என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஜாதகத்தில் நமக்கு ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரம் உள்ளது. அந்த வகையில் எந்த தோஷம் நீங்க எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    ஜாதகத்தில் நமக்கு ஏற்படும் அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரம் உள்ளது. அந்த வகையில் எந்த தோஷம் நீங்க எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

    ராகு தோஷம் - 21 தீபங்கள்

    சனி தோஷம் - 9 தீபங்கள்

    குரு தோஷம் - 33 தீபங்கள்

    துர்க்கைக்கு - 9 தீபங்கள்

    ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்

    திருமண தோஷம் - 21 தீபங்கள்

    புத்திர தோஷம் - 51 தீபங்கள்

    சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்

    காலசர்ப்ப தோஷம் - 21 தீபங்கள்

    களத்திர தோஷம் - 108 தீபங்கள்
    பிளாஞ்சேரி தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். இவர்களை வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    சிவபெருமானின் திருவடிவங்களில் ஒன்று ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இரண்யகசிபுவை வதைத்த நரசிம்ம மூர்த்தியின் ஆக்ரோஷத்தைத் தணிக்க, சிவபெருமான் எடுத்த திருவடிவே ஸ்ரீசரபமூர்த்தி வடிவம். இந்த மூர்த்தியின் வலப்புற இறக்கையில் இருந்து தோன்றியவளே ஸ்ரீசரப சூலினி.

    பிளாஞ்சேரி தலத்தில் ஸ்ரீசரப சூலினிக்குக் காவலாக எட்டு பைரவர்கள் தனித் தனிச் சன்னதிகளில் காட்சி தருகிறார்கள். ``சரபசூலினிக்கு மட்டுமல்ல, இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கும் காவலாக இருந்து அருள்பாலிக்கிறார்கள் இந்த அஷ்ட பைரவர்கள்’’ என்று சிலிர்ப்போடு பகிர்ந்துகொள்கிறார்கள் பக்தர்கள். இவர்கள் எண்மரையும் வழிபட்டால், எட்டுவிதமான பேறுகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    அசிதாங்க பைரவர்: அன்ன வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் இவர், நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். ஜாதகத்தில் சந்திர திசை, சந்திர புக்தி நடைபெறும் அன்பர்களும் ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். இவரை வழிபட்டால் கல்வி, கலை, செல்வம், பேச்சாற்றல் ஆகியவற்றில் சிறந்து விளங்கலாம். கலைத் துறையினர் இவரை வழிபட்டால் மகத்தான வெற்றிகளைப் பெறலாம்.

    குரு பைரவர்: ரிஷப வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். சூரிய திசை, சூரிய புக்தி நடைபெறும் ஜாதகர்களும் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர் இவர். பித்ரு தோஷங்கள் நீங்கவும், திருமணத் தடைகள் விலகவும், கணவன்- மனைவி இடையே பிரச்சினைகள் நீங்கிக் குடும்ப ஒற்றுமை ஏற்படவும் இவரை வழிபட வேண்டும்.

    சண்ட பைரவர்: மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். செவ்வாய் திசை, செவ்வாய் புத்தி நடைபெறும் ஜாதகர்களும் அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபடவேண்டிய பைரவர். காரியத் தடைகள் அகலவும், துன்பங்கள் நீங்கவும், ரத்தம் சம்பந்தமான வியாதிகளில் இருந்து விடுபடவும் இவரை வழிபடுவது, விசேஷம்.

    குரோதன பைரவர்: கருட வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். புதன் திசை, புதன் புக்தி நடைபெறும் ஜாதகர்களும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். கடன்தொல்லை தீரவும், செல்வம் பெருகவும், தோல் வியாதிகள் விலகவும் இவரை வழிபடவேண்டும்.

    உன்மத்த பைரவர்: குதிரை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். கேது திசை, கேது புக்தி நடைபெறும் ஜாதகர்களும் அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் நீங்கவும், ஏவல், பில்லி-சூன்யம் போன்ற தீவினைகள் விலகவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறவும் இவரை வழிபடவேண்டும்.

