என் மலர்
கோவில்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஆலயம் ஆவுடையார் கோவில் என்றும், இத்தல இறைவன் ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார்.
மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் முதன்மை அமைச்சராக இருந்தவர் வாதவூரர். இவர் மன்னனின் ஆணைப்படி குதிரை வாங்குவதற்காக பொற்காசுகளுடன் புறப்பட்டார். அப்படிச் சென்ற அவரை, வழியில் குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து குரு வடிவிலான இறைவன் ஆட்கொண்டு மாணிக்கவாசகர் ஆக்கிய தலம் திருப்பெருந்துறை. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் ஆவுடையார் கோவில் என்றும், இத்தல இறைவன் ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். தன்னிடம் இருந்த பொற்காசுகளைக் கொண்டு, மாணிக்கவாசகரே எழுப்பிய ஆலயம் இது.
குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் என்னும் மாணிக்கவாசகர், காலம் கடந்தும் மதுரை திரும்பாததால் ஆத்திரமடைந்த அரிமர்த்தன பாண்டியன், தனது தள பதியை அனுப்பி பார்த்து வரச் சொன்னான். மன்னன் ஆள் அனுப்பியதை அறிந்த மாணிக்கவாசகர், ‘குதிரை வாங்க கொடுத்த பணம் கோவில் கட்ட செலவாகி விட்டதே. இப்போது என்ன செய்வது’ என்று நினைத்தவர் இறைவனிடம் தன்னுடைய நிலையை சொல்லி இறைஞ்சினார்.
இதையடுத்து இறைவன் ஒரு ஆவணி மூல நட்சத்திர நாளில் நரிகள் அனைத்தையும் பரி (குதிரை)களாக்கினார். அந்த இடம் இன்றும் நரிக்குடி என்று வழங்கப்படுகிறது. நரிகளாக மாறிய பரிகளுக்கு மாணிக்கவாசகர் கொள்ளு வாங்கிக் கொடுத்த இடம் ‘கொள்ளுக்காடு’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் திருப்பெருந்துறை பெரிய ஆவுடையார் கோவில் போன்று, சிறிய ஆவுடையார் கோவில் அமைந்திருக்கிறது.
திருப்பெருந்துறையைப் போலவே இத்தல இறைவனின் பெயரும் ஆத்மநாதர் தான். இறைவியின் திருநாமமும், யோகாம்பாள் என்பதே ஆகும். கொள்ளுக்காடு தலத்தில் ஆத்மநாதர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையின் தென்புறம் விநாயகர், வட புறம் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிர மணியரும் அருள்பாலிக்கின்றனர். முன் மண்டபத்தில் வடதுபுறமாக தென்முகம் நோக்கி யோகாம்பாளுக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. திருக்கோவில் தெற்கு பிரகாரத்தில் தென்முகமாக யோக தட்சிணாமூர்த்தி அமர்ந்துள்ளார்.
வடக்கு பிரகாரத்தில் குருந்தமரமும், அதன் கீழே மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சியும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலின் எதிர் புறம் தீர்த்தக்குளம் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவார விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆலயம் தற்போது வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகமவிதி. ஆனால் பல இடங்கள் சேதமடைந்து காணப்படும் இந்த ஆலயத்தில் பல ஆண்டுகளாகியும் இன்னும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்கிறது.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை-மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பட்டுக்கோட்டையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், அதிராம்பட்டினத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும் கொள்ளுக்காடு உள்ளது.

இயற்கை வாயு அல்லது வேறு ஏதேனும் இயற்கையான எரிபொருளுக்கான மூலம் எதுவும் அறியப்படாத நிலையில் ஜுவாலா ஜி கோவிலில் இன்று வரை அணையாமல் ஜோதி சுடர் விடுகிறது.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இறைத் தலங்களில் அறிவியலின் பார்வைகளுக்கு புதிர்களாக பல நிகழ்ச்சிகள் நடந்ததை செய்திகளில் படித்திருப்போம். இன்றைய நவீன யுகத்தில், எந்த ஒரு விஷயத்தையும் விஞ்ஞானம் மூலம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே உண்மை என்று ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், விஞ்ஞானத்தால் விடை காண முடியாத ஆன்மிக விஷயங்களை புதிரான மன நிலையில்தான் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கோவிலின் தீபம் அணையாமல் தொடர்ச்சியாக சுடர் விட்டு எரிந்து கொண்டிருப்பது அந்த புதிரை இன்னும் சிக்கலாக மாற்றுகிறது.
ஜுவாலா முகி :
இறை சக்தியின் ஆற்றல் நிறைந்த இடம் என பக்தர்களால் வணங்கப்படும் அந்த ஜுவாலா ஜி கோவில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கங்கிரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தர்மசாலா நகரிலிருந்து கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் தொலைவில் குடி கொண்டுள்ள ஜுவாலாமுகி தேவியின் அருளைப் பெற ஆண்டு முழுவதுமே மக்கள் கோவிலுக்கு வருகின்றனர். அந்த கோவிலில் உள்ள தீபச்சுடர்தான் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டே இருக்கிறது.
51 சக்தி பீடங்கள் :
தனது தந்தையான தட்சன், கணவர் சிவபெருமானை யாகத்துக்கு அழைக்காமல் அவமானப்படுத்திய காரணத்தால், மனமுடைந்த பராசக்தி தன்னையே அழித்துக்கொண்டதால், அவளது உடலை சுமந்து கொண்டு ருத்ர தாண்டவமாடிய சிவபெருமானை சாந்தப்படுத்த, மகாவிஷ்ணு தன் சக்ராயுதம் மூலம் பராசக்தியின் உடலை 51 பாகங்களாக வெட்டி 51 இடங்களில் விழச்செய்தார். அவ்வாறு விழுந்த பகுதிகள்தான் 51 சக்தி பீடங்களாக புகழ் பெற்று விளங்குகின்றன. அவ்வகையில் பராசக்தியின் நாக்கு விழுந்த இடமே ஜுவாலா ஜி கோவில் ஆகும் என்பது ஐதீகம். அந்த கோவிலில் எரியும் அணையாத சுடரானது, பராசக்தியின் நாக்கு விழுந்த நாள் முதலாக எரிவதாக புராண குறிப்புகள் உள்ளன. இதிகாசமான மகாபாரதத்திலும் இந்த கோவில் பற்றிய தகவல்கள் உள்ளன.

தங்கக்குடை பரிசு :
பொதுவாக, நெருப்பு எரிவதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு நிலையில் எரிபொருள் தேவை என்ற நிலையில், இக்கோவிலில் எரிந்துக் கொண்டிருக்கும் தீபத்துக்கு அப்படி எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் எரிவது எல்லா காலத்திலும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. முகலாய அரசர் அக்பர் அந்த ஜோதியின் மகத்துவம் பற்றி அறிந்து தங்கக்குடை ஒன்றை பரிசு அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.
விஞ்ஞானிகள் ஆய்வு :
அணையாத தீபம் பற்றி கேள்விப்பட்ட பிற்கால விஞ்ஞானிகள் சிலர் அப்பகுதியில் பூமிக்கடியில் எரி மலைகள் இருக்கலாம் என்றும், இயற்கை எரிவாயு அத்தீபம் எரிய காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார்கள். 1970-ம் ஆண்டுகளில் இந்திய அரசு அப்பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ச்சி செய்ய புவியிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அனுப்பியது. பல காலம் ஆராய்ந்த குழுவினர், அப்பகுதியில் எங்குமே இயற்கை எரிவாயு இருப்பதற்கான அறிகுறி இல்லை என்று தெரிவித்தனர்.
ஆனால், ஜுவாலா ஜி கோவிலில் அணையாமல் எரியும் ஜோதிக்கு என்ன காரணம் என்று தங்களால் அறிவியல் ரீதியான விடை காண முடியவில்லை என்றும் அறிக்கை அனுப்பியதாகவும் தகவல்கள் உள்ளன. அந்த கோவில் அமைந்துள்ள பகுதிகளில், சமஸ்கிருதம், தேவநாகரி, மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் 1158, 1745 மற்றும் 1802 ஆகிய ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகளும் காணப்படுகின்றன.
நவ துர்க்கைகள் :
அங்கு சுடர் விடும் ஜோதி வடிவத்தின் ஏழு ஜுவாலைகளாக தெரிவது சப்த கன்னியர்கள் என்றும், 9 ஜுவாலைகளாக தெரிவது நவ துர்க்கைகள் என்றும் பக்தர்களால் குறிப்பிடப்படுகிறது. சுடர் நீலநிறத்தில் பிரகாசமாக எரிவதால் அதற்கான எரிபொருள் முழுமையாக பயன்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இயற்கை வாயு அல்லது வேறு ஏதேனும் இயற்கையான எரிபொருளுக்கான மூலம் எதுவும் அறியப்படாத நிலையில் ஜுவாலா ஜி கோவிலில் இன்று வரை அணையாமல் ஜோதி சுடர் விடுகிறது.

ராமனின் மகன்களான லவன், குசன் ஆகியோருக்கு சீதாதேவியுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புடைய கோவிலாகக் கேரள மாநிலம், புல்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஆலயம் திகழ்கிறது.

