என் மலர்
வழிபாடு

பானைக்கு மோட்சம் தந்த கிருஷ்ணர்
- ஒருநாள் வழக்கம்போல் கிருஷ்ணர் வெண்ணெய் திருடும்போது, அவரது தாயான யசோதை பார்த்து விட்டாள்.
- கண்ணனும், வேறு வழியில்லாமல் “நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு" என்றான்.
குழந்தை பருவத்தில் பல குறும்புகளை செய்து கோபியர்களின் மனதை கொள்ளை கொண்டவர், கிருஷ்ணர். கோகுலத்தில் அவர் செய்த லீலைகள் ஏராளம். கிருஷ்ணருக்கு வெண்ணெய் என்றால் கொள்ளை பிரியம். யமுனைக்கரையில் உள்ள ஆயர் பாடியில் வெண்ணெயை திருடி உண்பது கிருஷ்ணரின் வழக்கம்.
குழந்தை பருவத்தில் கிருஷ்ணருக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், மிகவும் பிடித்தமான நண்பன் ததிபாண்டன். கிருஷ்ணன் குறும்பு தனம் செய்யும் போதெல்லாம் ததி பாண்டனும் கிருஷ்ணரும் மாட்டிவிட்டு, உடனிருப்பான். ததிபாண்டனை தண்டனையில் இருந்து தப்பித்து கொள்வார்.
ஒருநாள் வழக்கம்போல் கிருஷ்ணர் வெண்ணெய் திருடும்போது, அவரது தாயான யசோதை பார்த்து விட்டாள். கையும் களவுமாக சிக்கியதால், அவளிடம் அடிவாங்கப் பயந்து கிருஷ்ணர் தப்பி ஓடினார். அப்போது தன்னுடைய நெருங்கிய நண்பனான ததிபாண்டனின் வீட்டுக்குள் சென்று, அவனிடம் "தன்னை தாயிடம் இருந்து காப்பாற்றுபடி" கூறினார்.
உடனே, ததிபாண்டன் ஒரு தயிர் பானையை கிருஷ்ணன் மீது கவிழ்த்து வைத்துவிட்டான். கண்ணனை தேடி அங்கு வந்த யசோதை, ததிபாண்டனிடம் கிருஷ்ணரை விசாரித்தார். ஆனால் ததிபாண்டன், 'கண்ணன் இங்கு வரவில்லையே' என்று சொல்லிவிட்டான். இதனால் யசோதை அங்கிருந்து சென்றார். உடனே கண்ணன், தன்னை மூடிவைத்திருந்த பானையை எடுக்கும்படி சொன்னார். ஆனால், ததிபாண்டன் மறுத்துவிட் டான். அவன் கண்ணனிடம், "கண்ணா! நீ தெய்வம் என்பதை நான் அறிவேன். எனக்கு நீ பிறப்பற்ற நிலையைத் தந்தால்தான் உன்னை விடுவேன்" என்றான்.
கண்ணனும், வேறு வழியில்லாமல் "நீ கேட்டதைத் தந்துவிட்டேன். என்னை விடு" என்றான். ஆனால் ததிபாண்டன், 'கண்ணா! நான் மோட்சம் பெறக் காரணமாக இருந்த இந்த பானைக்கும் மோட்சம் கொடு" என்றான். கிருஷ்ணரும் அவ்வாறே பானைக்கும் மோட்சம் அளித்து அருளினார்.






