என் மலர்
கோவில்கள்
பித்ரு தோஷம் தோஷம் நீங்கிட திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் இருக்கும் விசுவாமித்திர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலச யாகம் செய்ய வேண்டும்.
நாம் சேர்க்கும் எந்த ஒரு புண்ணிய காரியத்தையும், நம்மிடம் சேர்க்காமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது ‘பித்ரு தோஷம்’. இந்த தோஷம் நீங்கிட திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள விஜயாபதி என்னும் கடலோர கிராமத்தில் இருக்கும் விசுவாமித்திர மகாலிங்கசுவாமி திருக்கோவிலில் நவகலச யாகம் செய்ய வேண்டும். எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு - ஒரு மாபெரும் வரப் பிரசாதம் இந்தத் திருத்தலம். நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆவதாகக் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அற்புத சக்தி படைத்த திருத்தலமான விஜயாபதி பற்றி இங்கே பார்க்கலாம்.
வசிஷ்டரின் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றவர் விசுவாமித்திரர். ஆனால், அந்தப் பட்டம் அவருக்கு உடனே கிடைத்து விடவில்லை. கடுமையான தவம் இயற்றிய பிறகே, அவருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைத்தது.
ஒரு நாட்டின் மன்னனாக இருந்தவன் கவுசிகன். இவர் ஒரு முறை வேட்டையாடுவதற்காக படை பரிவாரங்களுடன் காட்டுக்குச் சென்றான். வேட்டையாடி விட்டு திரும்பும் வழியில், வசிஷ்டரின் ஆசிரமத்தின் பக்கமாக வந்தான். தன் ஆசிரமம் பக்கமாக வந்த கவுசிக மன்னனையும் படை பரிவாரங்களையும் உணவு தந்து உபசரிக்க விரும்பிய வசிஷ்டர், கவுசிகனிடம் ‘உங்களுக்கும் உங்களுடைய படையினருக்கும் நான் உணவு பரிமாறுகிறேன். நீங்கள் உணவு உண்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’ என்றார்.
அதற்கு கவுசிகன், ‘எனக்கும் என் படையினருக்கும் உங்களால் உணவு பரிமாற முடியாது. காட்டுப் பகுதியில் ஆசிரமத்தில் தனிமையில் இருக்கும் உங்களால் எப்படி இத்தனை பேருக்கும் உணவு சமைத்து பரிமாற முடியும்?’ என்று கேட்டான்.
‘முடியும் மன்னா! நீங்களும் உங்கள் பரிவாரங்களும் சற்றே இளைப்பாற அமருங்கள். சற்றுநேரத்துக்குள் உங்களுக்கு அறுசுவை விருந்து தயாராகிவிடும்’ என்றார் வசிஷ்டர்.
பிறகு அவர் ஆசிரமத்தின் பின்புறம் இருந்த காமதேனுவிடம் சென்று, ‘வந்திருக்கும் அனைவருக்கும் அறுசுவை விருந்து தயார் செய்து, பணிப்பெண்கள் மூலம் பரிமாற வேண்டும்’ என்றார். அப்படியே சற்றுநேரத்தில் அறுசுவை விருந்து தயாரானது. பரிமாறுவதற்கு பணிப்பெண்களும் வந்தனர்.
வசிஷ்டரின் ஆசிரமத்தில் இப்படி ஒரு தெய்வீகப் பசு இருப்பதைக் கண்ட கவுசிகன், ‘‘கேட்டதைத் தரும் அட்சய பாத்திரமான காமதேனு, சாதாரண முனிவரான உங்களிடம் இருக்கக்கூடாது. நாட்டின் மன்னனான என்னிடம் தான் இருக்க வேண்டும்’ என்று சொல்லி, அந்த தெய்வீகப் பசுவைத் தனக்குத் தருமாறுக் கேட்டார். அதற்கு வசிஷ்டர் மறுத்து விட்டார்.
வசிஷ்டரின் மகிமை தெரியாத கவுசிகன், தன்னுடைய படையினரைப் பார்த்து, அந்தப் பசுவை இழுத்து வருமாறு கூறினான். படையினர் பசுவை இழுத்து வரச் சென்றனர். அவர்கள் அனைவரையும் எரிந்து சாம்பலாகும்படி வசிஷ்டர் சாபமிட்டார். அதன்படி படைவீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள்.
வசிஷ்டரின் தவ வலிமையை உணர்ந்துகொண்ட கவுசிகன், ‘தங்களுக்கு எப்படி இந்த வலிமை கிடைத்தது? தங்களைப் போலவே நானும் பிரம்மரிஷி ஆகவேண்டும். அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டான்.
‘கடுமையாகத் தவம் இயற்றினால் மட்டுமே பிரம்மரிஷி பட்டம் கிடைக்கும். சுகபோகங்களில் திளைத்த உன்னால் அப்படி கடும் தவம் புரியமுடியாது’ என்று வசிஷ்டர் சொல்ல, ‘படைபரிவாரங்கள் இல்லாமல் நான் நாட்டுக்குப் போவதும் ஒன்றுதான். போகாமல் இருப்பதும் ஒன்றுதான். எனவே நானும் தங்களைப் போல் கடும் தவம் புரிந்து, உங்கள் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுகிறேன்’ என்று கூறிவிட்டு தவம் இயற்றச் சென்றான்.
தன் தவத்தின் பயனாக ஆகச்சிறந்த மகரிஷியான அந்த மன்னனே விசுவாமித்திரர் ஆவார். தவத்தின் பலனாக சிறந்த ஆற்றல் பெற்றிருந்த விசுவாமித்திரர், ஒரு முறை திரிசங்குவுக்கு சொர்க்கம் அமைத்துக் கொடுத்ததால் அனைத்து தவ பலன்கைளயும் இழந்து விட்டார். மீண்டும் தவ ஆற்றலைப் பெறுவதற்காக யாகம் செய்ய நினைத்தார்.
யாகம் செய்ய அவர் தேர்வு செய்த இடம்தான் விஜயாபதி. விஜயாபதி கடற்கரைக்கு அருகில் லிங்கத் திருமேனியாக இறைவனையும், இறைவியையும் உருவாக்கி ஓமகுண்டம் வளர்த்தார். அப்போது யாகம் செய்ய விடாமல் தாடகை என்ற அரக்கி தொல்லை கொடுத்தாள். இதனால் அவளை அழிக்க ராம- லட்சுமணர்களை அழைத்து வந்தார் விசுவாமித்திரர். ராமரும் லட்சுமணரும் தாடகையை அழித்து, விசுவாமித்திரர் யாகம் சிறப்பாக நடைபெற துணை புரிந்தனர்.
யாகத்தின் முடிவில், இறைவனும், இறைவியும் தோன்றி ‘இழந்த சக்திகளைப் பெற்று விட்டாய். காசிக்குச் சென்று உன்னை சபித்த வசிஷ்டர் வாயாலேயே ரிஷிகளில் உயர்ந்த பட்டமான ‘பிரம்மரிஷி’ பட்டத்தைப் பெறுவாய். வசிஷ்டரே உனக்கு குருவானவர். நீ தவம் புரிந்த இந்த இடத்துக்கு வந்து செல்பவர்களுக்கு தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று அருளினர். விசுவாமித்திரரும் காசிக்குச் சென்று, வசிஷ்டர் வாயாலேயே ‘பிரம்ம ரிஷி’ என அழைக்கப்பட்டார்.
‘விஜயம்’ என்றால் வெற்றி, ‘பதி’ என்றால் இடம். விஜயாபதி என்றால் ‘வெற்றிக்கான இடம்’ என்று பொருள். விசுவாமித்திரர் யாகம் செய்த இடம், இழந்த சக்திகளை மீண்டும் பெற்று விட்ட இடம் என்பதால் இங்கு விசுவாமித்திரருக்கு தனிக்கோவில் உள்ளது. இந்தியாவிலேயே விசுவாமித்திர மகரிஷிக்கு தனிக்கோவில் இருப்பது விஜயாபதியில் தான்.
கடற்கரையை நோக்கி கையில் கமண்டலத்துடனும், கழுத்தில் ருத்திராட்ச மாலையுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் விசுவாமித்திர மகரிஷி. அருகிலேயே உள்ளது விசுவாமித்திர மகாலிங்க சுவாமி கோவில். இறைவனை விசுவாமித்திரர் வழிபட்ட காரணத்தால், இத்தல இறைவனுக்கு இப்பெயர் வந்தது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இறைவனும், இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் காட்சியளிக்கின்றனர். கோவிலின் தல விருட்சம் வில்வமரம்.
விசுவாமித்திர மகாலிங்க சுவாமிக்கு வெள்ளை வஸ்திரம், வெள்ளை அரளி மாலை அணிவித்து, அகிலாண்டேஸ்வரி அம்பிகைக்கு சிவப்பு நிற பட்டு, செவ்வரளி மாலை சாத்தி நெய் தீபமிட்டு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். தைமாதம் தைப்பூசத்தில் இறைவனையும், இறைவியையும் விசுவாமித்திரர் பிரதிஷ்டை செய்ததால், தைப் பூசத்தன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
ஓமகுண்ட கணபதி
விசுவாமித்திரர் யாகம் செய்வதற்கு முன்னால், இங்குள்ள விநாயகரை வழிபட்டு விட்டுத் தான் யாகம் செய்துள்ளார். அதனால் இங்குள்ள விநாயகருக்கு ‘ஓமகுண்ட கணபதி’ என்று பெயர். கணபதி சன்னிதிக்கு வலப்புறம் ராமர், இடப்புறம் லட்சுமணர் உருவம் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரர் யாகம் செய்த ஓமகுண்டம், தற்போது கிணறு போல காட்சியளிக்கிறது. விசுவாமித்திரர் சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தன்று யாகமும், மாசி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று தியானத்தையும் தொடங்கினாராம்.
விசுவாமித்திரரின் ெஜன்ம நட்சத்திரம் விசாகம். ஒவ்வொரு மாதமும் அனுஷம், உத்திரட்டாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்களிலும், பவுர்ணமி தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்ப அர்ச்சனையும் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டால், பித்ருக்களின் சாபம் நீங்குவதாகச் சொல்லப்படுகிறது. கடலில் நீராடி, ஈர ஆடையுடனே ஓமகுண்ட கணபதிக்கு சிதறு தேங்காய் உடைத்து, விசுவாமித்திரருக்கு சிவப்பு வெள்ளை வஸ்திரம் அணிவித்து, அவருக்கு உகந்த ரோஜாப்பூ மாலை சாத்தி, 11 நெய் தீபமேற்றி, விசுவாமித்திரர் சன்னிதியை மூன்று முறைச் சுற்றி வந்து, மறுபடியும் ஒரு முறை விசுவாமித்திரரை தரிசனம் செய்துவிட்டுச் சென்றால் சில நாட்களிலேயே முன்னேற்றம் தெரிவதாகக் கூறுகின்றனர் பலன் பெற்றவர்கள்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது விஜயாபதி திருத்தலம்.