தல வரலாறு :
ராமனைப் பிரிய மனமில்லாமல் முதல் முறையாக காட்டிற்குச் சென்ற சீதை, இரண்டாவது முறை தன்னுடைய பிரியத்திற்குரிய ராமனாலேயே காட்டிற்கு அனுப்பப்பட்டாள். அப்படி அடர்ந்த வனப்பகுதிக்கு வந்த அவள், அங்கிருந்த வான்மீகி ஆசிரமத்தை அடைந்தாள். அங்கு அவருக்கு லவன், குசன் என்று இரு மகன்கள் பிறக்கின்றனர். வான்மீகி முனிவர், அவர்களிருவருக்கும் வில்வித்தை உட்பட அனைத்துக் கலைகளையும் கற்றுக் கொடுக்கிறார். சிறு வயதிலேயே அவர்கள் அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ச்சியடைகின்றனர்.
வான்மீகி முனிவர் அச் சிறுவர்களுக்கு அயோத்தி அரசன் ராமன்தான் அவர்களின் தந்தை என்பதைச் சொல்லாமல், ராமன் கதையைப் பாடலாகச் சொல்லிக் கொடுக்கிறார். அச்சிறுவர்களும் வீணையை மீட்டியபடி ராமன் கதையை அவ்வப்போது பாடலாகப் பாடி மகிழ்வார்கள். ஒரு கட்டத்தில் ராமன், தன்னுடைய மனைவியையே காட்டிற்கு அனுப்பியவர் என்று அறிந்து அந்தச் சிறுவர்கள், ராமனை வெறுக்கிறார்கள்.
இந்நிலையில் ராமன், அசுவமேத யாகத்திற்காக, உலகைச் சுற்றி வர பதினாறு குதிரைகளைத் தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கிறார். அந்தப் பதினாறு குதிரைகளும் அவைகளுக்கான குறிப்பிட்ட இலக்கைச் சுற்றித் திரும்பி வந்தவுடன், அவற்றை யாகத்தில் பலியிட்டு யாகத்தை நிறைவு செய்ய வேண்டும். ராமனால் அனுப்பப்பட்ட பதினாறு குதிரைகளில் ஒரு குதிரை மட்டும் திரும்பி வரவில்லை.
அந்தக் குதிரையைச் சிறுவர்களான லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டி வைத்து விட்டனர். குதிரையுடன் பாதுகாப்புக்காக வந்த ராமனின் சகோதரன் சத்துருக்கனன் மற்றும் அவனுடன் வந்த படையினர், குதிரையை விடுவிக்கும்படி கேட்டும் அவர்கள் விடவில்லை. வில் வித்தையில் சிறந்து விளங்கிய அந்தச் சிறுவர்கள், ராமரின் பாதுகாப்பு படையினரால் வெல்லவும் முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து, லட்சுமணன் அந்த இடத்திற்கு வந்து சிறுவர்களிடம் போரிட்டான். அவனாலும், சிறுவர்களிடம் இருந்து குதிரையை மீட்க முடியவில்லை. இறுதியாகக் குதிரையை மீட்க ராமனே அவ்விடத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்த சீதாதேவியை கண்ட ராமன், அவரை நெருங்கிச் சென்றார். ஆனால், சீதாதேவி அந்த இடத்திலேயேப் பூமிக்குள் சென்று மறையத் தொடங்கினார்.
ராமன் அந்த இடத்திற்குச் சென்ற போது, அவருக்குச் சீதா தேவியின் தலையிலிருந்த சில முடிகள் மட்டுமே கையில் அகப்பட்டன என்றும், அந்த இடமே ‘சேடட்டின்காவு’ அல்லது ‘ஜடாயட்டக்காவு’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த இடத்தில் அமைந்திருக்கும் கோவிலில் சீதாதேவி சப்தமாதர்களுடன் வீற்றிருக்கிறார். இந்தக் கோவிலே சீதாதேவியின் மூலக்கோவில் என்று சொல்லப்படுகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் மலபார் பகுதியை ஆட்சி செய்த வீர கேரள வர்மா பழசிராஜா என்பவர், மூலக்கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளாகச் சீதாதேவியுடன் லவன், குசன் ஆகியோரையும் சேர்த்துப் புதிய கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். அக்கோவிலேத் தற்போது புகழ் பெற்ற சீதாதேவி, லவன், குசன் கோவிலாக இருக்கிறது என்கிறது தல வரலாறு.

கோவில் அமைப்பு :
புதிய கோவில் கருவறையில் சீதாதேவி கிழக்கு நோக்கிய நிலையிலும், லவன், குசன் இருவரும் மேற்கு நோக்கிய நிலையிலும் இருக்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் வேட்டக்கொரு மகன், கணபதி, சுப்பிரமணியன், ஐயப்பன் மற்றும் நாக தேவதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. சேடட்டின்காவு என்ற இடத்தில் அமைந்திருக்கும் சீதாதேவியின் மூலக்கோவிலில் சீதாதேவி, சப்தமாதர்கள், கணபதி, வீரபத்திரன் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
இவை தவிர, லவன், குசன் சிறுவர்களாக வளர்ந்த இடம் சிசுமலா என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் சசிமலா என்று பெயர் மாற்றம் பெற்ற இடம், லவன், குசன் விளையாடிய இடம், வான்மீகி ஆசிரமம் போன்ற ராமாயணத்துடன் தொடர்புடைய மேலும் சில இடங்கள் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களாக அமைந்திருக்கின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும். சீதாதேவியின் மூலக்கோவில் (சேடட்டின்காவு மூலக்கோவில்) காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வழிபாடும்.. பலனும்..
இக்கோவிலில் 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை காலங்களில், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி மகரம் (தை) மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில் கோவில் நிறுவப்பட்ட நாள் கொண்டாடப்படுகிறது. தனு (மார்கழி) மாதம் 18 முதல் 23 வரையிலான நாட்களில் ‘சுட்டு விளக்குத் திருவிழா’ எனப்படும் சிறப்புத் திருவிழா நடைபெறுகிறது.
சீதாதேவி, லவன், குசன் கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. சீதாதேவிக்கு வெள்ளை அரிசிச் சாதம் மற்றும் பாயசமும், லவன், குசனுக்கு இனிப்பு அப்பமும் படைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. இங்கு வழிபடுபவர்களுக்கு குழந்தைப்பேறு உள்ளிட்ட அனைத்துச் செல்வங்களும் கிடைப்பதுடன், மனநிறைவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
அமைவிடம் :
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் கிழக்கு எல்லைப் பகுதியில் இருக்கும் புல்பள்ளி என்னும் இடத்தில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோழிக்கோடு மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சுல்தான் பேட்டரி என்ற ஊரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், மீனங்காடி என்ற இடத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு-மனந்தாவடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள பனமரம் என்ற பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புல்பள்ளி இருக்கிறது. இங்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

நோய்களைத் தீர்க்கும் இறைவன் வாழும் ஆலயம், திட்டக்குடி நகரின் பெரிய ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயம், திட்டக்குடி வைத்தியநாதன் கோவில்.
வசிஷ்டர் வழிபட்டு மணம் முடித்த திருத்தலம், வெள்ளாற்றின் சப்தத் துறைகளில் ஐந்தாவது துறையாக அமைந்த தலம், ராமன், ஜனகன், இந்திரன் மற்றும் முனிவர்கள் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், நோய்களைத் தீர்க்கும் இறைவன் வாழும் ஆலயம், காமதேனுவும், மனு சக்கரவர்த்தியும் உருவாக்கிய திருக்கோவில், திட்டக்குடி நகரின் பெரிய ஆலயம், சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் போற்றி வழிபட்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயம், திட்டக்குடி வைத்தியநாதன் கோவில்.
தல புராணம் :
பழங்காலத்தில் திட்டக்குடி, வேங்கை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்துள்ளது. எனவே இத்தலம் ‘வேங்கை வனம்’ என அழைக்கப்பட்டது. இதன் காரணமாகவே இங்கு எழுந்தருளியிருக்கும் அன்னைக்கு ‘வேங்கைவன நாயகி’ என்ற பெயர் வழங்கலானது. வசிஷ்டருக்கும், அருந்ததிக்கும் திருமணம் நடந்த சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் போற்றப்படுகிறது. இதற்குச் சாட்சியாக இருவரின் சிலா வடிவங்களுடன் தனிச் சன்னிதி இங்கு அமைந்துள்ளது. ராவணனைக் கொன்ற பாவம் நீங்க, ஸ்ரீராமபிரான், இத்தலத்து இறைவனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
வசிஷ்டர் தான் செய்த பெரும் தவத்தால் காமதேனுவைப் பெற்றார். அந்த காமதேனு, இத்தலத்தில் இருந்த ஒரு புற்றின் மீது கால் வைக்க, அந்த புற்றில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளிவந்தது. அந்த ரத்தப் பெருக்கைத் தணிக்க, காமதேனு புற்றின் மீது பால் சுரந்தது. அப்போது அங்கு வந்த வசிஷ்டர், புற்றினுள் சுயம்புலிங்கத் திருமேனி இருப்பதைக் கண்டார். அந்த இடத்தில் காமதேனுவின் உதவியால் கருவறை உருவாக்கப்பட்டது.
பின்னர் அங்கேயே அமர்ந்து தவம் இயற்றினார் வசிஷ்ட மகரிஷி. அப்போது அங்கு மனு சக்கரவர்த்தி வருகை தந்தார். தவம் இருந்த வசிஷ்டரிடம், தங்கள் சூரிய வம்சத்திற்கு குருவாக இருக்க வேண்டினார். வசிஷ்டரும் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் அதற்கு கைமாறாக, இத்தலத்தில் ஆலயம் எழுப்பிட கேட்டுக் கொண்டார். மனு மன்னனும், வேங்கை வனத்தை அகற்றி, அங்கு ஒரு பெரிய ஆலயத்தை உருவாக்கினான்.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாய் எழுந்து நிற்க, உள்ளே கொடிமரம், பலிபீடம், பெரிய வடிவிலான நந்திதேவர் காட்சி தருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தைப் போல இங்கும் அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ளன. முதல் பிரகாரத்தில் அறுபத்துமூவர், எமலிங்கம், நிருதிலிங்கம், சப்தமாதர்கள் அமைந்துள்ளனர். தென்மேற்கில் விநாயகர், சோமாஸ்கந்தர் சன்னிதி, நாகர் சிலைகள், உண்ணாமலை அம்மன், முருகப்பெருமான் ஆகியோரது சிலை வடிவங்கள் உள்ளன. தனியாக முருகன் சன்னிதி, வாயுலிங்கம், மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கில் ஈசான்ய லிங்கம், தனிச் சன்னிதியாக அமைந்திருக்கிறது. பிட்சாடனர், சனி பகவான், பைரவர் சிலைகளும் உள்ளன. தென் திசையை நோக்கி நடராஜ சபை இருக்கிறது.
கருவறைக் கோட்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை திருமேனிகள் அமைந்துள்ளன. கருவறை உள் மண்டபத்தில் நவக்கிரகங்கள், பின்புற வளாகத்தில் வனதுர்க்கை சன்னிதிகள் உள்ளன. அம்மன் கோவில் பின்புற வளாகத்தில் பல்லவர் கால விநாயகர் கோவில் மற்றும் முருகன் கோவில்கள் அமைந்துள்ளன.

வைத்தியநாதன், வேங்கைவன நாயகி
இத்தலத்து இறைவன் சுயம்புமேனியராகத் தோன்றியதால், ‘தான்தோன்றீஸ்வரர்’ என்றும், நோய்களைத் தீர்க்கும் மருத்துவராக அருள் புரிவதால் ‘வைத்தியநாதன்’ என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் தனிச் சன்னிதியாகக் கிழக்கு முகமாய் ஒளிவீசும் பெரிய அளவிலான வடிவம் கொண்டு காட்சியளிக்கிறார். வெளிப்புறம் உயர்ந்து நிற்கும் துவாரபாலகர்கள் காவல் புரிகின்றனர்.
இறைவிக்கு தனித் திருக்கோவில் வலது புறம் அமைந்துள்ளது. தனி கோபுரம், கொடி மரம் ஆகியன உள்ளன. அன்னை பெரிய வடிவத்தில் அழகான தோற்றம் கொண்டு, கம்பீரமாக காட்சி வழங்குகிறாள். அசனாம்பிகை, வேங்கைவன நாயகி என்னும் பெயர்கள் அன்னைக்கு வழங்கப்படுகின்றன. கருவறைக் கோட்டத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.
ஆலயத்தின் தல மரம் வேங்கை மரமாகும். இந்த ஆலயத்திற்கு 22 தீர்த்தங்கள் இருப்பதாக புராணங்கள் கூறினாலும், தற்போது காண்டீபத் தீர்த்தம், வெள்ளாறு ஆகிய இரண்டு மட்டுமே தலத் தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
விழாக்கள் :
இந்த ஆலயத்தில் ஆடி மாதத்தில் நடைபெறும் 10 நாள் பிரம்மோற்சவமும், பங்குனி மாதத்தில் தேரோட்டத்துடன் நடைபெறும் 10 நாள் உற்சவமும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இது தவிர ஏனைய சிவ ஆலயங்களில் நடைபெறும் அனைத்து வழிபாடுகளும், விழாக்களும் இந்த ஆலயத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
திட்டக்குடி பெயர்க்காரணம் :
‘திட்டை’ என்பதற்கு ‘மணல் திட்டு’ என்பது பொருளாகும். வெள்ளாறு பகுதியில் பெருத்த மணல் திட்டில் இவ்வூர் அமைந்திருந்தது. மணல்திட்டில் வாழ்ந்த குடிமக்கள் ஊர் என்பதால், ‘திட்டைக்குடி’ என அழைக்கப்பட்டது. இதுவே மருவி திட்டக்குடி ஆனது என்பது ஒரு காரணம்.
மற்றொரு காரணம் என்னவென்றால், வசிஷ்ட முனிவர் எனும் வதிட்ட முனிவர் குடியிருந்து வழிபட்டுப் பேறுபெற்ற தலம் என்பதால், இது ‘வசிஷ்டக்குடி’ என்றும், ‘வதிட்டக்குடி’ என்று வழங்கலானது. இப்பெயரே மருவி, தற்போது ‘திட்டக்குடி’ என்று வழங்கப்படுகிறது.

வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான்
நானூற்று ஒருவர் கோவில் :
வதிட்டக்குடி என்னும் இன்றைய திட்டக்குடி தலத்தில் வசிஷ்டரால் உருவாக்கப்பட்ட நானூறு பெண்களுடன், நானூற்று ஒன்றாக உமையவளும் தோன்றி வளர்ந்து வந்தாள். நானூற்றொரு பெண்களுக்கும் திரு மணம் செய்து வைக்கும் பருவம் வந்தது. இதில் நானூறு மணமகன் களைத் தேர்வுசெய்துவிட்ட நிலையில், அன்னை உமையவளுக்கான மணமகனைத் தேடும் பணி அவ்வளவு சுலபமாக முடியவில்லை. இறுதியில் இத்தல இறைவனான வைத்தியநாதனே மணவாளனாகத் தோன்றி, உமையவளை மணம் புரிந்தார் என்கிறது தல புராணம்.
இந்த அதிசயம் நிகழ்ந்த தலமாக, பழமையான நானூற்று ஒருவர் திருக்கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் திட்டக்குடி சிவாலயத்திற்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களும், அதன் கலைநயமும் கண்டு ரசிக்கவும், பிரமிக்கவும் உகந்தவையாகும். திருமணப்பேறு வேண்டுவோர், எலுமிச்சை மாலையை அன்னைக்கு அணிவித்து வேண்டுதல் செய்தால், கைமேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
தொன்மைச் சிறப்பு :
இத்தலத்தின் வரலாற்றை அறிய இதுவரை கண்டறியப்பட்ட 28 கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன. இரண்டாம் ராஜராஜன் (கி.பி.1160), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி.1168), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1181), மூன்றாம் ராஜாதிராஜன் (கி.பி. 1242), சடையவர்ம இரண்டாம் சுந்தரபாண்டியன் (கி.பி. 1271), வீரபூபதி உடையார், வீரகம்பண்ண உடையார் ஆகியோர் விவரங்களையும் அறிய முடிகிறது. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் போற்றி வளர்த்த தலமாகத் திட்டக்குடி திகழ்ந்துள்ளது.
அமைவிடம் :
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் வெள்ளாற்றங்கரையில், கடலூர் - திருச்சி வழித்தடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. விருத்தாசலத்தில் இருந்து மேற்கே 30 கி.மீ. தொலைவில் திட்டக்குடி உள்ளது. திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து வெகு அருகில் கோவில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி- சென்னை வழித்தடத்தில், தொழுதூர் வழியாகவும் ஆலயத்திற்கு செல்லலாம்.
திட்டக்குடி கோவில்கள் நிறைந்த ஊராக உள்ளது. இது வைணவத்திற்கும் முக்கியத்துவம் தரும் விதமாக அமைந்த திருத்தலமாகும். இவ்வூரில் நானூற்று ஒருவர் கோவில், அமர்ந்த கோலம், நின்றகோலம், சயனகோலம் என மூன்று நிலைகளிலும் பெருமாள் அருள்பாலிக்கும் பழமையான வைணவ ஆலயங்களைக் கண்டு தரிசிக்கலாம்.

காக்கும் தெய்வமாகவும், கிராம தேவதையாகவும் விளங்கும் மாரியம்மனுக்கு மடப்புரம் கிராமத்தில் ஒரு ஆலயம் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
வீர உணர்வுக்கு காளியையும், பகைவரை வெல்ல துர்க்கையையும், கல்வி பெருக கலைமகளையும், செல்வம் செழிக்க திருமகளையும், மழை வளம் பெருகவும், நோய் நொடிகள் அகலவும் மாரியம்மனையும் வழிபடுதலை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
மகமாயி, சீதளாதேவி, கருமாரி, ரேணுகாதேவி என பலப் பெயர்களால் மாரியம்மனை மக்கள் பக்தியுடன் பூஜை செய்து வணங்குகின்றனர். காக்கும் தெய்வமாகவும், கிராம தேவதையாகவும் விளங்கும் மாரியம்மனுக்கு மடப்புரம் கிராமத்தில் ஒரு ஆலயம் உள்ளது.
இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே ஆல், வேம்பு மரங்களும் அதன் கீழ் விநாயகர், நாகர் சிலைகளும் காணப் படுகின்றன. ஆலய முகப்பின் மேல்புறம் மகிஷாசுரமர்த்தினியின் திருமேனி சுதை வடிவில் உள்ளது. ஆலயத்தின் உள்ளே கருவறை எதிரில் சூலமும் அடுத்து கழுமரமும் இருக்கிறது. அடுத்து பித்தளை உலோக சூலமும், மின்னடையான் என அழைக்கப்படும் பலிபீடமும் உள்ளது. அருகே தல விருட்சமான வேப்பமரம் உள்ளது.
திருச்சுற்றில் தெற்கில் பேச்சியம்மன், கருப்பண்ணசாமி, ஓம்சக்தி அம்மன் சன்னிதிகள் உள்ளன. வடக்கில் காத்தவ ராயன் சன்னிதி உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் காத்தவராயன், கருப்பண்ணசாமி, மாரியம்மன் ஆகியோரது மரச்சிலைகள் உள்ளன. மேற்கில் கஜ லட்சுமியின் திருமேனி காணப்படுகிறது.
அடுத்துள்ள அர்த்தமண்டபத்தில் விநாயகர், அம்பாளின் உற்சவர் சிலைகள் உள்ளது. கருவறையில் அன்னை மாரியம்மன் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன், அமர்ந்த நிலையில் கீழ்திசை நோக்கி இன்முகம் மலர அருள்பாலிக்கிறாள். இந்த அம்மனின் கருணை அளப்பரியது என்கின்றனர் ஊர் மக்கள்.
அடிக்கடி நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை அம்மனுக்கே தத்து கொடுத்துவிடுகின்றனர். குழந்தையை பெற்றவர்கள் குழந்தையுடன் அம்மன் சன்னிதிக்கு வருகின்றனர். அர்ச்சகர் ஒரு மரக்காலில் தவிட்டை நிரப்பி, குழந்தையின் பெற்றோர்களிடம் கொடுக்க, அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தங்களது குழந்தையை, அம்பாளுக்கு தத்துக் கொடுக்கின்றனர். அன்று இரவு அந்தக் குழந்தை பெற்றோர்களுடன் தங்குவது கிடையாது. வேறிடத்தில் தங்க வைக்கப்படும். இப்படி தத்துக் கொடுக்கப்படும் குழந்தை சில நாட்களில் பரி பூரண குணமடைவது கண்கூடான உண்மை.
குழந்தைக்கு நோய் குணமானதும், அந்தக் குழந்தையின் பெற்றோர், அம்பாளின் சன்னிதிக்கு சென்று இறைவிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, குழந்தையை திரும்பப் பெறும் வைபவம் அடிக்கடி நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.
இந்த ஆலயம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆரம்பத்தில் கீற்றுக்கொட்டகையில் இருந்த அன்னை, தற்போது அழகிய ஆலயத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள். ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலையிலேயே ஆலயம் திறக்கப்பட்டு அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை சுமார் 200 பெண்கள் கலந்து கொள்ளும் விளக்கு பூஜை நடைபெறுகிறது. சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.
நாள் காப்பு கட்டுதலுடன் தொடங்கும் திருவிழாவில், முதல் நாள் கரகம் புறப் படுவதுடன் அன்ன வாகனத்தில் அன்னை வீதியுலா வருவாள். இரண்டாம் நாளும் அன்னவாகனத்தில் வீதியுலா வரும் அன்னை, மூன்றாம் நாள் வேப்பிலை அலங்காரத்திலும், நான்காம் நாள் பல்லக்கிலும், ஐந்தாம் நாள் சப்பரம் எனும் தெருவடைச்சானிலும், ஆறாம் நாள் ஓடத்திலும், ஏழாம் நாள் ரிஷப வாகனத்திலும் வீதியுலா வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 8-ம் நாள் தீமிதி உற்சவம் கோலாகலமாக நடைபெறும். 9-ம் நாள் மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெற்று காப்பு களைதலுடன் உற்சவம் நிறைவு பெறும்.
இங்கு அருள்பாலிக்கும் ஓம்சக்தி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். இந்த அன்னையின் பின்புறம் உள்ள வேப்பமரம் இயல்பாகவே தோன்றி, அன்னையின் சக்தியை வெளிப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது.
ஆலயம் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தன்னை நாடும் பக்தர்களின் அனைத்து குறைகளையும் அறிந்து அருள்பாலித்து அவர்களை குறையின்றி வாழ வைக்கும் மடப்புரம் மாரியம்மனை நாமும் ஒரு முறை தரிசித்து பயன்பெறலாமே.
அமைவிடம்
நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார் கோவிலுக்கு கிழக்கே காளஹஸ்திநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மடப்புரம் கிராமம்.

பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது திருநெல்வாயில் அரத்துறை எனும் திருவட்டத்துறை திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகை, முத்துக்குடை, பொற்சின்னங்கள் அருளிய தலம், மூவரால் பாடல் பெற்ற நடுநாட்டின் முதலாவது திருத்தலம், மகாவிஷ்ணு, ஆதிசேஷன், வான்மீகி முனிவர், செவ்வாய், சனி பகவான், ஜனக மன்னர் முதலானவர்கள் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பெயரில் லிங்க மூர்த்தங்கள் அமைந்த தலம், நீவா நதிக்கரையோரம் அமைந்த தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருநெல்வாயில் அரத்துறை எனும் திருவட்டத்துறை திருத்தலம்.
புராண வரலாறு :
ஆற்றங்கரையோரம் அமைந்த தலம் என்பதாலும், அரம் எனும் நாகம் வழிபட்டதாலும், அரத்துறை என வழங்கப்படுகிறது. இத்திருக்கோவிலின் அருகே ஓடும் வெள்ளாறு நதியில், பிரளய காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இறைவனின் ஆணைக்கிணங்க, நந்திதேவர் ஆற்றினை திரும்பிப் பார்க்க, வெள்ளத்தின் வேகம் கட்டுப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் ஐதீகமாகவே இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் நந்தி சிலை, ஆற்றின் திசைநோக்கி பார்க்கும் விதமாக அமைந்துள்ளது.
இதேபோல், இப்பகுதியில் சப்தரிஷிகள் ஏழு துறைகளில் தவம் இயற்றினர். அவை ஆதித்துறை, திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவதிட்டத்துறை, திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருவட்டத்துறை, திருச்சந்துறை. இந்த ஏழு துறைகளில் அரத்துறைநாதர் ஆலயம் ஆறாவது துறையாக அமைந்துள்ளது.
திட்டக்குடியில் ஓடிய வெள்ளாற்றை, திருஞானசம்பந்தர் இத்தலம் நோக்கி ‘நீ வா’ என்று அழைக்க, வெள்ளாறு, திட்டக்குடியில் இருந்து அருகில் வந்ததாக தல வரலாறு சொல்கிறது. இதனால் இந்நதி ‘நீவா நதி’ என்று பெயர் பெற்றது.
இத்தலத்தை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவரும் பாடி மகிழ்ந்துள்ளனர். இது தவிர, சேக்கிழாரின் பெரியபுராணம், வள்ளலாரின் திருவருட்பாவிலும் இத்தலம் குறித்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
தீர்த்தபுரீஸ்வரர் :
மூலவர் திருப்பெயர் தீர்த்தபுரீஸ்வரர். இவரே ஆனந்தீஸ்வரர், அரத்துறைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் கிழக்கு முகமாய் வட்ட வடிவ ஆவுடையாரில் ஒளிவீசும் திருமுகத்துடன் காட்சி அளிக்கின்றார். திருவட்டத்துறை உடைய மகாதேவர், திருவட்டத்துறை மகாவேதர், திருவட்டத்துறை உடைய நாயணார் என கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்னை திரிபுரசுந்தரிக்கு, ஆனந்தநாயகி, அரத்துறை நாயகி என்ற திருப்பெயரும் உண்டு. அன்னை அரத்துறை நாயகி, மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் தாங்கியும், கீழ் இரு கரங்களில், அபய வரத முத்திரை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.
மகம் வாசல் :
இக்கோவிலில் கருவறைக்கு இடதுபுறம் மகம் வாசல் அமைந்துள்ளது. கணவனை இழந்த பெண்கள், ஓராண்டு முடிந்த பிறகு, இத்தல ஆற்றிற்கு சென்று குளித்து விட்டு, மகம் வாசல் வழியே ஆலயத்திற்குள் சென்று இறைவனை தரிசிப்பார்கள். பின்னர் அந்த வாசல் வழியாகவே மீண்டும் வெளியில் செல்வது ஐதீகமாக உள்ளது. இப்படிச் செய்வதால், இறந்த தன்னுடைய கணவர் நற்கதி பெறுவார் என்று அவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

தீர்த்தபுரீஸ்வரர், திரிபுர சுந்தரி
கல்வெட்டுகள் :
இவ்வாலயத்தில் கி.பி. 1949-50 இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கை 22 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. முதலாம் ராஜராஜன் (கி.பி. 985), வீரராஜேந்திர தேவன் (கி.பி 1067), முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1107), விக்கிரம சோழதேவன் (கி.பி. 1120), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி.1168), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1190) மூன்றாம் ராஜராஜன் (கி.பி. 1226) ராஜகேசரிவர்மன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விருதராஜ பயங்கர வளநாட்டு, மேற்கால நாட்டு, முடிகொண்ட சோழ சதுர்வேதி மங்கலம் என, இன்றைய திருவட்டத்துறை நெல்வாயில் அழைக்கப்பட்டுள்ளது.
நிலக்கொடை, பசுதானம், பொற்காசு வழங்கியது போன்ற பல்வேறு விதமான கொடைகள் குறித்த விவரங்கள் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள், சிவ பிராமணர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் பூஜைகள் நடத்தப்பட்ட விவரங்களும் இதில் கூறப்பட்டுள்ளன.
விழாக்கள் :
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் எளிமையாக நடத்தப்படுகின்றன. பிற சிவாலய விழாக்களும் எளிய முறையில் நடைபெறுகின்றது.
நீவா நதியின் கரையோரம், கிழக்கு முகமாய் ஐந்துநிலை ராஜகோபுரத்தைக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது. எதிரே, தலமரமான ஆலமரம், பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும், விநாயகர், சமயக்குரவர்கள், வான்மீகி முனிவர், சப்தமாதர்கள், லிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஜோதிர்லிங்கம் உள்ளிட்ட சன்னிதிகள் அமைந்துள்ளன.
இதனையடுத்து, அண்ணாமலையார், ஆதிசேஷன், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி, சரஸ்வதி, சேரலிங்கம், சோழலிங்கம், பாண்டியலிங்கம் என மூவேந்தர்களுக்கும் லிங்கத் திருமேனிகள் அமைந்துள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, சந்தானக் குரவர்கள், பைரவர், சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
அமைவிடம் :
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில், கடலூர்- திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில், கடலூருக்கு மேற்கே 90 கி.மீ., திட்டக்குடிக்கு கிழக்கே 5 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஆவினன்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, தென்கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வாயில் அரத்துறை என்ற பெயர் இன்று, திருவட்டத்துறை என வழக்கில் உள்ளது.

கணவன்-மனைவியின் ஒற்றுமையை காப்பதிலும் படிக்கும் மாணவர்களுக்கு ஞானம் தருவதிலும் காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்திற்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
திருக்கோடிக் காவல் தலத்தில் அருள்பாலிக்கும் திருக்கோடிஸ்வரரை தரிசிக்க, ஒரு சமயம் வெங்கடேச பெருமாள் வந்தார். அப்போது இரவு நேரம் வந்து விட்டதால் சிவமல்லிகாவனம் எனும் தட்சிண காளஹஸ்தியில் தங்கி, மறுநாள் திருக்கோடிக் காவல் சென்று இறைவனை தரிசித்துச் சென்றாராம்.
சிவமல்லிகாவனம் என முன்பு அழைக்கப்பட்டு, தற்போது கதிராமங்கலம் என அழைக்கப்படும் இத்தலத்தில் உள்ளது தான் காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்.
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் பெயர் ஞானாம்பிகை. பெருமாள் தங்கிச் சென்ற தலம் இது. எனவே இங்கு அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் தரிசித்தால் திருப்பதி சென்று வெங்கடேச பெருமாளை தரித்து வந்த பலன் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மொட்டை கோபுரத்தை அடுத்து அகன்ற பிரசாரம். பீடம், நந்தி பகவானின் தனி சன்னிதியைத் தொடர்ந்து அலங்கார மண்டபம் உள்ளது. தென்பகுதியில் சமயக் குரவரான திருஞான சம்பந்தரின் திருமேனி உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். இடது புறம் விநாயகரும், வலது புறம் சுப்ரமணியரும் அருள்பாலிக்க, அடுத்துள்ள அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறை காணப்படுகிறது.
கருவறையில் இறைவன் காளஹஸ்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவ கோட்டத்தின் தென்புறம் கணபதியும், தட்சிணாமூர்த்தியும், வடக்கில் பிரம்மாவும், துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர். மேற்கு பிரகாரத்தில் சூரிய பகவானுக்கு காட்சி தந்த சூரிய வரத விநாயகர் தனி சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மற்றும் ஷேத்திர கணபதி, வள்ளி- தெய்வானை, சுப்ரமணியர் ஆகியோர் சன்னிதிகளும் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர், சுவாமிநாதர், தாரக பரமேஸ்வரர் சன்னிதிகள் உள்ளன.
அம்மனின் ஆலயம் வடக்குப் பிரகாரத்தில் உள்ளது. அன்னை ஞானாம்பிகை நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள் பாலிக்கும் அழகைக் காண கண் கோடி வேண்டும். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சூரியன், அகோரவீரபத்ரர் ஆகியோர் திருமேனிகள் உள்ளன. ஆலயத்தின் தலவிருட்சம் வன்னிமரம். இந்த ஆலயம் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. இறைவனின் தேவ கோட்டத்தின் பின்புறம் குலோத்துங்க சோழன் மற்றும் மருகண்டு மகரிஷி ஆகியோர் சிலைகள் உள்ளன.
மேற்கு பிரகாரத்தில் அருள் பாலிக்கும் சூரிய வரத விநாயகர் சூரிய பகவானுக்கு அருள் புரிந்தவராம். சூரிய பகவானுக்கு தோஷம் வந்த போது இவரை வணங்க அவரது தோஷம் நிவர்த்தியானதாம். இன்றும் ஆண்டு தோறும் ஆனி மாதம் 12-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை, சூரியன் தன் ஒளிக்கதிர்களால் விநாயகரை குளிப்பாட்டும் காட்சியை இப்போதும் காணலாம்.
இந்த ஆலயம் அருகே வனதுர்க்கை அம்மன் ஆலயம் உள்ளது. கவி சக்கரவர்த்தி கம்பரின் மனம் கவர்ந்த அன்னை இவள். ஒரு சமயம் கம்பரின் குடிசை சீர்கெட்டு போன போது, இந்த அன்னை கம்பருக்கு கூரை வேய்ந்து கொடுத்தாளாம். எனவே இந்த அன்னையை கூரை வேய்ந்த நாயகி என்றும் அழைப்பதுண்டு. அன்னை ஞானாம்பிகையை தரிசிக்க வருபவர்கள், வனதுர்க்கையையும் தரிசித்துவிட்டு வரலாம்.
அன்னை ஞானாம்பிகை ஞானம் தரக் கூடியவள். அன்னைக்கு வெண்டைக்காய் மாலை அணிவித்து, பொங்கல் வைத்து படையல் செய்து, அர்ச்சனை செய்தால் குழந்தை பேறு நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். சோமவாரம், கார்த்திகை, நவராத்திரி, மார்கழி 30 நாட்களும், திருவாதிரை நாட்களிலும் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கணவன்-மனைவியின் ஒற்றுமையை காப்பதிலும் படிக்கும் மாணவர்களுக்கு ஞானம் தருவதிலும் அன்னை ஞானாம்பிகைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை - ஆடுதுறை பேருந்து தடத்தில் உள்ளது கதிராமங்கலம் என்ற இந்த தலம்.