    கபால பைரவர்: யானை வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவர். சுக்கிர திசை, சுக்கிர புக்தி நடைபெறும் ஜாதகர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய மூர்த்தி இவர். இவரை வழிபட்டால் ஜனவசியம், ஆட்சி-அதிகாரம், அரசியலில் உயர் பதவிகள் ஆகியவை வாய்க்கும்.

    பீஷண பைரவர்: சிம்ம வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். நான்கு திருக்கரங்களோடு அருள்கிறார். குரு திசை, குரு புக்தி நடைபெறும் ஜாதகர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய பைரவர். குழந்தை பாக்கியம் கிடைக்கவும், இதயம் தொடர்பான பிணிகள், பக்கவாதம் ஆகியவை விலகவும் இவரை வழிபடவேண்டும்.

    சம்ஹார பைரவர்: நாய் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிப்பவர். பத்து திருக்கரங்களைக் கொண்டவர். சனி திசை-சனி புக்தி மற்றும் ராகு திசை-ராகு புத்தி நடைபெறும் ஜாதகர்களும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய பைரவர் இவர். சத்ரு உபாதைகள் நீங்கவும், கண்டங்களிலிருந்து தப்பிக்கவும், விபத்துகளில் சிக்காதிருக்கவும், வாக்குப் பலிதம் வாய்க்கவும் இவரை வழிபட்டு பலன் பெறலாம்.
    பிளாஞ்சேரி கோவிலில் நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும்.
    பைரவர் என்றாலே நம் நினைவுக்கு வருவது காசி மாநகரம்தான். காசியில், அஷ்ட பைரவர்களுக்கும் தனித்தனி கோவில்கள் அமைந்துள்ளன. காசிக்கு செல்லும் பக்தர்கள், அஷ்ட பைரவர்களையும் அவசியம் தரிசிக்க வேண்டும் என்பார்கள், பெரியோர்கள். தமிழகத்திலும் அஷ்ட பைரவர்கள் அருளும் ஒரு திருத்தலம் உண்டு.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் இருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிளாஞ்சேரிதான் அந்த திருத்தலம். இங்கே அருள்மிகு காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டிருக்கிறார், அருள்மிகு கயிலாசநாதர். இந்தக் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிக்கொண்டிருக்கிறாள்.

    பவுர்ணமிதோறும் இங்கு மாலை 5 மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது, பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதிகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம், அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.

    அதேபோல், இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.

    அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இது. அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை 6 மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்’’ என்றார்.

    அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோவில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!

    வீட்டில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் நிம்மதியாக மனக்கசப்புகள் இன்றி அன்போடு இருக்க இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.
    வீட்டில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு தனி தைரியம் வேண்டும். வீட்டில் இருவர் சண்டை போட்டால் மீதி இருக்கும் நபர்களுக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்காமல் போய்விடும். அது எந்த உறவாக இருந்தாலும் சரி, அப்படியான ஒரு மனக்கசப்பை ஒருமுறை ஏற்படுத்திக் கொண்டால் அவர்களுடைய மன நிலையிலும் பாதிப்புகள் ஏற்படும். வெளியில் தான் ஆயிரம் பிரச்சனை என்றால் வீட்டிற்கு வந்தும் நிம்மதி இல்லையே! ஒருவாய் சாப்பாடு கூட மனநிம்மதியுடன் சாப்பிட முடியாவிட்டால் எதற்காக இந்த வீட்டில் இருக்கிறோம்?

