என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.
    • மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது.

    ஆதிசங்கரர், ஏழாம் நூற்றாண்டு இன்றைய கேரளத்திலுள்ள "காலடி" எனப்படும் ஊரில் ஆர்யாம்பாள்/சிவகுரு தம்பதியினருக்கு மகனாய் தோன்றிய மெய்ஞான வல்லுநர்.

    இளமை பிராயத்தில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம் மற்றும் இதர தத்துவங்கள் பயின்று சங்கர பகவத்பாதர் என்று அழைக்கப்பட்டார்.

    இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.

    மேலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை நிருவியுள்ளதாக பொதுக் கருத்து உள்ளது.

    சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மஞ்சளும், குங்குமமும் அம்மன் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
    • மஞ்சள் - குங்குமம் இரண்டிலும் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

    மஞ்சள் - குங்குமம் இந்த இரண்டிலும் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். இயற்கையாகவே மஞ்சள் கிருமிநாசினி என்று நம் முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

    வெப்பத்தால் ஏற்படக்கூடிய நோய்கள், மழைக்காலத்தில் வரக்கூடிய நோய்கள் (மழை பூமியில் இருக்கிற வெப்பத்தை வெளிப்படுத்துவதால், அந்த வெப்பத்தினால் பல வியாதிகள் வருகிறது) இதற்கெல்லாம் மஞ்சள்தான் மாமருந்தாகிறது.

    மஞ்சள் சுமங்கலிப் பெண்களுக்கு கொடுத்தால் பல ஜென்மங்களில் செய்த முன் வினைகள் தீரும். சவுபாக்கியங்களும் கிட்டும். சந்தோஷம் அதிகரிக்கும் என்று மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

    பல புராணங்களில் விரதங்களின் போது கடைபிடிக்க வேண்டிய முறைகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிற இடங்களில், மஞ்சளின் மகிமையும் சொல்லப்பட்டிருக்கிறது.

    அம்பிகைக்கு விரதம் இருக்கிறவர்கள், மஞ்சளாடை அணிவதும், அம்மனுக்கே மஞ்சள் அபிஷேகம் செய்வதும் இதனாலெல்லாம் ஆரோக்கியமும் ஆனந்த வாழ்வும் சேரும்.


    பொதுவாக பெண்களின் புருவ மத்தியில் அஷ்டலட்சுமியின் ஓர் அம்சம் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உண்டு. அந்த அஷ்டலட்சுமி குறிப்பாக சுமங்கலிப் பெண்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்துவாளாம். அதாவது கணவரோடு உடல் நலத்தை பாதிக்கச் செய்வாளாம். அவளின் பார்வை நேரடியாக கணவர் மேல் படக்கூடாது என்பதற்காகத்தான் பெண்கள் குங்குமப்பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

    இது மட்டுமில்லாமல் பெண்களின் தலை வகிட்டின் ஆரம்பத்தில் (அந்த இடத்தை சீமந்தம் என்று சொல்வார்கள்) ஸ்ரீ தேவி வாசம் செய்வதாகக் கூறுவர். பார்வதி தேவி தன் சீமந்தத்தில் (உச்சி வகிட்டில்) இட்டுக் கொள்கிற குங்குமத்தின் பாக்கியம் தான்.


    சிவனை ஆதி முதல்வனாகவும், ஊழிக்கு அப்புறம் உலகையே படைக்க கூடிய வல்லமை உள்ளவராகவும், எல்லா செல்வங்களுக்கும் காரணமாகவும் நிலைத்திருக்க வைத்திருக்கிறது என்று ஆதி சங்கர மகான் தன்னுடைய சவுந்தர்யலக்ரியில் கூறியுள்ளார். அப்படிப்பட்ட உயர்வான மஞ்சளும், குங்குமமும் அம்மன் கோவில் பிரசாதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.

    • தென் காளகஸ்தி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
    • ஞானாம்பிகை கோவில் என்றே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது.

    தேனி அருகே பச்சை பசேலென போர்வை விரித்தாற்போல பசுமையாக காட்சி அளிக்கும் உத்தமபாளையம் உள்ளது. முல்லை பெரியாறு ஆண்டு முழுவதும் ஓடுவதால் இந்த பகுதி குளுமையாக இருக்கும்.