கேரளா திருக்கடித்தானத்தில் (திருக்கொடித்தானம்) உள்ள மகாவிஷ்ணு கோவிலில் இருக்கும் இறைவனை ஒரு கணப்பொழுது வேண்டினாலே போதுமாம், வெற்றியும், மோட்சமும் கிடைக்கும் என்கின்றனர்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரி அருகில் இருக்கிறது திருக்கடித்தானம் (திருக்கொடித்தானம்). இங்குள்ள மகாவிஷ்ணு கோவிலில் இருக்கும் இறைவனை ஒரு கணப்பொழுது வேண்டினாலே போதுமாம், வெற்றியும், மோட்சமும் கிடைக்கும் என்கின்றனர்.
தல வரலாறு :
இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தவன், சூரிய வம்சத்து அரசனான ருக்மாங்கதன். இவனது நந்தவனத்திலிருந்த அழகிய, நறுமணம் மிகுந்த மலர்கள் தினமும் காணாமல் போய்க் கொண்டிருந்தன. அதனால் கோபமடைந்த அரசன், நந்தவனத்தில் இருக்கும் மலர்களைத் திருட்டுத்தனமாகப் பறித்துச் செல்பவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அரண்மனைக் காவலர்கள் நந்தவனத்தில் மறைந்திருந்தனர். அவ்வேளையில், அங்கு வந்த சிலர் மலர்களை பறிக்கத் தொடங்கினர். அவர்களை மறைந்திருந்த காவலர்கள் கைது செய்து அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினர்.
அரசன் அவர்களைப் பார்த்து, ‘அரசருடைய நந்தவனத்தில் திருட்டுத்தனமாக மலர்களைப் பறித்துச் செல்வது தவறு என்றும், பிடிபட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டான்.
அதனைக் கேட்ட அவர்கள், “அரசே, நாங்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மலரும் மலர்களின் அழகும், நறுமணமும் எங்களுக்குப் பிடித்துப் போனதால், தினமும் தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்து, இங்கிருக்கும் மலர்களைப் பறித்துச் சென்று இறைவனுக்கு அணிவித்து வழிபட்டு வந்தோம். நாங்கள் தெரியாமல் செய்த இத்தவறை மன்னித்து எங்களை விடுவியுங்கள்’ என்று வேண்டினர்.
அவர்கள் தேவர்கள் என்பதை அறிந்த அரசன், அனைவரையும் உடனடியாக விடுவித்தான். இருப்பினும் தேவலோகத்தைச் சேர்ந்த அவர்கள் பூலோகத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டதால், தேவலோகம் செல்லும் சக்தியை இழந்திருந்தனர். அதனால் அவர்களால் தேவலோகம் செல்ல முடியவில்லை.
அதனை அறிந்து வருத்தமடைந்த அரசன், ‘நீங்கள் மீண்டும் தேவலோகம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான்.
உடனே அவர்கள், ‘அரசே! நீங்கள் ஆண்டுதோறும் ஏகாதசி விரதமிருந்த பலன்கள் அனைத்தையும் எங்களுக்குக் கொடுத்தால், நாங்கள் மீண்டும் தேவலோகம் சென்று விடுவோம்’ என்றனர்.
அரசனும், தன்னுடைய ஏகாதசி விரதப் பலன்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கினான். அதனைப் பெற்ற அவர்கள், மீண்டும் தேவலோகம் சென்றனர்.
இதனை அறிந்த மகாவிஷ்ணு, அரசன் ருக்மாங்கதனுக்குக் காட்சியளித்து அருளினார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு கடிகை (24 நிமிடங்கள்) நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.
பிற்காலத்தில், இப்பகுதிக்கு மன அமைதி தேடி வந்த பஞ்சபாண்டவர்களில் சகாதேவனுக்கு மேற்சொன்ன வரலாற்றுக் கதை தெரியவந்தது. அவன் அங்கு, மகாவிஷ்ணுவுக்குச் சிலை நிறுவிக் கோவில் அமைக்க விரும்பினான். ஆனால், அவனுக்குக் கோவிலில் நிறுவ மகாவிஷ்ணு சிலை எதுவும் கிடைக்கவில்லை.
மனம் வருந்திய அவன் அவ்விடத்தில் நெருப்பு மூட்டி, அதில் இறங்கி உயிர்விடத் துணிந்தான். அப்போது அந்த இடத்தில் மகாவிஷ்ணு சிலை ஒன்று தோன்றியது. சகாதேவன் அந்தச் சிலையை அவ்விடத்தில் நிறுவிக் கோவில் அமைத்தான். அதனால், இத்தல இறைவனுக்கு ‘அற்புத நாராயணர்’ என்று பெயர் ஏற்பட்டதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு:
இக்கோவிலில் வட்டவடிவமான ஒரே கருவறையில் அற்புத நாராயணர் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் இருக்கின்றனர். இங்கிருக்கும் நரசிம்மர் உருவம் பிற்காலத்தில் நிறுவப்பட்டது என்கின்றனர். இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தல இறைவி ‘கற்பகவல்லி நாச்சியார்’ என்றழைக்கப்படுகிறார்.
கருவறையின் தெற்குப் பகுதியில் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி, கணபதி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சன்னிதிகளுக்கு கதவுகள் எதுவும் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மரத் துவாரங்களின் வழியாக அவர்களைப் பார்த்து வணங்கிக் கொள்ளலாம். இக்கோவிலின் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, சுப்பிரமணியர், பத்ரா போன்ற துணை தெய்வங்களுடன் நாகதெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலய மேற்புறம் தசாவதார சிற்பங்கள் காணப்படுகின்றன.
கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் கழுமரத்தில் ஒரு மனிதர் படுத்த நிலையிலான சிலை ஒன்று இருக்கிறது. ‘கையூட்டு, ஊழல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்கள் கழுமரத் தண்டனைக்குரியவை’ என்பதை வலியுறுத்தும் வகையில் அந்தச் சிலை அங்கு இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். இந்தச்சிலை அமைந்ததற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
இப்பகுதியை ஆட்சி செய்த அரசர் ஒரு முறை இந்தக் கோவிலுக்கு வந்திருக்கிறார். அவர் வந்த வேளையில் கோவில் நடை மூடப்பட்டிருந்திருக்கிறது. அப்போது அங்கிருந்த வாயிற்காப்பாளன் வந்திருப்பது அரசர் என்று தெரியாமல், அவரிடம் சிறிது பணம் பெற்றுக் கொண்டு, கோவில் நடையைத் திறந்துவிட்டானாம். அதனால் அந்த வாயிற்காப்பாளன் கழுமரத்தில் ஏற்றப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். அதை நினைவுபடுத்தி எச்சரிக்கும் நோக்கத்தில் இங்கு கழுமரத்தில் மனிதன் படுத்த நிலையிலான சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

