என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • தன் அன்னையின் துயர் தடைத்து, அவரை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து மகிழ்வித்த உத்தம புத்திரன் அல்லவா அவர்.
    • திருமண தோஷம் உடைய பெண்கள் கீழ்க்கண்ட முறைப்படி ஸ்ரீகருடனை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    இந்த காலத்தில் எல்லா அம்சங்களும் நிறைந்த பெண்களுக்கு திருமணம் நடப்பது என்பதே மிகவும் அரிதான செயலாக இருக்கின்றது.

    அவர்களுக்கு தோஷமான ஜாதக அமைப்பாக இருந்தால் இன்னும் சிக்கல்தான்.

    அப்படிப்பட்ட பெண்களுக்கு கண்கண்ட தெய்வம்தான் ஸ்ரீகருட பகவான்.

    தன் அன்னையின் துயர் தடைத்து, அவரை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து மகிழ்வித்த உத்தம புத்திரன் அல்லவா அவர்.

    அவரை யார்-யார் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

    திருமண தோஷம் உடைய பெண்கள் கீழ்க்கண்ட முறைப்படி ஸ்ரீகருடனை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    1. பெண்கள் பிறந்த லக்னத்திற்கு 7-ம் வீட்டு அதிபதியின் வாரத்தில் ஸ்ரீகருடனை வழிபட்டு வர வேண்டும்.

    2. அல்லது 7-ம் வீட்டதிபதி அமர்ந்த வீட்டின் அதிபதியாக யார் இருக்கிறாரோ, அவருக்குரிய வாரத்தில் வழிபடலாம்.

    3. அல்லது ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ள வீட்டதிபதி எங்கு அமர்ந்துள்ளாரோ அந்த வீட்டின் வாரத்திலும் வழிபடலாம்.

    4. அல்லது ஒவ்வொருவரும் அவரவர் ராசிக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள கிழமைகளில் ஸ்ரீகருட பகவானுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் திருமணத் தடை நீங்கும்.

    மேஷம் -வெள்ளிக்கிழமை

    ரிஷபம் -செவ்வாய்க்கிழமை

    மிதுனம்-வியாழக்கிழமை

    கடகம் -சனிக்கிழமை

    சிம்மம்-சனிக்கிழமை

    கன்னி-வியாழக்கிழமை

    துலாம் -செவ்வாய்க்கிழமை

    விருச்சிகம்-வெள்ளிக்கிழமை

    தனுசு -புதன்கிழமை

    மகரம்-திங்கட்கிழமை

    கும்பம்-ஞாயிற்றுக்கிழமை

    மீனம்-புதன்கிழமை

    பெண்களின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

    அதனையும் இந்த கருட வழிபாட்டால் நீக்க முடியும்.

    ஸ்ரீகருடனை ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரத்திலும், சிறப்பாக ஆவணி சுவாதிலும் வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் நிச்சயம் நீங்கும்.

    ஒவ்வொரு உயிரும் இம்மண்ணில் பிறக்கும் போது, வான மண்டலத்தில் அப்போது காணப்படும் கிரகங்களின் அமைவைப் பொருத்தும், கிரகங்களின் அதிர்வலைகள் ஒன்றை ஒன்று குறுக்கிடுவதால் உண்டாகும் எதிர்மறை அதிர்வலைகளைப் பொருத்தும் அக்கிரகங்களினால் பாதிப்பை அடைகின்றன.

    அதனால் அவை அவ்வுயிருக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமைகளைச் செய்து விடுகிறது. இவற்றையே ஜோதிடத்தில் கிரக தோஷங்கள் என்கிறோம்.

    அதுவும் நிழல் கிரகங்களான ராகு, கேது ஆகிய இருவருக்கும் இடையில் மற்ற கிரகங்கள் சிறைப்பட்டிருக்கும் அமைப்பை கால சர்ப்ப தோஷம் என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர்.

    இவ்வாறு கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரீ கருட பகவானை வழிபடுவது ஒன்றே சிறந்த வழி என்று ஆன்றோர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

    ஸ்ரீகருடனை ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரத்திலும், சிறப்பாக ஆவணி சுவாதிலும் வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் நிச்சயம் நீங்கும்.

