என் மலர்
ஆன்மிகம்
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டது
ஈராறிதழ் இட்டு, ரீங்காரம் உள்ளிட்டது நடுவே
ஆராதனை செய்து அர்ச்சி பூஜித்து அடிபணிந்தால்
வாராது இராள் அல்லவே வாலை ஞான வாராகியுமே
பொருள்: வாராகி யந்திர வடிவம் இது. முக்கோணம், அறுகோணம், வட்டம், சுற்றிலும் தாமரைத்தளம், மத்தியில் பீஜம், இதை முறையாக எழுதி வாராகியை வழிபட வாராகி 'வாலை' திரிபுர சுந்தரியாக எழுந்து நமக்கு 'அட்டமா சித்திகளை' வழங்குவாள் என்று பொருள்.
பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வழிபாட்டிற்காக அன்னையை நம் முன் அமரவைக்க இப்பாடலை பாட வேண்டும்.
- இந்த 32 பாடல்களும் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு மிகப்பெரிய சிறப்புகளையும், நல்ல வாழ்வையும் அளிக்கவல்லது.
- வாராகி அருள்பெற இந்த வாராகி மாலை ஒன்றே போதுமானது.
எந்த ஒரு வழிபாடு செய்யும்போதும் அந்த தெய்வங்களுக்கு உரிய மிகவும் பிடித்த மந்திரப்பாடல்களை நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது.
ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு பாடல் பாடியே அவர்களை மகிழ்வித்தே நம் முன்னோர்கள் சித்தர்கள் கண்கொள்ளா காட்சி கண்டு முக்தி பெற்றனர்.
அதேபோலதான், நீங்கள் அன்னையின் வரலாறுகளை அவள் மகிமைகளை தெரிந்து கொண்ட பிறகு அவள் அருளை பெற உங்கள் மனம் துடிக்கின்றது என நான் அறிவேன்.
வாராகி அன்னைக்கு லட்சோப அதர்வன சித்திமந்திரம் இருந்தாலும், அவள் கூப்பிட்ட உடன் அகம் மகிழ்ந்து ஓடிவந்து நிற்பது 'வாராகிமாலை' எனும் அற்புத பாமாலைதான்.
இது பகை அல்லல் அகற்றும் பாமாலை, இந்த வாராகி மாலையை மாலை நேரத்தில் யார் பாடி அன்னையை வழிபடுகிறார்களோ அவர் நிச்சயம் வெற்றியாளீ ஞானியே, இந்த வாராகி மாலையில் 32 பாடல்கள் அடங்கி உள்ளது.
இந்த 32 பாடல்களும் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு மிகப்பெரிய சிறப்புகளையும், நல்ல வாழ்வையும் அளிக்கவல்லது.
வாராகி அருள்பெற இந்த வாராகி மாலை ஒன்றே போதுமானது.
அனைவரும் இதனை படித்து சகலபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும். அதுவே அன்னை வாராகியின் இலக்கு.
வாராகி மாலை-அன்னை வடிவம்
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே...
பொருள்: நவரத்தினம் அனைத்தும் அன்னைக்கு அவள் உடலுக்கு ஒப்பிட்டு கூறப்படுகிறது.
செவிகள் - குழை, திருவடிகள் - புஷ்பராகம், இரண்டு கண்கள் - நீலகல், கரங்கள் - கோமேதகம், நகம் - வைரம், சிரிப்பு - முத்து பவளம் போன்ற இதழ்.
திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போல் ஒளிரும் மேனியுடையதாகும்.
பயன்படுத்தும் முறை :
அன்னையை வழிபடும்போது அவளை நம்மோடு இணைய விண்ணப்பம் செய்யும் முதல் பாடல்.
- நாமெல்லாம் சாதாரண ஜீவ ஆத்மாக்கள்.
- பரமாத்மாவான ஈசனை அதாவது அக்னி வடிவில் இருக்கும் அண்ணாமலையானிடம் சென்றடைய வேண்டுமானால் அம்பாள் நமக்கு உதவ வேண்டும்.
திருவண்ணாமலையில் தற்போதுள்ள பவழக்குன்று மலையில்தான் கவுதம மகரிஷியின் குடில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பவழக்குன்று மலையில் உள்ள கோவில் கருவறையில் அர்த்தநாரீஸ்வர் வடிவம் உள்ளது.
இதன் மூலம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றிய புனித தலமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.
இதை பக்தர்களுக்கு உணர்த்தவே ஆடி மாதம் ஆடிப்பூரம் தினத்தன்று தீமிதித்தல் விழா மிக சிறப்பாக ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருவதாக திருவண்ணாமலை ஆலய சிவாச்சார்யர்களில் ஒருவரான ரமேஷ் சிவாச்சார்யார் தெரிவித்தார்.
