என் மலர்
தோஷ பரிகாரங்கள்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க, வீரம் வர, சோம்பல் அகன்று சுறுசுறுப்பாக இருக்க, இந்த எட்டுத் திருத்தலங்களில் வழிபாடு செய்யலாம். அவை:
சிவனின் வீரம் வெளிப்பட்ட தலங்கள் ‘அட்ட வீரட்ட தலங்கள்’ என்று அழைக்கப்படுகிறது. தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்க, வீரம் வர, சோம்பல் அகன்று சுறுசுறுப்பாக இருக்க, இந்த எட்டுத் திருத்தலங்களில் வழிபாடு செய்யலாம். அவை:
1. திருக்கடையூர்: எமதர்மனைக் காலால் உதைத்த இடம்
2. திருக்கண்டியூர்: பிரம்மனின் தலையைக் கொய்த இடம்
3. திருவதிகை: திரிபுரத்தை எரித்த இடம்
4. திருவழுவூர்: யானையின் தோலை உரித்த இடம்
5. திருப்பறியலூர்: தட்சனை சம்ஹாரம் செய்த இடம்
6. திருக்கோவிலூர்: அந்தகாசுரனை வதம் செய்த இடம்
7. திருக்குறுக்கை: மன்மதனை எரித்த இடம்
8. திருவிற்குடி: ஜலந்தராசுரனை வதம் செய்த இடம்
திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து ருணவிமோசனேஸ்வரரையும் இங்கே சிவ துர்கையையும் விஷ்ணு துர்கையையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால் கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுத்து அருளிக்காப்பார் ருணவிமோசனேஸ்வரர்.
கோயில் நகரம் என்று அழைக்கப்படுகிறது கும்பகோணம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்குதான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சாரபரமேஸ்வரர்.
கடன் நிவர்த்தி ஸ்தலம் என்று போற்றப்படுகிற திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து, ருணவிமோசனேஸ்வரரை மனதார தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும் என்று போற்றுகிறார்கள்.
’கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று கம்பர் பெருமான் கடன் போல் பெரிய பிரச்சினையும் துக்கமும் ஏதுமில்லை என்று எடுத்துரைத்துள்ளார். ‘எவ்வளவு சம்பாதிச்சும் கடன் தொல்லை கழுத்தை நெரிக்குதே’ என்று புலம்புகிறவர்களும் வருந்துகிறவர்களும் அவசியம் இந்தத் தலத்துக்கு வந்து சாரபரமேஸ்வரரை தரிசித்து வேண்டிக்கொண்டால், விரைவில் கடன் தொல்லையில் இருந்து நிவாரணம் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருச்சேறை திருத்தலத்துக்கு வந்து ருணவிமோசனேஸ்வரரையும் இங்கே சிவ துர்கையையும் விஷ்ணு துர்கையையும் தரிசித்து பிரார்த்தனை செய்வோம். கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுத்து அருளிக்காப்பார் ருணவிமோசனேஸ்வரர்.

சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானை வழிபடலாம்.
சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியை ஜபித்து வாருங்கள்.
சொந்த வீட்டு கனவை நிறைவேற்றி அருளுவார் செவ்வாய் பகவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்து அருளுவார். செவ்வாய் முதலான தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுவார் செவ்வாய் பகவான்.
நவக்கிரகங்களில் முக்கியமான தெய்வம் செவ்வாய் பகவான். வாழ்க்கையில் ஒருகட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகம் அவசியம் தேவை. சிறு வயதில், கல்வி இருந்தால்தான் அடுத்தகட்டத்துக்கு வளரமுடியும். அதனால்தான் புத்தியில் பலத்தைத் தருகிறார் செவ்வாய் பகவான். படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் போது, உடலில் பலம் வேண்டும். அந்த பலத்தையும் வழங்குகிறார் செவ்வாய் பகவான்.
அதுமட்டுமா? படிப்பு, வேலைக்குப் பின்னர் திருமணம் எனும் சந்ததி வளர்க்கும் விஷயம். சந்ததியை வளர்க்க, திருமணம் அவசியம். வாழ்க்கைத் துணை அவசியம். செவ்வாய் தோஷம் முதலான கிரக பலவீனம் இருந்தால், திருமணம் நடப்பது தடைப்படும். அதனால்தான் செவ்வாய் தோஷம் குறித்து விளக்குகிறது ஜோதிட சாஸ்திரம்.
படிப்பு, உத்தியோகம், திருமணம் என நல்லவிதமாக கைகூடி வரவேண்டும். அதன் பிறகு சொந்தவீடு என்பது எல்லோருக்குமான பெருங்கனவு. வாழ்வின் ஆகப்பெரிய பெரிய ஆசை. சொந்தவீடு என்பதன் மீது ஆசைப்படாதவர்களே இல்லை எனலாம்.
செவ்வாய் பகவான், பூமித்தாயின் மகன். பூமாதேவியின் மைந்தன். அதனால்தான் செவ்வாய் பகவானை பூமிகாரகன் என்கிறார்கள். செவ்வாய் பகவானையும் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானையும் வணங்கச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திருவேடகம் ஏடகநாதர் கோவில் இறைவனை வழிபட்டால் பில்லி, சூனியம் நீங்கும் என்கிறார்கள். இத்தல இறைவியான ஏலவார்குழலி அம்மை, பெண்களின் குறைகளை நீக்கும் தாயுள்ளம் படைத்தவளாகத் திகழ்கிறாள்.
மதுரையில் இருந்து தேனூர் வழியாக சோழவந்தான் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருவேடகம் என்ற ஊர். இங்குள்ள இறைவன் ‘ஏடகநாதர்’ என்றும், ‘மந்திரமூர்த்தி’ என்றும் அழைக்கப்படுகிறார்.
இத்தல இறைவனை வழிபட்டால் பில்லி, சூனியம் நீங்கும் என்கிறார்கள். இத்தல இறைவியான ஏலவார்குழலி அம்மை, பெண்களின் குறைகளை நீக்கும் தாயுள்ளம் படைத்தவளாகத் திகழ்கிறாள்.
இந்த ஆலயத்தின் தல விருட்சம், வில்வ மரம் ஆகும். இங்குள்ள தீர்த்தம், ‘பிரம்ம தீர்த்தம்.’ இந்த நீரையே இறைவனை அபிஷேகம் செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள்.

திருமணத் தடை உள்ளவர்கள், கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் பூங்குழலியம்மை உடனாய திருநோக்கிய அழகியநாதர் ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், நன்மைகள் நடைபெறும்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை உடனாய திருநோக்கிய அழகியநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவனை, தன்னுடைய குறைகளை போக்க வேண்டும் என்று இறைவி, துளசி இலைகளால் வழிபட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே திங்கட்கிழமை தோறும் இத்தல ஈசனுக்கு, துளசி இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். திருமணத் தடை உள்ளவர்கள், கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், நன்மைகள் நடைபெறும்.

கோயம்புத்தூர் வேம்படி சுடலைமாடன் கோவில் வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் தீருவதுடன், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி அருகே உள்ளது, ஜனதா நகர். இங்கு பிரசித்தி பெற்ற வேம்படி சுடலைமாடன் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் சிவனணைந்த பெருமாள், வேம்படி சுடலை மாடன், பிரம்மசக்தி, பலவேசக்காரன், கருப்பசாமி, சத்திராதி முண்டன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.
வேம்படி சுடலை மாடன், சிவனணைந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களை மனமுருகி வழிபட்டால் தீராத நோய்கள் தீருவதுடன், குழந்தை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மேலும் செய்வினை கோளாறு, பேய், பிசாசு தொல்லைகள் நீங்குவதுடன் தொழில் வளமும் பெருகும்.

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருகருக்காவூர் தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும்.
திருகருக்காவூர் தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் பாபநாசம் என்ற ஊரிலிருந்து தெற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் முல்லைவனநாதர், அம்மை கர்ப்பகரட்சகி, கருகாத்தநாயகி என்று அழைப்படுகின்றனர். இத்தலமானது உசத் காலம் என்றழைக்கப்படும் (காலை 5.30 முதல் 6 மணி வரை) விடியற்காலை வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் முல்லை வனம் ஆகும்.
இத்தல இறைவன், விநாயகர், நந்தியெம்பெருமான் ஆகியோர் உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தங்களாவர். ஊர்த்துவ முனிவரின் சாபத்தினால் பாதிக்கப்பட்ட நிருத்துவ முனிவரின் மனைவியான வேதிகை என்ற பெண்ணின் கர்ப்பத்தைக் காத்து அருள்புரிந்தால் அன்னை கருகாத்தநாயகி என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு இறைவனுக்கு அபிசேகம் கிடையாது, புனுகு மட்டும் சாத்தப்படுகிறது. இத்தலத்தில் வழிபாடு மேற்கொண்டால் திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் ஆகியவை கிட்டும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 18வது தலமாகும்.

