என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
- வெண்தாமரை நந்தியாவட்டை மல்லிகை, இருவாட்சி - கடன்களைத் தீர்க்கும் பெண்களுக்கு திருமண யோகத்தைத் தரும்.
- மனோரஞ்சிதம் - கணவன்&மனைவி ஒற்றுமையை ஏற்படுத்தும்.
1. செந்தாமரை மலர் - நல்ல தனத்தையும், வியாபார விருத்தியையும், ஆத்ம பலத்தையும், தந்தைக்கு ஆயுள் விருத்தியையும் கொடுக்கும்.
2. வெண்தாமரை நந்தியாவட்டை மல்லிகை, இருவாட்சி - கடன்களைத் தீர்க்கும் பெண்களுக்கு திருமண யோகத்தைத் தரும்.
3. மனோரஞ்சிதம் - கணவன்&மனைவி ஒற்றுமையை ஏற்படுத்தும்.
4. பாரிசாதம், அல்லிப்பூ மங்கிய வெள்ளைப் பூக்கள் - சிறந்த பக்தியையும் அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும், தாயாரின் ஆயுளை விருத்தி செய்யும்.
- இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.
- இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.
சிவபெருமானுக்கு உகந்தது குங்கிலிய மலர் ஆகும். அது சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியமானது.
மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம்.
இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.
ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன.
சிவராத்திரி நாட்களில் பூப்பதால் தெய்வத்தன்மை கொண்டதாக விளங்கும் இப்பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனின் மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் அவற்றை கூட வெட்டுவதில்லை.
கன்னடத்தில் குங்கிலிய மரத்தை "தளி" என அழைப்பர்.
இப்பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது.
இதன் அருகிலுள்ள தேவர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின் போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன! இந்த பூ அபூர்வ நறுமணம் கொண்டவை.
இம்மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தூர சுற்றளவுக்கு நறுமணம் வீசும்.
சிவராத்திரியில் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் தேவர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வதுண்டு.
- பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.
- என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது.
வெற்றியை யார்தான் விரும்ப மாட்டார்கள்?
ஆனால் வெற்றி தேவதையின் அருள் பார்வை நம் மீது பட வேண்டுமானால், என்னதான் அதிர்ஷ்டம் இருந்தாலும், உரிய வழிபாடு மிக, மிக அவசியமாகும்.
அந்த வகையில் ஆஞ்சநேயருக்கும், வீரபத்திரருக்கும் வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
குறிப்பாக அனுமானுக்கு வெற்றிலை மாலை விசேஷமானது.
அதன் பின்னணியில் உள்ள புராண சம்பவம் வருமாறு:
இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார்.
நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார்.
ராமர் நலமாக உள்ள விபரங்களைச் சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.
பிறகு ராமர் தந்த மோதிரத்தை சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர்.
சீதா தேவியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
தனது துன்பத்தைப் போக்கிய ஆஞ்சநேயருக்கு, விக்ராந்தன் (பராக்ரமம் உடையவன்), சமர்த்தன் (திறமையாகச் செய்து முடிப்பவர்), ப்ராக்ஞன் (அறிவாளி), வானரோத்தமன் (வானரர்களில் சிறந்தவன்) என்று நான்கு விருதுகளை வழங்கி கவுரவித்தாள்.
அத்துடன், பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள்.
ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவி, மனதார ஆசீர்வதித்தாள்.
அந்த வெற்றிலைகளை மாலையாகவும் கட்டி அனுமனுக்குப் போட்டு மகிழ்ச்சியடைந்தாள்.
சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை ஸ்ரீ ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.
அன்று முதல் அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் ஏற்பட்டது.
பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.
என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது.
அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.
ஆகவே, ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒரு பாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்று பாக்கு என்பதாக இருக்க வேண்டும்.
மேலும் வெற்றிலையை நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றைக் கொண்டு, மாலையாகத் தொடுத்துப் போடலாம்.
இதனால் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருளால் நாம் எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி உண்டாகும்.
அது போல வீரபத்திரரின் அருளைப் பெறவும் வெற்றிலை மாலை வழிபாடே சிறந்தது.
