என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்று அவிதவா நவமி.
    • திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-10 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி மாலை 5.30 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: புனர்பூசம் நாளை விடியற்காலை 4.32மணி வரை பிறகு பூசம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று அவிதவா நவமி. சுவாமிமல ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சோழவந்தான் சமீபம் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். ஆராதனை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு காலையில் சிறப்பு குரு வார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-லாபம்

    கடகம்-இன்பம்

    சிம்மம்-ஆசை

    கன்னி-நிறைவு

    துலாம்- பணிவு

    விருச்சிகம்-பண்பு

    தனுசு- ஒழுக்கம்

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-ஆதரவு

    மீனம்-அன்பு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பைரவருக்கு விரதமிருந்து விளக்கேற்றி வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கும்.
    • ராகுகால வேளையில் பைரவரை வணங்கி வழிபடுவது இன்னும் கூடுதல் பலத்தையும் பலன்களையும் வழங்கும்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு...

    அதுவும் பித்ருகளுக்கு உகந்த புரட்டாசி மாதம் தேய்பிறையில் வருகிற அஷ்டமியை சம்புகாஷ்டமி என்று கூறுவதுண்டு. இந்நாளில் பைரவருக்கு விரதமிருந்து விளக்கேற்றி வழிபட அனைத்து வளங்களும் கிடைக்கும். இந்நாளில் பைரவரை வழிபடும் முறை குறித்து தெரிந்துகொள்வோம்...

    * பைரவருக்கு செவ்வரளி மலர் சூட்டி நான்கு புறமும் தீபம் கொண்ட விளக்கேற்றி வழிபடலாம்.

    * மிளகு சேர்த்த உளுந்தவடை, தயிர் சாதம் ஆகியவற்றை கால பைரவருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும்.

    * முடிந்தால், நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள்.

    * கடன் தொல்லை, தொழில் நஷ்டம் போன்றவைகளால் பாதிப்படைந்தவர்கள் பூசணிக்காயில் நல்லெண்ணெய் ஊற்றி தீபடமிட வேண்டும்.

    * ராகுகால வேளையில் பைரவரை வணங்கி வழிபடுவது இன்னும் கூடுதல் பலத்தையும் பலன்களையும் வழங்கும்.

    • புரட்டாசி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் கருட சேவை நடை பெறும்.
    • அன்றையதினம் கருட சேவை வழிபாடு செய்தால், பெருமாளின் கருணைப் பார்வை நம் மீது திரும்பும்.

    எல்லா திசைகளிலும் மிக வேகமாக பறக்கும் ஆற்றல் கொண்ட கருடன், தன் சக்தி மூலம் திருமாலுக்கு உதவினார்.

    முதலையிடம் சிக்கிய கஜேந்திரயானையைக் காப்பாற்ற திருமால் கருடன் வாகனத்தில் பறந்து வந்தார் என்ற ஒரே ஒரு உதாரணமே இதற்கு போதும்.

    திருமால் நினைக்கும் முன்பே அந்த செயலுக்கு கருடன் தயாராகி விடுவார் என்பார்கள்.

    எனவே தான் பக்தர்களை காப்பாற்ற திருமால் கருட வாகனத்தில் எழுந்தருள்வதை சிறப்பாக சொல்கிறார்கள்.

    இதையே "கருட சேவை" என்கிறோம்.

    சிலருக்கு பெருமாளை தினமும் வழிபட, வழிபட ஒருவித அகங்காரம் வந்து விடக்கூடும்.

    அப்படி இல்லாமல் பெருமாளுக்கு என்றென்றும் தாசனாக இருக்கும் ஸ்ரீகருடன் போல எப்போதும் திருமாலுக்கு சேவை செய்து வாழ வேண்டும் என்பதை கருட சேவை நமக்கு உணர்த்துகிறது.

    புரட்டாசி மாதம் தமிழகம் முழுவதும் உள்ள வைணவத் தலங்களில் கருட சேவை நடை பெறும்.

    அன்றையதினம் கருட சேவை வழிபாடு செய்தால், பெருமாளின் கருணைப் பார்வை நம் மீது திரும்பும்.