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் எல்லையில் அமைந்துள்ளது கருக்காத்தம்மன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் எல்லையில் அமைந்துள்ளது கருக்காத்தம்மன் திருக்கோவில். மாமல்லபுரம் நகரத்தின் எல்லையில் இக்கோவில் அமைந்துள்ளதால், இந்த அம்மனை ஊரையும், மக்களையும் காப்பாற்றும் ‘எல்லைப்பிடாரி’ என்றும் அழைக்கிறார்கள்.
எல்லை காக்கும் கோவில்கள், பெரும்பாலும் வடக்கு பார்த்த முகமாக காட்சி அளிக்கும். ஆனால் இந்த ஆலய அம்மன் கிழக்கு பார்த்த முகமாக காட்சி அளிப்பது தனி சிறப்பம்சமாகும். மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் ஜடா முடியுடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். கருவை காக்கும் அம்மன் என்பதால் இந்த அம்மனை ‘கருக்காத்த அம்மன்’ என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.
குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமி நாட்களில் இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனை வேண்டிக்கொண்டு, சிறிய துணியில் எலுமிச்சைப் பழம் அல்லது சிறிய கல் ஒன்றை வைத்து தொட்டில் போல அமைக்கின்றனர். அங்குள்ள சூலாயுதத்தில் எலுமிச்சைப் பழத்தை சொருகி வைத்து வேண்டுகின்றனர்.
பின்னர் அந்த துணி தொட்டிலை கோவிலின் தல விருட்சமான எட்டி மரத்தில், அம்மனை நினைத்தபடி கட்டிவிடுகின்றனர். வேண்டுதல் பலித்து குழந்தை பாக்கியம் அடைந்த பெண்கள், தாயும் சேயுமாக கருக்காத்தம்மன் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி செல்கின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட குடும்பத்தினர், திருமணம் நல்ல முறையில் நடக்க அம்மனுக்கு பொங்கலிட்டு, பட்டு புடவை சாத்தி சிறப்பு வழிபாடு நடத்துவதும் இங்கு வாடிக்கையான ஒன்று.
அதே போல திருமணமான பெண்கள், மஞ்சள் பூசப்பட்ட கயிற்றில் ஒரு சிறிய துண்டு மஞ்சளைக் கட்டி, அம்மனை நினைத்து தலவிருட்ச எட்டி மரத்தில் கட்டி மூன்று முடிச்சு போடுகின்றனர். இதனால் தங்கள் மாங்கல்யம் பலம் பெறும் என்று பெண்கள் நம்புகிறார்கள். இத்தல அம்மன் 6 மாதம் ஆக்ரோசமான முகத்துடனும், 6 மாதம் சாந்தமான முகத்துடனும் காட்சி தருவது இக்கோவிலின் இன்னொரு சிறப்பம்சமாகும். திருவிழா நாட்களில் பெண்கள் கூட்டம் இங்கே அலைமோதும்.
குறிப்பாக ஆடி மாதம் பிறந்து விட்டாலே இந்த கருக்காத்தம்மன் திருக்கோவிலில் தினமும் திருவிழாக் கோலம் தான். ஏராளமான பெண்கள் விரதம் இருந்து ஆடி வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலில் பொங்கலிட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி வழிபடுவர். சில பெண்கள் வேப்பிலை ஆடை உடுத்தி, அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர். ஆடி மாத நாட்களில் அம்மனுக்கு சந்தன காப்பு, மஞ்சள் காப்பு, குங்குமகாப்பு, வெண்ணெய் காப்பு அபிஷேகங்கள் நடைபெறும். ஆடி மாதங்களில் ஊஞ்சல் சேவை உற்சவமும், சிறப்பு யாகங்களும் நடைபெறுகிறது.
ஆலய விழாக்களிலேயே புரட்டாசி மாதம் நடைபெறும் 10 நாள் நவராத்திரி விழா சிறப்பு வாய்ந்த திருவிழா ஆகும். விழாவின் 10 நாட்களும், 10 உற்சவதாரர்கள் மூலம் கருக்காத்தம்மன் வீணை ஏந்தும் சரஸ்வதி, அஷ்டலட்சுமி, பத்ரகாளி, மகிஷாசூரனை (அரக்கனை) சம்ஹாரம் செய்தல், சிவனுடன் கூடிய பார்வதி உள்பட பல திருக்கோலங்களில், பூக்களாலும் ஆபரணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதுண்டு.
10-ம் நாளான இறுதி விழாவில் கருக்காத்தம்மன் சிங்க வாகனத்தில் மாமல்லபுரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா வருவார். 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகர், நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னிதி உண்டு. மேலும் கோவிலின் முகப்பு மண்டபத்தில் கவுமாரி, வைஷ்ணவி, வராகி, சாம்பவி உள்ளிட்ட சப்த மாதர்களின் சுதை சிலைகள் வண்ணம் தீட்டப்பட்ட நிலையில் அழகுற காட்சி தருகிறது. கருவறையின் முன்புறம் இரு பக்கமும் துவாரபாலகர், இரு யானை சிலைகள் பக்தர்களை வரவேற்று காட்சி அளிப்பது சிறப்பம்சமாகும்.
இக்கோவில் பல்லவ மன்னர் களின் துறைமுக பட்டினமாகவும், உலக சுற்றுலா மையமாகவும் விளங்கும் மாமல்லபுரத்தில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது.
சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள மாமல்லபுரத்தில் நகரின் எல்லையில் அமைந்துள்ளது.

சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.
போர் வெற்றிகளைக் கொண்டாட மூன்றாம் குலோத்துங்கன் எழுப்பிய பெரிய கோவில், தீவினை நீக்கும் ஆதிசரபேஸ்வரர் சன்னிதி கொண்ட ஆலயம், சிற்பக் கலைகள் நிறைந்த திருக்கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, திருபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவில்.
புராண வரலாறு :
அச்சுவக்கிரீவன், விடபக்கிரீவன், வியாளக்கிரீவன் ஆகிய மூன்று அசுரர்களும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். அதன் பயனால் தேவராலும் மற்ற எவராலும் அழியாத வரம் பெற்றனர். பொன், வெள்ளி, இரும்புக்கோட்டை அமைத்து, தேவர்களையும், உலக உயிர்கள் அனைத்தையும் துன்புறுத்தி வந்தனர். நடுநடுங்கி வாழ்ந்த தேவர்களும், முனிவர்களும், சிவனிடம் சரணடைந்தனர். அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கி, தமது நகைப்பினால் மூன்று அசுரர்களையும், அவர்களின் கோட்டைகளையும் அழித்தொழித்தார். இதனால் அனைவரின் வாழ்விலும் பயத்தால் ஏற்பட்ட நடுக்கம் நீங்கியது.
இதேபோல, இரண்யனை அழித்த நரசிம்மருக்கு ஏற்பட்ட அசுரத்தன்மையால், உலக உயிர்கள் நடுநடுங்கின. தேவர்கள் உள்ளிட்ட அனைவரின் வேண்டுதலின்படி, சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, நரசிம்மரைச் சாந்தப்படுத்தி, இயல்புநிலைக்கு வரச்செய்து அமைதியை ஏற்படுத்தினார்.
மொத்தத்தில், வாழ்வில் நடுக்கத்தை சந்தித்த அனைவரின், கம்பத்தினை (நடுக்கத்தை) நீக்கிய இறைவனாக, இத்தலத்து இறைவன் விளங்கியதால், ‘கம்பகரேஸ்வரர்’ என்றும், ‘நடுக்கம் தவிர்த்த பெருமான்’ என்றும் அழைக்கப்படுகின்றார்.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய அகன்ற வடிவ ராஜகோபுரம் பிரம்மாண்டமாய் ஏழு நிலைகளைக் கொண்டுள்ளது. இந்தக் கோபுரம் முழுவதும் பல்வேறு புராணங்களை நினைவுபடுத்தும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கொடி மரம், பலிபீடம், நந்தி மண்டபம் கடந்ததும் மூன்று நிலை கோபுரம் காட்சி தருகிறது. அதைக் கடந்து உள்ளே சென்றால் சுவாமி, அம்பாள் சன்னிதியை தரிசனம் செய்யலாம்.
ஆலயம் தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், கங்கை கண்டசோழபுரம் கோவிலோடு ஒப்பிடும் விதத்தில் பிரம்மாண்டமாகவும், விசால மானதாகவும் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் கருவறை விமானம் ‘சச்சிதானந்த விமானம்’. அது அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் சிற்பங்களில் குறிப்பிடத்தக்கது, லிங்கோத்பவர் சிலா வடிவமும், பிச்சாடனர் உலா வடிவமும் ஆகும்.
இத்தலத்தில் இறைவன் பெயர் ‘நடுக்கந்தீர்த்த நாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்கிறார். இவரே ‘கம்பகரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாண்ட வடிவில் கிழக்கு முகமாய் ஒளிவீசும் திருமேனியில் இறைவன் காட்சி தருகின்றார். இத்தல இறைவனுக்கு திரிபுவனமுடையார், திரிபுவன ஈஸ்வரர், திருபுவன மகாதேவர் என்ற பெயர்களும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாமி சன்னிதியின் இடதுபுறம் தனி சன்னிதியாக அம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அதில் தர்மசவர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். தேவர்களின் நடுக்கத்தை இறைவன் தீர்த்த பின், அறங்களை வளர்ப்பவளாக இத்தல அன்னை இருக்கிறாள்.
அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேஸ்வரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. இதுவே ஆதிசரபேஸ்வரர் சன்னிதியும், திருக்கோவிலும் ஆகும். மூலவர் கலைநயத்துடன் காட்சி தருவது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரின் அருகில் உற்சவமூர்த்தியாக சரபேஸ்வரர் அமர்ந்துள்ளார்.
சரபேஸ்வரர் கருவறையின் முகப்பில் இரண்டு அழகிய பெண்கள் துவார சக்திகளாக அமைந்துள்ளனர். இச்சிலைகள் மிகவும் கலைநயம் கொண்டதாக உள்ளது. சிவன், விஷ்ணு, துர்க்கை, சூலினி சக்தி களின் வடிவமான சரபருக்கு இப்பெண்கள் காவல் புரிகின்றனர்.
பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் திருத்தேர், பத்தாம்நாள் காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளல், பன்னிரண்டாம் நாள் சரபேஸ்வரர் ஏகதின உற்சவம் மற்றும் வெள்ளி ரதத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும். இது தவிர, ஞாயிறு ராகு காலத்தில் சரபேஸ்வரர் சிறப்பு பூஜை மற்றும் ஏனைய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.

சரபேஸ்வரர் :
தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக, இரண்யன் பெற்ற வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அதன்படி இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர்.
அதற்குச் செவி மடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்கஆணை யிட்டார்.
வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். எட்டுக் கால்கள், சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேஸ்வரர் என்ற பெயரில் கோவில் கெண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேஸ்வரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சரபேஸ்வரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேஸ்வரர் தான்.
இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது.
எதிரிகளால் தொல்லைகளில் இருந்து விடுபடவும், பகைவர்களை அழிக்கவும் வரம் தரும் வள்ளலாக இவர் போற்றப்படுகின்றார்.
தொன்மைச் சிறப்பு:
இவ்வாலயத்தில் ஆறு கல்வெட்டுகள் கி.பி. 1907-ம் தொல்லியல் அறிக்கையில் பட்டியல் இடப்பட்டுள்ளன. அதன்படி இவ்வாலயம் ஈழம், கொங்குநாடு, வடநாடு, சேரர், பாண்டியர், தெலுங்கர் பலரையும் வென்றதின் நினைவாக, மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதை, கி.பி. 1178-ம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது. நடராஜன் சன்னிதி, முகமண்டபம் எழுப்பப்பட்ட தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் குலோத்துங்கனின் ஆசிரியரான ஸ்ரீகந்த சம்புவின் மகனான ஈஸ்வர சிவன், இந்தக் கோவிலை நிர்மாணித்ததைக் கல்வெட்டு செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. இதுதவிர, ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியனும் இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை அறிய முடிகிறது.
சரபேஸ்வரர் வழிபாடு :
எதிரிகளின் தொல்லைகளால் அவதிப்படுவோர், ஏவல், பில்லி, சூனியம் என தீவினைகளால் துன்பப்படுவோர், நோயுற்றவர்கள் என எவ்விதமான துன்பங்களுக்கும் துயர் நீக்கும் கடவுளாக, சரபேஸ்வரர் போற்றப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், 11 நெய் தீபம் ஏற்றி, 11 சுற்று வலம் வந்து இவரை வழிபட்டுச் சென்றால் மேற்படி தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனை பதினோரு வாரங்கள் தொடர்ந்து செய்தல் வேண்டும். இதுதவிர ஆலயத்தில் கட்டணம் செலுத்தி சிறப்பு அர்ச்சனை களிலும் பங்கேற்கலாம்.
இந்த ஆலய தலமரம் வில்வம். தலத்தீர்த்தம் நிறைய இருந்தாலும், சரபேஸ்வரர் தீர்த்தம் பிரதானமாக அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்படும்.
அமைவிடம் :
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில், கிழக்கே 6 கி.மீ. தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது.