    ராணிமங்கம்மாள் ஆட்சி காலத்தில் இங்கு வசித்த சிவ பக்தர் ஒருவர் அவரது படையின் நிர்வாக பொறுப்பை ஏற்றிருந்தார். காளாத்தீஸ்வரர் பக்தரான அவர் திருப்பதி அருகில் உள்ள காளகஸ்தி சென்று தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    வயதானதும் அவரால் அங்கு செல்ல இயலவில்லை. இதனை நினைத்து வருந்திய அவர் சுவாமியை மானசீகமாக வழிபட்டார். அவருக்கு காளாத்தீஸ்வரர் இங்கேயே காட்சி கொடுத்தார். மகிழ்ந்த பக்தர் அவருக்கு கோவில் எழுப்பி காளாத்தீஸ்வரர் என்று பெயர் சூட்டினார். இதனால் இக்கோவில் தென் காளகஸ்தி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    காளாத்தீஸ்வரருக்கு கோவில் அமைந்த பின்பு அம்பாளுக்கு சிலை செய்தனர். ஆனால் எவ்வளவு முயன்றும் சிலை சரியாக அமையவில்லை. இதனால் பல காலம் அம்பிகைக்கு சன்னதி அமைக்கப் படவில்லை.

    ஒரு சமயம் உத்தம பாளையம் அருகே உள்ள கோகிலாபுரத்தில் முல்லை பெரியாற்றில் மிதந்துவந்த ஒரு கூடையில் அம்பிகையின் சிலை இருந்தது. இதனைக்கண்டு மகிழ்ந்த பக்தர்கள் அதை இங்கே பிரதிஷ்டை செய்தனர்.

    காளகஸ்தியில் உள்ள அம்பிகைக்கு ஞானாம்பிகை என்று பெயர் சூட்டினர். அம்பிகையே இங்கு பிரசித்தி பெற்றவள் என்பதால் இவரது பெயரில் ஞானாம்பிகை கோவில் என்றே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிறது.

    கோகிலாபுரத்தை அம்பிகையின் பிறந்த வீடாக கருதி திருக்கல்யாண விழாவின் போது ஊர் மக்கள் அம்பிகைக்கு பிறந்த வீட்டு சீரும், தங்களது மருமகனான சிவனுக்கு வஸ்திரங்களும் கொண்டு வருகின்றனர்.

    சிவன் சன்னதி முன் மண்டப மேற்சுவரில் ராசி நட்சத்திர கட்டத்தின் மத்தியில் வாஸ்துபகவான் பத்மாசனத்தில் அமர்ந்து ஜடாமுடியுடன் காட்சிதருகிறார். வாஸ்து பகவானின் தலைக்கு மேலே பிரம்மா, அம்பிகை, இருவரும் சிவபூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது.


    இந்த மூவரையும் ஒரு நாகம் சுற்றி உள்ளது. அருகில் சூரியன், சந்திரன், வியாக்ரபாதர், பதஞ்சலி இருக்கின்றனர்.

    வாஸ்து பகவானை சுற்றிலும் 27 நட்சத்திரங்களுக்கான மிருகங்கள், 12 ராசி சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து சூரிய மண்டல ஆகாய ராசி சக்கரம் இருக்கிறது.

    நடுவில் சூரியனும் சுற்றிலும் 12 ராசிகளும் உள்ளன. நிலம் பூமி, தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் இந்த சக்கரங்களின் கீழ் நின்று சிவனை தரிசித்து செல்கிறார்கள்.

    காளாத்தீஸ்வரர்-ஞானாம்பிகை சன்னதிக்கு இடையில் சண்முகர் சன்னதி இருக்கிறது. அம்பாள் முருகன் இருவரையும், ஒரே சமயத்தில் தரிசிக்கும் வகையில் சன்னதிகளின் அமைப்பு இருக்கிறது.

    அம் பாள் சன்னதி எதிரில் உள்ள 9 துளைகளுடன் கூடிய பலகணி (கல் ஜன்னல்) வழியாக இந்த தரிசனத்தை காணலாம். தாயார் நோய் வாய்ப்பட்டால் பிள்ளைகள் அவருக்கு நிவாரணம் வேண்டி இங்கு பூஜை செய்கிறார்கள். மகனை பிரிந்திருக்கும் பெற்றோரும் இங்கு அர்ச்சனை செய்ய வருகின்றனர்.

    கோவில்களில் பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டா தேவி, ஆகிய சப்த மாதர்களை தரிசித்து இருப்பீர்கள். ஆனால் இங்கு அஷ்டமாதர்களை தரிசிக்கலாம்.

    ஆதி சக்தியில் இருந்து 7 அம்சங்களாக 7 தேவியர் தோன்றினர் என்றும் அவர்களே சப்தமாதர்களாக அருளுகின்றனர் என்றும் தேவி பாகவதம் குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் இங்கு ஆதிசக்தியின் வடிவமாக காளிதேவி, சப்த மாதர்களுடன் சேர்ந்து எட்டாவதாக காட்சி தருகிறார்.