    • கல்யாணி - மான் போல் சுழலும் பார்வை.
    • விஜயா - கணவன்-மனைவியரிடையே நேசத்தை வளர்க்கக் கூடியது.

    சில சாஸ்திரங்களில் ஸ்ரீகருடனது பர்வைகள் எட்டு வகைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:

    1. விசாலா - மந்தஹாசமான பார்வை.

    2. கல்யாணி - மான் போல் சுழலும் பார்வை.

    3. தாரா - குறுக்குப் பார்வை.

    4. மதுரா - அன்பையும், அருளையும் பொழியும்.

    5. போகவதி - தூக்கக் கலக்கமான பார்வை.

    6.அவந்தீ - பக்கமாகப் பார்ப்பது.

    7. விஜயா - கணவன்-மனைவியரிடையே நேசத்தை வளர்க்கக் கூடியது.

    8. அயோத்யா - ஆசைகளைத் தோற்றுவிப்பது.

    ஐந்து வகையான பார்வையாக இருந்தாலும், எட்டு வகையான பார்வையாக இருந்தாலும் மொத்தத்தில் அவரது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும் என்பது உறுதி.

    • ஒவ்வொரு இந்துவின் திருமணச் சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு.
    • இந்த கருடத்வனியானது வேதத்திற்கு ஒப்பாகும் என்று ஏற்கனவே அறிந்துள்ளோம்.

    ஒவ்வொரு இந்துவின் திருமணச் சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு.

    திருமாங்கல்ய தாரணம் என்னும் தாலி அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது, நாதஸ்வரக் கலைஞர்கள் கருடத்வனி என்னும் ராகத்திலேயே இசைக்கின்றனர்.

    இந்த கருடத்வனியானது வேதத்திற்கு ஒப்பாகும் என்று ஏற்கனவே அறிந்துள்ளோம்.

    வேத மந்திரங்களைக் கூறி நடைபெறும் திருமணத்தில், வேத மந்திரங்களை ஒலிக்கும் போது ஏதாவது தோஷம் ஏற்பட்டாலும் கூட, இந்த கருடத்வனி அதனை நீக்கி விடுகிறது.

    மேலும் திருமணத்தின் முக்கிய அங்கமான திருமாங்கல்யம் என்னும் தாலியை செய்யக் கொடுக்கும்போது கருடனின் நட்சத்திரமான சுவாதியில் கொடுப்பது மிகவும் விசேஷமாகும்.

    அல்லது திருமாங்கல்யத்தை வாங்கும்போதாவது சுவாதி நட்சத்திரத்தில் வாங்குவது நல்லது என்பது ஆன்றோர் வாக்கு.

    • கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.
    • அந்த கொடியில் ஸ்ரீகருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும்.

    திருக்குடமுழுக்கில் கருடன்

    நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.

    அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர்.

    கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.

    இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன்.

    வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும்.

    ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குடமுழுக்கை நடத்தி மகிழ்கின்றனர்.

    கோவில் கொடியேற்றத்தில் கருடன்

    நம் நாட்டில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது, அக்கோவிலின் கொடி மரத்தில் வேத மந்திரங்களோடு கொடியை ஏற்றுவது வழக்கம்.

    அந்த கொடியில் ஸ்ரீகருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும்.

    அந்தக் கொடியையே மிகவும் பவித்ரமாக உயரே ஏற்றி வழிபடுகிறோம்.

    இதற்கும் காரணம், கருடன் வேத வடிவானவன் என்பதால், இங்கு வேதத்திற்கே முதலிடம் கொடுத்து உயரே வைத்துள்ளனர்.

    • மறுநாள் காலையில் அரண்மனை உப்பரிக்கையில் அரசனும், ஸ்ரீகுமர குருபரரும் நின்று கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
    • அவர் வாக்கு கொடுத்தபடி அந்நிலங்களை ஸ்ரீகுமர குருபரருக்கே தானம் அளிப்பதாக சாசனம் எழுதிக் கொடுத்தார்.

    ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பிறவியிலேயே ஊமையாக இருந்து, பிறகு திருச்செந்தூர் முருகன் அருளினால் பேச்சாற்றல் மட்டுமின்றி, மறை ஞானமும், வாக்கு வண்மையும் அருளப் பெற்றார்.

    அப்போது ஒருமுறை, காசி மாநகரில் ஸ்ரீகுமரக் கடவுளுக்கு ஒரு மடம் அமைப்பதற்காக, அப்பகுதியை ஆண்டு வந்த முஸ்லிம் அரசனைப் பார்க்க அவனது அரசவைக்குச் செல்ல விரும்பினார் ஸ்ரீ குமரகுருபரர்.

    அப்பொழுது அவருக்கு வாகனமாக ஒரு சிங்கமே வந்தது.

    அதில் ஏறியபடி கம்பீரமாக அரண்மனையை அடைந்தார் சுவாமிகள்.

    அரசனோடு சேர்ந்து அவையே அச்சம் அடைந்தது.

    இருப்பினும் ஒரு இந்து துறவிதானே என அலட்சியத்துடன் அவரிடம் உருது மொழியில் உரையாடினார் அரசர்.

    கலைவாணியின் அருளால் ஸ்ரீகுமர குருபரரும் அம்மொழியிலேயே பதில் அளித்தார்.

    அதைக் கண்டு மேலும் அதிர்ந்தார் அரசர்.

    இனி அவரது கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டியதுதான் என்னும் நிலையில், அவ்வரசர் ஒரு வித்தியாசமான நிபந்தனையுடன் மடம் அமைக்க நிலம் தருவதாக ஒப்புக் கொண்டார்.

    அது, காசியில் நாளைக் காலையில் கருடன் எவ்வளவு தூரம் வானில் வட்டம் இடுகிறதோ அந்த பகுதிகள் முழுவதையும் தானம் அளிப்பதாக அரசர் அறிவித்தார்.

    காசியில் கருடன் பறக்காது என்னும் இந்துக்களின் நம்பிக்கையையும், அவர் அப்படிப் பறந்து ஒரு போதும் காணாததாலும், அப்படிக் கூறி சாமார்த்தியமாக தானம் தருவதில் இருந்து தப்பிக்கலாம் என்று எண்ணினார்.

    மறுநாள் காலையில் அரண்மனை உப்பரிக்கையில் அரசனும், ஸ்ரீகுமர குருபரரும் நின்று கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

    திடீரென்று ஒரு கழுகு தோன்றி, அரசர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காசியின் பெரும் பகுதி இடங்களை சுற்றி வளைக்கும் அளவிற்கு வட்டமிட்டு மறைந்தது.

    அரசருக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

    அவர் வாக்கு கொடுத்தபடி அந்நிலங்களை ஸ்ரீகுமர குருபரருக்கே தானம் அளிப்பதாக சாசனம் எழுதிக் கொடுத்தார்.

    அந்த மடம் ஸ்ரீகௌமார மடம் என்னும் பெயரில் காசியில் இன்றும் உள்ளது.

    இதனை இந்துக்களுக்கு வழங்கிய பெருமை ஸ்ரீகருட பகவானையே சாரும்.

    கருட புராணம் என்பது நமக்காக ஸ்ரீமந் நாராயணனிடம் ஸ்ரீகருட பகவானே கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை உள்ளடக்கியதாகும்.

    வேத வியாச மகிரிஷி, உலக மக்களின் நன்மைக்காக, வேதங்கள் கூறும் தர்மங்களை புராண வடிவங்களாக்கி, அவற்றை பதினெட்டு பெயர்களில் படைத்து அருளி உள்ளார்.

    அவற்றுள் பத்ம புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரதீய புராணம், வராக புராணம், கருட புராணம் ஆகிய ஆறும் சத்துவ குணம் பொருந்தியவை என்றும் ஸ்ரீமகாவிஷ்ணுவைப் பற்றியவை என்றும் வழங்கி வருகின்றனர்.

    அவற்றுள்ளும் கருட புராணம் என்பது நமக்காக ஸ்ரீமந் நாராயணனிடம் ஸ்ரீகருட பகவானே கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை உள்ளடக்கியதாகும்.

