என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ராகு, கேது தோஷத்தை போக்கிக் கொள்வதற்கு திரும்பாம்புரத்தில் உள்ள பாம்புர ஈசுவரர் கோவில் சக்தி வாய்ந்தது என்கிறார்கள்.
    ராகு, கேது தோஷத்தை போக்கிக் கொள்வதற்கு திரும்பாம்புரத்தில் உள்ள பாம்புர ஈசுவரர் கோவில் சக்தி வாய்ந்தது என்கிறார்கள். பாம்(பு)புரம் ஈசுவரன் கோவிலில் ராகு, கேது குடியிருக்கிறார்கள். இது நல்ல பரிகாரத்தலமாக விளங்குகிறது.

    இக்கோவில் ‘தென் காளத்தி’ என அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் மீது சுந்தரர், சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோர் பாடல் பாடியுள்ளனர்.

    இந்த ஆலயம் பற்றி இரு புராணக்கதைகள் உள்ளன. முதல் தல புராண கதை வருமாறு:-

    முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. வாயு பகவான் மலைகளை எல்லாம் தம் வலிமையால் புரட்டி வீசினார். ஆதிசேஷன் அதை தனது வலிமையால் காத்து நின்றார். இருவரும் சமபலம் காட்டி நின்றனர். திடீரென்று வாயு பகவான் உயிர் களுக்கு வழங்கும் பிராண வாயுவை நிறுத்தி விட உயிர்கள் அனைத்தும் சோர்ந்தன. இந்திரன் மற்றும் தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கி நின்றார். வாயு பகவான் வெற்றிக் களிப்புடன் மலைகளை புரட்டி வீசினார்.

    இதனால் கோபமுற்ற சிவபெருமான், வாயு பகவானையும், ஆதிசேஷனையும் பேயுருவாக போகும் படி சபித்தார். இருவரும் தங்கள் குற்றங்களை பொறுத்தருளும்படி வேண்டி நின்றனர். வாயு பகவானை வைகை நதிக்கு வடக்கிலும், மதுரைக்கு கிழக்கிலும் பூஜை செய்து வரவும், ஆதி சேஷனை திருப் பாம்புரத்தில் 12 ஆண்டுகள் தம்மை பூஜை செய்து வரவ உத்தரவிட்டார். அதன்படி ஆதி சேஷன் திருப்பாம்புரம் வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.

    மற்றொரு தலபுராணம் வருமாறு:-

    கயிலாயத்தில் ஒரு முறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தன்னை வணங்குவதாக நினைத்து கர்வம் கொண்டது. இதை ஞான திருஷ்டியால் உணர்ந்த சிவன், நாக இனம் முழுவதும் தேவசக்தியை இழக்கும் படி செய்தார். அதனால் உலகைத்தாங்கும் ஆதி சேஷனும், ராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தியை இழந்து துன்பப்பட்டன.

    நாக இனங்கள் சாப விமோசனம் வேண்டி ஈசனை துதிக்க இறைவனும் மனம் இரங்கி பூவுலகில் சேஷபுரி என்ற திருப்பாம்புரத்தில் சிவராத்திரி அன்று தன்னை வழிபட்டால் சாப விமோசனம் அடையலாம் என அருளினார். அதன்படி ராகு, கேது மற்றும் ஆதிசேஷன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்க பாலன், குளிகன் பத்மன், மகாபத்மன் ஆகிய அஷ்டமாநாகங்கள் திருப்பாம்புரம் வந்தன. அங்கு ஆலமர விழுதை நாராக கொண்டு அத்திப்பூவை அதில் தொடுத்து பூஜை செய்து வந்தன.

    மகா சிவராத்திரி அன்று ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகேஸ்வரரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரேஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றன.
    கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது நாக தோஷத்தினால் ஏற்படுவது என்று இன்றும் கிராம மக்கள் கருதுகிறார்கள்.
    கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது நாக தோஷத்தினால் ஏற்படுவது என்று இன்றும் கிராம மக்கள் கருதுகிறார்கள்.