ஆலயங்களில் தீ மிதித்தலுக்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு காரணத்தை சொல்கிறார்கள்.
ஆனால் திருவண்ணாமலையில் தீ மிதி விழா நடத்துவதில் தனி தத்துவம் அடங்கி உள்ளது.
சிவபெருமானுக்கு மொத்தம் 8 வடிவங்கள் உண்டு. அதில் ஒரு வடிவம் அக்னி வடிவம்.
இந்த அக்னி வடிவத்தில்தான் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
தீயில் இருந்து தோன்றிய அண்ணாமலையாரை நாம் சென்றடைய வேண்டுமானால் பராசக்தியான உண்ணாமலை அம்மனின் அருள் வேண்டும்.
பராசக்தி கருணை பார்வை பார்த்தால்தான் நாம் ஈசனின் பாத கமலங்களில் சரண் அடைய முடியும்.
நாமெல்லாம் சாதாரண ஜீவ ஆத்மாக்கள்.
பரமாத்மாவான ஈசனை அதாவது அக்னி வடிவில் இருக்கும் அண்ணாமலையானிடம் சென்றடைய வேண்டுமானால் அம்பாள் நமக்கு உதவ வேண்டும்.
அந்த உதவியைதான் தீ மிதித்தல் தினத்தன்று உண்ணாமலை அம்மன் நமக்கு செய்கிறாள்.
அதாவது தீ குண்டத்தில் அன்னை பராசக்தி எழுந்து அருள்பாலிக்கிறார்.
அந்த தீயின் மீது பக்தர்கள் நடந்து செல்லும்போது முக்திக்கான பாதை கிடைக்கிறது.
இதனால்தான் திருவண்ணாமலை சுற்றுப்பகுதி வட்டாரத்தில் இந்த தீ மிதித்தலை, "தீ-விரத-சத்திநிபாதம்" என்று சொல்வார்கள்.
உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு நடைபெறும் தீமிதித்தலில் திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 7, 8 கிராம மக்கள் பங்கேற்று தீ மிதிப்பார்கள்.
அவர்கள் அனைவரும் குயவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
வேறு யாரும் அன்று தீ மிதிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
திருவண்ணாமலை தலத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த தீமிதித்தல் விழா நடந்து வருகிறது. சுமார் 300 பேர் தீ மிதிப்பார்கள்.
உண்ணாமலை அம்மனை வேண்டி விரதம் இருந்து அவர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.
அன்றைய தினம் அவர்களுக்கு சந்தனம் பூசி பரிவட்டம் கட்டி சிறப்பு செய்யப்படும்.
திருவண்ணாமலை ஆலயத்தில் இது பாரம்பரிய சிறப்பு போல நடந்து வருகிறது.
அருணகிரி நாதருக்கும் அப்படியொரு பாரம்பரிய உற்சவத்தை நடத்தி வருகிறார்கள்.
- இதன் மூலம் சிவசக்தியாக அவர்கள் காட்சி அளித்தனர்.
- அதாவது சிவனும், பார்வதியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோலமாக தோன்றினார்கள்.
அதன் பிறகு ஒருநாள் கண்களில் நீர் பெருக திருவண்ணாமலை மலையை பார்வதி தேவி வலம் வந்தார்.
(இந்த நிகழ்வில் இருந்துதான் திருவண்ணாமலை கிரிவலம் தோன்றியது) பார்வதியை கவுதம முனிவர்களும் அவரது சீடர்களும் வாத்தியங்கள் முழங்க பின் தொடர்ந்தனர்.
பார்வதி தேவி அக்னி திசையில் வந்து மலையை பார்த்து வணங்கினார்.
பிறகு மேற்கு திசை நோக்கி நடந்தார்.
அப்போது சிவபெருமான் ரிஷப வாகனத்தில் தோன்றி பார்வதிதேவிக்கு காட்சி கொடுத்தார்.
பிறகு பார்வதிதேவி வாயு திசை, ஈசான திசை கடந்து கிழக்கு திசைக்கு வந்தார்.
அங்கும் சிவபெருமான் காட்சி கொடுத்தார்.
அதோடு அம்பாளை தனது இடப்பாகத்தில் ஈசன் சேர்த்துக் கொண்டார்.
இதன் மூலம் சிவசக்தியாக அவர்கள் காட்சி அளித்தனர்.
அதாவது சிவனும், பார்வதியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோலமாக தோன்றினார்கள்.
இரண்டு பேரும் ஓருடலாக மாறினார்கள்.
ஒரு பக்கம் சிவனின் சிவந்த சடை, மறுபக்கம் பார்வதியின் கொன்றை மாலை.