    எனவே புரட்டாசி கருட சேவைகளை தவற விடாதீர்கள்.

    திருமாலின் வாகனமாக கருடன் மாறியதற்கு பல கதைகள் சொல்லப் படுகிறது.

    கருடன் பல நூறு ஆண்டுகள் தவம் இருந்து மகாவிஷ்ணுவை சுமந்து செல்லும் வாகனமாக மாறியதாக ஒரு கதை உண்டு.

    இன்னொரு கதையும் இருக்கிறது. ஒரு சமயம் கருடன், இந்திரனுடன் போரிட்டார்.

    அப்போது திருமால் உபேந்திரனாக அவதாரம் எடுத்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார்.

    அந்த போரில் கருடனின் ஆணவம் நீங்கும் வகையில் அவரை வீழ்த்தி அடக்கினார்.

    தன் நிலை உணர்ந்த கருடன் திருமாலின் வாகனமாகவும், கொடியாகவும் மாறியதாக சொல்வார்கள்.

    கருடன் மகா பலம் பொருந்தியவர்.

    அழகான முகம், குவிந்த இறகுகள், உறுதியான நகங்கள், கூர்மையான கண் பார்வை, பருத்த கழுத்து, குட்டையான கால்கள், பெரிய தலை என பல சிறப்பம்சங்களைக் கொண்டவர். 

    • புதன், வியாழன் கிழமைகளில் வழிபட்டால், எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.பகைவர்கள் வைத்த சூனியம் நீங்கும்.
    • வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபட்டால் ஆயுள் கெட்டியாகும்.

    ஒவ்வொரு நாள் கருடன் தரிசனத்துக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை வழிபட்டால், நோய்கள், பாவங்கள் மனக்குழப்பங்கள் நீங்கும்.

    திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் கருடனை வழிபட்டால் பெண்களுக்கு அழகு உண்டாகும். பகை விலகும். குடும்ப சிக்கல்களுக்கு விடை கிடைக்கும்.

    புதன், வியாழன் கிழமைகளில் வழிபட்டால், எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.

    பகைவர்கள் வைத்த சூனியம் நீங்கும். வெள்ளி, சனிக்கிழமைகளில் வழிபட்டால் ஆயுள் கெட்டியாகும்.

    எந்த விஷயத்திலும் துணிச்சல் உண்டாகும். தன்னம்பிக்கை, ஆர்வம் அதிகரிப்பதால் செல்வம் பெருகும்.

    இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள கருடன், பெருமாளுக்கு செய்யும் கருட சேவையால் மேலும் சிறப்பு பெறுகிறார்.

    வைணவத் தலங்களில் விழா நாட்களிலும், பிரம்மோற்சவத்தின் போதும் திருமால் எத்தனையோ விதமான வாகனங்களில் எழுந்தருளினாலும் கருட வாகனத்தில் வரும் போது, பக்தர்களால் அதிகம் ஆராதனை செய்யப்படுகிறார்.

    • மேலும் கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும், நாம் எடுத்த செயல்கள் எல்லாம் வெற்றிபெறும்.
    • கருடனின் பார்வைக்கு, “சூட்சும திருஷ்டி” என்று பெயர்.

    ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தார்.

    எனவே சுவாதி நட்சத்திர நாட்களில் கருடனை வழிபட்டால், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிடைப்பார். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    ஆலயங்களில் முக்கிய திருவிழாக்கள் நடக்கும் போது மேலே கருடன் பறப்பதை பார்த்திருப்பீர்கள்.

    அப்படி கருட தரிசனம் கிடைக்கும் போது கை கூப்பி வணங்க தேவை இல்லை.

    மனதுக்குள் கருடன் அருள் பெறும் மந்திரங்களை சொல்லி வழிபட்டால் போதும்.

    மேலும் கருடனின் பார்வை நம் மீது பட்டாலே போதும், நாம் எடுத்த செயல்கள் எல்லாம் வெற்றிபெறும்.

    கருடனின் பார்வைக்கு, "சூட்சும திருஷ்டி" என்று பெயர்.

    அந்த பார்வை பட்டால் உங்களை எந்த தீய சக்திகளும், திருஷ்டிகளும், தீ வினைகளும் நெருங்காது.