அற்புத நாராயணர், நரசிம்மர்
வழிபாடுகள்:
ஆலயம் அதிகாலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி உள்ளிட்ட விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் திரு வோணம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளில் ‘சங்கேதம்’ எனும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தத் தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும் என்றும், இதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்றும் சொல்கின்றனர்.
இத்தலத்தில் தீபத்திருவிழா நடத்தப் பெறுவதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் சிவபெருமான் இப்பகுதியில் நெருப்புப் பிழம்பாக தோன்றியிருக்கிறார். அவரிடமிருந்து வரும் வெப்பத்தால் இந்தப் பகுதி அழிந்து போய்விடக் கூடாது என்று நினைத்த பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை வேண்ட, ஈசன் சிறு தீபமாக மாறி நின்ற ருளியதாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த விஷ்ணு ஆலயத்தில் திருக்கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடத்தப்படுகிறது.
வழிபாட்டுப் பலன்கள் :
இவ்வாலய இறைவனுக்குப் பால்பாயசம், கடும்பாயசம், பானகம், கதலிப்பழம் போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன. இங்கு சதுர்சத வழிபாடு, சந்தனக்காப்பு வழிபாடு நடத்துவோருக்கு, அவர்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் என்கின்றனர். இங்குள்ள நரசிம்மருக்கு, அவரது கோபத்தைக் குறைப்பதற்காகப் பால்பாயசம் சமர்ப்பிக்கப்படுகிறது. நரசிம்மர் வழிபாட்டின் போது, “நாராயணீயம்” சொல்லப்படுகிறது. பொதுவாக, இத்தலத்து இறைவனை நினைத்து வேண்டினால், அவர்கள் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றியும், மோட்சமும் உறுதியாகக் கிடைக்கும் என்கின்றனர்.
குடக்கூத்த அம்மான்:
திருக்கடித்தானத்து இறைவன் ‘அற்புத நாராயணர், அமிர்த நாராயணர்’ என்று போற்றி வழிபடப்படுகிறார். இந்தநிலையில் நம்மாழ்வார் இங்குள்ள இறைவனை, ‘குடக்கூத்த அம்மான்’ என்று போற்றிப் பாடியிருக்கிறார். குடக்கூத்த அம்மான் என்று அவர் குறிப்பிடுவது ஏன்? என்று சில விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.
இந்திரனின் சீற்றத்தால் உருவான பெருமழையில் இருந்து கோகுலவாசிகளைக் காக்கக் கிருஷ்ணன், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்திருந்து அருளினார். அதனை நினைவு கொள்ளும் விதமாக, பெண்கள் குடை பிடித்தபடி நடனமாடும் ‘குடைக் கூத்து’ என்றழைக்கப்பட்ட நடனம் இந்த ஆலயத்தில் நடந்திருக்கலாம் என்று சிலர் சொல்கின்றனர்.
குடத்தினைச் சுமந்துகொண்டு செல்லும் கோபியர்கள், ஒவ்வொருவருக்கும் தன் மீது தான் கிருஷ்ணனுக்கு அதிக அன்பு என்ற நினைப்பு இருந்தது. அவர்கள் கர்வத்தைப் போக்க விரும்பிய கிருஷ்ணன் அவர்கள் சுமந்து சென்ற குடங்களைப் பந்துகள் போல மேலெழும்பித் தன்னிடம் வரவழைத்து, மாயச் செயல்களை நிகழ்த்தினான். அப்போது கோபியர்கள் கிருஷ்ணனை மறந்து, குடங் களைப் பிடிக்க அங்கும், இங்குமாக ஓடத் தொடங்கினர். தாங்கள் கொண்டு வந்த வெறும் குடத்துக்காகக் கிருஷ்ணனை மறந்து தாவித்தாவிக் கூத்தாடியதைத் தான், ‘குடக் கூத்து’ என்று உருவாக்கியிருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
அமைவிடம்:
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரியில் இருந்து காவியூர் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு செல்ல சங்கணாச்சேரியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரி அருகில் இருக்கிறது திருக்கடித்தானம் (திருக்கொடித்தானம்). இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரி அருகில் இருக்கிறது திருக்கடித்தானம் (திருக்கொடித்தானம்). இங்குள்ள மகாவிஷ்ணு கோவிலில் இருக்கும் இறைவனை ஒரு கணப்பொழுது வேண்டினாலே போதுமாம், வெற்றியும், மோட்சமும் கிடைக்கும் என்கின்றனர்.
தல வரலாறு
இந்தப் பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தவன், சூரிய வம்சத்து அரசனான ருக்மாங்கதன். இவனது நந்தவனத்திலிருந்த அழகிய, நறுமணம் மிகுந்த மலர்கள் தினமும் காணாமல் போய்க் கொண்டிருந்தன. அதனால் கோபமடைந்த அரசன், நந்தவனத்தில் இருக்கும் மலர்களைத் திருட்டுத்தனமாகப் பறித்துச் செல்பவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டான். அரண்மனைக் காவலர்கள் நந்தவனத்தில் மறைந்திருந்தனர். அவ்வேளையில், அங்கு வந்த சிலர் மலர்களை பறிக்கத் தொடங்கினர். அவர்களை மறைந்திருந்த காவலர்கள் கைது செய்து அரசன் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினர்.
அரசன் அவர்களைப் பார்த்து, ‘அரசருடைய நந்தவனத்தில் திருட்டுத்தனமாக மலர்களைப் பறித்துச் செல்வது தவறு என்றும், பிடிபட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் உங்களுக்குத் தெரியாதா?’ என்று கேட்டான்.
அதனைக் கேட்ட அவர்கள், “அரசே, நாங்கள் அனைவரும் தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு மலரும் மலர்களின் அழகும், நறுமணமும் எங்களுக்குப் பிடித்துப் போனதால், தினமும் தேவலோகத்தில் இருந்து பூலோகம் வந்து, இங்கிருக்கும் மலர்களைப் பறித்துச் சென்று இறைவனுக்கு அணிவித்து வழிபட்டு வந்தோம். நாங்கள் தெரியாமல் செய்த இத்தவறை மன்னித்து எங்களை விடுவியுங்கள்’ என்று வேண்டினர்.
அவர்கள் தேவர்கள் என்பதை அறிந்த அரசன், அனைவரையும் உடனடியாக விடுவித்தான். இருப்பினும் தேவலோகத்தைச் சேர்ந்த அவர்கள் பூலோகத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டதால், தேவலோகம் செல்லும் சக்தியை இழந்திருந்தனர். அதனால் அவர்களால் தேவலோகம் செல்ல முடியவில்லை.
அதனை அறிந்து வருத்தமடைந்த அரசன், ‘நீங்கள் மீண்டும் தேவலோகம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டான்.
உடனே அவர்கள், ‘அரசே! நீங்கள் ஆண்டுதோறும் ஏகாதசி விரதமிருந்த பலன்கள் அனைத்தையும் எங்களுக்குக் கொடுத்தால், நாங்கள் மீண்டும் தேவலோகம் சென்று விடுவோம்’ என்றனர்.
அரசனும், தன்னுடைய ஏகாதசி விரதப் பலன்கள் அனைத்தையும் அவர்களுக்கு வழங்கினான். அதனைப் பெற்ற அவர்கள், மீண்டும் தேவலோகம் சென்றனர்.
இதனை அறிந்த மகாவிஷ்ணு, அரசன் ருக்மாங்கதனுக்குக் காட்சியளித்து அருளினார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு கடிகை (24 நிமிடங்கள்) நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.
பிற்காலத்தில், இப்பகுதிக்கு மன அமைதி தேடி வந்த பஞ்சபாண்டவர்களில் சகாதேவனுக்கு மேற்சொன்ன வரலாற்றுக் கதை தெரியவந்தது. அவன் அங்கு, மகாவிஷ்ணுவுக்குச் சிலை நிறுவிக்கோவில் அமைக்க விரும்பினான். ஆனால், அவனுக்குக் கோவிலில் நிறுவ மகாவிஷ்ணு சிலை எதுவும் கிடைக்கவில்லை.
மனம் வருந்திய அவன் அவ்விடத்தில் நெருப்பு மூட்டி, அதில் இறங்கி உயிர்விடத் துணிந்தான். அப்போது அந்த இடத்தில் மகாவிஷ்ணு சிலை ஒன்று தோன்றியது. சகாதேவன் அந்தச் சிலையை அவ்விடத்தில் நிறுவிக் கோவில் அமைத்தான். அதனால், இத்தல இறைவனுக்கு ‘அற்புத நாராயணர்’ என்று பெயர் ஏற்பட்டதாக ஆலய தல வரலாறு சொல்லப்படுகிறது.
இக்கோவிலில் வட்டவடிவமான ஒரே கருவறையில் அற்புத நாராயணர் கிழக்கு நோக்கியும், நரசிம்மர் மேற்கு நோக்கியும் இருக்கின்றனர். இங்கிருக்கும் நரசிம்மர் உருவம் பிற்காலத்தில் நிறுவப்பட்டது என்கின்றனர். இருவருக்கும் தனித்தனியாக இரண்டு கொடிமரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தல இறைவி ‘கற்பகவல்லி நாச்சியார்’ என்றழைக்கப்படுகிறார்.
கருவறையின் தெற்குப் பகுதியில் தெற்கு நோக்கியபடி தட்சிணாமூர்த்தி, கணபதி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் சன்னிதிகளுக்கு கதவுகள் எதுவும் கிடையாது. அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மரத் துவாரங்களின் வழியாக அவர்களைப் பார்த்து வணங்கிக் கொள்ளலாம். இக்கோவிலின் சுற்றுப்பகுதியில் சாஸ்தா, சுப்பிரமணியர், பத்ரா போன்ற துணை தெய்வங்களுடன் நாகதெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலய மேற்புறம் தசாவதார சிற்பங்கள் காணப்படுகின்றன.
கிழக்குக் கோபுரத்துக்கு அருகில் கழுமரத்தில் ஒரு மனிதர் படுத்த நிலையிலான சிலை ஒன்று இருக்கிறது. ‘கையூட்டு, ஊழல், ஏமாற்றுதல் போன்ற குற்றங்கள் கழுமரத் தண்டனைக்குரியவை’ என்பதை வலியுறுத்தும் வகையில் அந்தச் சிலை அங்கு இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். இந்தச்சிலை அமைந்ததற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

வழிபாடுகள்
ஆலயம் அதிகாலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி, ஏகாதசி உள்ளிட்ட விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி விருச்சிகம் (கார்த்திகை) மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் கொடியேற்றித் தொடங்கும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளில் ‘சங்கேதம்’ எனும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தத் தீபங்கள் மறுநாள் காலை வரை எரிந்து கொண்டிருக்கும் என்றும், இதனைக் காணப் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்றும் சொல்கின்றனர்.
இத்தலத்தில் தீபத்திருவிழா நடத்தப் பெறுவதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் சிவபெருமான் இப்பகுதியில் நெருப்புப் பிழம்பாக தோன்றியிருக்கிறார். அவரிடமிருந்து வரும் வெப்பத்தால் இந்தப் பகுதி அழிந்து போய்விடக் கூடாது என்று நினைத்த பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை வேண்ட, ஈசன் சிறு தீபமாக மாறி நின்றருளியதாக சொல்கிறார்கள். அதனால்தான் இந்த விஷ்ணு ஆலயத்தில் திருக்கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடத்தப்படுகிறது.
வழிபாட்டுப் பலன்கள்
இவ்வாலய இறைவனுக்குப் பால்பாயசம், கடும்பாயசம், பானகம், கதலிப்பழம் போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன. இங்கு சதுர்சத வழிபாடு, சந்தனக்காப்பு வழிபாடு நடத்துவோருக்கு, அவர்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும் என்கின்றனர். இங்குள்ள நரசிம்மருக்கு, அவரது கோபத்தைக் குறைப்பதற்காகப் பால்பாயசம் சமர்ப்பிக்கப்படுகிறது. நரசிம்மர் வழிபாட்டின் போது, “நாராயணீயம்” சொல்லப்படுகிறது. பொதுவாக, இத்தலத்து இறைவனை நினைத்து வேண்டினால், அவர்கள் எடுத்துக் கொண்ட செயலில் வெற்றியும், மோட்சமும் உறுதியாகக் கிடைக்கும் என்கின்றனர்.
அமைவிடம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கணாச்சேரியில் இருந்து காவியூர் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு செல்ல சங்கணாச்சேரியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
-தேனி மு.சுப்பிரமணி