கம்பகரேஸ்வரர்- தர்மசவர்த்தினி

பொன்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நாகார்ஜூன முனிவர் என்பவர், இந்திரன் சபையில் இருந்தார். அவர் சிறந்த காளி பக்தர். விதி யாரை தான் விட்டு வைத்திருக்கிறது.
ஒரு நாள் ரதிதேவியைக் கண்ட முனிவர், அவளது அழகில் மயங்கினார். எந்நேரமும் அவள் நினைவிலேயே திளைத்தார். ஒருநாள் பார்வதி தேவி முனிவரை அழைக்க, அந்த அழைப்பு ரதியின் மயக்கத்தில் இருந்த முனிவரின் செவிகளில் விழவில்லை. கோபம் கொண்ட தேவி, ‘நீ பூலோகத்தில் மனிதனாகப் பிறப்பாயாக’ என சபித்தாள்.
சாபத்தின்படி இமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார் முனிவர். தனக்கு இடப்பட்ட சாபம் பற்றி அறிந்த முனிவர், அதில் இருந்து மீள்வதற்காக தவம் செய்யத் தொடங்கினார். அப்போது ‘தென்கயிலையை அடுத்துள்ள மலையில் தவம் செய். சாப விமோசனம் கிடைக்கும்’ என அசரீரி ஒலித்தது.
அதன் படி முனிவர் இந்த மலைக்கு வந்தார். தவம் செய்யத் தொடங்கினார். யாகம் நடத்த அவருக்கு பொன் தேவைப்படவே, மகாலட்சுமியை வேண்டினார். மகாலட்சுமியும் தருவதாகக் கூறினாள். ஆனால் பொன் கிடைக்க தாமதமானது.
என்ன செய்வது என்று புரியாத முனிவர் குழம்பினார், வேதனைப்பட்டார். வேறு வழி ஏதும் தெரியாததால், தான் தவம் செய்த மலையில் மோதி உயிரை விட முடிவு செய்தார். மலையில் தலையை மோதியபோது பார்வதிதேவி காட்சி தந்தாள்.
‘எனக்கு ஏன் இந்த சோதனை? யாகத்திற்கு பொன் இல்லையே. நான் என்ன செய்ய ?’ என்று அன்னையிடம் வேதனையுடன் கேட்டார் முனிவர்.
‘கவலை வேண்டாம் முனிவரே. நீ தவமிருக்கும் இந்த மலையில் உனக்கு தேவையான அளவு பெயர்த்து எடுத்துக்கொள். அதுவே பொன்னாக மாறிவிடும்’ என அருளிவிட்டு அன்னை மறைந்தாள். முனிவரும் மலையில் இருந்து தேவையான அளவு பெயர்த்து எடுத்து யாகத்தில் போட்டார். அவர் பெயர்த்துப் போட்ட பாறைகள் பொன்னாக மாறியது. யாகத்தை வெற்றிகரமாக முடித்த முனிவர், சாப விமோசனம் பெற்றார்.
முனிவர் தவம் செய்து பொன்னாக மாறிய அந்த மலையே இப்போதைய ‘பொன்மலை’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் பொன் போன்று ஜொலித்துக் கொண்டு திருச்சியின் பெருமையை உலகம் முழுவதும் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது.
இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகான முன் முகப்பை தாண்டியதும் நீண்ட நடைபாதையும் வலதுபுறம் தலவிருட்சமான பவழ மல்லிகை மரமும் உள்ளன. அடுத்து சிறிய ராஜகோபுரம். நுழைவுவாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் ஆதிசேஷனும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் இருக்கிறது. மத்தியில் பீடமும் கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன. கருடாழ்வார் மூலவரை பார்த்த நிலையில் வீற்றிருக்கிறார்.
அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் விகனசர், தாபசர் இருவரும் காவல் காக்கின்றனர். இவர்கள் தங்கள் நான்கு கரங்களில் சங்கு சக்கரம், கதை தாங்கி நின்ற கோலத்தில் உள்ளனர். கருவறையில் ராமபிரான், ‘விஜயராகவப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.

ராமநவமியின் போது மூன்று நாட்கள் ஆலயம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு பெருமாள் சீதா தேவியுடன் குடும்ப சகிதமாய் சேவை சாதிக்கிறார். இவரை வணங்கும் பக்தர்களுக்கு, குடும்ப பிரச்சினைகள் யாவும் விரைந்து தீர்ந்துவிடும் என்கின்றனர் பக்தர்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், தம்பதிகளின் பிணக்குகள் நீங்கி மன ஒற்றுமை நிலவவும், தாமதமாகும் திருமணங்கள் தடையின்றி நடந்தேறவும், கிரகக் கோளாறுகள் நீங்கி மன மகிழ்வுடன் வாழவும் இத்தல இறைவன் அருள்புரிகிறார்.
மூலவர் அருகிலேயே உற்சவர் திருமேனிகளும் உள்ளன. இத்தலத்தில் வைகானச ஆகம முறைப்படி ஆராதனைகள் நடைபெறுகிறது. மகாமண்டபத்தின் இடதுபுறம் மூன்று நாகர் சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் மூலமாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் அருள்பாலிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. தொடக்கத்தில் அனுமன் திருமேனி மட்டுமே இங்கு இருந்ததாம். பக்தர் ஒருவர் கனவில் வந்த ராமர் தன்னையும் இங்கு பிரதிஷ்டை செய்யும்படி கூற அதன்படி ராமபிரான் சீதா பிராட்டி திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அனுமன் சன்னிதிக்கு அடுத்து நவநீத கிருஷ்ணன் சன்னிதி உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மாதாந்திர ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. குழந்தை இல்லா தம்பதியினர் ஒரு சிறு கிருஷ்ணன் சிலையோடு இங்கு வருகின்றனர். அர்ச்சகர் அந்தச் சிலையை ஒரு தொட்டிலில் வைத்து தாலாட்டி விட்டு கிருஷ்ணனுக்கு அர்ச்சனை செய்தபின், அந்தச் சிலையை அந்த தம்பதியிடமே தந்து விடுகிறார். அவர்கள் அந்தச் சிலையை வீட்டிற்கு கொண்டு சென்று தினசரி அந்தச் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து உலர்ந்த பழங்களை நைவேத்தியம் செய்கின்றனர். அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது. அவர்களுக்கு குழந்தை பேறும் உண்டாகிறது. பின்னர் ஆலயம் வந்து கிருஷ்ண பரமாத்மாவுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.
ஆஞ்சநேயர் வழிபாடு
இந்த ஆலயத்தில் ஜெயவீர ஆஞ்சநேயரின் சன்னிதி உள்ளது. அனுமன் ஜெயந்தியின் போது இந்த ஆஞ்சேநயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தவிர அனைத்து சனிக்கிழமை களிலும் சிறப்பு ஆராதனைகளும் உண்டு. பகை அகலவும், விரைந்து திருமணம் நடக்கவும் அனுமனுக்கு தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். கிரகக் கோளாறுகள் நீங்க அனுமனுக்கு வடைமாலை சாத்தியும், திருமணம் அனுகூலமாக வெற்றிலை மாலை சாத்தியும், குழந்தைபேறு உண்டாக வாைழப்பழ மாலை சாத்தியும், எதிரிகளிடமிருந்து பகை உணர்வு நீங்க எலுமிச்சை பழ மாலை சாத்தியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களது பிரார்த்தனைகள் நிறைவேறுவது கண்கூடான உண்மையே.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது பொன்மலை. மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 14, 15, 16, 34 ஆகிய வழித்தட எண் கொண்ட பேருந்துகளில் சென்றால் ஆலயம் அருகே இறங்கிக் கொள்ளலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
இந்த ஆலயத்திற்கு அருகே அன்னை பொன்னேஸ்வரி ஆலயம் உள்ளது. விஜயராகவப் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள், அருகே உள்ள இந்த அன்னையையும் தரிசித்து பயன்பெறலாம்.
ஒரு நாள் ரதிதேவியைக் கண்ட முனிவர், அவளது அழகில் மயங்கினார். எந்நேரமும் அவள் நினைவிலேயே திளைத்தார். ஒருநாள் பார்வதி தேவி முனிவரை அழைக்க, அந்த அழைப்பு ரதியின் மயக்கத்தில் இருந்த முனிவரின் செவிகளில் விழவில்லை. கோபம் கொண்ட தேவி, ‘நீ பூலோகத்தில் மனிதனாகப் பிறப்பாயாக’ என சபித்தாள்.
சாபத்தின்படி இமயமலை அடிவாரத்தில் இருந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார் முனிவர். தனக்கு இடப்பட்ட சாபம் பற்றி அறிந்த முனிவர், அதில் இருந்து மீள்வதற்காக தவம் செய்யத் தொடங்கினார். அப்போது ‘தென்கயிலையை அடுத்துள்ள மலையில் தவம் செய். சாப விமோசனம் கிடைக்கும்’ என அசரீரி ஒலித்தது.
அதன் படி முனிவர் இந்த மலைக்கு வந்தார். தவம் செய்யத் தொடங்கினார். யாகம் நடத்த அவருக்கு பொன் தேவைப்படவே, மகாலட்சுமியை வேண்டினார். மகாலட்சுமியும் தருவதாகக் கூறினாள். ஆனால் பொன் கிடைக்க தாமதமானது.
என்ன செய்வது என்று புரியாத முனிவர் குழம்பினார், வேதனைப்பட்டார். வேறு வழி ஏதும் தெரியாததால், தான் தவம் செய்த மலையில் மோதி உயிரை விட முடிவு செய்தார். மலையில் தலையை மோதியபோது பார்வதிதேவி காட்சி தந்தாள்.
‘எனக்கு ஏன் இந்த சோதனை? யாகத்திற்கு பொன் இல்லையே. நான் என்ன செய்ய ?’ என்று அன்னையிடம் வேதனையுடன் கேட்டார் முனிவர்.
‘கவலை வேண்டாம் முனிவரே. நீ தவமிருக்கும் இந்த மலையில் உனக்கு தேவையான அளவு பெயர்த்து எடுத்துக்கொள். அதுவே பொன்னாக மாறிவிடும்’ என அருளிவிட்டு அன்னை மறைந்தாள். முனிவரும் மலையில் இருந்து தேவையான அளவு பெயர்த்து எடுத்து யாகத்தில் போட்டார். அவர் பெயர்த்துப் போட்ட பாறைகள் பொன்னாக மாறியது. யாகத்தை வெற்றிகரமாக முடித்த முனிவர், சாப விமோசனம் பெற்றார்.
முனிவர் தவம் செய்து பொன்னாக மாறிய அந்த மலையே இப்போதைய ‘பொன்மலை’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் பொன் போன்று ஜொலித்துக் கொண்டு திருச்சியின் பெருமையை உலகம் முழுவதும் பறை சாற்றிக்கொண்டிருக்கிறது.
இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது விஜயராகவப் பெருமாள் திருக்கோவில். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அழகான முன் முகப்பை தாண்டியதும் நீண்ட நடைபாதையும் வலதுபுறம் தலவிருட்சமான பவழ மல்லிகை மரமும் உள்ளன. அடுத்து சிறிய ராஜகோபுரம். நுழைவுவாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் ஆதிசேஷனும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் இருக்கிறது. மத்தியில் பீடமும் கருடாழ்வார் சன்னிதியும் உள்ளன. கருடாழ்வார் மூலவரை பார்த்த நிலையில் வீற்றிருக்கிறார்.
அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவுவாசலில் விகனசர், தாபசர் இருவரும் காவல் காக்கின்றனர். இவர்கள் தங்கள் நான்கு கரங்களில் சங்கு சக்கரம், கதை தாங்கி நின்ற கோலத்தில் உள்ளனர். கருவறையில் ராமபிரான், ‘விஜயராகவப் பெருமாள்’ என்ற திருநாமத்தில் சேவை சாதிக்கிறார். பெருமாளின் இடது கரத்தில் வில்லும், வலது கரத்தில் அம்பும் உள்ளன. ராமபிரானின் வலதுபுறம் சீதா பிராட்டியாரும், இடதுபுறம் லட்சுமணனும், ராமரின் காலடி அருகே கரம் குவித்த நிலையில் ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கின்றனர்.