    இப்படி பிரச்சினைகள் இருக்கும் பொழுது தூக்கமும் சரியாக வராமல் போய்விடும். பெற்றோர்களுக்கு இடையே சண்டை நடந்தால் பிள்ளைகளுக்கும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை நடந்தால் அந்த இருவருக்கும் மன அழுத்தம் என்கிற நோய் வந்துவிடுகிறது. இவற்றை நீடிக்க விட்டால் பெரும் பிரச்சனை தான். இப்படி வீட்டில் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல ஒரு மாற்றத்தை உணரலாம்.

    தர்ப்பை வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகளை கிரகிக்கும் தன்மை பெற்றுள்ளது. அதனால் தான் இதனை ஹோமங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் நடுப்பகுதியில் தூபக்கால் அல்லது மண்சட்டி வைத்துக் கொண்டு அதில் நாலைந்து தர்ப்பைப் புல்லை போட்டுக் கொள்ளுங்கள். தர்ப்பை புல் எரிவதற்கு கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

    திருஷ்டி நீங்க கல் உப்பும், கடுகும் முதன்மையானதாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து எரியும் நெருப்பில் மிக சிறிய அளவில் போட்டுக் கொள்ளுங்கள். தர்ப்பை உடன் இவைகள் எரியும் பொழுது நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மை சுற்றியிருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகள் கிரகிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடும். அதன் பின் வீட்டில் நிச்சயம் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் கண்டிப்பாக வரவே வராது. குழந்தைகளும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
    ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அவை என்னவென்றும் அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
    ஜோதிடத்தில் திருமண தோஷத்தை இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு சில ஜாதகங்களுக்கு திருமணமே தேவையில்லை என்ற அமைப்பு இருக்கும். அதற்கு காரணம் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரகங்கள், 10ஆம் வீட்டில் சேர்க்கை பெற்றிருந்தால் அவர் சன்னியாசம் செல்வார் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

    அதுபோன்ற அமைப்பு உடையவர்கள் சிறுவயது முதலே காதல், கல்யாணம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு திருமணம் தேவையில்லை.

    ஆனால், ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல்/கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயதிற்குப் பின்னரும் திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.

    இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    பிராம்மி தேவியை வழிபட்டு பலன் அடைந்த தாந்திரீகர்கள் கூறிய ஒரு பரிகாரத்தை பின்பற்றுவதால், நாமும் நம் தலைவிதியும் மாறுவதோடு வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.
    மனிதனாக பிறந்த அனைவரது வாழ்விலும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கும். குறிப்பாக ஒரு சிலர் தாங்கள் பிறந்த நாள் முதல் தற்போதைய தினம் வரை, வாழ்கியல் சந்தோசம் என்பதையே இழந்து, அதே சமயம் பல்வேறு வகையான கஷ்டங்களை அனுபவித்து வருபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் தங்களுடைய துன்பங்கள் நீங்க பல்வேறு ஆலயங்களுக்கு சென்று வழிபடுவார்கள். இருப்பினும் சில தாந்த்ரீக பரிகாரங்களையும் அதனுடன் சேர்த்து செய்யும்போது கூடிய விரைவில் நல்ல பலன்களை கொடுக்கும்.

    தாந்திரீக வழிபாட்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்வில் அனைத்து சுகங்களையும் அருளுகின்ற தெய்வமான பிராம்மி தேவிக்கு பூஜை செய்து தங்களுக்கு தேவையான பலன்களை தாந்த்ரீக முறைகளை பயில்பவர்கள் பெறுகின்றனர். அப்படியே பிராம்மி தேவியை வழிபட்டு பலன் அடைந்த தாந்திரீகர்கள் கூறிய ஒரு பரிகாரத்தை பின்பற்றுவதால், நாமும் நம் தலைவிதியும் மாறுவதோடு வாழ்வில் அனைத்து நன்மைகளும் கிடைக்கப் பெறலாம்.