ராகு பகவான் இத்தலத்தின் தென்மேற்கு மூலையில் தன் இரு தேவியருடன் எழுந்தருளி தன்னை வழிபடுவோரின் ராகு தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்பாலிக்கின்றார்.
ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின் நோக்கி இடம்பெயர்வார். இதனை ஒட்டி லட்சார்ச்சனை மற்றும் சந்தன காப்பு ஆகியவை இங்கு நடைபெறும். அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் புராணகாலத்தில் செண்பக வனமாக விளங்கியது. கால வரையறை செய்யப்படாத புராண காலத்தில் சிவபெருமான் லிங்கத் திருமேனி கொண்டு செண்பக மரத்தின் கீழ் எழுந்தருளி தேவர், மானுடர், முனிவர், அரசர் முதலியோருக்கு அருள்பாலித்தார் என தலபுராணம் கூறுகிறது.
செண்பக வனத்தில் எழுந்தருளியிருந்த சிவபெருமானை ஐந்தலை அரவாகிய ராகு வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்று இத்தலத்தின் தென்மேற்கு மூலையில் தன் இரு தேவியருடன் எழுந்தருளி தன்னை வழிபடுவோரின் ராகு தோஷங்களை நிவர்த்தி செய்து அருள்பாலிக்கின்றார்.
இத்தலப் பெருமானை வழிபட்டதால் இப்பெருமான் நாகேஸ்வரர் என்னும் பெயர் பெற்று விளங்குகிறார். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தொடங்கி 10 நாட்கள் பெருவிழா நடைபெறும். ஒன்பதாம் நாள் திருத்தேர் கடைசி ஞாயிறன்று சூரிய திருக்குளத்தில் புனித நீராடலும் நடைபெறும்.

திருநாகேஸ்வரம் ராகுவை வழிபட்டு தோஷம் நீங்கி பெரும்பேறு பெற்றவர்கள் நிறைய பேர். அவர்களில் பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதோடு கார்த்திகை மாதத்தில் திருவிழாவினையும் நடத்தி வந்தனர் என்பது வரலாறு.
திருநாகேஸ்வரம் ராகுவை வழிபட்டு தோஷம் நீங்கி பெரும்பேறு பெற்றவர்களில் சிலர். சூரியன் இங்கு வழிபட்டு பேறு பெற்றான் வினாயகர் வழிபட்டு கணங்களுக்கு பதியானார். கவுதமர் வழிபட்டு அகலிகையை அடைந்தார். நளன் இங்கே முறைப்படி வழிபட்டு இழந்த மனைவியை பெற்றான். பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதோடு கார்த்திகை மாதத்தில் திருவிழாவினையும் நடத்தி வந்தனர். வசிஷ்ட முனிவரும், இந்திரனும், பிரம்மனும், பகீரதனும் இங்கே வழிபட்டுள்ளனர்.
சித்திரசேனன் என்ற மன்னன் திருநாகேஸ்வரம் வந்து வழிபட்டு தனக்கு குழந்தை பாக்கியம் அருள விரதம் இருந்து நல்ல புத்திரனைப் பெற்றான். நற்குணன் என்ற முனிவர், இத்தலத்தை வந்து வழிபட்டு பாம்பு கடித்து உயிர் நீத்த தனது மகனை பிழைக்கச் செய்தார். நாக மன்னர்களான ஆதிசேடன், தக்சுகன், கார்கோடகன் ஆகியோரும் வழிபட்ட வரலாறு இங்கு உள்ளது.

இந்தியாவிலேயே மாந்தி தோஷத்துக்கு ஒரே ஒரு பரிகாரத் திருத்தலம் உள்ளது. இங்கு வழிபாடு செய்தால் ஜாதக ரீதியாக அனைத்துவித சனி தோஷங்களும் திருமணத்தடை புத்திர தோஷம் நீங்கும்.
இந்தியாவிலேயே மாந்தி தோஷத்துக்கு ஒரே பரிகாரத் திருத்தலம் திருநறையூர்தான். ஜாதக ரீதியாக மாந்தியல் ஏற்படும் திருமணத்தடை புத்திர தோஷம் போன்றவைக்கு பரிகாரம் கிடையாது. மாந்தி என்பது சனியின் புதல்வன் ஆவார் அதனால் சனிக்கு செய்தாலே போதும். மாந்திக்கு என்று தனியாக வழிபாடு கிடையாது.
திருநறையூர் சனிபகவானை வழிபடும்போது அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி மட்டும் இல்லாமல், ஜாதக ரீதியாக அனைத்துவித சனி தோஷங்களும் திருமணத்தடை புத்திர தோஷம் நீங்கும். சனி பகவானுக்குரிய மன நிம்மதி குறைகள், பயம் குழப்பமும் தீரும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து கிழக்கே 10 கி.மீ தொலைவில் திருநறையூர் நாச்சியார் திருக்கோயில் அமைந்திருக்கிறது. சனி பகவான் எழுந்தருளுகிறார். இவருக்கு சனிச் சன்னிதியும் தனிக் கொடிமரமும் அமைந்திருக்கிறது. அவருக்கு இடமும் வலமும் மந்தா தேவி, சேஷ்டா தேவி என்ற இரு மனைவிகளும் கீழ் வரிசையில் மாந்தி, குளிகன் என்ற குழந்தைகளும் திருக்காட்சி தருகிறார்கள். சனீஸ்வரனுக்கு பின்புறத்தில் சூரிய பகவான் இருக்கிறார்.
நவக்கிரங்களுடனும் சூரியன் தன் இரு மனைவிகளான உஷா, பிரதிக்ஷாவுடன் காட்சி தருவதும் வேறெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பு.