சீதை, லட்சுமணருடன் விஜயராகவப் பெருமாள்.
மூலவர் அருகிலேயே உற்சவர் திருமேனிகளும் உள்ளன. இத்தலத்தில் வைகானச ஆகம முறைப்படி ஆராதனைகள் நடைபெறுகிறது. மகாமண்டபத்தின் இடதுபுறம் மூன்று நாகர் சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் மூலமாக பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் அருள்பாலிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. தொடக்கத்தில் அனுமன் திருமேனி மட்டுமே இங்கு இருந்ததாம். பக்தர் ஒருவர் கனவில் வந்த ராமர் தன்னையும் இங்கு பிரதிஷ்டை செய்யும்படி கூற அதன்படி ராமபிரான் சீதா பிராட்டி திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அனுமன் சன்னிதிக்கு அடுத்து நவநீத கிருஷ்ணன் சன்னிதி உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மாதாந்திர ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. குழந்தை இல்லா தம்பதியினர் ஒரு சிறு கிருஷ்ணன் சிலையோடு இங்கு வருகின்றனர். அர்ச்சகர் அந்தச் சிலையை ஒரு தொட்டிலில் வைத்து தாலாட்டி விட்டு கிருஷ்ணனுக்கு அர்ச்சனை செய்தபின், அந்தச் சிலையை அந்த தம்பதியிடமே தந்து விடுகிறார். அவர்கள் அந்தச் சிலையை வீட்டிற்கு கொண்டு சென்று தினசரி அந்தச் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து உலர்ந்த பழங்களை நைவேத்தியம் செய்கின்றனர். அவர்கள் பிரார்த்தனை பலிக்கிறது. அவர்களுக்கு குழந்தை பேறும் உண்டாகிறது. பின்னர் ஆலயம் வந்து கிருஷ்ண பரமாத்மாவுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் நன்றியை தெரிவிக்கின்றனர்.
ஆஞ்சநேயர் வழிபாடு
இந்த ஆலயத்தில் ஜெயவீர ஆஞ்சநேயரின் சன்னிதி உள்ளது. அனுமன் ஜெயந்தியின் போது இந்த ஆஞ்சேநயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தவிர அனைத்து சனிக்கிழமை களிலும் சிறப்பு ஆராதனைகளும் உண்டு. பகை அகலவும், விரைந்து திருமணம் நடக்கவும் அனுமனுக்கு தயிர்சாதம், சர்க்கரைப் பொங்கல் படைத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். கிரகக் கோளாறுகள் நீங்க அனுமனுக்கு வடைமாலை சாத்தியும், திருமணம் அனுகூலமாக வெற்றிலை மாலை சாத்தியும், குழந்தைபேறு உண்டாக வாைழப்பழ மாலை சாத்தியும், எதிரிகளிடமிருந்து பகை உணர்வு நீங்க எலுமிச்சை பழ மாலை சாத்தியும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களது பிரார்த்தனைகள் நிறைவேறுவது கண்கூடான உண்மையே.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது பொன்மலை. மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 14, 15, 16, 34 ஆகிய வழித்தட எண் கொண்ட பேருந்துகளில் சென்றால் ஆலயம் அருகே இறங்கிக் கொள்ளலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
இந்த ஆலயத்திற்கு அருகே அன்னை பொன்னேஸ்வரி ஆலயம் உள்ளது. விஜயராகவப் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள், அருகே உள்ள இந்த அன்னையையும் தரிசித்து பயன்பெறலாம்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கண்ணூர் அருகே உள்ளது திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) விஷ்ணு கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி விஷ்ணுவை நினைத்து பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் மகாவிஷ்ணு காட்சியளித்து அருளினார். இந்தப் பெருமையுடன் பாண்டவர்களில் ஒருவரான தருமர் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்கிற சிறப்பும் பெற்ற கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கண்ணூர் அருகே உள்ள திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) விஷ்ணு கோவில்.
தல வரலாறு :
மகாபாரதப் போரில் பதினைந்தாம் நாளில் பாண்டவர்கள் படையை எதிர்த்துத் துரோணர் கடுமையாகப் போர் செய்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்காகப் பீமனை அழைத்து, மாளவநாட்டு மன்னனிடம் இருக்கும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று மட்டும் சொல்லச் சொன்னார்.
அதே போல் தருமரிடமும், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சொல்லச் சொன்னார். ஆனால் தருமர், தன்னால் பொய் சொல்ல முடியாது என்று சொல்லி மறுத்தார்.
உடனே கிருஷ்ணர், ‘தருமா, நீ பொய் எதுவும் சொல்ல வேண்டாம், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லிவிட்டுப் பின்னர், ‘அசுவத்தாமா என்ற யானை’ என்பதை மட்டும் மெதுவாகச் சொல், அது போதும்’ என்றார். தருமரும் அதனை ஏற்றுக் கொண்டார்.
கிருஷ்ணர் சொன்னபடி, பீமனும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று சத்தமாகச் சொன்னான். பீமன் சொன்னதைக் கேட்டுத் துரோணர் அதிர்ச்சியடைந்தாலும், பீமன் சொன்னதில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. தருமர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்பிய துரோணர், ‘என் மகன் அஸ்வத்தாமா போரில் கொல்லப்பட்டானா?‘ என்று தருமரைப் பார்த்துக் கேட்டார்.
கிருஷ்ணர் சொல்லியிருந்தபடி தருமரும், ‘அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லி, ‘கொல்லப்பட்டது அஸ்வத்தாமா என்ற பெயருடைய யானை’ என்று மெதுவாகச் சொன்னார். தருமர் மெதுவாகச் சொன்னது துரோணரின் காதுகளில் விழவில்லை. துரோணர் தன் மகன் அசுவத்தாமன் இறந்து போனதாக நினைத்துத் தான் வைத்திருந்த ஆயுதத்தைக் கீழே போட்டார். அதன் பிறகு, துரோணர் எளிதில் கொல்லப்பட்டார்.
மகாபாரதப் போர் நிறைவடைந்ததற்குப் பின்பு, துரோணர் மரணத்துக்குத் தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்கிற மன வருத்தம் தருமர் மனதில் நிலைத்துப் போனது. அதில் இருந்து விடுபட்டு மன அமைதி அடைய நினைத்த தருமர், தனது சகோதரர்களுடன் கேரளப்பகுதிக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த பழமையான விஷ்ணு கோவில் ஒன்றைப் பார்த்தார். அந்தக் கோவிலைப் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி அடைந்தார் என்று இந்தக் கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.
தருமர் புதுப்பித்து வழிபட்ட விஷ்ணு கோவில், முன்பு தேவர்கள் அனைவருக்கும் விஷ்ணு ஒரே இடத்தில் காட்சியளித்த இடத்தில் அமைந்தது என்று சொல்லப்படுகிறது. அதற்கும் ஒரு முன் வரலாற்றுக் கதை இருக்கிறது.
புராணக் கதை :
சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபத்மன், தான் பெற்ற வரங்களைக் கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான். அதனால் கவலையடைந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான், தான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அவனைத் தன்னால் தண்டிக்க இயலாது என்றும், விஷ்ணுவிடம் சென்று முறையிட்டால் அவர், உங்களுக்கு நல்வழி காட்டுவார் என்றும் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.
இதையடுத்து தேவர்கள் அனைவரும் பூலோகத்தில் ஒன்றாகக் கூடினர். பின்னர் அனைவரும் இணைந்து விஷ்ணுவை நோக்கி தவமியற்றத் தொடங்கினர். அவர்களது ஒன்றுபட்ட வேண்டு தலில் மனம் மகிழ்ந்த விஷ்ணு, அங்கே காட்சி யளித்தார். தேவர்கள் (இமையவர்கள்) ஒன்றாகக் கூடிய இடத்தில் காட்சியளித்ததால், இத்தல இறைவனுக்கு ‘தேவர்களின் தந்தை’ என பொருள்படும் வகையில் ‘இமையவரப்பன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.
சிவபெருமான், சூரபத்மனுக்குக் கொடுத் திருந்த வரங்களைக் கேட்டறிந்த விஷ்ணு, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானைக் கேட்டுக் கொண்டார். முருகப்பெருமான், தன்னிடமிருந்த வேற்படையால் சூரபத்மனுடைய அரக்கர் படைகளை முழுவதுமாக அழித்தார். பல்வேறு தோற்றங்களில் தோன்றிப் போரிட்ட சூரபத்மனை, ஒவ்வொரு தோற்றத்திலும் அழிக்க முற்பட்டு வெற்றி கண்ட முருகப்பெருமான், இறுதியாக, ஒரு மாமரமாகத் தோன்றிய அரக்கனை இரண்டாகப் பிளந்து ஒன்றைச் சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி அவ்விரண்டையும் தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக் கொண்டார்.
கோவில் அமைப்பு :
இத்தல இறைவனான இமைய வரப்பன் மேற்கு நோக்கி, நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் இருக்கிறார். வலதுபுறத்தில் இருக்கும் இரு கரங்களில் ஒன்றில், சக்கரமும், மற்றொன்றில் செந்தாமரை மலரும் வைத்திருக்கிறார். இடது புறத்தில் இருக்கும் கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் தரையில் ஊன்றிய கதாயுதத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். இங்கிருக்கும் தாயார், ‘செங்கமலவல்லி’ என்றழைக்கப்படுகிறார்.
கோவில் வளாகத்தில் கோசால கிருஷ்ணன், தருமசாஸ்தா ஆகியோருக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தலவிருட்சமாக ஆலமரம் இருக்கிறது. கோவிலுக்குச் செல்லும் பாதையில் வலதுபுறம் ‘சங்குதீர்த்தம்’ என்ற தீர்த்தக்குளம் உள்ளது.
திருச்சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந் திருக்கும் இந்த ஆலயத்தில், விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் ஹஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோணம் நட்சத்திர நாளில் ‘ஆறாட்டு’வுடன் நிறைவடையும் முதன்மை விழா (பிரம்மோற்சவம்) பத்து நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதே போன்று, சிங்ஙம் (ஆவணி) மாதம் அஷ்டமி ரோகிணி நாளில் தொடங்கிப் பத்து நாட்கள் வரை தசாவதாரப் பெருவிழாவும் நடைபெறுகிறது. இந்நாட்களில் விஷ்ணுவின் பத்து தோற்றங்களும் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து, கொடியாட்டம் உள்ளிட்ட மலையாள மரபு வழி நடனங்கள் இடம் பெறுகின்றன.
இது தவிர தனு (மார்கழி) மாதம் ஏழு நாட்கள் பாகவத உபன்யாசம், மேடம் (சித்திரை) மாதம் வரும் அஷ்டமி ரோகிணி நாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதேபோல், மகரவிளக்கு மண்டல பூஜை நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
தான் செய்த தவறான செயல்களை நினைத்து மனம் வருந்துபவர்கள், மனக் குழப்பமுடையவர்கள் மற்றும் மன அமைதி வேண்டுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு மன ஆறுதலையும், மன அமைதியையும் பெறலாம். இவை தவிர, பயம் நீங்குதல், நோய்களில் இருந்து விடுபடுதல், நல்ல உடல்நலம் பெறுதல், தடைகள் நீக்கம் போன்றவைகளுக்கும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் பக்தர்களுக்குப் பால் பாயசம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலயத்தின் சிறப்புகள் :
* இக்கோவில் 108 வைணவத் திருத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.
* நம்மாழ்வார் இத்தல இறைவனைப் போற்றி 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.
* பஞ்சபாண்டவர்களுள் தருமர் மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்பதால், இந்த ஆலயம் ‘தருமர் கோவில்’, ‘தருமச்சேத்திரம்’, ‘தரும அம்பலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
* நம்மாழ்வார் பாடிய பாசுரத்தில் ‘திருச்செங்குன்றூர்’ என்று அழைக்கப்படும் இத்தலம், இக்கோவிலின் அருகே ஓடும் சிற்றாறுவின் பெயரால் ‘திருச்சிற்றாறு’ என்று அழைக்கப்படுகிறது.
அஞ்சம்பலம் :
மகாபாரதப் போருக்குப் பின்பு பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ச்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோருக்குத் தாங்கள் செய்த சில தவறுகள் மனச்சுமையாக இருந்தன. அந்த மனச் சுமையில் இருந்து தங்களை விடுவித்து, மன அமைதி கொள்வதற்காகக் கேரளப்பகுதிக்கு வந்த அவர்கள், தகுந்த பராமரிப்பின்றி பழமையடைந்திருக்கும் மகாவிஷ்ணு கோவில்களைப் புதுப்பித்து வழிபடுவதென்று முடிவு செய்தனர்.
அதன்படி தருமர்- திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) இமையவரப்பன் கோவிலையும், பீமன் - திருப்புலியூர் மாயபிரான் கோவிலையும், அர்ச்சுனன் - திருவாரண்விளை பார்த்தசாரதி கோவிலையும், நகுலன் - திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோவிலையும், சகாதேவன் - திருக்கடித் தானம் (திருக்கொடித்தானம்) அற்புத நாராயணர் கோவிலையும் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி பெற்றனர். பஞ்சபாண்டவர்களால் புதுப்பிக்கப்பட்ட இந்த ஐந்து கோவில்களும் கேரளாவில் ‘அஞ்சம்பலம்’ எனப்படுகின்றன.
அமைவிடம் :
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது செங்கண்ணூர். இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) அமைந்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து 115 கிலோமீட்டர், கொல்லத்தில் இருந்து 70 கிலோமீட்டர், கோட்டயத்தில் இருந்து 38 கிலோமீட்டர், திருவல்லாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கண்ணூர் செல்லப் பேருந்து மற்றும் ரெயில் வசதிகள் அதிக அளவில் உள்ளன.