    ராகு - கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம். ஒரு சில குழந்தைகள் பிறக்கும்போதே மஞ்சள்காமாலை நோயுடன் பிறக்கின்றன. இதற்கும் கிரகண பாதிப்புதான் காரணம்.

    லக்னத்தில் ராகு இருந்து சந்திரனுடன் கேது சேர்ந்தால் குழந்தை நீலமாகப் பிறக்கும். ராகு - கேது சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் அதனை சர்ப தோஷம் என்று கூறுவார்கள். லக்னம், லக்னத்தில் இருந்து முதல் இரண்டு இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ, லக்னாதிபதியை பாவ கிரகங்கள் பார்த்தாலோ பாலாதிர்ஷ்ட தோஷம் என்று கூறுவர்.

    பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும். நாக தோஷம் வலுவாக இருக்கும் பிள்ளைகளுக்கு பாம்பு போலவே மச்சம் இருக்கும்.

    தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன். அதற்கேற்ற பலன்களை அது கொடுக்கும். நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.
    ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு திருப்பாம்புரம் கோவில் சிறந்த பரிகாரத்தலமாகும். இந்த கோவிலில் எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    திருப்பாம்புரம் கோவில் சிறந்த பரிகாரத்தலம். ராகு-கேது தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் திருப்பாம்புரம் கோவிலுக்கு வந்து ஆதிசேஷன் தீர்த்தத்தில் நீராடி, விளக்கு ஏற்ற வேண்டும். சுவாமி, அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

    ராகு, கேது சன்னிதியில் அமர்ந்து பூவும், குங்குமமும் வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து 48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் மஞ்சள் துணியில் வைத்து எடுத்து வந்து அதை கோவில் உண்டியலில் போட வேண்டும்.

    ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 ஆண்டு ராகு தசை நடந்தால் 7 ஆண்டு கேது தசை நடந்தால், லக்கினத்திற்கு 2-ல் ராகுவோ கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8-ல் கேதுவோ ராகுவோ இருந்தால், ராகு புக்தி, கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம் புத்திர தோஷம் இருந்தால் திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், பாம்பை அடித்திருந்தால் கடன் தொல்லை இருந்தால் இத்தலத்திற்கு வந்து ராகு, கேது பகவானை வழிபட்டு பரிகாரம் செய்வது அவசியம்.

    பரிகாரம் செய்ய விரும்புவோர் ஆலய அலுவலகத்தில் முன்புதிவு செய்ய வேண்டும். அபிஷேகப் பொருள்கள், வெள்ளி நாகம், பால் ஆகிய ஆலய நிர்வாகத்தால் வழங்கப்படும். வெள்ளி நாகத்துக்கு அபிஷேகம் செய்து, பின்னர் ராகு, கேதுவுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து தோஷங்களை போக்கிக் கொள்ளலாம். பரிகாரம் செய்ய செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை நேரம் உகந்தது.
    குழந்தைப்பேறு வேண்டும் பக்தர்களையும், திருமணத்தடை விலக பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் மனக்குறைகளை களைவதில் கோகுல கிருஷ்ணனுக்கு நிகரில்லை என்பது உண்மையே.
    திருவானைக்காவல் அக்ரஹாரத்தில் அருள்மிகு வேணுகோபாலசாமி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கும் கோகுல கிருஷ்ணன் ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை.

    திருமணத்தடை நீங்க இங்கு வந்து மூலவரை வேண்டிக்கொள்பவர்கள் தடைபட்ட திருமணம் நடந்ததும் மீண்டும் இங்கு வந்து மூலவருக்கும் இறைவிக்கும் வேஷ்டி, பாவாடை எடுத்து வைத்து கற்கண்டு பொங்கல் நைவேத்தியம் செய்து தங்கள் நன்றிக்கடனை செலுத்துகின்றனர்.

    பிள்ளைப்பேறு வேண்டும் தம்பதியினர் தங்கள் வேண்டுதல் பலித்ததும் இறைவன் இறைவிக்கு வெண்ணை காப்பு சாத்தி, புத்தாடை அணிவித்து கற்கண்டு பிரசாதம் விநியோகம் செய்து தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றனர்.