சென்னைக்கு அருகில் உள்ள அனுமந்தபுரத்தில் இருக்கும் வீரபத்திரர் ஆலயத்தில் வெற்றிலை மாலை வழிபாடு சிறப்பாக நடக்கிறது.
- விநாயகரின் திருவருள் நிலைபெற்றிருக்கும் இடம் “ஸ்வேதார்க்கம்” எனப்படும் வெள்ளெருக்கு செடியாகும்.
- இம்மகா மூலிகையை சிவபெருமான் ஸ்ரீ காக புஜண்ட மகரிஷிக்கு அளித்தார்.
விநாயகரின் திருவருள் நிலைபெற்றிருக்கும் இடம் "ஸ்வேதார்க்கம்" எனப்படும் வெள்ளெருக்கு செடியாகும்.
இம்மகா மூலிகையை சிவபெருமான் ஸ்ரீ காக புஜண்ட மகரிஷிக்கு அளித்தார்.
வெள்ளெருக்கினால் விநாயகர் செய்து வீட்டில் வைத்து ஸ்வேதார்க்க விநாயகரது துதியை செவ்வாய் தோறும் வாசித்து வந்தால் சகல பாக்கியங்களும் படிப்படியாக வந்து சேரும்.
பூ பூக்கும் காய் காக்காது!
ஈரோடு அருகே உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் மிகப்பழமையான வன்னி மரம் உள்ளது.
இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மறுபக்கம் முள் இருக்காது.
இந்த மரத்தின் இலையைத் தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெட்டுப் போகாது.
பழனி பங்குனி உத்திரத்திருவிழாவுக்கு தீர்த்தக் காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளைப் போட்டுத்தான் பக்தர்கள் பாத யாத்திரையாகக் கொண்டு செல்வார்கள்.
- மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவிலில் மயூரவல்லி தாயாருக்கு வெள்ளிக்கிழமை வில்வ இலைகளால் அர்ச்சனை நடைபெறுகிறது.
- இந்த அர்ச்சனையால் திருமண தடைகள் விலகி திருமணம் நடைபெறுவதாக ஐதீகம்.
திருமணத் தடை நீங்க!
மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவிலில் குடிகொண்டுள்ள மயூரவல்லி தாயாருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வில்வ இலைகளால் அர்ச்சனை நடைபெறுகிறது.
இந்த அர்ச்சனையால் திருமண தடைகள் விலகுவதாக ஐதீகம்.
அர்த்தமுள்ள அருகம்புல்!
விதை எதுவும் போடாமல் முளைப்பதுதான் அருகம்புல். மனிதனது ஆன்மாவுக்கும் ஆதாரம் ஏதும் இல்லை.
இப்படி அருகம்புல் போல வந்த ஆத்மாவை உன்னிடம் நிறுத்தி வழிபடுகிறேன்.
எனது ஆன்மாவை தூய்மைப்படுத்த அருகம்புல்லைப் போட்டு வணங்குகிறேன் என்பதுதான் அருகம்புல் வழிபாட்டின் அர்த்தமாகும்.
- மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.
- சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.
ஒரு வீரனுக்கு, அவனது மார்பிலுள்ள கவசம் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது. அதுபோல், பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உள்ளது.
கந்த சஷ்டி கவம் தேவராய சுவாமியால் பாடப்பட்டது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதற்காக ஆறுநாளும் இதனைப் படித்து வருவர்.
இதனைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே சொல்லியுள்ளார்.
கவசத்தின் முதல் பாடலில் துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும் என்கிறார்.
அதாவது கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும்.
காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்கு நவக்கிரகங்களால் நன்மை உண்மை உண்டாகும்.
மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.
சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.
குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை நிலவும் இந்தக் காலத்தில், சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.
- சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது கட்டுப்பாடு தான். உணவு கட்டுப்பாடுதான்.
- உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.
* கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.
* பின் முருகன் படத்துக்கு மாலை அணிவித்து "துதிப்போருக்கு வல்வினை போம்" என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.
* ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை எனவே, காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.
* மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம். ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.
சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது கட்டுப்பாடு தான். உணவு கட்டுப்பாடுதான்.
உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.
மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது.
குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.
பெண்களின் பாதுகாப்புக்கு
கந்தசஷ்டி கவசம் படியுங்கள்!
- தமிழகத்தில் உள்ள சில தலங்கள், இறைவன், இறைவி திருக்கல்யாணத்துக்கு மிகவும் சிறப்புப் பெற்றவை.
- இல்வாழ்க்கைக்கு அதிக பலன்களை அள்ளித்தரும் ஆற்றல் பெற்றவை.
தமிழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஆலயங்களில் பங்குனி உத்திரம் தினத்தன்று தான் திருக்கல்யாண விழாக்கள் நடத்தப்படுகிறது.
அன்று பக்தர்கள் விரதம் இருப்பது காலம், காலமாக நடந்து வருகிறது. இந்த விரதத்துக்கு திருமண விரதம் என்று பெயர்.
வீட்டில் மங்கலகாரியம் நடப்பதற்கு துணை புரிவதால், எல்லா தலங்களிலும் திருக்கல்யாண விழாக்கள் ஆண்டு தோறும் தவறாமல் நடத்தப்படுகிறது.
எந்த ஊரில் உள்ள ஆலயத்தில் இறைவனுக்கும் இறைவிக்கும் மிகச் சிறப்பாக திருக்கல்யாணம் நடத்தப்படுகிறதோ அந்த ஊரில் உள்ள பெண்கள் திருமண யோகத்தை உரிய காலத்தில் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஆனால் பெரும்பாலான பக்தர்கள் இந்த ஐதீகத்தை புரிந்து கொள்ளாமல் ஆலயங்களில் நடத்தப்படும் திருக்கல்யாண விழாக்களில் கலந்து கொள்ளாமல் உள்ளனர்.
எனவே இனியாவது ஆலய திருக்கல்யாணங்களில் உள்ள ரகசியத்தை புரிந்து கொண்டு அதில் பங்கேற்று இறைவழிபாடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள சில தலங்கள், இறைவன், இறைவி திருக்கல்யாணத்துக்கு மிகவும் சிறப்புப் பெற்றவை.
இல்வாழ்க்கைக்கு அதிக பலன்களை அள்ளித்தரும் ஆற்றல் பெற்றவை. அவற்றை தெரிந்து கொண்டு வழி பட்டால் உரிய பலனை பெற முடியும்.
உலகமும், உயிர்களும் தொடர்ந்து இயங்க, இறைவன் நமக்கு ஆற்றும் பேரருளை நினைவுப்படுத்தும் விதமாக திருக்கல்யாணங்கள் நடத்தப்படுகிறது என்ற உண்மையை நமது வாரிசுகளுக்கு நாம் அவர்களை ஆலயங்களுக்கு அழைத்து செல்லும் போது எடுத்துச் சொல்ல வேண்டும்.
திருக்கல்யாண நிகழ்ச்சிகளை வெறும் சடங்காக கருதாமல் அதில் உள்ள தாத்பர்யங்களை அனைவரும் அறிந்து கொள்ள செய்தால்தான் திருக்கல்யாண நிகழ்வுகள் மூலம் வெற்றியும் & பலனும் கிடைக்கும்.
இதே போல ஆலயங்களில் கார்த்திகை மாதம் நடத்தப்படும் சங்காபிஷேகத்தால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து வற்றாத செல்வத்தை வழங்குவார் என்பது ஐதீகம்.
- ஆலயத்தில் நடக்கும் திருக்கல்யாண விழாநடைபெறும் போது அதே மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.
- இறைவனும், இறைவியும் மாலை மாற்றி கொள்ளும் போது இவர்களும் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
மதுரையைப் போலவே காஞ்சீபுரத்தில் காமாட்சி & ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் திருக்கல்யாண விழாநடைபெறும் போது அதே மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.
இறைவனும், இறைவியும் மாலை மாற்றி கொள்ளும் போது இவர்களும் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
திருமாங்கல்யம் கட்டப்பட்ட பிறகு இறைவன், இறைவி சார்பாக மணக்கோலத்தில் உள்ள சிவாச்சாரியார்கள் அக்னி வலம் வருதல், பொரி தூவுதல், அம்மி மிதித்தல் போன்ற சடங்குகளை நடத்தி காட்டுவார்கள்.
வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் ஆகிய ஊர்களிலும் இறைவன், இறைவிக்கு பதிலாக அர்ச்சர்களே மணமக்கள் வேடம் அணிந்து மாலை மாற்றி கொள்வது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரிவாரத் தெய்வங்களாக வரதராஜ பெருமாள், நரசிங்க பெருமாள் இருப்பதால், இத்தலத்தில் ஆண்டுக்கு மூன்று தடவை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மார்கழி மாதம் பார்த்தசாரதி & ஆண்டாள் திருமணம், மாசி மாதம் ரங்கநாதர் & வேதவல்லி தாயார் திருமணம் மற்றும் பங்குனி உத்திர நாளில் நடக்கும் திருமணம் என 3 தடவை திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
- விழாவின் தொடக்கமாக விக்னேசுவர பூஜை நடத்துவார்கள் பிறகு பிரம்மஹோமம், மாங்கல்ய பூஜைகள் நடைபெறும்.
- இதைத் தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு காப்பு கட்டுவார்கள்.
ஆண்டுக்கு ஒரு தடவை இறைவன், இறைவிக்கு நடத்தப்படும் திருக்கல்யாணம், ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும்.
ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள இறை மூர்த்தத்துக்கு ஏற்ப திருக்கல்யாணம் நடத்தப்படும்.
சிவாலயங்கள் என்றால் மதுரையில் மீனாட்சி & சுந்தரேசுவரர், காஞ்சீபுரத்தில் ஏகாம்பேஸ்வரர் & காமாட்சி என்று நடைபெறும்.
அது போல வைணவத் தலங்கள் என்றால் ஸ்ரீரங்கம் ரங்கமன்னாருக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் நடைபெறும்.
இறை மூர்த்தி ராமபிரானாக இருந்தால் அந்த ஆலயத்தில் சீத்தாராமக் கல்யாணம் நடத்துவார்கள்.
மூலவர் கண்ணனாக இருந்தால் கண்ணனுக்கும் ருக்மணிக்கும் திருமணம் நடைபெறும்.
இத்தகைய திருமணங்களை நடத்த ஊருக்கு ஊர் பழக்க & வழக்கம் வித்தியாசமாக இருக்கும்.
அந்த வகையில் பழமை மரபு மாறாமல் பல நூற்றாண்டுகளாக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலய அர்ச்சகர்களே ஆண் & பெண் வேடமிட்டு திருக்கல்யாணத்தை நடத்துவார்கள்.
இந்த சேவைக்காகவே இக்கோவிலில் இரண்டு விதமான அர்ச்சக பரம்பரையினர் காலம், காலமாக பணிபுரிந்து வருகிறார்கள்.
குலசேகர பட்டர் பரம்பரையைச் சேர்ந்த அர்ச்சகர் மாப்பிள்ளை வேடம் ஏற்பார்.
உக்கிரப்பாண்டி பரம்பரையைச் சேர்ந்த அர்ச்சகர் மணமகள் வேடம் ஏற்பார். அவர்களை இறைவன், இறைவியாகக் கருதி திருக்கல்யாணம் நடத்தப்படும்.
விழாவின் தொடக்கமாக விக்னேசுவர பூஜை நடத்துவார்கள் பிறகு பிரம்மஹோமம், மாங்கல்ய பூஜைகள் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து மீனாட்சி, சுந்தரேசுவரருக்கு காப்பு கட்டுவார்கள்.
அதன்பிறகு திருக்கல்யாணத்தின் முக்கியச் சடங்கான மங்கல நான் அணிவிக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இறைவிக்கு திருமாங்கல்யம் கட்டப்படும் போது, பெண்கள் தாங்களும் தங்களுக்கு திருமாங்கல்யத்தை அணிந்து கொள்வார்கள்.
மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் போது திருமால் கன்னிகாதானம் செய்து வைக்க, பிரம்மன் வேள்வி நடத்த, சொக்கநாதரான சிவன், மீனாட்சியம்மையை மணக்கிறார்.