திட்டக்குடியில் எழுந்தருளும் மூன்று நிலை பெருமாள் ஆலயங்களில் அமர்ந்த கோலம் கொண்ட கோவில் என்ற சிறப்பை கொண்டதாக திகழ்கிறது திட்டக்குடி சுகாசனப் பெருமாள் திருக்கோவில்.
வெள்ளாற்றின் சப்தத்துறைகளில் ஐந்தாவது துறையாக அமைந்த தலம், நான்கு வேதங்களைக் கற்ற அந்தணர்களுக்கு தானமாக அளிக்கப்பட்ட பூமி, திட்டக்குடியில் எழுந்தருளும் மூன்று நிலை பெருமாள் ஆலயங்களில் அமர்ந்த கோலம் கொண்ட கோவில், சோழன், பாண்டியன், விஜயநகர மன்னர்கள் போற்றி வளர்த்த ஆலயம், வில்வ மரத்தைத் தல மரமாகக் கொண்ட பெருமாள் கோவில் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக திகழ்கிறது கடலூர் மாவட்டம், திட்டக்குடி சுகாசனப் பெருமாள் திருக்கோவில்.
தல வரலாறு :
இத்தலத்தில் வசிஷ்ட மகரிஷி தவம் இயற்றினார். இவருக்கும் அருந்ததிக்கும் இவ்வூரில் தான் திரு மணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இதனைக் குறிக்கும் விதமாக, இவ்வூர் வைத்தியநாதன் சிவாலயத்திலும், நானூற்றி ஒருவர் திருக்கோவிலும் வசிஷ்டர்-அருந்ததிக்கு தனிச்சன்னிதிகள் அமைந்துள்ளன.
ஸ்ரீமந் நாராயணன் பூவுலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, மூன்றுவிதக் கோலமாக திட்டக்குடியில் அமர்ந்த கோலத்திலும், கிழக்கில் வசிஷ்டபுரத்தில் சயன கோலத்திலும், மேற்கில் கூத்தப்பன்குடிக் காட்டில் நின்ற கோலத்திலும் எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.
சோழநாட்டில் வட எல்லையாகப் பாய்வது வெள்ளாறு. இந்நதி ஸ்வேதநதி, நீவாநதி, பருவாறு, உத்தம சோழப் பேராறு எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டது. இதன் வடகரையில் அமைந்த தலமே திட்டக்குடி. சைவ - வைணவ சமயங் களின் பெருமைகளைப் பறைசாற்றும் திருக்கோவில்கள்அமைந்த ஊர் இது.
‘திட்டை’ என்றால் ‘ஆற்றோரம் இருக்கும் மேடான மணல் நிறைந்த நிலப்பகுதி’ என்று பொருள்படும். ‘குடி’ என்பது மக்கள் வாழும் இடத்தைக் குறிக்கும். எனவே திட்டை + குடி = திட்டக்குடியானது. வசிஷ்டர் பெயரால் வசிஷ்டகுடி என்பது வதிட்டகுடியாகி, பின்னர் திட்டக்குடியானதாகவும் சொல்வார்கள். வெள்ளாற்றங்கரையில் அமைந்த ஏழு ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமாக திட்டக்குடி அமைந்துள்ளது.
நாலாயிரத் திவ்யபிரபந்தம் பாடிய ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் பாடிய பத்து பாசுரங்கள் கி.பி.13, 14-ம் நூற்றாண் டிலேயே கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது, இது இக்கோவிலின் தனிச்சிறப்பாகப் போற்றப்படுகின்றது.
ஆலய அமைப்பு :
ஆலயத்தில் எளிய நுழைவுவாயில் மட்டுமே இருக்கிறது. ராஜகோபுரம் இல்லை. உள்ளே நுழைந்ததும், கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார் காட்சிதர, அதனையடுத்து சுகாசனப்பெருமாள் சன்னிதி நம்மை வரவேற்கிறது. கருவறையின் உள்ளே ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுகாசனப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றார். வலதுபுறம் வேதாந்தவல்லித் தாயார் சன்னிதி அமைந்துள்ளது. இது தவிர, தும்பிக்கையாழ்வார், ராமர் பாதம், ராமர் பட்டாபிஷேகக் கோலம், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், ஆண்டாள் உள்ளிட்ட சன்னிதிகளையும் இந்த ஆலயத்தில் தரிசிக்கலாம்.
இந்த ஆலயத்தில் தை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீராமநவமியிலும் 10 நாட்கள் உற்சவம் நடக்கிறது. இதுதவிர நவராத்திரி ஒன்பது நாள் உற்சவம், கிருஷ்ணஜெயந்தி மற்றும் வைணவ விழாக்கள் அனைத்தும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.
மூலவர் சுகாசனப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார். இவருக்கு தைலக்காப்பு, வண்ணப்பூச்சும், சுதை வேலைகளும், திருச்சுற்று மாளிகை கூரை வேலைகளும் உடையார்பாளையம் ஜமீன்தாரர்களால் அழகுற செய்யப்பட்டுள்ளன. மூலவர் திருமேனிகளை, நாள் முழுவதும் அலுப்பு தட்டாமல் பார்த்து ரசித்தபடியே இருக்கலாம். இறைவன் திருமேனி அவ்வளவு அழகு. நேரில் அனுபவித்தால் மட்டுமே அதை உணரமுடியும்.

இவ்வாலயம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் உடையார்பாளையம் ஜமீனின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டு வந்ததை வரலாறு கூறுகிறது.
இத்தலத்தில் வேதாந்தவல்லித் தாயார், சுவாமி சன்னிதியின் வலதுபுறம் கிழக்கு முகமாய் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தாயாரின் வடிவம் எளிய வடிவம் என்றாலும், அருளை வாரி வழங்கும் அன்னையாக உயர்ந்து விளங்குகின்றாள்.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் ஆகியோரின் உற்சவத் திருமேனிகள் இங்கு உள்ளன. ஆலயத்தின் தல மரம் பழமையான வில்வ மரம் ஆகும். பொதுவாக சிவன் ஆலயத்தில் இருக்கும் வில்வமரம், வைணவ திருத்தலத்தில் இருப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. ஆலய தீர்த்தம் சுவேத நதி என்ற வெள்ளாறு ஆகும்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
தொன்மைச் சிறப்பு:
இத்தலத்தின் வரலாற்றினை அறிய இதுவரை கண்டறியப்பட்ட 28 கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன. இரண்டாம் ராஜராஜன் (கி.பி.1160), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி.1168), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1181), மூன்றாம் ராஜாதிராஜன் (கி.பி. 1242), சடையவர்ம இரண்டாம் சுந்தரபாண்டியன் (கி.பி. 1271), வீரபூபதி உடையார், வீரகம்பண்ண உடையார் ஆகிய மன்னர் களின் விவரங்களையும் இந்த கல்வெட்டு கூறுகிறது.
இவ்வூர் நரசிங்கசதுர்வேதிமங்கலம், திருச்சிற்றம்பல சதுர்வேதிமங்கலம், வித்தியாரண்யபுரம் என பலவாறு அழைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயத்தில் அமைந்துள்ள கல்வெட்டுகள் மூலமாக இக்கோவிலுக்குச் சோழர், பாண்டியர் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்ததையும், ஆலயத்தைப் போற்றி வளர்த்ததையும் உணர முடிகிறது. மேலும், இப்பகுதியைச் சார்ந்த சித்திரமேழிப் பெரியநாட்டார்கள் மற்றும் ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுவினர் இணைந்து, இவ்வாலயத்தை எழுப்பியதாக கல்வெட்டு சான்றுகள் தெரிவிக்கின்றன.
அமைவிடம் :
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வைத்தியநாதன் ஆலயத்தின் மேல் புறம் அமைந்த பெருமாள் கோவில் தெருவில் சுகாசனப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. கடலூரில் இருந்து திருச்சி செல்லும் வழித்தடத்தில் திட்டக்குடி அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தொழுதூர். இங்கிருந்து தெற்கே 5 கிலோமீட்டர் சென்றாலும் இந்த ஆலயத்தை அடையலாம்.

புதுக்கோட்டை மாவட்டம் பனையூர் பகுதியில் அமைந்துள்ளது ஞானபதீஸ்வரர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் பனையூர் பகுதியில் அமைந்துள்ளது ஞானபதீஸ்வரர் ஆலயம். பனையூர் ஆதி காலத்தில் ‘பனையூர் குளமங்கலம்’ என்றும், ‘பனசை நகர்’ என்றும், ‘தென்பனசை நகர்’ என்றும், ‘பனையூர் பிராந்தக சருப்பேதிமங்கலம்’ என்றும் பல பெயர்களைக் கொண்டு விளங்கியதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஊர் மேலப் பனையூர் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊரின் வடகிழக்கில் சிவன் கோவிலும், அதன் எதிரில் ஊரணியும் அமைந்துள்ளது. இது பழங்காலத்திலேயே இவ்வூர் திட்டமிட்டு அமைக்கப்பெற்ற கிராமம் என்பதைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. பனையூரைச் சுற்றியுள்ள பாக்குளம், பனையக்குளத்தின் கீழ்க்கடைசி, மல்லியக்குடி ஏந்தல், வடக்கிக்கண்மாய் முதலிய இடங்களில் காணப்படுகின்ற பெருங்கற்கால மக்களின் பண்பாட்டுச் சின்னங்கள், பனையூரிலும் உள்ள கல்வெட்டுகள் இத்தலத்தின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக இருக்கின்றன.
பனையூரில் அமைந்த சிவன் கோவிலும், கோனாட்டு நாயகி அம்மன் என்ற பிடாரி அம்மன் ஆலயமும், அழகப்பெருமாள் என்ற மேலை வாசல் ஐயனார், பனையக்காட்டு ஐயனார் போன்ற கோவில்களும் இவ்வூருக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கின்றன. என்றாலும், இங்குள்ள சிவன் கோவிலே அனைத்துக்கும் தலைமையானது, மிகவும் பழமை யானது. இந்த ஆலயம் பெரிய திருச்சுற்று மதிலையும், தென்புறத்தில் குடவரை வாசல் என்ற முகமண்டபத்தையும் கொண்டு அமைந்துள்ளது.
சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதி இரண்டும் கிழக்கு பார்த்த நிலையில் தனித்தனியாக அமைந்துள்ளன. பரிவாரத் தேவதைகளான மூலப் பிள்ளையார், சுப்பிரமணியர், பைரவர், சண்டிகேஸ்வரர் முதலிய தெய்வங்களுக்கும் தனித்தனியான சன்னிதிகள் இருக்கின்றன. தட்சிணாமூர்த்தி கருவறையின் தென்புறத் தேவக்கோட்டத்தோடு இணைந்துள்ள சிறு மண்டபத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். கருவறையின் மேற்கு, வடக்கு தேவகோட்டங்களில் தெய்வ உருவங்கள் இல்லை. வள்ளி- தெய்வானையுடன் சுப்பிரமணியர், சனீஸ்வரர் ஆகியோரும் தனித் தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
ஞானபதீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி
இத்தல இறைவனின் சன்னிதியானது, நீண்ட கருவறைப் பெற்று விளங்குகிறது. அதையடுத்து அர்த்தமண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை உள்ளது. இக்கோவிலில் பல்வேறு இடங்களில் சுமார் 60 கல்வெட்டுகள் காணப் படுகின்றது.
இங்குள்ள இறைவனின் பெயர் ஞானபதீஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. ஆனால் முன்காலத்தில் இறைவனுக்கு அறிவீசுரமுடையார் என்றும், அம்பாளுக்கு அகிலமீன்ற நாச்சியார் என்றும் திருநாமங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஒரு முறை ஆலயத்தில் இருந்த அம்மனின் சிலையில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிலையை அகற்றி விட்டு புதிய சிலை வைக்க ஊர் மக்கள் முடிவு செய்தனர். ஊர் மக்களின் வேண்டுகோள்படி, புதுக்கோட்டை மன்னர் புதிய சிலையை அமைக்க ஏற்பாடு செய்து வந்த நேரத்தில், மன்னனின் கனவில் அம்பாள் தோன்றினாள். ‘எனக்கு என்ன குறை? எதற்காக என்னை வெளியில் தூக்கி போடச் சொல்லிவிட்டாய்? உன் பிள்ளைக்கு ஏதாவது ஊனம் வந்தால் உன் பிள்ளையை வெளியில் தூக்கிப் போட்டுவிடுவாயா?’ என்று கேட்டாளாம். இதை யடுத்து புதிய சிலையை பிரதிஷ்டை செய்தாலும், பழைய சிலையை ஆலயத்தை விட்டு அகற்றாமல், ஆலயத்தின் முன் மண்டபத்தில் வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுபோல நோய்கள் நெருங்காது என்பது ஐதீகம். இங்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவே முக்கியமான திருநாளாகும். திருவாதிரை திரு நாளுக்கு காப்பு கட்டி 10 நாட்கள் திருவிழா நடத்தப்படுகிறது. காப்பு கட்டிய நாள் முதல் 8 நாட்கள் இரவு, பகல் மாணிக்கவாசகர் புறப்பாடும், 9-ம் திருவிழாவுக்கு பஞ்சமூர்த்திகள் உலாவும், 10-ம் நாளன்று நட ராஜர்- சிவகாமி அம்மன் உலாவும் நடைபெறும்.
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் பனையப்பட்டி என்ற ஊர் உள்ளது. அங்கு இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் ஆலயத்தை அடையலாம். பனையப்பட்டியில் இருந்து ஆட்டோ வசதியும் உண்டு.
இந்த ஊரின் வடகிழக்கில் சிவன் கோவிலும், அதன் எதிரில் ஊரணியும் அமைந்துள்ளது. இது பழங்காலத்திலேயே இவ்வூர் திட்டமிட்டு அமைக்கப்பெற்ற கிராமம் என்பதைத் தெரிவிப்பதாக அமைந்துள்ளது. பனையூரைச் சுற்றியுள்ள பாக்குளம், பனையக்குளத்தின் கீழ்க்கடைசி, மல்லியக்குடி ஏந்தல், வடக்கிக்கண்மாய் முதலிய இடங்களில் காணப்படுகின்ற பெருங்கற்கால மக்களின் பண்பாட்டுச் சின்னங்கள், பனையூரிலும் உள்ள கல்வெட்டுகள் இத்தலத்தின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக இருக்கின்றன.
பனையூரில் அமைந்த சிவன் கோவிலும், கோனாட்டு நாயகி அம்மன் என்ற பிடாரி அம்மன் ஆலயமும், அழகப்பெருமாள் என்ற மேலை வாசல் ஐயனார், பனையக்காட்டு ஐயனார் போன்ற கோவில்களும் இவ்வூருக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கின்றன. என்றாலும், இங்குள்ள சிவன் கோவிலே அனைத்துக்கும் தலைமையானது, மிகவும் பழமை யானது. இந்த ஆலயம் பெரிய திருச்சுற்று மதிலையும், தென்புறத்தில் குடவரை வாசல் என்ற முகமண்டபத்தையும் கொண்டு அமைந்துள்ளது.
சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதி இரண்டும் கிழக்கு பார்த்த நிலையில் தனித்தனியாக அமைந்துள்ளன. பரிவாரத் தேவதைகளான மூலப் பிள்ளையார், சுப்பிரமணியர், பைரவர், சண்டிகேஸ்வரர் முதலிய தெய்வங்களுக்கும் தனித்தனியான சன்னிதிகள் இருக்கின்றன. தட்சிணாமூர்த்தி கருவறையின் தென்புறத் தேவக்கோட்டத்தோடு இணைந்துள்ள சிறு மண்டபத்தில் அமர்ந்து காட்சி தருகிறார். கருவறையின் மேற்கு, வடக்கு தேவகோட்டங்களில் தெய்வ உருவங்கள் இல்லை. வள்ளி- தெய்வானையுடன் சுப்பிரமணியர், சனீஸ்வரர் ஆகியோரும் தனித் தனி சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கின்றனர்.
ஞானபதீஸ்வரர், அகிலாண்டேஸ்வரிஇத்தல இறைவனின் சன்னிதியானது, நீண்ட கருவறைப் பெற்று விளங்குகிறது. அதையடுத்து அர்த்தமண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை உள்ளது. இக்கோவிலில் பல்வேறு இடங்களில் சுமார் 60 கல்வெட்டுகள் காணப் படுகின்றது.
இங்குள்ள இறைவனின் பெயர் ஞானபதீஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. ஆனால் முன்காலத்தில் இறைவனுக்கு அறிவீசுரமுடையார் என்றும், அம்பாளுக்கு அகிலமீன்ற நாச்சியார் என்றும் திருநாமங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஒரு முறை ஆலயத்தில் இருந்த அம்மனின் சிலையில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிலையை அகற்றி விட்டு புதிய சிலை வைக்க ஊர் மக்கள் முடிவு செய்தனர். ஊர் மக்களின் வேண்டுகோள்படி, புதுக்கோட்டை மன்னர் புதிய சிலையை அமைக்க ஏற்பாடு செய்து வந்த நேரத்தில், மன்னனின் கனவில் அம்பாள் தோன்றினாள். ‘எனக்கு என்ன குறை? எதற்காக என்னை வெளியில் தூக்கி போடச் சொல்லிவிட்டாய்? உன் பிள்ளைக்கு ஏதாவது ஊனம் வந்தால் உன் பிள்ளையை வெளியில் தூக்கிப் போட்டுவிடுவாயா?’ என்று கேட்டாளாம். இதை யடுத்து புதிய சிலையை பிரதிஷ்டை செய்தாலும், பழைய சிலையை ஆலயத்தை விட்டு அகற்றாமல், ஆலயத்தின் முன் மண்டபத்தில் வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.
இக்கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுபோல நோய்கள் நெருங்காது என்பது ஐதீகம். இங்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவே முக்கியமான திருநாளாகும். திருவாதிரை திரு நாளுக்கு காப்பு கட்டி 10 நாட்கள் திருவிழா நடத்தப்படுகிறது. காப்பு கட்டிய நாள் முதல் 8 நாட்கள் இரவு, பகல் மாணிக்கவாசகர் புறப்பாடும், 9-ம் திருவிழாவுக்கு பஞ்சமூர்த்திகள் உலாவும், 10-ம் நாளன்று நட ராஜர்- சிவகாமி அம்மன் உலாவும் நடைபெறும்.
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் பனையப்பட்டி என்ற ஊர் உள்ளது. அங்கு இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் ஆலயத்தை அடையலாம். பனையப்பட்டியில் இருந்து ஆட்டோ வசதியும் உண்டு.
தென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.