    குழந்தை பேறு வேண்டும் பக்தர்களையும், திருமணத்தடை விலக பிரார்த்தனை செய்யும் பக்தர்களையும் மட்டுமின்றி தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களின் மனக்குறைகளை களைவதில் இந்த கோகுல கிருஷ்ணனுக்கு நிகரில்லை என்பது உண்மையே.
    குழந்தைப்பேறு வேண்டுவோர், கணவன்மனைவி பிரச்சனை இருப்போர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் சிறுவாச்சூர் செல்லியம்மன் கோவில்.
    காளியின் அருளால் மதுரையை எரித்தாள் கண்ணகி. அங்கிருந்து சிறுவாச்சூர் செல்லியம்மன் ஆலயத்திற்கு வந்தாள். செல்லியம்மனோ நீ இங்கு இருக்க வேண்டாம். என்னிடமிருந்து வரம் பெற்ற அரக்கன் ஒருவன் என்னையே அடிமைப்படுத்தி வைத்துள்ளான். கொடுத்த வரத்தை கொடுஞ்செயலுக்கு உபயோகப்படுத்துகிறான். எனவே, நீ இங்கிருந்து சென்று விடு தாயே என்றாள். கண்ணகி கண்கள் மூடி காளியை வணங்கினாள். அரக்கன் வரும் நேரத்திற்காக காத்திருந்தாள். வந்த அரக்கனும் அகம்பாவத்துடன் பேச அங்கேயே அவனை காளி வதம் செய்தாள்.

    செல்லியம்மன் மலைமீது குடிகொள்ள மதுரகாளியம்மன் என்ற திருப்பெயரோடு காளி கீழே குடிகொண்டாள். திங்கள் மற்றும் வெள்ளி மட்டும்தான் ஆலயம் திறந்திருக்கும். மாவிளக்கு ஏற்றினால் எண்ணமெல்லாம் ஈடேறும். ஆலய வளாகத்திலேயே உரல்களும் உலக்கைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அரிசி கொண்டு வந்து ஊற வைத்து அங்கேயே இடித்து விளக்கேற்றுகின்றனர். குழந்தைப்பேறு வேண்டுவோர், கணவன்மனைவி பிரச்சனை இருப்போர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது. திருச்சி - பெரம்பலூர் நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது. 
    கால சர்ப்ப தோஷம், புத்திர தோஷம், களத்திர தோஷம், பதினெட்டு வருட ராகு திசை நடப்பவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்தவர்கள் ஆகியோர் திருப்பாம்புரம் சென்று பரிகார பூஜை செய்து வரலாம்.
    ‘பாம்பு கிரகங்கள்’ என்று வர்ணிக்கப்படுபவர்கள் ராகுவும், கேதுவும் ஆவார்கள். இந்த இரண்டு கிரகங்களுக்கும் தனித்தனியே திருத்தலங்கள் இருக்கின்றன. அதுபோல ராகுவும், கேதுவும் ஒரே சரீரமாக இணைந்து இறைவனை தரிசித்த தலம் தான் ‘திருப்பாம்புரம்.’ திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் கொல்லுமாங்குடிக்கு அருகில் இந்த ஊர் இருக்கிறது.

    புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்தும் அருகாமையில் தான் உள்ளது. இங்குள்ள சுவாமி ‘பாம்புரநாதர்’ என்றும், அம்பாள் ‘வண்டார்குழலி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    ராகு- கேது பெயர்ச்சியால் நற்பலன் பெறுவோர், மேலும் நற்பலன் பெறவும், துர்பலன் பெறுவோர் அதன் கடுமையை தணித்து, கெடுதல்கள் நீங்கப்பெறவும் இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபடலாம்.