    உங்கள் வீட்டின் பூஜை அறையில் அம்பாள் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய அளவு தாம்பாளத் தட்டில் மஞ்சள் தூள் கலந்த நீரை ஊற்றி, இரண்டு தீபங்களை ஏற்றி கிழக்குத் திசையை நோக்கி பார்த்தவாறு அந்த தட்டில் வைத்து, சிறிது கற்கண்டுகளை நைவேத்தியமாக வைத்து ஓம் ப்ராம்மியே நமஹ என்கிற மந்திரத்தை 108 முறை ஜபித்து வர வேண்டும்.

    இந்த பரிகார வழிப்பாட்டை தினந்தோறும் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளாக செய்வதால் மட்டுமே எதிர்பார்த்த பலன்களை பெற முடியும்.

    இந்த தாந்த்ரீக பரிகாரங்கள் தினமும் செய்துவர தங்கள் வாழ்வில் சிறிது, சிறிதாக நல்ல படியான மாற்றங்கள் ஏற்படுவதை நீங்களே உணர முடியும்.
    மனக்குழப்பத்தில் இருந்தும் மனோபயத்தில் இருந்து நம்மை விடுவித்து, நமக்கு மனோதைரியத்தைத் தந்தருள்வார் மனோகாரகன் சந்திர பகவான்!
    நம்முடைய மனத்தை ஆட்டிவைப்பவனே சந்திரன். அதனால்தான் சந்திரனை மனோகாரகன் என்கிறார்கள். சந்திர பலம் சரியாக இருந்துவிட்டால் மனமானது சரியாக சிந்திக்கத் தொடங்கிவிடும். எண்ணம் சரியாக அமைந்துவிடும். மனதில் குழப்பமோ கவலையோ இல்லாமல் சந்திர பகவான் பார்த்துக்கொள்வான்.

    தஞ்சை, கும்பகோணம் முதலான ஊர்களைச் சுற்றி நவக்கிரகத் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானுக்கு, தஞ்சையை அடுத்துள்ள திருக்கண்டியூருக்கு அருகில் திங்களூர் எனும் திருத்தலம் அமைந்திருக்கிறது. இந்தத் தலம் நவக்கிரக பரிகார திருத்தலங்களில், சந்திர பகவானுக்கு உரிய திருத்தலம் என்று போற்றப்படுகிறது.

    திங்கட்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்வதும் தரிசித்துப் பிரார்த்தனை செய்வதும் விசேஷமானவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    மேலும் சந்திர பகவானின் தியான ஸ்லோகத்தையும் சந்திர பகவானுக்கு உரிய காயத்ரியையும் சொல்லி மனதார பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், நம் மனதை செம்மையாக்குவார் சந்திர பகவான். மனதை அமைதிப்படுத்துவார். ஆற்றுப்படுத்துவார். நிம்மதியை நிலைக்கச் செய்வார்.

    மனதை செம்மையாக்கி, சீர்படுத்தி, அமைதி நிலைக்குக் கொண்டு வரும் சந்திர பகவானை மனதார வேண்டுவோம். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள சந்திர பகவானை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். திங்கட்கிழமைகளில், நவக்கிரகத்தின் சந்திர பகவானை வேண்டுங்கள். எல்லா நலமும் வளமும் தந்தருளுவார் சந்திர பகவான்.

    வீட்டு நிலைவாசலில் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் கண் திருஷ்டி விலகும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக அகலும்.
    விளக்கேற்றி வழிபடுவது பூஜைகளிலும் வழிபாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. எந்த பூஜையாக இருந்தாலும் வழிபாடாக இருந்தாலும் விளக்கேற்றுவது என்பது முதலில் செய்யப்படுகிற வழிபாட்டு முறையாக கருதப்படுகிறது.

    பொதுவாகவே தினமும் விளக்கேற்றச் சொல்கிறது சாஸ்திரம். அதுவும் காலையும் மாலையும் விளக்கேற்ற வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். குறிப்பாக, செவ்வாய், வெள்ளிக்கிழமை முதலான நாட்களில் விளக்கேற்ற வேண்டும்.