    எனவே கருடனை கண்டால் மனதை ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்யுங்கள்.

    • கருடனின் அம்சமாக அவதரித்தவர் பெரியாழ்வார்.
    • ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வாரின் மகளாக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீ ஆண்டாள்.

    கருடன் இந்திரலோகத்தில் இருந்து அமிர்தத்தை எடுத்து வந்து தன் தாய் வினதையின் அடிமைத் தனத்தை நீக்கினார்.

    அந்த தாயின் அருளால் தான் பெருமாளின் வாகனமாக கருடன் திகழ்கிறார்.

    இவருக்கென்றே "கருட பஞ்சமி" என்ற பண்டிகையும் உள்ளது.

    சகோதரர்களின் நலனுக்காக பெண்களால் இப்பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

    கருடனின் அம்சமாக அவதரித்தவர் பெரியாழ்வார்.

    ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வாரின் மகளாக அவதாரம் எடுத்தவர் ஸ்ரீ ஆண்டாள்.

    பெரியாழ்வார் தன் மகள் ஆண்டாளை ரங்கநாதருக்கு திருமணம் செய்து கொடுத்த போது மாப்பிள்ளை அருகில் நின்று கொண்டு தாரை வார்த்துக் கொடுத்தாராம்.

    இதன் அடிப்படையில் பெரியாழ்வாரின் அம்சமான கருடாழ்வார் பெருமாள் அருகிலேயே இருக்கிறார் என்பார்கள்.

    இதனால் தான் வைணவத் தலங்களில் கருட கொடி அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கருடனை தரிசனம் செய்த பிறகு, பெருமாளையும், தாயாரையும் தரிசிப்பதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.

    • இதனால் பெருமாளுடன் மிக, மிக ஐக்கியமானவராக கருடர் உள்ளார்.
    • இந்த சிறப்பு காரணமாக கருடனை வைணவர்கள் “கருடாழ்வார்” என்று போற்றி புகழ்கின்றனர்.

    நாராயணருக்கு வைகுந்தத்தில் சேவை செய்ய எத்தனையோ பேர் இருந்தாலும் அனந்தன் எனப்படும் ஸ்ரீஆதிசேஷன், பெரிய திருவடி எனப்படும் ஸ்ரீகருடன், சேனாமுதல்வன் எனப்படும் ஸ்ரீவிஸ்வக்சேனர் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள்.

    இவர்களில் ஆதிசேஷன் பெருமாளுக்கு குடையாகவும், சிம்மாசனமாகவும், படுக்கையாகவும் இருக்கிறார். விஸ்வக் சேனர் மகா விஷ்ணுவின் படைகளின் சேனாதிபதியாக விளங்குகிறார்.

    ஆனால் ஸ்ரீகருடனோ பெருமாளுக்கு தோழன், தாசன், ஆசனம், வாகனம், கொடி, மேல்சுட்டு, விசிறி என 7 விதமான தொண்டுகளை செய்பவராக உள்ளார்.

    இதனால் பெருமாளுடன் மிக, மிக ஐக்கியமானவராக கருடர் உள்ளார்.

    இந்த சிறப்பு காரணமாக கருடனை வைணவர்கள் "கருடாழ்வார்" என்று போற்றி புகழ்கின்றனர்.

    கருடனை பெரிய திருவடி, கொற்றப்புள், தெய்வப் புள், வேதஸ் வரூபன், காய்சினப்புள், பட்சிராஜன், புள்ளரையன் வைநதேயன், ஓடும் புள், சுபர்ணன், விஜயன், உவணன், வினைதச் சிறுவன் என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

    • சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.
    • இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.

    ஏழுமலை ஏறித் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார். அதுவே "ராமானுசக் கூடம்" ஆனது.

    இன்றும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக அன்றே "சமபந்தி" சாப்பாட்டை ராமானுசர் தொடங்கி வைத்து விட்டார். ஏழுமலையான் மார்பில் திருமகள் திருமேனியைத் தொங்க விட்டவரும், ராமானுசரே!