    கால சர்ப்ப தோஷம், புத்திர தோஷம், களத்திர தோஷம், பதினெட்டு வருட ராகு திசை நடப்பவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்தவர்கள் ஆகியோர் திருப்பாம்புரம் சென்று பரிகார பூஜை செய்து வரலாம். திருப்பாம்புரம் சென்றால் திருப்பங்கள் உருவாகும்.
    இசக்கி அம்மன் குழந்தை வரமருளும் தெய்வமாகவும், குழந்தைகளை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுவதால் பெண்களால் பெரிதும் போற்றப்பட்டு வணங்கப்படுகின்றாள்.
    தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சிறப்பு நிலைத் தெய்வமாகவும், பெரும்பான்மையான மக்களின் வழிபடு தெய்வமாகவும் ‘இசக்கி அம்மன்’ விளங்குகிறாள். இந்த அம்மனுக்கு சென்னை  அம்பத்தூர், கள்ளிக்குப்பத்திலுள்ள ஓம் சக்தி நகரில் ஆலயமொன்று நிறுவப்பட்டுள்ளது.

    ஓம்சக்தி நகரில் இந்த ஆலயம் அமைந்திருப்பதால் ஓம் சக்தி இசக்கி அம்மன் என்ற பெயருடனே மக்களுக்கு அருட்பாலித்து வருகின்றாள். இந்த ஓம்சக்தி இசக்கி அம்மன் இடுப்பில் குழந்தையுடன், சாந்த சொரூபமாக காட்சி அளிக்கின்றாள். இந்த இசக்கி அம்மனின் இடது கையில் குழந்தையும், வலது கையில் சூலமும் உள்ளது.

    குழந்தை வரமருளும் தெய்வமாகவும், குழந்தைகளை காக்கும் தெய்வமாகவும் கருதப்படுவதால் பெண்களால் பெரிதும் போற்றப்பட்டு வணங்கப்படுகின்றாள். ஒவ்வொரு வாரமும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களோடு வழிபாடும் தமிழ் முறைப்படி நடைபெறுகின்றது. இங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் கைகளாலேயே அம்மனுக்கு அபிஷேகம் செய்வதும், வழிபாடு செய்வதும் விசேஷமும் முக்கியமானதுமாகும்.
    ஒருவர் முற்பிறவியில் பல பேர்களை ஏமாற்றியிருந்தால் இந்த பிறவியில் அவர் ஏமாறும் நபராக பிறந்திருப்பார். ஜோதிட ரீதியாக இதை "அவயோக தோஷம்" என்று குறிப்பிடுவார்கள்.
    வாழ்க்கையில் ஏமாறுபவர் இருக்கும் வரையில், ஏமாற்றுபவரும் இருப்பார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். யார் ஏமாறுகிறார்..? யார் ஏமாற்றுகிறார்..? என்ற விஷயத்தை ஜோதிட சாஸ்திர ரீதியாக எளிமையாக விளக்க முடியும். அதாவது, ஒருவர் முற்பிறவியில் பல பேர்களை ஏமாற்றியிருந்தால் இந்த பிறவியில் அவர் ஏமாறும் நபராக பிறந்திருப்பார்.

    ஜோதிட ரீதியாக இதை "அவயோக தோஷம்" என்று குறிப்பிடுவார்கள். ஏமாறுவது அல்லது ஏமாற்றுவது என்பது பொதுவாக பணத்திற்காக, கவுரவத்திற்காக, தொழிலுக்காக, காதலுக்காக, நட்பிற்காக, அன்பிற்காக என்று பல்வேறு விதங்களில் இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் புதன், சனிக்கு உள்ள சம்பந்தமே ஏமாறுபவர் யார்..? ஏமாற்றுபவர் யார்..? என்ற நிலையை விளக்கமாக தெரிவிக்கும்.

    புதன் என்றால் புத்தியை குறிக்கும். ஒரு மனிதனின் அறிவிற்கும், ஞானத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் காரணமான இவரை வித்யாகாரகன் என்பார்கள். புதன் வலிமை பெற்றவர்கள் மட்டுமே புத்திசாலியாக இருப்பார்கள். அதனால்தான் நம் முன்னோர்கள் ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்ற பழமொழியை சொல்லி வைத்தார்கள். இதன் பொருள் பணம், பொருள் எளிதாக கிடைத்தாலும் புத்தி என்னும் அறிவுச் செல்வம் கிடைக்காது என்பதாகும். உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் இனிமேல் கண்டுபிடிக்க போகும் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் புதன்தான் காரணகர்த்தா ஆவார்.