    விளக்கேற்றி நமக்குத் தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும். அதேபோல், எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் விளக்கேற்ற வேண்டும். ஏதேனும் ஒரு உணவை நைவேத்தியமாகப் படைத்து வேண்டிக்கொள்ளவேண்டும்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், வீட்டு நிலைவாசலில் எலுமிச்சையை சரிபாதியாக்கி அதில் மஞ்சள் தோய்த்து வைக்க வேண்டும். அதேபோல், வாசலின் இரண்டு பக்கமும் அகல் விளக்குகள் மாலை வேளையில் ஏற்றி வைக்க வேண்டும்.

    வாசலில், எலுமிச்சையையும் அகல் விளக்கையும் வைத்துவிட்டு, பூஜையறையில் வழக்கம் போல் விளக்கேற்ற வேண்டும். அம்பாள் ஸ்துதி சொல்லி பாராயணம் செய்யலாம்.

    அதேபோல், கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலானவற்றை பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம்.

    வாசலில் வைத்திருக்கும் எலுமிச்சையும் விளக்கும் உங்கள் வீட்டுத் திருஷ்யைப் போக்கி அருளும். அம்மனின் சக்தி இல்லத்துக்குள் வியாபித்து காக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    நரசிம்ம மூர்த்தியை தொடர்ந்து சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால், நம் வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள் என்பது ஐதீகம்.
    மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில், நரசிம்ம அவதாரமும் ஒன்று. அதேபோல் மற்றைய அவதாரங்களுக்கும் நரசிம்ம அவதாரத்துக்கும் உள்ள வித்தியாசம், இருப்பதிலேயே மிகக்குறைந்த பொழுதுகளே ஆன அவதாரம்... நரசிம்ம அவதாரம்.

    நல்லது நடக்க நரசிம்மர், அல்லவை விலக்க நரசிம்மர் என்பார்கள். மனித உடலும் சிங்க முகமும் கொண்டு உக்கிர மூர்த்தியாக காட்சி தரும் நரசிம்மருக்கு பல க்ஷேத்திரங்கள் உள்ளன. நரசிம்ம மூர்த்தியை தொடர்ந்து புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால், நம் வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள் என்பது ஐதீகம்.

    இரணியனை வதம் செய்வதற்காகவும் பிரகலாதனின் பக்தியை உலகுக்கு உணர்த்தவும் எடுத்த அவதாரமே நரசிம்ம மூர்த்தி அவதாரம். எதிர்ப்புகளையும் இன்னல்களையும் அழித்தொழிப்பவர் நரசிம்மர் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

    உக்கிர மூர்த்தியாகத் திகழும் நரசிம்மரை எவரொருவர் தொடர்ந்து ஆராதனைகள் செய்து வழிபட்டு வருகிறார்களோ அவர்களை தீயசக்திகள் அண்டாமல் காத்தருள்வார் என்பது ஐதீகம். தொடர்ந்து நரசிம்மரை வழிபட்டு பிரார்த்தித்து வந்தால், எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்பே இல்லாமல் போகும்.

    ’எதைச் செஞ்சாலும் தடையாவே இருந்துக்கிட்டு இருக்குதே’ என்று புலம்பி வருந்தாதவர்களே இல்லை. வீடு கட்டி பாதியில் தடை ஏற்பட்டு அப்படியே போட்டது போட்டபடி இருக்கிறதே’ என்று கவலைப்படுவார்கள் சிலர். ‘எந்தத் தொழில் செய்தாலும் ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே’ என்று தவித்து மருகுவார்கள் சிலர். ‘படிப்புக்கேத்த வேலை இல்லை, வேலைக்கேத்த சம்பளம் இல்லை’ என்று கலங்குவார்கள் சிலர்.