    அஷ்டகாளி என்றும் இந்த அமைப்பை சொல்லுவர். இது மிகவும் அபூர்வமான தரிசனம்.

    இத்தலத்தில் சிவன், வாயு அம்சமாக உள்ளார். எனவே இவருக்கும் வாயு லிங்கேஸ்வரர் என்ற பெருமை உண்டு. கண்ணப்பருக்கு காளகஸ்தியில் சிவன் முக்தி கொடுத்தார்.

    இந்நிகழ்வின் அடிப்படையில் கண்ணப்பருக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி அன்று இரவிலும், கண்ணப்பர் குருபூஜை, காளாத்தீஸ்வரர், கண்ணப்பர் இருவருக்கும் விசேஷ பூஜை (பிப்ரவரி 5), நடக்கும். கண்நோய் உள்ளவர்கள் இந்தநாளில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

    மனைவி சிம்ஹிகையுடன் ராகு மற்றும் சித்திரலேகாவுடன் கேதுவிற்கு பின்பு சன்னதி இருக்கிறது.

    ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் (மாலை 4.30 முதல் 6 மணி வரை), இவர்கள் சன்னதியில் சர்ப்ப தோஷ பரிகார ஹோமம் நடக்கிறது. நாக தோஷத்தால் திருமணம், மற்றும் பல்வேறு தடைகளை சந்திப்பவர்கள் இதில் தரிசிக்கின்றனர்.

    ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் ராகு-கேது பெயர்ச்சியின் போது இவர்களது சன்னதியில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். இச்சன்னதியில் 7 நாகதேவதையர், சிலை சிற்பமாகவும் காட்சிதருகின்றனர்.

    குபேரர் சன்னதி பிரகாரத்தில் ஐஸ்வர்ய லட்சுமியுடன் குபேரர் காட்சிதருகிறார். இவருக்கு பின்புறம் மகாலட்சுமி இருக்கிறார். அட்சயதிரிதியை தினத்தில் இந்த சன்னதியில் விசேஷ பூஜை நடக்கும்.

    கிரகங்களில் சனீஸ்வர பகவானுக்கு கருப்பு நிறம், கல்விக்கு அதிபதியான புதனுக்கு பச்சை நிறம் உகந்தது. ஆனால் இங்கு சனீஸ்வரருக்கு பச்சை நிற வஸ்திரம் அணிவிக்கிறார்கள். கல்வியில் சிறப்பிடம் பெற பக்தர்கள் வஸ்திரம் அணிவிக்கும் வழக்கம் இருக்கிறது.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-12 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி காலை 6.10 மணி வரை பிறகு தசமி மறுநாள் விடியற்காலை 4.59 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 8.33 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ண சுவாமி சேஷ வாகனத்தில் பவனி. பெருவயல் ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப் பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், இரவு அம்பாள் தங்க மயில் வாகனத்திலும் திருவீதியுலா. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-இரக்கம்

    மிதுனம்-இன்பம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-கடமை

    கன்னி-பயிற்சி

    துலாம்- சலனம்

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- தேர்ச்சி

    மகரம்-பாசம்

    கும்பம்-அனுகூலம்

    மீனம்-பரிசு

    • சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை முதலியன மலைமீது நிகழும்.
    • திருவிழாக்கள், அனைத்தும் தாழக்கோவிலில்தான்.

    சிவலிங்கத் திருமேனி (பக்தவத்சலேசுவரர்.) சதுரபீட ஆவுடையாரில் அமைந்துள்ள அழகான மூர்த்தம்.

    கருவறை 'கஜப்பிரஷ்ட' அமைப்புடையது.

    கோஷ்டமூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகியோர் உளர்.

    சண்டேஸ்வரர் உள்ளார். மறுபக்கத்தில் தீர்த்தக் கிணறு உள்ளது.

    நித்திய வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன.

    சித்திரையில் பெருவிழா நடைபெறுகின்றது. கொடியேற்றம், யாகசாலை முதலியன மலைமீது நிகழும்.

    திருவிழாக்கள், அனைத்தும் தாழக்கோவிலில்தான்.

    சித்திரைப் பெருவிழாவில், மூன்றாம் நாள் உற்சவத்தில் காலையிலும், பத்தாம் நாள் விழாவில் இரவிலும், சுவாமி அதிகாரநந்தியிலம், பஞ்சமூர்த்திகளுடன் முறையே எழுந்தருளி மலைவலம் வருவதும் வழக்கம்.