    வலுப்பெற்ற நிலையில் சுய ஜாதகத்தில் புதன் அமர்ந்திருப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் அறிவின் துணை கொண்டு வாழ்க்கையில் முன்னேறி விடுவது உறுதி. பாவ கிரகங்களுடன் சேராமல் புதன் தனித்து ஒரு ஜாதகத்தில் இருந்தால் விசேஷ தன்மை பெற்ற சுப கிரகமாக செயல்படும். வேறு எந்த கிரகத்துடனும் சேராத புதனுக்கும், அதன் பார்வைக்கும் குருவிற்கு நிகரான சக்தி உண்டு. அதே சமயம், புதன் இரட்டை தன்மையுள்ள கிரகம். அதாவது, தன்னுடன் சேர்ந்த கிரகத்திற்கு ஏற்ப தனது இயற்கை தன்மைக்கு எதிரான அசுப பலனையும் தரும்.

    சனி கர்மகாரகன், ஆயுள்காரகன், மந்தன், காரி என்ற பெயர்களை கொண்டவர். ஒருவரின் கர்ம வினைக்கு ஏற்ப சுப, அசுப பலன்களை சரியாக அளிப்பதில் வல்லவர். அதனால்தான் தராசை குறிப்பிடும் துலாம் ராசியில் சனி உச்சம் அடைகிறார். கர்ம வினையின் அதிகாரியான சனி ஒருவரது ஜாதகத்தில் பெற்ற வலிமை அவரது பூர்வ ஜென்ம பலனை வெளிக்காட்டுவதாக இருக்கும். பாக்கிய ஸ்தானம் என்ற ஒன்பதாம் இடம் வலுப்பெற்றவர்கள் ஜாதகத்தில் சனி வலிமையாக செயல்படுவார். சனி கொடுக்க எவர் தடுப்பார்..? என்பது அவரது வலிமையை காட்டும் ஜோதிட வழக்கு ஆகும்.

    ஒருவரது சுய ஜாதகத்தில் சனி வலிமை பெற்றிருந்தால், அவரது தசா காலத்தில் அமர்ந்த இடத்திற்கு ஏற்ப ஏராளமான நற்பலன்களை வாரி வழங்குவார். உயர் பதவி, தொழில், அந்தஸ்து என எட்டாத உயரத்தில் ஏற்றி விடுவார். வலிமை இழந்தவர்களுக்கு நீசத் தொழில், வறுமை, சிறை தண்டனை கொடுத்து பாவ, புண்ணியங்களை உணர்த்தி வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுப்பார்.

    ஒரு ஜாதகத்தில் சனி அமர்ந்த இடத்தை வைத்தே பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய பலனை கூறிவிடலாம். மேலும், சனி ஒளியற்ற கிரகம் என்பதால் தன்னுடன் இணைந்த கிரக ஒளியின் தன்மைக்கேற்ப நன்மை, தீமைகள் அமையும். புத்தியை வெளிக்காட்டும் புதன் கிரகம், மந்தன் என்ற சனி கிரகத்துடன் கேந்திரம், திரிகோணம், பார்வை என எந்த வழியில் சம்பந்தம் பெற்றாலும் புத்தியில் தடுமாற்றம் ஏற்படும். ஒரு ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தம் இருந்தால் அவர் ஏமாற்றுபவர், ஏமாந்து போனவர் அல்லது இனிமேல் ஏமாற்றப்படுவார் என்று கூறலாம்.

