என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ஆண்டுக்கு மூன்று முறை திருக்கல்யாணம் நடத்தப்படும் பார்த்தசாரதி கோவில்
- ஆலயத்தில் நடக்கும் திருக்கல்யாண விழாநடைபெறும் போது அதே மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.
- இறைவனும், இறைவியும் மாலை மாற்றி கொள்ளும் போது இவர்களும் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
மதுரையைப் போலவே காஞ்சீபுரத்தில் காமாட்சி & ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் திருக்கல்யாண விழாநடைபெறும் போது அதே மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.
இறைவனும், இறைவியும் மாலை மாற்றி கொள்ளும் போது இவர்களும் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
திருமாங்கல்யம் கட்டப்பட்ட பிறகு இறைவன், இறைவி சார்பாக மணக்கோலத்தில் உள்ள சிவாச்சாரியார்கள் அக்னி வலம் வருதல், பொரி தூவுதல், அம்மி மிதித்தல் போன்ற சடங்குகளை நடத்தி காட்டுவார்கள்.
வைணவத் தலங்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் ஆகிய ஊர்களிலும் இறைவன், இறைவிக்கு பதிலாக அர்ச்சர்களே மணமக்கள் வேடம் அணிந்து மாலை மாற்றி கொள்வது கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பரிவாரத் தெய்வங்களாக வரதராஜ பெருமாள், நரசிங்க பெருமாள் இருப்பதால், இத்தலத்தில் ஆண்டுக்கு மூன்று தடவை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மார்கழி மாதம் பார்த்தசாரதி & ஆண்டாள் திருமணம், மாசி மாதம் ரங்கநாதர் & வேதவல்லி தாயார் திருமணம் மற்றும் பங்குனி உத்திர நாளில் நடக்கும் திருமணம் என 3 தடவை திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.