    இப்படியாக வாழ்வில் எந்தத் தடை ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து நரசிம்ம மூர்த்தியை தரிசிப்பதும் வழிபாடுகள் செய்வதும் மகத்தான மாற்றங்களைத் தரும், வாழ்வில் ஏற்றங்களைக் கொடுக்கும். நம்மை எதிரிகளின் கண்முன்னே சிறப்புற வாழச் செய்வார் நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
    நவகிரகங்களால் ஏற்படகூடிய தோஷங்கள் விலகவும், நவகிரகங்களின் அருள் பெற அவர்களுக்கு உரிய நவதானியம் வைத்து எளிய பரிகாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
    ஜோதிடத்தின் அடிப்படையே நவகிரகங்கள் தான். நம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளதை வைத்து தான் நமக்கான பலன்கள் அமைக்கின்றன. ஜாதகத்தில் நவகிரகங்களால் ஏற்படக் கூடிய தோஷங்களிலிருந்து நிரந்தர தீர்வு காண்பதற்கான எளிய பரிகாரங்கள் குறித்து இங்கு விரிவாக பார்ப்போம்...

    சூரியன்: நவகிரகங்களின் தலைவனாகப் பார்க்கப்படுபவர் சூரிய பகவான். கோதுமை சூரியனுக்கு உகந்தது. அதனால் கோதுமையால் செய்யப்பட்ட சுண்டல் அல்லது உணவை படைத்து வணங்குவதால் சூரியனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் நீங்கும்.

    சந்திரன் : சந்திர பகவானுக்கு உரிய தானியம் நெல். அரிசியால் செய்யப்பட்ட உணவை படைத்து சந்திரனை வணங்கி வர தோஷம் நீங்கி நீண்ட ஆயுளும் ஏற்படுவதோடு, சந்திரனால் ஏற்பட்ட தோஷமும் இன்னல்கள் நீங்கும்.

    செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் துவரை. துவரம் பருப்பால் செய்யப்பட்ட பதார்த்தங்களைப் படைத்து செவ்வாய் பகவானை வணங்கினால், அவரால் ஏற்படக் கூடிய விபத்து, காயங்கள் உள்ளிட்ட தீய பலன்களை தவிர்க்கலாம். அதோடு செவ்வாயால் ஏற்படக்கூடிய திருமணத்தடை நீங்குவதோடு, சொத்துக்கள் சேரும்.

    புதன்:

    கல்விக்கடவுளாக பார்க்கப்படுகிறார் புதன் பகவான். புதனுக்கு உரியது பச்சை பயிறு தானியத்தை வைத்து அல்லது தானியத்தால் செய்யப்பட்ட உணவை வைத்து வழிபடுவதால் கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் சிறக்கும். தொழிலில் நல்ல வெற்றியையும், ஜோதிட கலையில் ஞானமும், புகழும் பெறலாம்.

    குரு:

    குரு பகவனானுக்கு உரிய தானியம் கடலை. மங்களத்தை அருளக் கூடிய குருவினால் ஏற்படக் கூடிய தோஷங்கள் நீங்க கடலையைப் படைத்து வணங்கி வர சுப காரியங்கள் சிறப்பாக நடந்து மங்கள பாக்கியங்கள் உண்டாகும்.

    சுக்கிரன் :

    நவகிரகங்களில் சுக போகங்களைத் தரக் கூடியவர் சுக்கிர பகவான். மொச்சை பயிறு சுக்கிரனுக்கு உரியதாகும். மொச்சை பயிறு படைத்து வழிபட்டு வருவதால் கலைகளில் வித்தகராகத் திகழலாம்.

    சனி

    சனி பகவானுக்கு உரிய தானியம் எள். எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், எள் சேர்த்த உணவை படைத்து சனி பகவானை வணங்கி வருவதால் அனைத்து தடைகளும் நீங்குவதோடு, விரோதங்கள் நீங்கி, கஷ்டங்கள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். தீராத நோய் தீர்ந்து ஆயுள் விருத்தியாகும். பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.