    ஜாதக ரீதியாக ஏமாற்றுபவர்

    ஒருவரது சுய ஜாதகத்தில் புதன் வலிமை பெற்று, சனி வலிமை குறைந்திருந்தால் அவர் பிறரை ஏமாற்றுபவர் ஆவார். அதாவது, புதன் பெற்ற வலிமை காரணமாக, தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, சனி வலிமை குறைந்தவர்களை ஏமாற்றி விடுவார்கள். அந்த அமைப்பு, அதிகமாக இலவச சலுகைகளை கொடுப்பவர்கள், முதலீட்டை இரட்டிப்பாக மாற்றி தருவதாக கூறுபவர்கள், போலி பத்திரம் தயாரித்து வீட்டு மனை விற்பவர்கள், ஆவண முறைகேடு செய்பவர்கள், பொய் கணக்கு கூறுபவர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் அமைந்திருக்கும்.

    புதன், சனியுடன் சர்ப்ப கிரகமான ராகுவும் சம்பந்தம் பெறுபவர்கள் லாபத்திற்காக, வெற்றிக்காக சட்டத்திற்கு புறம்பான செயலை செய்ய தயங்குவதில்லை. ஏமாற்றுபவர்களுக்கு மறைவு ஸ்தானமான 6, 8, 12 ஆகிய இடங்கள் அதிக வலிமை பெற்றிருக்கும்.



    ஜாதக ரீதியாக ஏமாறுபவர்

    பிறப்பு ஜாதகத்தில் சனி வலிமை பெற்று, புதன் வலிமை குறைந்தவர்கள் ஏமாறுபவர் ஆவார். ஒருவருக்கு தொழில் திறமையை அளிப்பவர் சனி என்ற நிலையில் வலிமையாக அவர் அமர்ந்த ஜாதகர்கள் பெரும்பாலும் சொந்த தொழில் செய்பவர்களாகவும், பணப்புழக்கம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். குறிப்பாக, பரம்பரை தொழிலை செய்வார்கள்.

    மேலும், தொழிலின் ஆழம் புரியாமல் செயல்படுவார்கள். புதனின் வலிமை குறைவாக இருப்பதால், பங்குச்சந்தை போன்றவற்றில் தவறான முதலீடு, பொருத்தமற்ற வாடிக்கையாளரை தேர்வு செய்து பெரும் முதலீட்டை இழப்பது, மூன்றாவது நபருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு அதற்கு பொறுப்பேற்று ஏமாறுவது போன்றவற்றால் பாதிப்பை அடைவார்கள்.

    புதன், சனியுடன் இன்னொரு சர்ப்ப கிரகமான கேது சம்பந்தம் பெறுபவர்கள், தவறான தொழில் கூட்டாளிகளை தேர்வு செய்து, வம்பு வழக்குகளை சந்திப்பார்கள். மேலும், அன்றாட வாழ்க்கையில் சிறிய செயலுக்கு கூட அடுத்தவர்களை நம்பி இருப்பதுடன், தொடர்ச்சியான ஏமாற்றத்தையும் சந்திக்கிறார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தம் மறைவு ஸ்தானமான 6,8,12 ஆகிய இடங்களில் அமைந்திருக்கும். இப்படிப்பட்ட கிரக நிலையை கொண்டவர்கள் செய்தொழிலை மிக கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட சுய ஜாதக நிலை உள்ளவர்களுக்கு கோச்சார ரீதியாக புதன், சனி ஆகிய கிரகங்கள் சம்பந்தம் பெறும்போது இழப்பு அதிகமாகவும், மற்ற நேரங்களில் குறைவாகவும் இருக்கும். குறிப்பாக, புதன் அல்லது சனி தசை நடைபெறும்போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

    சுருக்கமாக சொல்வதென்றால் ஜாதக ரீதியாக புதன், சனி சம்பந்தம் பெற்றவர்கள் முடிவெடுக்கும் திறன் இல்லாமல் ஏமாறுபவர்களாகவோ, ஏமாற்றுபவர்களாகவோ, ஏமாறப் போகிறவர்களாகவோ இருக்கிறார்கள். உளவியல் ரீதியாக இந்த கிரக இணைவு இருப்பவர்கள் தொடர்ந்து, ஏமாற்றத்தை சந்திப்பதால், மனச் சோர்வு அடைந்து நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள்.