ஒரு பக்கம் புஷ்ப மாலை, மறுபக்கம் சூலம். ஒரு புறம் பச்சை நிறம், மறுபக்கம் பவள நிறம்.
ஒரு பக்கம் சிவனின் அகன்ற மார்பு, மறுபக்கம் பார்வதியின் கச்சை அணிந்த கோலம், ஒரு பக்கம் புலித்தோல் ஆடை, மறுபக்கம் சேலை என்ற அழகான வடிவுடன் அர்த்தநாரீஸ்வரராக இருந்தனர்.
சிவன் பெரிதா, சக்தி பெரிதா என்ற சர்ச்சை தேவை இல்லை.
ஒன்று இல்லாமல், இன்னொன்று இல்லை என்பதை தெரியப்படுத்த இந்த நிகழ்வு நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அந்த ஆறு இன்றும் சேயாறு என்று அழைக்கப்படுகிறது.
- இந்த இடங்களை கடந்துதான் பார்வதிதேவி திருவண்ணாமலைக்கு சென்று அடைந்தார்
சிவபெருமானிடம் வரத்தை கேட்டு அவர் கூறியபடி காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு பார்வதி தேவி புறப்பட்டார்.
அவருடன் முருகரும் சென்றார். வழியில் பார்வதி தேவி ஒரு இடத்தில் தங்கினார்.
அந்த இடத்தில் வாழை இலையால் பந்தல் அமைத்து கொடுத்து பார்வதி தேவிக்கு முருகபெருமான் உதவினார்.
இன்றும் அந்த இடம் வாழைப்பந்தல் என்று அழைக்கப்படுகிறது.
அதுபோல அந்த பகுதியில் பார்வதியின் தாகம் தீர்ப்பதற்காக முருகப்பெருமான் தனது வேலை செலுத்தி ஒரு ஆறு உருவாக்கினார்.
அந்த ஆறு இன்றும் சேயாறு என்று அழைக்கப்படுகிறது.
இந்த இடங்களை கடந்துதான் பார்வதிதேவி திருவண்ணாமலைக்கு சென்று அடைந்தார்.
முதலில் வடக்கு வீதிக்கு சென்று அண்ணாமலையாரை வழிபட்டார்.
பின்னர் தலேச்சுரம் எனும் மலை பகுதியை அடைந்தார்.
அந்த பகுதியில் கவுதமரும் அவரது மனைவி அகலிகையும் மகன் சதானந்தரும் மடம் அமைத்து வசித்து வந்தனர்.
அவர்கள் பார்வதியை வரவேற்று வணங்கினார்கள்.
பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி தவம் இருப்பதற்கு அவர்கள் தேவையான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
பார்வதி தேவி அமைத்த தவச்சாலையில் 7 கன்னியர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.
8 பைரவர்கள் நான்கு திசைகளையும் காத்தனர்.
அவர்களுக்கு மத்தியில் கூர்மையான ஊசி முனையில் ஒருகால் பெருவிரலை ஊன்றி பார்வதிதேவி தவம் மேற்கொண்டார்.
அந்த சமயத்தில் தேவர்கள் வந்து தங்களை மகிஷாசூரன் துன்புறுத்துவதாக முறையிட்டனர்.
அதை கேட்ட பார்வதி துர்க்கையை அனுப்பி மகிஷாசூரனை வதம் செய்தார். (இதிலிருந்துதான் நவராத்திரி விழா தோன்றியது)
பார்வதியின் தவம் அதன் பிறகும் நீடித்தது.
- அதற்கு பார்வதி, “உங்களை இனி என்றென்றும் பிரியாத வரம் வேண்டும்.
- அப்படி பிரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களில் பாதியை, உங்கள் இடதுபாகத்தை எனக்கு தந்து அருள வேண்டும்.
இறைவன் தீயில் இருந்து தோன்றியவர் என்று லலிதா சகஸ்ரநாமத்தில் ஒருவரி உண்டு. அதை பிரதிபலிப்பது போல திருவண்ணாமலையில் தீ மிதி விழா நடைபெறும்.
இதன் பின்னணியில் ஒரு வரலாறு இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வரலாறு வருமாறு:
ஒரு தடவை சிவபெருமானின் கண்களை பார்வதி தேவி தனது கைகளால் விளையாட்டாக மூடினார்.
இதனால் பிரபஞ்சம் அனைத்தும் இருளில் மூழ்கியது. உயிரினங்கள் அனைத்தும் தவித்தன.
எல்லாவித தொழில்களும் நின்று போனது. உடனே அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.
அப்போது சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணை திறந்தார். இதனால் மீண்டும் பிரபஞ்சம் ஒளிபெற்றது.