படைப்புக் கடவுளான பிரம்மா, ஒருமுறை பூலோகத்தை வலம் வந்து கொண்டிருந்தார். பூலோகத்தின் இயற்கை அழகில் மகிழ்ந்து பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஓரிடத்தில் காடுகள் அதிகமிருந்த மலைப்பகுதியில் தனியாக ஒரே ஒரு நெல்லிமரம் இருப்பது தெரிந்தது. அந்த நெல்லிமரத்தின் அழகில் மயங்கிய அவர், அதனைப் பார்ப்பதற்காக அருகே சென்றார்.
நெல்லி மரத்தின் கீழ் மகாவிஷ்ணு அமர்ந்திருப்பது போல் அவருக்குத் தெரிந்தது. மேலும், அந்த இடம் அவருக்கு வைகுண்டமாகத் தோன்றியது. பூலோகத்தில் இறைவன் விஷ்ணுவின் வைகுண்டக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், மகாவிஷ்ணு சிலையை உருவாக்கி, அவ்விடத்தில் நிறுவி வழிபடத் தொடங்கினார். அதன் பிறகு, பிரம்மன் தினமும் அருகிலிருந்த நீர்வீழ்ச்சி ஒன்றில் குளித்து, அங்கே மலர்ந்திருக்கும் மலர்களைப் பறித்து வந்து, விஷ்ணு சிலையை அலங்கரித்து வழிபட்டு வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஒருநாள் அவர் முன்பாகத் தோன்றினார்.
அப்போது பிரம்மன் விஷ்ணுவிடம், ‘இறைவா! இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு நற் பலன்களைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.
அவரது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, ‘பிரம்மனே! இங்கிருக்கும் நீர்வீழ்ச்சியில் நீராடி, என்னை வந்து வழிபடும் பக்தர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வாழ்வு வளம் பெறும்’ என்று அருள்கூறி மறைந்தார்.
அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மகாவிஷ்ணு கோவில் உருவானதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.
மற்றொரு வரலாறு :
ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளைக் கொண்டிருந்த, மலைப் பகுதிக்குத் தவமிருக்க முனிவர்கள் சிலர் வந்தனர். வந்த இடத்தில் அவர்களுக்கு உண்ண உணவும், அருந்த நீரும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அடர்ந்த காடுகளைக் கொண்ட மலைப்பகுதியில் இருக்கும் தங்களுக்குத் தேவையான உணவும், நீரும் கிடைக்க உதவும்படி விஷ்ணுவிடம் வேண்டினர்.
விஷ்ணு, அவர்களுக்கு அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நெல்லிமரமும், அதனருகில் நீர்நிலை இருப்பதையும் காண்பித்து உதவினார். அவர்கள் அந்த நெல்லிக்கனிகளைப் பறித்துச் சாப்பிட்டு, நீர்நிலையில் இருந்த நீரைப் பருகி, தங்கள் பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொண்டனர்.
விஷ்ணு காட்டிய நெல்லிமரத்தை, ‘அருள்புரிந்த நெல்லி’ என்ற பொருள்படும்படி ‘திருநெல்லி’ என்று போற்றியதுடன், அந்த மரத்தின் அருகில் விஷ்ணுவிற்குச் சிலை நிறுவி கோவிலமைத்து வழிபட்டு வந்தனர். அதன் பிறகு, அங்கு தற்போதிருக்கும் விஷ்ணு கோவில் கட்டப்பட்டது என்று மற்றொரு கதையும் இக்கோவிலின் தல வரலாறாகச் சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு :
கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலில் மூலவராக மகாவிஷ்ணு இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில் கணபதி, நாகர்கள் உள்ளிட்ட துணைத் தெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்தின் தெற்குப் பகுதியில், ஐந்து புனித ஆறுகளின் நீர் இணைந்திருப்பதாகக் கருதப்படும் ‘பஞ்சதீர்த்தம்’ எனும் குளம் இருக்கிறது. இக்குளத்தினுள் நடுவில் அமைந்திருக்கும் பாறையின் மேற்பகுதியில் விஷ்ணுவின் கால் தடம் பதிந்திருக்கிறது. கால் தடத்தின் இருபுறமும் சங்கு, சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. விஷ்ணு இவ்விடத்திலே நின்றுதான் பிரம்மனுக்குக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.
ஆலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரம்மன் நீராடிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்நீர்வீழ்ச்சியைப் ‘பாபநாசினி’ என்கின்றனர். இங்கிருக்கும் மலை, பிரம்மனின் பெயரால் ‘பிரம்ம கிரி’ என்று அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் விஷ்ணுவுக்குரிய அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி கர்க்கடகம் (ஆடி) மாதம் வரும் முதல் அமாவாசை நாளில் பாபநாசினி நீர்வீழ்ச்சி அருகில் வாவுபலி எனும் முன்னோர் வழிபாடு (பித்ரு தர்ப்பணம்) நடைபெறுகிறது. துலாம் (ஐப்பசி) மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் புத்தரி கொண்டாட்டம் எனும் கதிர் அறுவடைத் திருநாள் விழா, மேடம் (சித்திரை) முதல் நாளில் விசுத்திருநாள் விழா, தனு (மார்கழி) மாதம் 18-ம் நாளில் சுட்டுவிளக்கு விழா போன்றவை சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.
இந்த ஆலயம் பித்ருக்கடன் என்று சொல்லப்படும் முன்னோர் வழிபாடு செய்வதற்கு முதன்மையான இடமாக இருக்கிறது. இங்கு முன்னோர் வழிபாட்டுக்குக் கட்டணம் செலுத்தினால், அதற்குத் தேவையான தர்ப்பை, அரிசி, எள், துளசி அடங்கிய பொருட்கள் தரப்படுகின்றன. அதைப் பெற்றுக் கொண்டு, கோவிலில் இருக்கும் இறைவன் மகாவிஷ்ணுவை வழிபட்டுப் பின்பு, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ‘பாபநாசினி’ நீர்வீழ்ச்சிக்குச் செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிவபெருமான் கோவில் மற்றும் பஞ்சதீர்த்தக்குளம் ஆகியவற்றை வழிபட்டுச் செல்லலாம்.
பாபநாசினி நீர்வீழ்ச்சி நீரில் குளித்துவிட்டு வந்த பின்பு, அங்கிருக்கும் பாறையில் நீண்ட பள்ளமாக அமைந்திருக்கும் ‘பின்னப்பாரா’ என்று அழைக்கப்படும் வாய்க்காலில் அதற்கான சடங்குகள் செய்யப்படுகின்றன. பத்துக்கும் அதிகமானவர்கள் சேர்ந்த பின்பு, குழுவாக இவ்வழிபாட்டுச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இச்சடங்குகள் நிறைவடைந்தவுடன், மீண்டும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து திரும்பலாம்.
ஆலய சிறப்புகள் :
* முன்னோர் வழிபாட்டுக்குச் சிறந்த இடமாக இருப்பதால், திருநெல்லியைத் தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கின்றனர்.
* ராமரும் லட்சுமணரும் தங்களது தந்தையான தச ரதன் மறைவுக்குப் பின்னர், இங்கு வந்துதான் முன்னோர் வழிபாட்டை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
* இங்கு அமாவாசை, திதி என்று எந்தவொரு குறிப்பிட்ட நாளையும் தேர்வு செய்து முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியதில்லை. எந்த நாளிலும் முன்னோர் வழிபாடு செய்யலாம்.
* இங்கு பெண்களும் முன்னோர் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
* நெல்லி மரத்தின் கீழ் இறைவன் விஷ்ணு இருந்த இடம் என்பதால், இவ்விடம் ‘திருமால் நெல்லி’ என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் ‘திருநெல்லி’ என்று மருவிவிட்டதாக கூறுகின்றனர்.
* இந்த ஆலயம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால், ஆலயம் முழுமையாகக் கட்டப்படாமல் பாதியில் நின்றுள்ளது. இன்றும் அப்படியே இருக்கிறது.
* இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காகப் பிரம்மகிரி மலையில் இருந்து பாறைகளில் வாய்க்கால் வெட்டப்பட்டுத் தண்ணீர் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தற்போதும் அது பயன்பாட்டில் உள்ளது.
கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.
அமைவிடம் :
தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது மன்னந்தாவடி. இங்கிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் தலம். கண்ணூரில் இருந்து 121 கிலோமீட்டர், கோழிக்கோடு நகரில் இருந்து 136 கிலோமீட்டர், ஊட்டியில் இருந்து 165 கிலோமீட்டர், மைசூரில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. மன்னந்தாவடியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