    அவயோக தோஷ பரிகாரங்கள்

    புதன் வலிமை குறைந்தவர்கள் புதன்கிழமை தோறும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்து பச்சைப் பயிறு தானம் தர வேண்டும். உணவில் பச்சைப் பயிறு அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    சனி வலிமை குறைந்தவர்கள் தவறாமல் பிரதோஷ வழிபாடு செய்து வரவேண்டும். சனிக்கிழமைகளில் எள் சாதம், எள் உருண்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    வளர்பிறை ஏகாதசி நாளில் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று அவல், பொரி, பாயசம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கினாலும் மேற்கண்ட தோஷம் விலகும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    ராகு கேது தோஷம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    ராகு காலத்தில் துர்கா வழிபாடு செய்வது ராகு ஸ்தோத்திரத்தை தினசரி பாராயணம் செய்வது மிகவும் உத்தமமாக கருதப்படுகிறது. ராகு காலத்தில் பாம்புப் புற்றிக்கு முட்டை, பால் வைத்து வழிபாடு செய்வது நற்பலன்களை உண்டாக்கும்.

    கோமேதகக் கல் வைத்த மோதிரம் அணியலாம். இதனால் ராகுவினால் உண்டாகும் அசுப பலன்கள் குறையும்.

    நாகத் துவாஜாய வித்மஹே
    பத்ம ஹஸ்தாய தீமஹே
    தந்நோ ராகு ப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தைத் தினசரி 9 முறை கூறி வந்தால் ராகுவினால் ஏற்படும் அசுப பலன்கள் குறையும்.

    ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரம், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாகசிலைக்குப் பால்விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க்கிழமையில் செய்வதே நல்லது. இவ்வாறு 48 நாட்கள் செய்ய வேண்டும்.

    பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக் கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும். திருமணம் விரைவில் நடக்கவும் இதுபோல் வழிபாடு செய்து வர வேண்டும்.

    ராகு பகவானுக்கு உளுந்து பிரதான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜித்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும்.

    ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். எல்லா சிவாலயங்களிலும் வடக்குப் பார்த்த நிலையில் துர்க்கை அம்மன் இருக்கும். அந்த அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் எலுமிச்சை பழத்தோலில் விளக்கேற்றி பூஜித்து வர சகலதோஷங்களும் தீரும்.

    தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களைப் படித்து வர வேண்டும்.

    தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

    துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சினையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

    ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லிவர வேண்டும்.

    கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று சாந்தி செய்வது உத்தமம். காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபாடு செய்வது உத்தமம்.



    வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்வது உத்தம பலன்கள் உண்டாகும். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர். முதற்கடவுளான விநாயகப் பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும்.

    நாகர் தலத்தில் நாகவழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தைச் சுற்றிவரும் பெண்கள் தங்கள் மணாளனுடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை.

    கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானைத் திருப்திப்படுத்த முடியும்.

    கேதுவுக்கு உரிய அதிதேவதையான விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்து வர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம்.

    கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது, விநாயகருக்காகவது அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வாய் பகவானுக்குச் செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.

    மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமாளைத் துளசியினால் அர்ச்சித்து வரலாம்.

    கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, அஷ்டோத்திர மந்திரங்களைத் தினமும் ஒருமுறை கூறி வரலாம்.
    சர்ப்ப தோஷங்களுக்கு திருப்பாம்புரம் கோவிலில் முறையாக பரிகாரம் செய்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இந்த கோவிலில் பரிகாரம் செய்யும் முறையை பார்க்கலாம்.
    1. ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால்
    2. 18 வருட ராகு தசா நடந்தால்
    3. 7 வருட கேது தசா நடந்தால்
    4. லக்னத்திற்கு 2-ல் ராகுவோ கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8-ல் கேதுவோ, ராகுவோ இருந்தால்
    5. ராகு புத்தி, கேது புத்தி இருந்தால்,
    6. களத்திர தோஷ­ம் இருந்தால்,
    7. புத்திர தோஷ­ம் இருந்தால்,
    8. ஆண், பெண் இருபாலருக்கும் திருமணம் தடைபட்டால்
    9. கனவில் அடிக்கடி பாம்பு வந்தால்,
    10. தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால்,
    11. கடன் தொல்லைகள் இருந்தால்.