    இந்த கருட புராணத்தில், கருட பகவான், "இவ்வுலகில் மனிதர்கள் ஏன் பிறக்கின்றனர்? அவர்கள் இறந்த பின் சிலர் நரகத்திற்கும் சிலர் சொர்க்கத்திற்கும் செல்வது எதனால்?

    சிலர் இரண்டிற்கும் செல்லாமல் பிரேத ஜென்மமாக ஆவியுருவில் அலைவது எதனால்? இந்த ஜென்மம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

    முக்தியை அடைய என்ன செய்ய வேண்டும், மரண காலத்தில் முன் செய்த பாவங்களைப் போக்கிக் கொண்டு முக்தி அடைய வழி ஏதாவது உண்டா?

    அத்தருவாயில் யாரை நினைக்க வேண்டும்? என்று ஸ்ரீமந் நாராயணனிடம் உலக மக்களுக்காகக் கேட்டார்.

    • மாசி மாத பிரதமை உத்தமமானது.
    • அமாவாசை, பவுர்ணமி, அடுத்து வரும் நாள் பிரதமை.

    அமாவாசை, பவுர்ணமி, அடுத்த நாள் பிரதமை. சித்திரை கார்த்திகை மாத விரதங்கள் விசேஷமானவை. இந்த விரதத்தில் நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.

    வலக்கையில் ஜபமாலை, கரண்டி, இடக்கையில் கமண்டலம், உத்தரிணி கொண்டு ஜபம் இருக்க வேண்டும். அன்றைய தினம் விரதமிருந்து பகவானுக்குப் பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும்.

    நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் இரவு பொழுது மட்டும் உணவு அருந்தி விரதமிருக்கலாம். அல்லது நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.

    இந்த விரதம் இருப்பதன் மூலம் செழிப்பான வாழ்வு, மரணத்துக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும். மாசி மாத பிரதமை உத்தமமானது. அன்றைய தினம் விரதமிருந்து அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்க வேண்டும்.

    பிரதமை திதியை பாட்டிமை என்றும் சொல்வார்கள். பவுர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள்.

    பவுர்ணமி முழு மதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன்றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தாலும், பவுர்ணமியாக இருந்தாலும் அடுத்த நாள் பிரதமை திதி.

    பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை ஒவ்வொரு கிராமத்திலும் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக அழைப்பார்கள்.

    கதிர்வீச்சுக் குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார்கள். இருந்தாலும் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமானது. அன்றைய தினம் எதையும் செய்யக் கூடாது என்பார்கள்.

    போர் தொடுத்தல், ஆநிரை கவர்தல் போன்றவை செய்யலாம் என்று கூறுவார்கள். போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம்.

    சூரியனும், சந்திரனும் இணைவது அமாவாசை அன்று. இரண்டுமே இயல்பு நிலை மாறுபட்டவை. அவைகள் ஒன்றாக சேரும்போது சீக்கிரமாகவே ஆவி பிரியும்.

    அதனால்தான் கிராமங்களில், அமாவாசை, அதற்கு முதல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    அதற்கு காரணம், ஆத்ம காரகன் சூரியனுடன், மனோகாரகன், உடலுக்கான சந்திரன் நெருங்கும்போது உடலின் வலிமை, உணவு உட்கொள்ளும் திறன் குறையும். ஏதோ ஒரு அசவுகரியம் உண்டாகும். திடீர் மாரடைப்பு எல்லாம் உண்டாகும்.

    அதனால்தான் உடல்நலம் குன்றி இருப்பவர்கள் பற்றி பேசும்போது, அமாவாசையை தாண்டுமா என்று சொல்கிறார்கள்.

    பிரதமை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

    அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் முதலாவது திதி பிரதமை ஆகும். பிரதம எனும் வடமொழிச் சொல் முதலாவது என பொருள்படும்.

    15 நாட்களைக் கொண்ட தொகுதியில் முதல் நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள காலம் சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் முதல் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள காலம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் முதல் நாளுமாக இரண்டு முறை பிரதமைத் திதி வரும்.