தீர்த்தக்குளத்தின் நடுவில் அமைந்த விஷ்ணு பாதம்

திருப்பட்டூரில் உள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பழமையான இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முன்காலத்தில் திருப்பிடவூர் என்ற தலத்தில் அருள்பாலித்து வந்த இறைவனை பூஜித்து வந்தார் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர். ஒரு முறை இத்தலத்தில் இருந்த நீர்நிலை வறண்டு போனது. இதனால் இறைவனை அபிஷேகித்து வழிபட நீரின்றி தவித்தார், புலிக்கால் முனிவர்.
அந்த சமயத்தில் இந்திரன் தனது வெள்ளை யானையுடன் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தான். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானையில் நீர் எடுத்து வந்து ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகித்து வழிபடுவது இந்திரனின் தினசரி வழக்கம். அதற்காகத்தான் வான்வழியாக இந்திரன் சென்று கொண்டிருந்தான்.
வெள்ளை யானையின் மீது அமர்ந்து இந்திரன் தீர்த்தத்துடன் செல்வதைக் கண்ட வியாக்ரபாதர், வெள்ளை யானையிடம், ‘சிவனுக்கு பூஜை செய்ய கொஞ்சம் தீர்த்தம் கொடு’ என்று கேட்டார்.
அதற்கு வெள்ளை யானை ‘என்னால் தீர்த்தம் தர முடியாது’ என்று கூறி மறுத்துவிட்டது.
இதைக் கேட்ட முனிவருக்கோ கோபம் தலைக்கு ஏறியது. தனது புலிக்கால் நகங்களால் தரையைத் தோண்டினார். உடனே சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை கீழே இறங்கி வந்தது. ஊற்று உற்பத்தியாகி தண்ணீர் பெருகியது. அந்த நீரைக் கொண்டு முனிவர் சிவபூஜையைச் செய்தார். அந்த நீர் ஊற்று திருக்குளமாக மாறி, அதுவே ‘புலிபாய்ச்சி தீர்த்தம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.
முனிவரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதால் வெள்ளை யானை திருவானைக்காவலுக்கு தாமதமாக வந்தது. தாமதத்திற்கு என்ன காரணம் என்று ஜம்புகேஸ்வரர் வினவ, முனிவர் தண்ணீர் கேட்ட விவரத்தையும், தான் அவருக்கு தண்ணீர் தர மறுத்த விவரத்தையும் இறைவனிடம் கூறியது வெள்ளை யானை.
உடனே முனிவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வரும்படி ஜம்புகேஸ்வரர் பணிக்க, வெள்ளை யானை மீண்டும் திருப்பிடவூர் திரும்பி, தீர்த்தம் எடுத்துக் கொள்ளும்படி முனிவரிடம் கூறியது. ஆனால், கோபத்துடன் இருந்த முனிவர் ‘வேண்டாம்’ என மறுத்து விட்டார். எனவே, வெள்ளை யானை தன்னிடமிருந்த தீர்த்தத்தைக் கொண்டு தானே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.
இந்த வரலாறு நடந்த இடம் திருபட்டூர் என்ற தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பிடவூர் என்பதே. ஆனால் அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ என்று மாறிவிட்டதாக சொல்கின்றனர்.
இங்குள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பழமையான இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென்முகமாகவும் ஆலயத்தின் உள்ளே செல்லலாம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காசிவிஸ்வநாதர். இறைவி காசிவிசாலாட்சி அம்மன்.
ஆலயத்திற்கு தென்முகமாக நுழையும் போது முதலில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்கரபாத முனிவரின் ஜீவசமாதி உள்ளது. அதைக்கடந்து உள்ளே சென்றால், நேர் எதிரே அம்மன் சன்னிதியும், இடதுபுறம் இறைவன் சன்னிதியும் அமைந்திருக்கின்றன.

கிழக்கில் புலிபாய்ச்சி தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. எனவே ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அதிக அளவில் தெற்கு வாசலையே பயன்படுத்து கின்றனர். கிழக்குப் பக்கம் இறைவன் சன்னிதிக்கு எதிரே பிரகாரத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன.
இறைவனின் கருவறைக் கோட்டத்தில் தெற்கே வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. நவக்கிரகங்களின் அதிபதியான சூரியன் தினசரி இங்குள்ள சிவனை வழிபடுவதால் இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.
ஆலயத்தின் கிழக்கே உள்ள புலிபாய்ச்சி தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. இந்த புலிபாய்ச்சித் தீர்த்தம் கங்கைக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் இறைவனிடம் ஐக்கியமானதாக ஐதீகம்.
மனநிலை சரியில்லாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் புலிபாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷங்கள் விலகி, வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த ஆலயத்தின் சுற்றுப்புற மதில் சுவர்களில் தற்காலத்தில் பார்க்க முடியாத மகரமீன், அன்னப் பறவைகள், டயனோசர் மற்றும் விதவிதமான பாம்பு இனங்கள் சுதை வடிவத்தில் காணப்படுவது வியப்பிற்குரியது. இந்த ஆலயத்தின் உட்பிரகாரம் ஓங்கார (ஓம்) வடிவத்தில் ஆலயத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் வழக்கமான விசேஷ நாட்கள் தவிர, மாத பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பவுர்ணமியில் ஆலய கிரிவலமும் நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கும் இறைவிக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும்.
இங்குள்ள வியாக்ரபாத முனிவரின் ஜீவசமாதியின் முன் நின்று தியானம் மற்றும் பிரார்த்தனை செய்தால் உடல் உபாதைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பட்டூர் தலம்.

வியாக்ரபாதரின் ஜீவ சமாதி, காசி விசாலாட்சி, காசிவிஸ்வநாதர்

மொரீசியசில் பல தமிழக கட்டிட சிற்பக் கலையின் பாணியில் கோவில்கள் இருப்பினும், தலைநகர் போர்ட் லூயிசில் ரோஸ்கில்ஸ் பகுதியில் உள்ள முருகன் கோவில் காண்பவர்களைக் கவரும்படி அமைந்திருக்கிறது.
இந்தியாவிலிருந்து அரபிக்கடல், இந்துமகா சமுத்திரம் வழியாக உலகின் தென்மேற்கு மூலைக்குச் சென்றால் ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டியுள்ள மடகாஸ்கர் தீவுக்கு அருகில் உள்ளது மொரீசியஸ் தீவு.
கடலும், மலையும் கரும்புக் காடுகளும் நிறைந்து, இயற்கை அன்னை தொட்டில் கட்டித் தூங்க வைக்கும் அத்தீவிற்கு, பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் ஆட்சியாளர்களாக இருந்த போது, தமிழகத்திலிருந்து அந்த மண்ணை வளப்படுத்த தமிழர்களும் சென்றுள்ளனர். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்றுள்ள தமிழர்கள், இன்றைய மொரீசியஸ் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
அதே போல் மொரீசியஸ் தமிழ் மக்கள் சார்பில், தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு என்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தமிழகம் போல பல ஆலயங்களும் அங்கே அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு அந்த ஆலயங்களில் விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
மொரீசியசில் பல தமிழக கட்டிட சிற்பக் கலையின் பாணியில் கோவில்கள் இருப்பினும், தலைநகர் போர்ட் லூயிசில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள ரோஸ்கில்ஸ் பகுதியில் உள்ள முருகன் கோவில் காண்பவர்களைக் கவரும்படி அமைந்திருக்கிறது. திருத்தணி முருகன் கோவில் என்ற பெயரில் அமைந்த இந்த ஆலயம், நூற்றாண்டு விழா கொண்டாடும் நிலையில் இருக்கிறது.
ஆலய அமைப்பு :
வண்ணங்கள் பளிச்சிடும் சுதை வேலைப்பாடு நிறைந்த 3 நிலை ராஜகோபுரம் தமிழர்களை தலை நிமிரச் செய்வதாக உள்ளது. ஆலயத்திற்குள் நுழைந்தால் பலி பீடம், பளபளவென்ற கொடிமரம், மயில் வாகனம் ஆகியவற்றை தரிசிக்கலாம்.
மயில் வாகனத்தின் எதிரே மூலவர் முருகப்பெருமான் தனி விமானத்தின் கீழ், கருவறை உள்ளே காட்சி தருகின்றார். அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த முருகப்பெருமான் மனைவியர் யாரும் இல்லாமல், தனித்து நின்ற கோலத்தில் அருள்கிறார். இடது கையை இடுப்பில் வைத்தபடியும், வலது கையை தூக்கியவாறு அதில் பூங்கொத்து வைத்துக்கொண்டும், வேல் தாங்கியபடி உள்ள இவரது உருவம் கண்களைக் கவருவதாக இருக்கிறது.

முருகப்பெருமானின் சன்னிதிக்கு வலதுபுறம் அமர்ந்த நிலையில் விநாயகர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். முருகனுக்கு இடதுபுறம் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க நான்கு கரங்களுடன் மாரியம்மன் அமர்ந்துள்ள தனிச் சன்னிதி உள்ளது. இந்த இரு தெய்வங்களும் தெற்கு பார்த்து இருக்கிறார்கள். மண்டபத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சித்திரம் வரையப்பட்டுள்ளது.
பெரிய மண்டபத்தின் முன்னே முதலில் திருமால் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே கருடன் வீற்றிருக்கிறார். அடுத்து சிறு கோவிலில் நந்தி வீற்றிருக்க, லிங்க சொரூபமாக சிவபிரான் காட்சி தருகிறார். அதன் எதிரே நவக்கிரகங்களின் கூட்டமைப்பு இருக்கிறது.
விழாக்கள் :
இந்த ஆலயத்தில் தைப்பூசம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மட்டுமல்லாது பிற மொழி பேசுவோரும் ஆண், பெண் பாகுபாடின்றி காவடி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பானதாகக் சொல்லப்படுகிறது.
கந்த சஷ்டி விழாவின் ஆறு நாட்களும் அபிஷேகங்களும், ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்திலும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். சந்தனக் காப்பில் முருகனை கண்டுகளிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று கோவிலிலும், தங்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றுவது தமிழர்கள் மரபு. இங்கும் அதே போன்ற மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மனுக்கு கஞ்சி வார்த்தல் விழா சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில், குறிப்பாக கடைசி வாரம் ‘கோவிந்தன் விழா’ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் நெற்றியில் நாமமிட்டு பெருமாளை வழிபடுகிறார்கள்.
இத்திருக்கோவிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் திரவுபதி அம்மன் ஆலயம் அமைத்து மகாபாரதத்தை நினைவு கூருகிறார்கள். மொரீசியஸ் சுதந்திர தினமான மார்ச் 12-ந் தேதி இந்த ஆலயத்தில் மக்கள் மஞ்சள் ஆடை உடுத்தி தீமிதி உற்சவம் சிறப்பானதாக நடைபெறுகிறது. மொரீசியஸ் முருகப்பெருமான் ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
கடல் கடந்தும், காலங்கள் கடந்தும் தமிழ் தெய்வீகத்தையும் கலாசாரத்தையும் காப்பாற்றி வரும் மொரீசியஸ் தமிழர்களை வாழ்த்துவோம்.