திருப்பாச்சூரில் தங்காதலி உடனாய வாசீஸ்வரர் கோவிலில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாட்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம்.
திருப்பாச்சூரில் தங்காதலி உடனாய வாசீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்து வந்தால், தம்பதியரிடையே ஒற்றுமை கூடும் என்பது நம்பிக்கை.
திருப்பதி வெங்கடாஜலபதி தம் திருமணத்திற்காக வாங்கிய கடனை அடைக்க, இந்த விநாயகர் சபை வழிபாட்டை மேற்கொண்ட பிறகுதான் வழிபிறந்தது என்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தம் திருமணத்தின்போது குபேரனிடம், வெங்கடாஜலபதி கடன் வாங்கினார். எவ்வளவு முயற்சித்தும் கடனை அடைக்க முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக, வெங்கடாஜலபதி சிவபெருமானை வழிபட்டார்.
அதற்கு ஈசன், “திருமணத்தின்போது ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என வாழ்த்துவார்கள். 16 என்பது பதினாறு வகை செல்வங்களைக் குறிக்கும். நீங்கள் மச்ச அவதாரத்தின்போது அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் காரணமாக, 11 வகை செல்வங்களை இழந்துவிட்டீர்கள். இப்போது ஐந்து வகை செல்வங்களே தங்களிடம் உள்ளன. இழந்த செல்வங்களைப் பெற விநாயகர் சபையிலுள்ள வலம்புரி விநாயகருக்கு 11 தேங்காய் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, 11 வாழைப்பழம் கொண்டு தொடுக்கப்பட்ட மாலை, ஒரு அருகம்புல் மாலை அணிவித்து, 11 நெய் தீபமேற்றி பிரார்த்தித்துக் கொண்டால் மூன்று மாதங்களுக்குள் இழந்த சொத்துகளைத் திரும்பப் பெறலாம். அதன் மூலம் கடனை அடைக்க வழிபிறக்கும்” என்று அறிவுறுத்தினார்.
அதன்படி இந்த விநாயகர் சபையில் வழிபாடுகளை மேற்கொண்டாராம், வெங்கடாஜலபதி. அதன்பிறகே, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான வழிகள் ஏற்பட்டனவாம். பக்தர்களும் இங்குள்ள விநாயகரை வழிபட்டால், கடன் தொல்லை நீங்கும். இழந்த செல்வங்கள் மீண்டும் கிட்டும், வியாபாரம் பெருகும் என்று நம்புகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், சென்னை- அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ., திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்பாச்சூர் உள்ளது. பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.

பழனி ஆண்டவனுக்கு காவடி எடுத்தால் சகல வினைகள் நீங்கும். தோஷங்கள் விலகும். வாழ்வில் ஆனந்தம் பெருகும். ஆகவே காவடி எடுத்து பழனி முருகனின் அருளை பெற்று செல்வோம்.
பழனிக்கு வருகின்ற பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபட்டு செல்கின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் காவடி எடுத்து பின்னர் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர்.
இவ்வாறு முடிக்காணிக்கை செலுத்தி வழிபட்டால் துன்பங்கள் விலகி, ஆயுள் அதிகரிக்கும். செல்வ வளமும் பெருகும் என்று பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதேபோல் யாத்திரையாக செய்தால் பிணி (நோய்) நீங்கி உடல் ஆரோக்கியம் கிட்டும். வேளாண் விளைச்சல் பெருகி விவசாயிகளின் மனக்கவலை நீங்கும். குழந்தை செல்வம் கிடைக்கும் என்று முருக பக்தர்கள் நம்புகின்றனர்.