    அமாவாசையை அடுத்துவரும் பிரதமையைச் சுக்கில பட்சப் பிரதமை என்றும், பூரணையை அடுத்த பிரதமையைக் கிருஷ்ண பட்சப் பிரதமை என்றும் அழைக்கின்றனர்.

    பிரதமைத் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:

    சந்திர ஆண்டுப் பிறப்பு (சந்திரமான யுகாதி) - சித்திரை மாதச் சுக்கில பட்சப் பிரதமை.

    சக்திக்குரிய பூஜையாகிய நவராத்திரி பூஜைத் தொடக்கம் - ஐப்பசி மாத சுக்கில பட்சப் பிரதமைத் திதி.

    விநாயகருக்கான கார்த்திகைச் சஷ்டி விரதத் தொடக்கம் - கார்த்திகை மாதத் தேய்பிறைப் பிரதமைத் திதி.

    • தசமி திதி 'தசஹர தசமி' என்றும் ‘பாவ ஹர தசமி' என்றும் கூறப்படுகிறது.
    • தசமி அன்று சேதுவில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது விதியாகும்.

    வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் தசமி திதி 'தசஹர தசமி' என்றும் 'பாவ ஹர தசமி' என்றும் கூறப்படுகிறது.

    இந்நாளில்தான் 'இலங்கை வேந்தன் ராவணனைக் கொன்ற பாவம் நீங்க ஸ்ரீராமபிரான் மணலில் லிங்கப் பிரதிஷ்டை செய்து, சேதுக் கரையில் வழிபட்டார் என்று ஸ்ரீஸ்காந்தம் என்னும் நூல் கூறுகிறது.

    மேலும், வைகாசி சுக்ல பட்ச தசமி திதியானது பத்து வித பாவங்களை போக்கும் என்று பழம் நூல்கள் கூறுகின்றன.

    அந்நாளில் சேது என்று போற்றப்படும் ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தத்திலும் கோவிலுக்குள் இருக்கும் புனிதநீர் நிலைகளிலுமே நீராடினால் பாவங்கள் நீங்கி அளவற்ற புனிதம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.


    வாக்கினால் செய்வது நான்கு. சரீரத்தால் செய்வது மூன்று, மனத்தால் இழைப்பது மூன்று. ஆக, இந்த பத்து பாவங்களும் தெரிந்தோ, தெரியாமலோ செய்தால் இவைகளைப் போக்கிக் கொள்ள இந்த பாவஹர தசமி உதவுகிறது.

    கடுஞ்சொல், உண்மையில்லாத பேச்சு, அவதூறாகப் பேசுவது, அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாக பேசுவது.

    நமக்குக் கொடுக்கப்படாத பொருட்களை நாம் எடுத்துக் கொள்வது, அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது, பிறர் மனைவிக்கு ஆசைப்படுவது.

    மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது, மனதில் கெட்ட எண்ணங்களை நினைத்தல், பிறபொருட்களிடமும், மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்ளுதல்.

    இந்த பத்து பாவங்களும் குறிப்பிட்ட புண்ணிய காலமான வைகாசி அமாவாசைக்குப்பின் வரும் தசமி அன்று சேதுவில் நீராடினால் நீங்கும் என்பது விதியாகும்.

    ராமேஸ்வரம் செல்வது என்பது எல்லோராலும் முடியாத காரியம். எனவே அந்தப் புண்ணிய காலத்தில் நீங்கள் வசிக்கும் ஊரின் அருகாமையில் உள்ள புனித நதியிலோ, ஆற்றிலோ குளத்திலோ நீராடலாம்.

    நதியிலும், ஆற்றிலும் நீர் இல்லாது போனாலும் சிவபெருமானையும் திருமாலையும் மனதில் நினைத்து 'இனிமேல் பாவங்கள் செய்ய மாட்டேன்' என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு, வடக்கு நோக்கி வீட்டில் குளித்தாலும் பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    இந்த புண்ணிய நாளில் தான் கங்கா தேவி தேவலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள் என்று புராணம் கூறுகிறது. அன்று கங்கா தேவியை நினைத்து நீராடினாலும் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.