    ராகு:

    நிழல் கிரகமான ராகு பகவானுக்கு உரிய தானியம் உளுந்து. உளுந்து தானியத்தால் தயாரித்த பதார்த்தத்தை படைத்து வழிபட்டு வணங்கி வருவதன் மூலம் நாக தோஷம் நீங்கும். திடீர் பணக்காரனாக்கும் நிலையை இராகு பகவான் தரக் கூடியவர். ராகுவை வணங்கி வர முயற்சிகளுக்கு வெற்றியைத் தரும். ராகுவை வணங்கி வர துர்க்கை அம்மனின் அருள் பெற முடியும்.

    கேது

    நிழல் கிரகமான கேது பகவானுக்கு உரிய தானியம் கொள்ளு. தீராத நோய் தீரவும், குறையாத மருத்து செலவுகள் பெரியளவில் குறையவும், மனதில் மகிழ்ச்சியும், தைரியத்தையும் கொடுக்கக் கூடிய கேது பகவானுக்கு கொள்ளு படைத்து வணங்கவும். கேதுவை வணங்கி வர ஞானத்தை தரக்கூடிய வினை தீர்க்கும் விநாயகரின் அருள் கிடைக்கும்.

    வீட்டிலும், தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை உயர சிவபெருமான எப்படி வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
    நாம் அனைவரும் நம்முடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏதேனும் ஒரு உத்தியோகம் அல்லது தொழில் செய்து வருகிறோம். அடிப்படைத் தேவை பூர்த்தியானதும், நம்முடைய சேமிப்பு. வியாபாரம் என்றாலே அதில் லாபமும், நஷ்டமும் ஏற்படுவது சகஜம் தான். என்றாலும் சிலர் மட்டும் அவர்களின் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கோ தான் முதலீடு செய்த தொகையை கூட திரும்ப பெறமுடியாத அளவிற்கு நஷ்டமும், லாபம் குறைவும் ஏற்படுவதுண்டு.

    இப்படிப்பட்ட நஷ்டத்தால் மன வருத்தம் உண்டாவதோடு, வேறுவழியின்றி கடன் தொல்லைக்குள் சிக்குகின்றனர். இதிலிருந்து மீண்டு வர எளிய பரிகாரங்கள் உள்ளன. அந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வர படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும்.

    செல்வங்களின் அதிபதியாக விளங்கும் லட்சுமி தேவி, குபேரருக்கு நவநிதிகளை வழங்கியவர் சிவபெருமான். வீட்டில் பணம் நிலைக்கவில்லையா?இந்த எளிய ஜோதிட வழிகாட்டுதல் உங்களை செல்வந்தர் ஆக்கும்!

    சிவனுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை. அதனால் திங்களன்று அல்லது பிரதோஷ தினம் விசேஷமான கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த தினங்களில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து வந்தால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். தொழிலில் லாபம் உண்டாகும்.

    இந்த விரதம் ஈசனுக்கு உரிய கார்த்திகை திங்கட்கிழமைகளில் செய்வதும். அன்றைய தினம் மகாலட்சுமி அம்சமான பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபடுவதன் மூல சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.
    திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள், இத்தல இறைவனான அகஸ்தீஸ்வரருக்கும் சனீஸ்வரனுக்கும் அந்த பரிகாரங்களைச் செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.
    சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ளது பொழிச்சலூர் திருத்தலம். இங்கு பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனி பகவானும் ஒரு வரப்பிரசாதியாக இருந்து அருள்பாலிக்கிறார். 

    சனீஸ்வர பகவான் நேரடியாக இத்தல இறைவனை பூஜித்ததாகவும், இங்குள்ள நள்ளாறு தீர்த்தத்தில் நீராடி தன்னுடைய தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் தல வரலாறு சொல்கிறது. எனவே இத்தலம் வடதிருநள்ளாறு என அழைக்கப்படுகிறது. 

    திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள், இத்தல இறைவனான அகஸ்தீஸ்வரருக்கும் சனீஸ்வரனுக்கும் அந்த பரிகாரங்களைச் செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.
    ×