கழுவேற்றப்பட்ட மனித சிலை

சோழவள நாட்டின் காவிரி நதிக்கு வடகரையில் திகழும், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 62-வது சிவத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம். இநந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சோழவள நாட்டின் காவிரி நதிக்கு வடகரையில் திகழும், தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 62-வது சிவத்தலம் திருப்பாச்சிலாச்சிராமம். இது தற்போது ‘திருவாசி’ என வழங்கப்படுகிறது. திருப்பாச்சிலாச்சிராமம் என்பதில் ‘திரு+ பாச்சில்+ ஆச்சிராமம்’ என்ற மூன்று சொற்கள் உள்ளன. ‘திரு’ என்பது தெய்வத்தன்மை, அழகு, செல்வம் ஆகும். ‘பாச்சில்’ என்பது ஊர்ப்பெயர் ஆகும். ‘ஆச்சாரமம்’ என்பது கோவிலின் பெயர். இது ஊர்ப் பெயருடன் வழங்கல் ஆயிற்று.
ஒரு சமயம் திருக்கயிலை மலையில் சிவபெருமானோடு உமா தேவியார் எழுந்தருளி இருந்தார். அப்போது அம்மையார் எழுந்து இறைவனை வணங்கி நின்று, ‘சுவாமி! தாங்கள் அருளிய இருபத்தெட்டுச் சிவாகமங்களில் கூறியவற்றுள், தங்களுக்கு விருப்பமான செயல் ஒன்றை எனக்கு அருள வேண்டுகிறேன்’ என்று விண்ணப்பித்தாள்.
உடனே சிவபெருமான் ‘உமையே! நாம் மிகவும் விரும்புவது பூசனையே. அதுவும் சோழ நாட்டுக் காவிரியின் வடகரையில் தேவர்கள், முனிவர்கள் தவம்புரியும் திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் தலத்தில் நம்மை ஒருவர் சிவாகம விதிப்படி பூஜித்து வழிபட்டால், அவர்களது எண்ணங்கள் யாவும் கைகூடும்’ என்று அருள் புரிந்தார்.
உமாதேவியார் சிவபெருமானிடம் தான் சிவபூஜை செய்ய விரும்புவதை தெரிவித்து விடைபெற்றுக் கொண்டு திருப்பாச்சிலாச்சிராமத்திற்கு எழுந்தருளினார். உமாதேவியார் தம் பணிப்பெண்களுடன் திருப்பாச்சிலாச்சிராமம் அடைந்து, அங்குள்ள பொய்கையில் நீராடி நியமத்துடன், பிறர் அறியா வண்ணம் அன்னப்பறவை வடிவம் தாங்கிச் சிவபெருமானை ஆகமப்படி பூஜித்து வழிபட்டு வந்தாள்.
அம்மையாரின் பூஜைக்கு மகிழ்ந்து, சிவகணநாதர்களுடன் சிவபெருமான் அங்கு எழுந்தருளினார். பின்னர் வேண்டியதை கேட்கும்படி அம்பாளிடம் கூறினார். அன்னையும், ‘இறைவா! நான் அன்ன வடிவுடன் இருந்து நீராடிய இங்குள்ள பொய்கை ‘அன்னமாம் பொய்கை’ என்ற திருப்பெயருடன் விளங்க வேண்டும். இதில் நீராடி உம்மை வழிபடுபவர்களுக்கு, பிணிகள் யாவும் நீங்கி அவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறல் வேண்டும்’ என்றாள். இறைவனும் அப்படியே அருள்புரிந்தார்.
திருச்சிராப்பள்ளி வடக்கே உள்ளது கொல்லிமலை. அம்மலைத் தொடரைத் தனக்கு எல்லையாகக் கொண்டவன் கொல்லிமழவன் என்ற சிற்றரசன். அவன் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற சிவத்தலத்தை தனது இருக்கையாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். இவ்வரசன் சைவ மரபினன் ஆவான். இவனுக்கு அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். அக்கன்னி இளங்கொழுந்து போல் ஒளிவீசும் அழகு நிறைந்த மேனியவள். அவளை முயலகன் என்னும் பெருநோய் பற்றி வருத்தியது. தன் பெண்ணின் துன்பத்தைக் கண்ட கொல்லிமழவன் மிகக்கவலை அடைந்தான். அரசன் தன் மகளுக்கு எவ்வளவோ வைத்தியம் பார்த்தும், அவளுக்கு வந்த நோய் அகலவில்லை. நோயைத் தீர்க்க முடியாதவனாய், தன் மகளைத் திருக்கோவிலுள்ளே கொண்டுபோய் மணிகண்டேஸ்வரர் சன்னிதி முன்பாக கிடத்தினான்.
அப்போது திருஞானசம்பந்தர் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு, திருப்பாச்சிலாச்சிராமத்தையும் தரிசிக்க அப்பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அதை அறிந்த கொல்லிமழவன், தன் மகளை ஆலயத்திலேயே விட்டு விட்டு விரைந்து வெளியே வந்து, தனது குடிமக்களுக்கு நகரத்தை மகர தோரணங்களால் அலங்கரிக்கவும், நிறைகுடங்களையும், மணிகளையும் ஏந்தி நிற்கவும் உத்தரவிட்டான்.
சம்பந்தருடைய முத்துச் சிவிகைக்கு முன்பு சென்று வீழ்ந்து வணங்கினான். ஞானசம்பந்தர் அவனுக்கு அருள்செய்தார். மழவன் மன மகிழ்ச்சியோடு திருஞானசம்பந்தரை, திருப்பாச்சிலாசிராமத்தின் திருவீதியின் வழியே அழைத்துக் கொண்டு ஆலயம் வந்தான். அங்கே உணர்விழந்து கிடந்த பெண்ணைப் பார்த்து ‘என்ன இது?’ என்று திருஞானசம்பந்தர் வினவினார்.
கொல்லிமழவன் சம்பந்தரை வணங்கி, ‘இவள் என்னுடைய மகள். இவளை முயலகன் என்னும் கொடிய நோய் பிடித்துள்ளது. அந்நோய் எவ்வித சிகிச்சையினாலும் தீரவில்லை. அதனால் இவளைச் சிவசன்னிதி முன்னே கிடத்தியுள்ளேன்’ என்றான்.

அதனைக்கேட்ட சம்பந்தர் அருள்கூர்ந்து, அந்நிலையில் நின்றபடியே சிவபெருமானை நோக்கி, ‘துணிவளர் திங்கள்’ என்ற திருப்பதிகம் தொடங்கிப் பாடினார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ‘மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பு’ என்று வைத்துப்பாடித் திருக்கடைக்காப்புச் சாத்தி அருளி வணங்கினார். உடனே கொல்லிமழவன் மகள், பிணி நீங்கப்பெற்று எழுந்து தந்தை அருகே சென்று நின்றாள். அது கண்ட மழவன் பெருமகிழ்ச்சி கொண்டு, திருஞானசம்பந்தர் திருவடிகளில் தனது மகளுடன் விழுந்து வணங்கினான். பிறகு அனைவருமாக சிவெபருமானை தரிசித்தனர்.
இந்த ஆலயத்தில் ‘கிழி கொடுத்தருளிய திருவாசல்’ என்னும் ஸ்தபன மண்டபம் உள்ளது. அதாவது சுந்தரருக்கு பொற்கிழி கொடுத்த திருத்தலம் இது. சிவத்தல யாத்திரையாக இத்தலம் வந்த சுந்தரர், தம் அடியவர்கள் பொருட்டு இத்தல ஈசனிடம் பொன் கேட்டார். ஈசன் சுந்தரரிடம் விளையாட விரும்பி, பொன்னை உடனே கொடுக்கவில்லை. இதனால் சுந்தரர், கோபத்தில் இறைவனை நோக்கி பதிகம் பாடினார். அப்போது ஈசன் தோன்றி சுந்தரருக்கு பொற்கிழி அளித்து மறைந்தார்.
இப்போது சுந்தரருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ‘நாம் கோபத்தில் ஈசனை நோக்கி பதிகம் பாடியும், ஈசன் பொற்கிழி கொடுத்துள்ளாரே! ஒரு வேளை ஈசன் கொடுத்த பொற்கிழியில் இருக்கும் பொன், மாற்று குறைந்திருக்குமோ?’ என்று எண்ணினார்.
சுந்தரரின் எண்ணத்தை அறிந்த ஈசன், தம்முடன் மகாவிஷ்ணுவையும் அழைத்துக்கொண்டு, வணிகர்கள் வடிவில் சுந்தரரிடம் சென்றார். பின்னர் அவரிடம் இருந்த பொற்காசுகளை உரசிப் பார்த்து, ‘இந்த பொன் தரமானது தான்’ என்று உறுதியளித்தாராம். இதனால் தான் இத்தல ஈசனுக்கு ‘மாற்றுரைவரதர்’ என்று திருநாமம் வந்ததாம்.
கர்மவினைகளால் தான், நம்மை நோய்கள் பீடிக்கின்றன. அந்த கர்மவினைகளை அடியோடு களைந்து நம்முடைய தீராத நாட்பட்ட வியாதிகளையும் தீர்த்து வைக்கும் வல்லமை படைத்த இத்தலம் வந்து வழிபட்டு, சம்பந்தரின் பதிகம் பாடி வழிபட தீராத நோய்களும் அடியோடு நீங்கும்.
இத்தலத்தில் அருளும் பைரவர் தமது வலக்கரத்தில் சூலம் ஏந்தி இருப்பது அடியவர்களை பிடித்திருக்கும் பில்லி, சூன்யம், மாந்திரீகம் முதலியவற்றை அகற்றத்தான். இத்தல பைரவரை வேண்டி வீட்டின் தெற்கு பக்க சுவரில் சந்தனத்தில் சூலம் வரைந்து வழிபட்டு வர, உங்கள் வாழ்வுக்கும், சந்ததிகள் வாழ்வுக்கும் பைரவர் துணை நிற்பார். வியாபார தலங்களில் இத்தல பைரவரை வேண்டி, கடையின் தெற்கு பக்கச் சுவரில் சந்தனத்தில் சூலம் வரைந்து வழிபட்டு வர, இத்தல பைரவர் அருளால் வியாபாரம் பெருகும் என்கிறார்கள்.
இத்தல வள்ளி - தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமானை கிருத்திகை, சஷ்டி நாட்களில் வழிபட்டு வந்தால், நம் வேண்டுதல்கள் வெகு விரைவில் கைகூடிவரும் என்கிறார்கள்.
அம்பாளுக்கு முதல் பூஜை :
இத்தல பாலாம்பிகை அம்மன் சன்னிதி மேற்கு பார்த்த வண்ணம், ஈசனை நோக்கி அமைந்துள்ளது. இந்த அன்னையை வழிபாடு ெசய்தால், திருமணத் தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் மற்றும் சுகப் பிரசவத்திற்கும் பாலாம்பிகை வழிபாடு துணை செய்யும் என்கிறார்கள். இங்கு தினமும் அர்த்தஜாம பூஜையில் பாலாம்பிகை அம்பாளுக்கே முதலில் பூஜை நடக்கிறது.
அமைவிடம் :
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முசிறி, தொட்டியம் செல்லும் பேருந்துகள் மூலம் திருவாசி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, வடக்கே 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் கோவிலை அடையலாம்.
இத்தலத்தின் மிக அருகில் விஷக்கடி போக்கும் துடையூர் விஷமங்களீஸ்வரர் திருக்கோவிலும், மனம் சம்பந்தப்பட்ட நோய்களை அகற்றும் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலும், குணசீலம் ஹேமவர்ணாம்பிகை உடனுறை தார்மீகநாத சுவாமி திருக்கோவிலும் இருக்கின்றன.