    'வைகாசி அமாவாசைக்குப் பின், பிரதமையிலிருந்து தசமி வரை கங்கை நதியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்' என்று கந்த புராணம் கூறுகிறது.

    இந்நாளில் முன்னோர்களுக்குப் பிதுர் பூஜை செய்வது போற்றப்படுகிறது. ஏழைகளுக்கு வஸ்திர தானம், அன்னதானம் செய்தால் கூடுதல் புனிதம் கிட்டுவதுடன் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.

    • அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள்.
    • செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானது.

    சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் 'சங்கடஹர சதுர்த்தி' விரதம் தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது.

    நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.


    அங்காரக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது என்பதை பார்க்கவ புராணம் நமக்கு விளக்குகிறது.

    பரத்வாஜ முனிவரால் கைவிடப்பட்ட குழந்தை பூமியில் கிடந்தது. அதை அதிசயத்துடன் பார்த்த பூமிதேவி வாரி அணைத்துக்கொண்டாள். தனக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்று மகிழ்ந்தாள்.

    அந்த குழந்தையின் உடல் மாலை நேரத்தில் செவ்வானம் போல் சிவந்து ஒளியுடன் விளங்கியதால் அங்காரகன் என்று பெயரிட்டு பிரியமுடன் வளர்த்து வந்தாள்.

    குழந்தை அங்காரகன் வளர்ந்து சிறுவனானான். தனது தந்தையைப் பார்க்க விரும்பினான். பூமிதேவி பரத்வாஜரிடம் கொண்டு போய் ஒப்படைத்தாள். அழகு பொருந்திய தன் மைந்தனை அன்போடு அணைத்துக் கொண்டார் மகரிஷி.

    உரிய காலத்தில் அங்காரகனுக்கு உபநயனம் செய்வித்து, வேதத்தை அவனுக்கு போதித்தார். மேலும் தனது இஷ்ட தெய்வமான விநாயகப் பெருமானின் மூலமந்திரத்தையும் உபதேசம் செய்தார்.

    அங்காரகன் தந்தை காட்டிய வழியில் தனித்திருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டான். விநாயகப்பெருமானின் பாத கமலங்களையே சரணம் என்று தியானித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தான்.

    அங்காரகனின் தவம் பலித்தது. அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சியளித்து அருள்புரிந்தார். வானில் சந்திரன் உதயமாகும் நேரம் அது செவ்வாய்க்கிழமை, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாள்.


    அங்காரகன் அருள் பெற்ற அந்த புனித நாளில் விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். சங்கடங்கள் எல்லாம் பறந்தோடும் பக்தர்களது துயர் நீங்கும் வாழ்க்கை வளம் பெருகும்.

    எனவே அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது.

    அங்காரகனால் தொடங்கப்பட்ட இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து வருபவர்கள் அடையும் நற்பலன்கள் ஏராளம்.

    கடன், வியாதி, பகை அகலும், செல்வச் செழிப்பு, வித்தை, செல்வாக்கு ஓங்கும். மகப்பேறு கிடைக்கும்.

    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
    • சக்தி நாயனார் குரு பூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-7 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி காலை 6.59 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: புனர்பூசம் நண்பகல் 12.10 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் தவழும் கண்ணன் திருக்கோலம். இரவு காமதேனு வாகனத்தில் புறப்பாடு. பத்தராசலம் ஸ்ரீராம பிரான் புறப்பாடு. சக்தி நாயனார் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தம்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-வெற்றி

    கடகம்-பொறுமை

    சிம்மம்-உதவி

    கன்னி-தனம்

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-களிப்பு

    தனுசு- செலவு

    மகரம்-உறுதி

    கும்பம்-நேர்மை

    மீனம்-துணிவு 

    • கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.
    • கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.

    1. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம். "காருட தர்சனம் புண்யம், ததோபித்வனிருச்யமாதோ" என்று சமஸ்கிருதத்தில் இதைச் சொல்வார்கள்.

    2. கருடனின் குரல் சாமவேத த்வனி ஆகும். பறவை இனங்களின் ராஜாவாக இவர் கருதப்படுவதால் இவருக்கு பட்சி ராஜன் என்றும் பெயர்.