திருமண வைபவத்தில் கன்னிகாதானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. அதை மதுரை தலத்தில் சிறப்புற காணலாம்.
இந்த திருக்கல்யாணத்தின் போது பக்தர்கள் இறைவன், இறைவிக்கு பட்டுப்புடவைகள் திருமாங்கல்யம் மற்றும் மொய்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ளது.
கோவில் சார்பாக திருமாங்கல்யம், மஞ்சள் கிழங்கு, விபூதி, குங்குமம் கொண்ட பிரசாத பையை பக்தர்களுக்கு கொடுப்பார்கள்.
தனி நபர்களும் வேண்டுதலின் பேரில், பக்தர்களுக்கு மாங்கல்யப் பிரசாதம் கொடுப்பார்கள்.
இறைவன், இறைவிக்கு நடைபெறும் திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரிசனம் செய்பவர்களுக்கு கல்யாண யோகம் உண்டாகும்.
- இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும்.
- இதில் போகம் என்பது இன விருத்தியைக்குறிக்கும்.
இறைவன் எடுக்கும் மேனி போகி, யோகி, வேகி என்று மூன்று வகைப்படும்.
இதில் போகம் என்பது இன விருத்தியைக்குறிக்கும். உலகில் உள்ள 84 லட்சம் ஜீவன்களுக்கும் இறைவன் இந்த சக்தியை கொடுத்துள்ளான்.
சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதின் அடிப்படையில் சிவசக்தி சங்கமத்தால், இந்த உலகில் அனைத்தும் இயங்குகின்றன.
இறைவன் போக வடிவத்தில், அந்த தத்துவத்தில் இல்லாமல் போனால் உலகத்து உயிர்கள் எதுவும் போக வாழ்க்கை வாழ இயலாது.
இதை கருத்தில் கொண்டே ஆலயங்களில் இறைவனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் வைபவத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
அதோடு அந்த திருக்கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற ஆகம விதிகளையும் வகுத்து தந்துள்ளனர்.
நமது பெற்றோர் திருமணத்தை நாம் காண முடிவதில்லை.
என்றாலும் சஷ்டியப்பூர்த்தி விழா மூலம் பெற்றோர் திருமணத்தை மகன்களும் மகள்களும் கண்குளிர கண்டுகளிக்க முடிகிறது.
அது போல இறைவனது திருக்கல்யாணத்தை ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தி அவனது அருளை பக்தர்கள் பெற்று மகிழ்கிறார்கள்.
ஒரு இடத்தில் புதிதாக கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினால், இறைவன், இறைவியின் திருக்கல்யாணத்தையும் நடத்துவார்கள்.
நம் முன்னோர்கள் இதை ஒரு மரபாகவே வைத்திருந்தனர்.
ஆனால் கும்பாபிஷேகம் நடத்தும் போது செய்யப்படும் திருக்கல்யாணமும், ஆண்டுக்கு ஒரு தடவை நடத்தும் திருக்கல்யாணமும் வேறு, வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு “கல்யாணம்”என்று பெயர்.
- ஆனால் ஆலயத்தில் இறைவனும், இறைவியும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு “திருக்கல்யாணம்” என்று பெயர்.
* சிவபெருமான் & பார்வதி திருமணம்
* ஸ்ரீரங்கமன்னார் & ஆண்டாள் திருமணம்
* தேவேந்திரன் & இந்திராணி திருமணம்
* பிரம்மா & சரஸ்வதி திருமணம்
* ஸ்ரீராமர் & சீதை திருமணம்
* விநாயகர் & சித்தி, புத்தி திருமணம்
* முருகன் & வள்ளி திருமணம்
* நந்தி & சுயம்பிரகாசை திருமணம்
இப்படி இறை திருமணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
அதை பிரதிபலிக்கும் வகையில் ஆலயங்களில் தெய்வங்களுக்கு ஆண்டு தோறும் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு "கல்யாணம்"என்று பெயர்.
ஆனால் ஆலயத்தில் இறைவனும், இறைவியும் திருமணம் செய்து கொண்டால் அதற்கு "திருக்கல்யாணம்" என்று பெயர்.