சிவபெருமான் பதினோரு திரு அவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திரு அவதாரங்களுடனும் ஒரே திருத்தலத்தில் தோன்றி அருளிய திருத்தலம் திருநாங்கூர்.
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி, அன்னை திருக்கடையூர் அபிராமியை ஆதிபராசக்தியின் பல்வேறு வடிவங்களாய் போற்றித் துதிக்கிறது. அபிராமி அந்தாதியில், ‘மண்களிக்கும் பச்சைவண்ணமும் ஆகி, மதங்கர் குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே’ என்பார் அபிராமிபட்டர்.
சித்திமதி-மதங்க முனிவரின் கோடிக்கணக்கான மதங்க கன்னிகைகளில் மூத்தவளும் பேரழகியுமானவள் அன்னை மாதங்கி. அவளது பச்சைநிறம் இந்த மண்ணையே களிக்கச் செய்ததாக அபிராமிபட்டர் போற்றுகிறார். இந்த மாதங்கியை சியாமளை, மந்திரிணி, ராஜசியாமளா, ராஜமாதங்கி என்றும் அழைப்பார்கள். லலிதை ஆதிபராசக்தியின் கரும்பு வில்லில் இருந்து தோன்றி, தம் அடியவர்களுக்கு கல்வி, நுண்ணறிவு, சொல்லாற்றல், இசையறிவு, வசீகரிக்கும் சக்தி, திரண்ட செல்வம் என அள்ளித்தருபவள் ராஜமாதங்கி. இந்த ராஜமாதங்கி அருளும் இடம் சீர்காழி மற்றும் திருவெண்காடு அருகிலுள்ள திருநாங்கூர் திருத்தலம் ஆகும்.
ஒரு பிரளய காலத்தில் பிரம்மதேவர், சிவபெருமானை மதங்கம் எனும் யானை வடிவில் இருந்து தியானித்தார். அப்போது பிரம்மனின் மனதில் இருந்து அவரது புத்திரனாய் மதங்க முனிவர் தோன்றினார். தவம் செய்ய விருப்பம் கொண்டு இடம் தேடினார் மதங்க முனிவர். அது பிரளய காலம் அல்லவா? எங்கும் ஒரே வெள்ளம். தவமியற்ற இடம் கிடைக்கவில்லை.
அப்போது நாரத முனிவர் தோன்றி, ‘மதங்கா! பூவுலகில் அனைத்து உயிர்களும் ஒடுக்கம் அடையும் திருவெண்காடு, பிரளயத்திலும் அழியாமல் உள்ளது. அங்கு சென்று தவமியற்று' என்றருளினார்.
ஊழிக்காலத்திலும் அழியாத அத்தலத்தைக் கண்ட மதங்கர் அங்கேயே தவமியற்றத் தொடங்கினார். அப்போது மகாவிஷ்ணு மோகினி வடிவில் தோன்றி ஆசி வழங்க, விநாயகப்பெருமான் மதங்கருக்கு அஷ்டமா சித்திகளையும் அருளினார். இந்த மோகினி வடிவ பெருமாள் ‘நாராயணி’ எனும் திருநாமத்திலும், விநாயகர் ‘மதங்க விநாயகர்’ எனும் பெயரிலும் திருநாங்கூர் மதங்கீஸ்வரர் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்கின்றனர்.
பின்னர் தவமிருந்த மதங்க முனிவருக்கு அம்பிகையுடன் சிவபெருமான் திருக்காட்சி நல்கினார். அப்போது மதங்கர் அம்மையப்பனிடம், ‘அம்பிகையே எனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும்' என்று வேண்டினார்.
உடனே பார்வதி தேவி ‘மதங்கரே! எம் வடிவம் கொண்ட மந்திரிணியான சியாமளா தேவி உமக்கு மகளாக வந்து பிறப்பாள்' என அருளி மறைந்தாள். அதன்படி, ஆடிமாதம் வெள்ளிக்கிழமை அதிகாலை மதங்க தீர்த்தம் எனும் பொய்கையில் நீலோத்பல மலர் மேல் சியாமளாதேவி குழந்தையாக வந்துதித்தாள். அப்போது பொய்கைக்கு நீராடவந்த மதங்கர் - சித்திமதி தம்பதியினர், அக்குழந்தையை எடுத்து தங்கள் மகளாக வளர்த்து, பின்னாளில் சிவபெருமானுக்கு மணம் முடித்து வைத்தனர்.
பின்னர் ரிஷபத்தில் சக்தி மாதங்கியுடன் சிவபெருமான் எழுந்தருளி, திருக்கல்யாண சேவை நல்கி அருளினார். அந்த ரிஷப சேவை திருக்காட்சியின் தொடர்ச்சியாய் இன்றுவரை திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவிலில் ‘ரிஷப சேவை திருக்காட்சி' நடைபெற்று வருகிறது.
மதங்கர் அம்பிகை ராஜசியாமளாவை வளர்த்து வந்ததால், அம்பிகை ‘ராஜமாதங்கி’ என்றும், மாதங்கியை சிவபெருமான் மணந்து ஆட்கொண்டதால், இறைவன் ‘மதங்கீஸ்வரர்’ என்றும், ஆட்கொண்ட மதங்கரின் ஆசிரமம் அமைந்திருந்த இடம் ‘மதங்காஸ்ரமம்’ என்றும், தற்போது அவ்விடமே திருநாங்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் திருக்கோவில் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தல மாதங்கியை தேன் நைவேத்தியம் செய்து வழிபட்டு வந்தால், படிப்பில் குழந்தைகளின் மந்த நிலை நீங்கி, நுண்ணறிவைப் பெற்றிடுவர் என்று சொல்லப்படுகிறது. மேலும் கல்வி, ஞானம், இசையறிவு கூடிவர இத்தல ராஜமாதங்கி வழிபாடு பெரிதும் துணை செய்யும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல சிவபெருமான் பதினோரு திரு அவதாரங்களுடனும், மகாவிஷ்ணு பதினோரு திரு அவதாரங்களுடனும் ஒரே திருத்தலத்தில் தோன்றி அருளிய திருத்தலம் திருநாங்கூர்.
தமது கட்டளையை மீறி தட்சனின் யாகத்திற்குச் சென்றுவந்த தாட்சாயணியின் மீது கொண்ட சினத்தினால், சிவபெருமான் இங்கு உள்ள உபய காவிரி என்னும் இடத்தில் ருத்திரதாண்டவம் ஆடினார். அப்போது அவரது விரிந்த சடாமுடி பதினொரு இடங்களில் பூமியில் உதிர்ந்தது. அந்தப் பதினொரு இடங்களிலும் இன்னொரு சிவபெருமான் உருவம் தோன்றி ருத்திரதாண்டவம் நிகழ்த்தத் தொடங்கியது. இதனால் இவ்வுலகிற்குப் பேரழிவு ஏற்படும் என்று அஞ்சிய தேவர்கள், மகா விஷ்ணுவிடம் அடைக்கலம் புகுந்தனர். அவர் ருத்திரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த 11 சிவபெருமான்களையும், 11 மகாவிஷ்ணுவாய் தோன்றி கட்டித் தழுவினார். இதனால் சினம் தணிந்து சாந்தநிலைக்குத் திரும்பிய சிவபெருமான், தமது சடாமுடி உதிர்ந்த பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டருளினார். அதுபோலவே மகாவிஷ்ணுவும் பதினொரு இடங்களிலும் கோவில் கொண்டார்.
மகாவிஷ்ணுவின் பதினொரு திருக்கோலங்கள் கோவில் கொண்ட பதினொரு திருத்தலங்கள் திருநாங்கூரில் திவ்விய தேசங்களாக அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் இரவில் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் ‘11கருடசேவை' திருவிழா சிறப்பாக நடக்கும். அதுபோல இந்த சிவாலயங்களின் சார்பாக ‘பன்னிரு ரிஷபாரூட சேவை' திருவிழா சித்ரா பவுர்ணமி நாளில் அக்காலத்தில் இங்கு நடந்துள்ளது.
ஆனால் சிலபல காரணங்களால் சித்ரா பவுர்ணமியில் அந்த காலத்தில் நடைபெற்றுவந்த ரிஷபாரூட சேவை தடைபட்டது. பல வருட தடைகளுக்குப்பின், தற்போது வைகாசி மாதத்தில் ரோகிணி நட்சத்திர நாளில் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈசனின் ஒரு ரிஷபாரூட திருக்காட்சி கண்டாலே பெரும் பாக்கியம். ஆனால் இங்கு ஒரே தலத்தில் பன்னிரு திருக்கோவில்களில் உள்ள ஈசன்களும் அம்மை உமையவளுடன் பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி அருள்கிறார். இதனைக் காண்பது வெகு புண்ணியம்.
இந்த விழா 13-6-2018 (புதன்கிழமை) திருநாஞ்கூர் ராஜமாதங்கி சமேத மதங்கீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் பன்னிரு திருக்கோவில் சிவபெருமானின் உற்சவ திருமேனிகளுக்கும், சமகாலத்தில் திருக்கல்யாணம் செய்விக்கப்படும். பின்னர் திவ்ய தம்பதிகள் ரிஷபாரூடத்தில் திருக்காட்சி தரும் வைபவம் நடைபெறும். பின்பு அன்று இரவு 9.30 மணிக்கு மேல் பன்னிரு ரிஷபாரூட மூர்த்திகளும், திருமுறை பாராயணங்கள் ஒலிக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, திருவீதியுலா வருவார்கள். இந்த பன்னிரு ரிஷபாரூட திருக்காட்சி காண்பதன் மூலம் நம் பாவ வினைகள் அகன்று ஒளிமயமான நல் வாழ்க்கை அமையும்.
இரண்டு நந்தி
ஆலயத்தில் ஈசனின் எதிரில் இரண்டு நந்திகள் உள்ளன. அதில் மதங்க நந்தி, ஈசனை நோக்கியவாறும், சுவேத நந்தி மறுபக்கம் திரும்பிஇருப்பதையும் காணலாம். மாதங்கி-மதங்கீஸ்வரர் திருக்கல்யாணத்தின் போது ஈசனின் கட்டளைக்கிணங்கி இங்குள்ள நந்தி திருக்கயிலாயம் சென்று அன்னை மாதங்கி சார்பாக சீர் அளித்ததாம். எனவே பிரதோ ஷத்தின் போது இந்த இரு நந்தி களுக்கும் தொடர்ந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், வறுமை யால் திருமணம் கைகூடாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணத் தடை விலகும்.
அமைவிடம்
சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் திருநாங்கூர் அமைந்துள்ளது. அருகில் திருவாலி திருநகரி, மங்கைமடம், திருவெண்காடு திருக்கோவில்கள் உள்ளன.

நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் ஒரு இறைவன் அழைக்கப்படுகிறார். ‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது.
‘ஔஷதம்’ என்பதற்கு மருந்து என்று பொருள். நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் ஒரு இறைவன் அழைக்கப்படுகிறார். ‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது.
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிள்ளையார் பீடம், நந்தி மண்டபம் உள்ளன. அடுத்துள்ள வசந்த மண்டபத்தின் வலதுபுறம் இறைவி பெரிய நாயகியின் சன்னிதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைச் சுமந்தபடியும் கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் அன்னை அருள்பாலிக்கிறாள்.
ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது. வசந்த மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும், அதையடுத்து அர்த்தமண்டபமும் உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலில் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். அவர்களுக்கு வலது புறம் அனுக்ஞை விநாயகர் அருள்பாலிக்கிறார். கருவறையில் மருந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர், ஒரு முறை மருங்கபள்ளம் கிராமத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு அருகே இருந்த ஒரு ஆலயம் பற்றியும், அங்கு அருள்பாலிக்கும் இறைவனின் சக்தி பற்றியும், ஆலயத்தைச் சுற்றி விளைந்து கிடந்த பச்சிலைகள் பற்றியும் சொல்லப்பட்டது.
தீராத வியாதியால் தவித்து வந்த மன்னர் ஆலய திருக்குளத்தில் நீராடி மருந்தீஸ்வரரையும், பெரியநாயகியையும் ஆராதித்து வணங்கி வந்தார். அத்துடன் அங்கு இருந்த சித்த வைத்தியர் ஆலோசனைப்படி பச்சிலைகளையும் உட்கொண்டு வந்தார். மன்னரின் நோய் படிப்படியாக குணமாகி சில நாட்களில் முற்றிலும் குணமடைந்தார்.
மனம் மகிழ்ந்த மன்னர், தற்போது மருங்கப்பள்ளம் பகுதியை ஆலயத்திற்குத் தானமாக வழங்கினார். அதுவரை ‘மருந்து பள்ளம்’ என்று இருந்த, அந்த ஊர் பெயர் மருவி தற்போது ‘மருங்கப்பள்ளம்’ என்று அழைக்கப்படுகிறது.
தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகா கணபதி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. திருச்சுற்றில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் மேற்கிலும், கிழக்கில் சனி பகவான், பைரவர், லட்சுமி நாராயணன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இங்கு சனி பகவானுக்கு மட்டுமே சன்னிதி உள்ளது.
இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தன்னை வணங்கும் பக்தர்களின் வியாதிகளை படிப்படியாகக் குறைத்து, அவர்கள் பரி பூரண குணம் பெற இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் அருள்புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கபள்ளம்.