திருமலைக்குன்றின் வடக்குப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, மலைகொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில், இரண்டு மலைக்கோவில்கள் உள்ளது. ஒன்று மருந்து மலை. மற்றொன்று திருமலை. தற்போது திருமலை என்று அழைக்கப்படும் இந்த ஊர், கி.பி. 13-ம் நூற்றாண்டில் குன்றுத்தூர், கோனேரிப்பட்டி ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது.
திருமலைக் குன்றின் உச்சியில் பம்பர மலைக்கு மேற்கே உள்ள பெரிய பாறைகளின் இணைவில், வடக்கு நோக்கி இரு குகைகள் அமைந்துள்ளன. அவற்றின் அடித்தளப்பகுதியில் சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. இதனை பாண்டவர் படுக்கை, ராமர்- சீதை படுக்கை, சித்தர் படுக்கைகள் எனவும் கூறுகிறார்கள். இங்கு சித்தர்கள் பலர் வாழ்ந்ததாகவும், அவர்கள் இம்மலைக்குகைகளில் ஜீவசமாதி அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மலைக்குன்றின் வடக்குப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, மலைகொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் இறைவனின் சக்தியோடு, இந்த மலையில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களின் சக்தியும் இணைந்து பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குவதாக நம்பப்படுகின்றது. இக்கோவிலுக்குள் வடக்கு நோக்கிய ஒரு குடவரைக் கோவில் இருக்கிறது. ஆலயத்தின் நாற்புற சுவர்களும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் திகழ வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த ஆலயம் ஒரு ஒட்டுக்கோவில் என்பதால், இந்த நாற்புற திருச்சுற்றுகளும், குறிப்பிட்ட அளவாய் அமையாமல் மாறுபட்டிருக்கின்றன.
இத்திருத்தலத்தின் இறைவனை குடவரை கோவிலில் உள்ள இறைவன். கட்டுமானக்கோவிலில் உள்ள இறைவன் எனப் பகுத்துக் காணலாம். குடவரையில் உள்ள இறைவன்- இறைவியர் உமா சமேத மூர்த்தி ஆவார். தற்போது இவரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று அழைத்து வருகின்றனர். கட்டுமானக் கோவிலில் உள்ள இறைவன் ‘மலைகொழுந்தீஸ்வரர்’ ஆவார். இவ்விறைவனின் லிங்கத் திருமேனி நேராக இல்லாமல், சற்று சாய்ந்து காணப்படுகிறது.
குடவரைக் கோவில் கருவறையின் மேற்கு உட்புறச்சுவரில் கிழக்கு நோக்கியவாறு சிவனும், உமையும் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளனர். இத்தோற்றத்தை மக்கள் கல்யாணசுந்தர மூர்த்தி என்றழைக்கின்றனர். இங்கு காணப்படும் இறைவனின் அமைப்பைப் போன்று பிரான்மலைக் குடவரை மற்றும் ஆணைமலை லாடன் கோவிலிலும் காணப்பெறுகிறது. சிவனும், உமையும் கல் இருக்கையின் மீது வீற்றிருக்கின்றனர். சிவன் இடக்காலையும், உமை வலக்காலையும் இருக்கையின் மீது குத்திட்டு முறையே வலக்காலையும் இடக்காலையும் தொங்கவிட்டுள்ளனர். இவ்விருவரும் இரு திருக்கரங்களுடன் உள்ளனர்.
மலை கொழுந்தீஸ்வரர் கட்டுமானக் கோவில் கருவறையினுள் கிழக்கு நோக்கியவாறு லிங்க விடிவில் காட்சி தருகிறார். பாகம்பிரியாள் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் தெற்கு முகமாக காட்சி தருகிறாள்.

மலைகொழுந்தீஸ்வரர், பாகம்பிரியாள், உமா சமேத மூர்த்தி
இக்கோவில் தீர்த்தத்தில் நீராடி, மலையை 7 முறை சுற்றிவந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். அதுப்போல் கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ்வதற்கு உமா சமேத மூர்த்திக்கு பெரிய மாலை சாத்தி வழிபடலாம். தீராத நோய், உடல்வலி, முடக்குவாதம் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவர்கள், மலை கொழுந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். குணமானதும் மலையில் பாதங்களைப் பொறித்து வைக்கின்றனர். குழந்தைப் பாக்கியத்திற்காக இங்குள்ள காட்டாத்தி மரத்தில் தொட்டில் கட்டி வழிபடும் முறையும் வழக்கத்தில் உள்ளது.
இத்தலத்தில் குடவரை முருகன் சன்னிதி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வலப்புறம் சாய்ந்த நிலையில் காணப்படும் இத்தல முருகப்பெருமான், கீழ் ஆடை மட்டுமே அணிந்துள்ளார். ஆடையின் மேல் கட்டப்பட்டுள்ள துண்டின் நுனிப் பகுதி, முருகனின் இடப்புறமாகத் தொங்கி பீடத்தினைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. இவர் அணிந்திருக்கும் முப்புரிநூல் வலது கையில் மேல் செல்கிறது. இந்த அமைப்பு முற்கால பாண்டியருக்குரியது என்று சொல்கிறார்கள். முருகப்பெரு மானின் இடதுபுறம் ஒரு துறவி இருக்கிறார். முருகனின் வலப்புறம் பெரிய வயிற்றுடன் முருகனை நோக்கியவாறு அடியவர் ஒருவர் குடைபிடித்தவாறு உள்ளார்.
விழாக்கள்
ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேஷகம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. இத்திருநாள் மலை கொழுந்தீஸ்வரருக்கு சிறப்புத் திருநாளாகும். அதுப்போல் திருக்கார்த்திகை நாளன்று இறைவன் முன்பாக ஐந்து அகல் விளக்குகள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன. பிறகு அதில் நான்கு விளக்கை எடுத்து அம்மன், முக்குறுணி விநாயகர், ஆறுமுகன் ஆகியோருக்கு தலா ஒன்று வைத்து விட்டு, மற்றொன்றை சொக்கப்பனை எரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். கார்த்திகை திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் அங்கு கிரிவலம் செல்கிறார்கள்.
அமைவிடம்
சிவகங்கையில் இருந்து கீழப்பூங்குடி வழியாக கட்டாணிப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி, 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருமலையில் இறங்கி ஆலயத்திற்குச் செல்லலாம். அதே போல் மதுரையில் இருந்து உறங்கான்பட்டி வழியாக மதகுப்பட்டி, கல்லல், பாகனேரி செல்லும் பேருந்துகளில் ஏறி, அழகமாநகரி என்ற இடத்தில் இறங்கியும் கோவிலுக்குச் செல்லலாம்.

விழுப்புரத்தில் அமைந்துள்ளது பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

தல வரலாறு:
சிவபெருமானை தரிசித்து அவரிடம் அர்ச்சனை செய்த மலர் ஒன்றைக் கையில் ஏந்தியபடி வந்தார், துர்வாச முனிவர். அப்போது எதிரே ஐராவதம் என்ற யானையின் மீது அமர்ந்து வந்த இந்திரனைக் கண்டார். தன்னிடம் இருந்த மலரை, இந்திரனுக்கு வழங்கினார் முனிவர். யானை மேலிருந்த இந்திரன், அங்குசத்தினால் அம்மலரை வாங்கி, யானையின் தலைப்பகுதியில் வைத்தான். மறு நொடியே யானை தன் தலையில் இருந்த மலரை கீழே தள்ளி, காலால் மிதித்தது.
இதனைக் கண்டு கோபமுற்ற துர்வாச முனிவர், ‘சிவபெருமானின் மலரை அவமதித்ததால், உன் செல்வங்கள் அனைத்தும் உன்னை விட்டு விலகட்டும்’ என்று இந்திரனுக்கு சாபமிட்டார்.
முனிவரின் சாபத்தால், தன்னுடைய சக்தியையும், செல்வங்களையும் இழந்த இந்திரன், அசுரர்களுடன் போரிட வேண்டிய நிலைக்கு விதி வசத்தால் இழுத்துச் செல்லப்பட்டான்.
இதையடுத்து திருமாலிடம் சரணடைந்த இந்திரன், சாப விமோசனம் வேண்டி நின்றான். பாற்கடலில் தோன்றும் அமுதத்தை உண்டால் மட்டுமே சாபம் நீங்கும் என அறிவுறுத்தினார், திருமால். அதன்படி, அசுரர்களின் துணை கொண்டு, வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தார மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது நஞ்சு வெளிப்பட்டது.
அந்த ஆலகால விஷத்திற்கு அஞ்சிய தேவர்கள் அனைவரும், சிவபெருமானிடம் சென்று தஞ்சம் அடைந்தனர். எம்பெருமான் நஞ்சை உண்டார். அது அவரது உடலுக்குள் செல்லாமல் இருக்க, அன்னை பார்வதி ஈசனின் கழுத்தைப் பிடித்தாள். இதனால் நஞ்சு கழுத்திலேயே தங்கிவிட்டது. அவரது கழுத்து நீல நிறமாக மாறிது. இதனால் சிவபெருமான் ‘நீலகண்டர்’ என்று அழைக்கப்பட்டார்.
நஞ்சை உண்ட பிறகு இத்தலம் வந்து மவுனமாக வீற்றிருந்தார். அனைவரும் நீலகண்டரை வழிபட்டனர். துயர் அடைந்தவர்கள் இன்பம் பெறும் வகையில், ஏழரை நாழிகை எனும் சாம நேரத்தில் சிவபெருமான் அருள் செய்தார் என தலபுராணம் கூறுகிறது.
ஆலய அமைப்பு :
இத்தல இறைவன் கயிலாசநாதர் கிழக்கு முகமாய், வட்டவடிவ ஆவுடையாரில் காட்சியளிக் கிறார். விஜயநகர மன்னர்கள் காலத்திய நந்தி மண்டபம், மகா மண்டபம், இதன் தென்புறம் அரிதான வடக்கு பார்த்த முருகர் சன்னிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகா மண்டபம் நாயக்கர் காலத்தைச் சார்ந்தது. அர்த்த மண்டபம் சோழர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தக் கோவிலுக்குரிய சிற்பங்களில் பழமையானது, பிட்சாடனர் சிலையாகும். இது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. மொத்தத்தில் சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கலை வேலைப்பாடுகள் கலந்த நிலையில் கோவில் அமைந்துள்ளது.
அன்னையின் திருநாமம் பிரகன்நாயகி எனும் பெரியநாயகி. இவரது சன்னிதி, சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அன்னை மேற்கு நோக்கி, மேல் இரு கரங்களில் தாமரை மலர் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். ஆலயத்தின் தல மரம் வில்வமாகும். தல தீர்த்தம் எதுவும் இல்லை.

கயிலாசநாதர், பெரியநாயகி
இத்தலத்தில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு 10 நாள் வசந்த உற்சவம் நடக்கிறது. இது தவிர நடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் 10 நாட்கள் நவராத்திரி விழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்திரா தரிசனம் ஆகிய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
திருமணம் வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவிப்பார்கள். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இதன்மூலம் திருமணத்தடை நீங்கி, விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இறைவனை தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
தொன்மைச் சிறப்பு :
இன்றைய விழுப்புரம், மிகவும் தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஊராகும். பல்லவர் காலத்தில், நிருபதுங்கவர்மன் பெயரால் ‘விஜயநிருபதுங்க ஜெயந்தாங்கி சதுர்வேதி மங்கலம்’ எனவும், முதலாம் ராஜராஜன் காலத்தில் ‘ஜனநாத சதுர்வேதி மங்கலம்’ எனவும் வழங்கப்பட்டது. பிற்கால சோழர் காலத்தில் விழுப்பரையன் என்பவன் பெயரால், ‘விழுப்பரையபுரம்’ என விளங்கியது. கி.பி. 1265-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலேயே இது ‘விழுப்புரம்’ என வழங்கப்பட்டிருக்கிறது. வைகுந்தவாசப்பெருமாள் ஆலய கொடிக் கம்பத்தில், விழுப்புரம் எனும் ஜனகாபுரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொன்மையான பின்னணி கொண்ட விழுப்புரத்தில், சோழமன்னர் முதலாம் ராஜராஜன் காலத்திற்கு முன்பே கயிலாசநாதர் திருக்கோவில் அமைக்கப்பட்டதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். முதலாம் குலோத்துங்கன், கோப்பெருஞ்சிங்கன், ராஜநாராயண சம்புவராயன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், விருப்பண்ண உடையார், சாளுவ நரசிங்கராஜ உடையார், நரசிங்க நாயகர், கிருஷ்ண தேவராயர் அச்சுததேவ மகாராயர், சதாசிவ தேவராயர், இரண்டாம் ஸ்ரீரங்கதேவர் முதலான மன்னர்கள் காலத்தில் ஆலயத் திருப்பணி நடந்துள்ளதை அறியமுடிகிறது.
பதினைந்தாம் நூற்றாண்டில் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இவ்வாலயம், விஜயநகர மன்னன் காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
அமைவிடம் :
விழுப்புரம் மாநகரின் வடகிழக்குப் பகுதியில், திரு.வி.க. சாலையில் அமைந்துள்ளது இந்த ஆலயம். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும், புகழ்மிக்க ஆஞ்சநேயர் கோவிலின் வெகு அருகிலும் இந்த ஆலயம் இருக்கிறது. விழுப்புரத்தில் வைகுந்தப் பெருமாள், வாலீஸ்வரர் ஆகிய பழம்பெரும் கோவில்களும், புகழ்பெற்ற ஆஞ்சநேயர், வீரவாழியம்மன் கோவிலும் அமைந்துள்ளன. பழமையான சத்திரங்களும் உள்ளன.