    ஏழுமலையானுக்குப் பச்சைக் கற்பூர நாமம் சாத்தவும் ராமானுசரே ஏற்பாடு செய்தார்.

    சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.

    இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.

    வெள்ளி தோறும் திருமஞ்சனக் காப்பு நடத்தவும், அலங்காரம் செய்யும் முறையையும், நித்திய பூசையையும் ராமானுசர் வகுத்துக் கொடுத்தார். மலை அடிவாரத்தில் கீழ்த் திருப்பதி ஊரையும் உருவாக்கினார்.

    இப்படி ஏழுமலையான கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுசர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது.

    ராமானுசர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள்.

    • காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார்.
    • அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது. இன்றும் அங்கு “ராமானுசர் வீதி” இருக்கிறது.

    திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுசர் தான்.

    அவர் காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவக் கோவிலா? வைணவக் கோவிலா? சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.

    ராமானுசர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார்.

    ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார்.

    ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைகளை இங்கும் கொண்டு வந்தார்.

    காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார்.

    அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது. இன்றும் அங்கு "ராமானுசர் வீதி" இருக்கிறது.

    கோவில் நந்தவனம் அமைத்து அழகுபடுத்தினார். அது "ராமானுசர் நந்தவனம்" என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.

    • திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.
    • தாயார் சன்னதி கூடக் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.

    திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.

    தாயார் சன்னதி கூடக் கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.

    திருமலையின் ஆதிமூர்த்தி யான வராகசாமி தெப்பக் குளக்கரையில் தான் இருக்கிறார்.

    ஆழ்வார்களுக்கும் இடம் கிடையாது.

    இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு, ராமானுஜர் மட்டுமே.

    திருவேங்கடத்தான் கோவிலுக்குள் இவருக்கு தனி சன்னதி இருக்கிறது.

    ராமானுஜர் 1017ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.

    1137ம் ஆண்டு வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த இவர் வியக்கும் அளவுக்கு திருப்பதிக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும்.
    • சடாரி என்பது என்ன?

    பெரும்பாலான நேரங்களில் நாம் கோவிலுக்குப் போனாலும் சில விஷயங்களை வெறும் சடங்குகளாகவே செய்வோம், அதன் பொருள் என்ன ஏன் செய்கிறோம். அதன் பின்னால் இருக்கக்கூடிய தாத்பரியம் என்ன என்பதை நாம் எண்ணி பார்த்திருப்போமா..?

    அப்படியான ஒரு விஷயம் தான் பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு அளிக்கப்படும் சடாரி சேவை. பகாவனை கண்குளிர சேவித்து, தீபாரதனை முடித்து துளசி தீர்த்தம் ஆன பிறகு, நம் தலைமீது சடாரி வைக்கப்படுகிறது.

    சடாரி என்பது என்ன? அது ஏன் நம் தலை மீது வைக்கப்படுகிறது? என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.


    ஒருமுறை வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் நேரம், தன்னுடைய சங்கு, சக்கரம் திருமுடி ஆகியவற்றை எடுத்து ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்களின் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன் வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.

    ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும் சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன ஆனால் அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை. சங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து

    கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்?" என்று கேட்டன

    "இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்' என்றன பாதுகைகள்.

    பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும். சக்கரமும்! ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு, பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை.

    உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன், "நாங்கள் அலங்கரிப்பவர்கள்தான் ஆனால், பாதங்களை அல்ல.

    மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள் தான்" என்று பதிலுக்கு பாதுகைகள் வாதிட்டன.

    கிரீடத்துடன், சங்கும், சக்கரமும் கூட்டணி அமைத்துக் கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் பகவானிடம் முறையிட காத்து நின்றன. பகவானும் வந்தார்.


    அவர் பாதத்தை கண்ணீரால் கழுவி பாதுகைகள் முறையிட்டன. 'இங்கே நடந்ததை நான் அறிவேன் என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும்.

    அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.

    அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் போது இந்த திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான்.


    சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும் போது நம்முடைய நான் என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும். வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு சடாரி சாதித்தலின் அடிப்படை பொருள் இதுவே.

    ×