக்கும் கோல்டு கார்டு விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் கோல்டு கார்டு விசா திட்டத்தை அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கோல்டு கார்டு விற்பனையை டிரம்ப் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் வெளிநாட்டினர் அமெரிக்க அரசிற்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.8.98 கோடி) நன்கொடையாக வழங்குவதன் மூலம் நிரந்தரமாக தங்கும் அந்தஸ்தைப் பெறுவார்கள்.

    இதுதொடர்பாக டிரம்ப் கூறுகையில்," கோல்டு கார்டு விசா என்பது ஒரு கிரீன் கார்டு போன்றது. ஆனால் கிரீன் கார்டை விட பெரிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் அனைத்து நிதிகளும் "அமெரிக்க அரசாங்கத்திற்கே செல்லும்.

    பில்லியன் கணக்கான டாலர்கள் கருவூலத் துறையால் நிர்வகிக்கப்படும் ஒரு கணக்கில் வந்து சேரும். இதன்மூலம் நாம் நாட்டிற்கு நன்மை பயக்கும் காரியங்களைச் செய்ய முடியும். இந்தத் திட்டம் பெருநிறுவனங்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற திறமையாளர்களைப் பணியமர்த்தித் தக்கவைத்துக் கொள்ள உதவும்" என்றார்.

    அமெரிக்காவின் மற்ற விசாவை போலவே, தேசிய பாதுகாப்பு அல்லது குற்றவியல் சம்பவங்களில் ஈடுபட்டால் கோல்டு கார்டு விசா ரத்து செய்யப்படலாம். 21 வயதுக்குட்பட்ட வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் திருமணமாகாத குழந்தைகளை விண்ணப்பத்தில் சேர்க்கலாம்.

    ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 15 ஆயிரம் டாலர் செயலாக்கக் கட்டணமும், விசாவை பெற 1 மில்லியன் டாலரும் நன்கொடையாக செலுத்த வேண்டும்.

    அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ள அதிபர் டிரம்ப் தகுதி, திறமையின் அடிப்படையில் 57 சதவீதம் வெளிநாட்டினருக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு ஆண்டு தோறும் 11 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீதம் பேருக்கும் திறமை அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கும் குடியுரிமை வழங்கப்படுகிறது.

    இந்த முறையில் மாற்றம் செய்து வேலை மற்றும் திறமை அடிப்படையில் 57சதவீதம் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டுகளுக்கு பதிலாக ‘அமெரிக்காவை கட்டமைக்கும்’ (Build America visa) குடியுரிமைகளை வழங்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

    தற்போதைய குடியுரிமை சட்டங்கள் மேதாவிகள் மற்றும் புத்திசாலிகளை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளன. மிகவும் குறைந்த கூலி வாங்குபவர்கள்தான் வெளிநாடுகளில் இருந்து இங்கு அதிகமாக வருகின்றனர். இந்த முறையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.

    நாம் உருவாக்க விரும்பும் அமெரிக்காவுக்காக வெளிநாட்டினருக்கு கதவுகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஆனால், இவர்களில் பெரும்பகுதியினர் தகுதி மற்றும் திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

    இப்படிப்பட்டவர்களுக்கு தற்போது 12 சதவீதமாக வழங்கப்படும் குடியுரிமையை 57 சதவீதமாக உயர்த்தவும் தேவைப்பட்டால் அதற்கு மேல் அதிகரிக்கவும் வேண்டிய மிகப்பெரிய மாற்றத்தை நாம் செய்ய வேண்டியுள்ளது என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


    இந்தமுறை அமல்படுத்தப்பட்டால் ‘எச்.1பி.’ விசாவில் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பல இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே ‘எச்.1பி.’ விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்தியர்கள் பலர், கடந்த பல ஆண்டுகளாக ‘கிரீன்கார்டு’ பெறுவதற்காக விண்ணப்பித்து காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு இந்த புதிய திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமைய உள்ளது.

    டிரம்பின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் சம்மதம் தெரிவிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த திட்டம் குறித்து ஆளும் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு டிரம்ப் விளக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இத்திட்டத்துக்கு ஜனநாயக கட்சியினர் ஒப்புக்கொண்டால் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், மறுத்துவிட்டால் இந்த விவகாரத்தை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய பிரச்சனையாக எழுப்பவும் ஆளும் குடியரசுக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
    ×