    இவை அனைத்தும் திருப்பாம்புரம் தலத்தில் வழிபட்டால் நிவர்த்தி கிடைக்கும்.

    வழிபாடு செய்வது எப்படி?

    இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராட வேண்டும். பிறகு வஸ்திர தானம் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து திருக்கோயில் அலுவலகத்தில் பணம் செலுத்தி அச்சு ரசீதுப் பெற்றதும், பரிகாரத்திற்கு உரிய அபிஷேக சாமான்கள், வெள்ளி நாகம், பால் வழங்கப்படும்.

    ஆலய அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் வெள்ளி நாகத்திற்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் ராகு, கேது பகவானுக்கு அபிஷேகம் செய்து, நீலம் மற்றும் பலவண்ண ஆடைகள், மல்லிகை, செவ்வரளி, நாகலிங்க பூ இவைகளில் ஏதேனும் ஒன்றை சாற்றி உளுந்து, கொள்ளு பொடி நிவேதனம் செய்து, பின்னர் அன்னதானம் வழங்க வேண்டும். முடிவில் புற்றுகோயில் வழிபாடு செய்வதின் மூலம் அவரவர் தோஷங்கள் விலகிவிடும் என்பது திண்ணம்.

    அழகர்கோவில் மலையில் உள்ள பழமுதிர்சோலையில் திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம், வேண்டியும் பக்தர்கள் இங்குள்ள முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
    மதுரையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அழகர்கோவில் மலையில் உள்ளது பழமுதிர்சோலை. இங்கு முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. மூலவராக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உள்ளார். முருகனின் 3 அடி உயர வேலுக்கு தனி சன்னதி உள்ளது.

    திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம், கல்வி வரம் வேண்டியும் பக்தர்கள் இங்கு முருகப்பெருமானை வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வணங்குகின்றனர். பொதுவாக ஆடி, ஆவணி மாதங்களில் தான் நாவல் மரங்களில் பழங்கள் பழுக்கும். ஆனால் இங்குள்ள நாவல் மரத்தில் ஐப்பசி மாதத்தில் பழங்கள் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.
    சில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தான், நினைவாற்றல் நன்றாக இருக்கும். இதற்கு சிறந்த பரிகாரம் என்னவென்று பார்க்கலாம்.
    சில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். எதைச் சொன்னாலும் அடுத்த நிமிடமே மறந்து விடுவார்கள். பெரியவர்களும் கூட சில நேரங்களில் சில காரியங்களைச் செய்ய மறந்து விடுவார்கள். ‘மறதி’ என்ற மூன்றெழுத்துக்குள் தான், ‘மதி’ என்ற இரண்டுஎழுத்தும் இருக்கிறது. ‘மதி’ என்றால் சந்திரன் என்று பொருள்.

    சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் தான், நினைவாற்றல் நன்றாக இருக்கும். நிகழ் காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலும். மேலும் ஜாதகத்தில் ‘ஞானகாரகன்’ கேதுவும், ‘வித்யாகாரகன்’ புதனும், படிப்பு ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்குவர். மறதி இல்லாத மனிதராக வாழ்ந்து மகத்தான சாதனைகளைப் படைக்க முடியும்.

    சரஸ்வதிக்கு கூத்தானூரில் கோவில் இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியிலும் சரஸ்வதிக்கு தனி ஆலயம் இருக்கிறது. இது போன்ற கோவில்களுக்கும், ஹயக்ரீவர் வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும் கேதுவிற்குரிய புராதனக் கோவில்களுக்கும், ஞானாம்பிகை வடிவில் அம்பிகை வீற்றிருக்கும் ஆலயங்களுக்கும் படிப்பில் குறைபாடுள்ள பிள்ளைகளை அழைத்து சென்று வழிபாடு செய்து வந்தால், கல்வியில் தேர்ச்சி பெற்றவராகவும், காசினியோர் போற்றும் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களாகவும் மாறுவர்.

    ×