    அடிவாரத்தில் மாமல்லபுரம் போகும் பாதையில் நால்வர்கோவில் உள்ளது.

    இப்பகுதி 'நால்வர் கோவில்பேட்டை' என்று வழங்குகிறது.

    கல்வெட்டில் இத்தலம் 'உலகளந்த சோழபுரம்' என்று குறிப்பிடப்படுகிறது.

    தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்தது.

    7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர். சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

    சென்னையிலிருந்து 67 கி.மீ தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோவில் 1400 ஆண்டுகள் பழமையானது.

    இங்கு காணப்படும் ஒரு கல் மண்டபம் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (கி.பி. 610-640) காலத்தில் கட்டப்பட்ட சிவனுக்குரிய குடைக்கூளி என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

    அதுமட்டுமல்லாமல் 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்களும் இங்கே கிடைத்துள்ளன.

    • அம்பாளுக்கு எதிரில் ‘பிரத்யட்ச வேதகீரீஸ்வரர்’ சந்நிதி உள்ளது.
    • அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது.

    அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.

    ஆண்டில் (1) ஆடிப்புரம் (2) பங்குனி உத்திரம் (3) நவராத்திரியில் வரும் நவமி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமே இங்கு அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்பெறுகின்றது.

    நாடொறும் பாத பூஜை மட்டுமே நடைபெறுகின்றது.

    அம்பாளின் கருவறையை வலம் வரும்போது அபிராமி அந்தாதிப் பாடல்களை சலவைக் கற்களில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளதைப் பாராயணம் செய்தவாறே வலம் வரலாம்.

    அம்பாளுக்கு எதிரில் 'பிரத்யட்ச வேதகீரீஸ்வரர்' சந்நிதி உள்ளது.

    அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது.

    வலமாக வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்ற வலப்பால் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உட்சென்றால், உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலாகவுடைய அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து அறுபத்துமூவரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன.

    பைரவர் வாகனமின்றி உள்ளார்.

    • இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. நான்கு கால் மண்டபம்.
    • ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர்.

    வடக்கு வாயிலை அடுத்து வரும்போது 'நந்தி தீர்த்தம்' உள்ளது.

    கரையில் நந்தி உள்ளது. வலமாக வரும்போது அலுவலக மண்டபக் கற்சுவரில்,

    (நமக்கு இடப்பால்) அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது.

    இதன் கலையழகு கண்டுணரத்தக்கது. நான்கு கால் மண்டபம்.

    ஒருபுறம் துவார விநாயகர், மறுபுறம் சுப்பிரமணியர்.

    இருவரையும் வணங்கி, ஐந்து நிலைகளையுடைய உள் கோபுரத்துள் நுழைகிறோம்.

    இக்கோபுரம் வண்ணக்கோபுரமாகச் சிற்பங்களுடன் காட்சி தருகிறது.

    நுழையும்போது, வாயிலில் இடப்பால் 'அநுக்கிரக நந்திகேஸ்வரர்' தேவியுடன் காட்சி தருகின்றார்.

    உள் நுழைந்து வலமாகப் பிராகாரத்தில் வரும்போது, சோமாஸ்கந்தர் சந்நிதி மிக அழகாகவுள்ளது.

    இப்பிராகாரத்தில், ஆத்மநாதர் சந்நிதி (பீடம் மட்டுமே கொண்டது), இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம் பரநாதர், தலவிநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனிக் தனிக் கோவில்களாக அமைந்துள்ளன.

    ஆறுமுகப்பெருமான் சந்நிதி அழகாகவுள்ளது. கந்தர் அநுபூதிப் பாடல்கள் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் அழகான முன் மண்டபத்துடன் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது.

    உள்ளே வலம் வரலாம். நின்ற திருக்கோலம்.

    • உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர்.
    • கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை.

    சங்கு தீர்த்தம் பெரிய குளம்.

    நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன.

    இக்குளத்திற்குச் சற்றுத் தொலைவில் 'ருத்ரகோடி' என்னும் பெயர் பெற்ற வைப்புத் தலம் உள்ளது.

    குளக்கரையிலிருந்து பார்த்தாலே இக்கோவில் விமானம் தெரிகின்றது.

    மிகப்பழமையானது. இங்குள்ள இறைவன்-ருத்ரகோடீஸ்வரர், இறைவி-அபிராமசுந்தரி,

    இவ்விடத்தைத் தற்போது மக்கள் 'ருத்ராங்கோவில்' என்றழைக்கின்றனர்.

