திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்

நேற்று காலை யானை வாகனத்திலும், இரவில் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி மாடவீதி உற்சவம் வந்தார்.வருகிற 2-ந்தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவமும், மாலையில் 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நாளை தேரோட்டம்
Published on

திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா 22-ந்தேதி கொடியேற்றத்துடன், கோலாகலமாக தொடங்கியது. விழாவில் தினமும் உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமான கிரி உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தார். நேற்று காலை யானை வாகனத்திலும், இரவில் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி மாடவீதி உற்சவம் வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை 7.30 மணிக்கு நடக்கிறது. வருகிற 2-ந்தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவமும், மாலையில் 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது. 3-ந்தேதி கொடியிறக்கம். 4-ந்தேதி தியாகராஜ சாமி பந்தம் பறிஉற்சவம், 18 திருநடனத்துடன் மாசி பெருவிழா நிறைவுபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com