    3. கருட் என்றால் சிறகு எனப்பொருள். இதிலிருந்து கருடன் என்ற பதம் வந்துள்ளது.

    4. தட்சணின் மகளான வினதா என்பவருக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவரே கருடன். அதனாலேயே அவருக்கு விநதேயன் என்ற பெயரும் உண்டு.

    5. ஸ்ரீவைகுண்டத்தில் திருமாலுக்கு எப்பொழுதும் தொண்டு செய்து கொண்டிருப்பவர்கள் நித்யசூரிகள் எனப்படுவர். அதில் முக்கியமானவர் கருடன். இவர் திருமாலுக்கு வாகனமாக இருந்து தொண்டு செய்து வருகிறார்.

    6. கருடன் பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயர் சிறிய திருவடி எனவும் சிறப்பித்துக் கூறப்படுகிறார்கள்.

    7. வைணவ ஆலயங்களில் நான்கு மதில் சுவர்களின் மூலையிலும் கருடனின் உருவம் இருக்கும்.

    8. கருடனை உபாசித்து வைணவ சமய ஆச்சார்யரான சுவாமி தேசிகன் கருடனால் ஹயக்ரீவர் மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிறந்த பக்திமானாக விளங்கினார். இவர் கருடன் மீது கருடதண்டகம், கருட பஞ்சாசத் என்ற சுலோகங்களை இயற்றியுள்ளார்.

    9. கருடன் மட்டுமே இறக்கையை அசைக்காமல் பறக்கும். கருடனின் நிறம் பழுப்பு.

    10. கழுத்து வெள்ளை. பஞ்சமுக ஆஞ்சநேயரின் பின்புறம் (மேற்கு) கருடமுகமாக அமைந்துள்ளது.

    11. பவுத்தர்கள் கருடனை உராசனா, பன்னகாசனா, நாகத்தகா, ராஜநிர்ஹனா என்ற பெயர்களிலும், ஜைனர்கள் சுபர்ணா என்ற பெயரிலும் வழிபடுகின்றனர்.

    12. பெண் கருட பறவையை எளிதாக வசப்படுத்த முடியாது. ஆண் பறவை வானத்தில் வட்டமிட்டு தன்னுடைய பலத்தை நிரூபித்தால் மட்டுமே பெண் பறவை வசப்படும்.

    13. கருடன் கற்பு நெறியில் நிற்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இணை சேர்ந்து முட்டையிடும்.

    14. அதர்வண வேதத்தில் முப்பத்திரண்டு வித்தைகளில் கருடனுக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. துறவிகளின் முக்கிய தேவதை கருடனே.

    15. மணவாள மாமுனிகள் வேங்கடவனைத் தரிசிப்பதற்கு முன்பாக முதலில் ராமானுஜரை சேவித்து பிறகு கருட பகவானை வணங்கி விட்டு, பின்னர் ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம்.

    16. விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷயங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் தானே கருடன் என்ற கருடோஹம் பாவனையில் பலவகை கருட மந்திரங்களையும் லட்சக்கணக்கில் ஜபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

    17. கருட பகவான் வைகுண்டத்திலிருந்து திருப்பதிக்கு சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது.

    18. தஞ்சை நகரின் அமைப்பு கருடன் சிறகை விரித்து பறப்பது போன்ற வடிவில் உள்ளது.

    19. கருடனின் பார்வை மிகக் கூர்மையானது என்று வேதம் கூறுகிறது. கருடனுக்குக் கோபம் வந்தால் சிறகுகளை உதறிப் பறக்கும்.

    20. வீட்டிற்குள் பாம்பு தென்பட்டால் கருடனை நினைத்து அபஸர்ப்ப ஸர்ப பத்ரம்தே தூரம் கச்சமஹாயசா!

    ஜனமே ஜயஸ்ய யக்ஞாந்தேஹ்யாஸ்தீக வசனம் ஸ்மரண்!! என்று கூறி கையைத் தட்டினால் அங்கிருந்து பாம்பு சென்று விடும்.

    ×