என் மலர்
நீங்கள் தேடியது "அபிராமி அந்தாதி"
- அம்பாளுக்கு எதிரில் ‘பிரத்யட்ச வேதகீரீஸ்வரர்’ சந்நிதி உள்ளது.
- அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது.
அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.
ஆண்டில் (1) ஆடிப்புரம் (2) பங்குனி உத்திரம் (3) நவராத்திரியில் வரும் நவமி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமே இங்கு அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்பெறுகின்றது.
நாடொறும் பாத பூஜை மட்டுமே நடைபெறுகின்றது.
அம்பாளின் கருவறையை வலம் வரும்போது அபிராமி அந்தாதிப் பாடல்களை சலவைக் கற்களில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளதைப் பாராயணம் செய்தவாறே வலம் வரலாம்.
அம்பாளுக்கு எதிரில் 'பிரத்யட்ச வேதகீரீஸ்வரர்' சந்நிதி உள்ளது.
அடுத்துள்ள நடராச சபையில் உள்ள மூர்த்தி சிறியதாயினும் அழகாகவுள்ளது.
வலமாக வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்ற வலப்பால் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உட்சென்றால், உள்சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், சுந்தரர் முதலாகவுடைய அறுபத்துமூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து அறுபத்துமூவரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன.
பைரவர் வாகனமின்றி உள்ளார்.
அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காரியத்தைச் சித்தி செய்யக்கூடிய மந்திரசக்தி படைத்தவையாக உள்ளன. அபிராமி அந்தாதியின் முதல் பாடல் ‘உதிக்கின்ற’ என்று தொடங்கி, அதன் நூறாவது பாடல் ‘உதிக்கின்றவே’ என்றே முடிகிறது. ஆம்! அனுதினமும் அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து அபிராமி அம்மனை நினைத்து வழிபட்டால், வாழ்வில் அல்லல்கள் மறைந்து நல்லவை எல்லாம் உதித்தெழும்.