    தாழக்கோவில் கிழக்குக் கோபுரம் ஏழு நிலைகளையுடையது.

    உச்சியில் நவ கலசங்கள். கோபுரத்தில் சிற்பங்களில்லை. விநாயகரும் சுப்பிரமணியரும் இருபுறமும் உள்ளனர்.

    கருங்கல்லில் அமைந்துள்ள துவாரபாலகர்கள் உருவங்கள் அழகுடையவை.

    கிழக்குக் கோபுர வாயில் வழியே உட்புகுவோம். வலப்பால் மண்டபத்தில் அலுவலகம் உள்ளது.

    இடப்பால் பதினாறுகால் மண்டபம் உள்ளது.

    இம்மண்டபத்தின் பக்கமாகத் திரும்பி வெளிப் பிராகாரத்தை வலம் வரும் போது, விநாயகர் சந்நிதி, ஆமை மண்டபம் முதலியன உள்ளன.

    இம்மண்டபத் தூண்கள் கலையழகு மிக்கவை.

    • கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம்.
    • கோவிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இறைவன் - பக்தவத்சலேஸ்வரர்.

    இறைவி - திரிபுரசுந்தரி.

    தலமரம் - வாழை.

    தீர்த்தம் - சங்கு தீர்த்தம்.

    மிகப் பழமையான கோவில். நாற்புறமும் நான்கு பெரிய கோபுரங்கள் உள்ளன.

    கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்டவை. இவற்றுள் பிரதானமானது கிழக்குக் கோபுரம்.

    கோவிலுக்கு வெளியே 5 தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    சந்நிதிக்கு நேர் எதிரில் வீதியின் கோடியில் மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்தம்' உள்ளது.

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது.

    இதிற்கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவிக்க, இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    • உதடுகளை மூடிக்கொண்டு மனிதர்கள் பேசுவதைப் பணிவுக்கு அடையாளமாகக் கொள்வார்கள்.
    • எவ்வளவு புலமை இருந்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மட்டும் அவசியமான காலங்களில் மட்டும் பேச வேண்டும்.

    எல்லா ஜீவராசிகளுக்கும் உதடுகள் வெளியே தெரியும்.

    யானைக்கு மட்டும் தான் தும்பிக்கை உதட்டை மூடியிருக்கிறது.

    உதடுகளை மூடிக்கொண்டு மனிதர்கள் பேசுவதைப் பணிவுக்கு அடையாளமாகக் கொள்வார்கள்.

    எவ்வளவு புலமை இருந்தாலும் பேச வேண்டிய நேரத்தில் மட்டும் அவசியமான காலங்களில் மட்டும் பேச வேண்டும்.

    மற்ற நேரங்களில் வாயை மூடிக் கொண்டு அமைதி காப்பது தான் உண்மையான ஞானியின் அடையாளமாகும்.

    இதைக் காட்டவே வாயை மூடிக் கொண்டிருக்கும் கஜமுக ரூபத்தில் விநாயகர் இருக்கிறார்.

    எல்லாவிதமான அறிவுக்கும் முடிவு மவுனம்தான். இது விநாயகர் முகம் உணர்த்தும் தத்துவம்

    • விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர்.
    • விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

    * விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

    * புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

    * பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

    * ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

    * விநாயக பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

    * தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

    * கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

    * சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.

    • நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும்.
    • விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி தினத்தன்று மாலை 6.30 மணிக்கு மேல் மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    படமும் வைத்துக்கொள்ளலாம். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும்.

    பச்சரிசியை பரப்பி, அதில் விநாயகப் பெருமானின் களி மண் சிலையை வைக்க வேண்டும்.

    விநாயகரின் திருமேனியில் வெடிப்பு, விரிசல், குறை ஏதும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நிவேதனமாக அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, சுண்டல் என்று படையல் செய்தல் வேண்டும்.

    விநாயகர் துதிகளான சீதக்களப என தொடங்கும் விநாயகர் அகவல் மற்றும் காரியசித்தி மாலை பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.

    தூப, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

    பூஜித்த விநாயகரை நீரில் கரைக்கும் வரை வீட்டில் எத்தனை நாட்கள் வைத்து இருக்கிறீர்களோ, அதுவரை தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தி நாளில் ஒருவேளை உணவு உண்டு, இரவில் பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும்.

    அன்று மாலையில் சந்திரனை பார்த்தல் கூடாது. ஆனால், விநாயகருக்கு பூஜை முடிந்த பின் சந்திரனையும் வணங்குதல் நல்லது.

    ×