ஏழுஉலகிலும் இருள் விலகியது. அப்போதுதான் பார்வதிதேவிக்கு தனது தவறு தெரிய வந்தது.
உடனே அவர் இதற்கு பிராயசித்தமாக, தனது பாவம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு சிவபெருமான் பூலோகம் சென்று தவம் இருக்கும்படி உத்தரவிட்டார்.
அதை ஏற்று பார்வதிதேவி மாங்காடு வந்தார். தீயை மூட்டி கடும் தவம் இருந்தார்.
பிறகு அங்கிருந்து காஞ்சீபுரம் சென்றார்.
அங்கு கம்பா நதிக்கரையோரத்தில் மணலை குவித்து லிங்கமாக உருவாக்கி பூஜை செய்து தவம் இருந்தார்.
காமாட்சியின் தவத்தை சோதிக்க நினைத்த சிவன் கம்பா நதியில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தினார்.
உடனே காமாட்சி அந்த மணல் லிங்கத்தை தனது மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.
இதனால் கம்பா நதி இரண்டாக பிரிந்து லிங்கத்தை சுற்றி ஓடியது.
இதையடுத்து சிவபெருமான் பார்வதிக்கு காட்சி கொடுத்தார்.
அப்போது பார்வதியிடம் அவர், "உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் தருகிறேன்" என்றார்.
அதற்கு பார்வதி, "உங்களை இனி என்றென்றும் பிரியாத வரம் வேண்டும்.
அப்படி பிரியாமல் இருக்க வேண்டுமானால் உங்களில் பாதியை, உங்கள் இடதுபாகத்தை எனக்கு தந்து அருள வேண்டும்.
இது தவிர எனக்கு வேறு எந்த வரமும் வேண்டாம்" என்று கூறினார்.
உடனே சிவபெருமான் காஞ்சீபுரத்திற்கு தெற்கே ஒரு நகரம் ஒளிமயமாக திகழும்.
அந்த நகரை நினைத்தாலே முக்தி கிடைக்கும்.
அத்தகைய சிறப்புடைய அந்த தலத்துக்கு சென்று தவம் இருந்தால் உனக்கு இடது பாகத்தை தந்து அருள்வேன் என்றார்.
அதை ஏற்று பார்வதி தேவி காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டார்.
- கந்த சஷ்டி 2-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ந் தேதி நடக்கிறது.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறும்.
திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் வருகிற 2-ந் தேதி காலையில் யாக சாலை பூஜையுடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படு கிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலைக்கு புறப்படு கிறார். 7மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது.
மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வேல் வகுப்பு,வீரவாள் வகுப்பு பாடல்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது.
மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை யும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது,
2-ந் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 3,4,5,6 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
3.30மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது.
காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி, 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை ஆகி பின்னர் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் வருகிற 6-ம் திருவிழாவான 7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படு கிறது 1.30 க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.
காலை 6மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும்,12.45 மணிக்கு சண்முக விலாசம் மண்டபத்தில் தீபாராதனைக்கு பின் மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.
பின்னர் சந்தோஷ் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று 108 மகாதேவர் சன்னதியில் சாயாபிசேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 8-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3:30-க்கு விஸ்வரூபம்,4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
அன்று அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், மாலை மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.
8-ம் திருவிழா அன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.9,10,11 ஆகிய திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது.12-ம் திருவிழா அன்று மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், பாவங்கள் நீங்கும்.
- சிவனுக்கு சாத்தப்படும் வெண்ணெய் காப்பு மறுநாள் வரை உருகாமல் இருக்கிறது.
கோவில் தோற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது, திருநெய்வணை என்று அழைக்கப்படும் திருநெல்வெண்ணெய் திருத்தலம். இவ்வாலயத்தின் இறைவன் 'சொர்ணகடேசுவரர்' என்றும், இறைவி 'நீலமலர்கன்னி' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆலய தீர்த்தம், பெண்ணெயாறு. ஆலய தல விருட்சம், புன்னை மரம்.

தல வரலாறு
முன்னொரு காலத்தில் வயல்கள் நிறைந்த இப்பகுதியில் விவசாயம் செழித்திருந்தது. அதனால் மக்கள் அனைவரும் குறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். வசதியான வாழ்க்கை காரணமாக, ஒழுக்கம் தவறியதுடன் இறை வழிபாட்டையும் முழுமையாக மறந்தனர்.
அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவன் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். வருணனிடம் சொல்லி இப்பகுதியில் மட்டும் இடைவிடாத தொடர்மழை பொழியும்படி செய்தார். முதலில் மழையை கொண்டாடியவர்கள், விடாத மழையால் திண்டாடினர்.
தொடர்ந்து பெய்த மழையால் ஊருக்கு மத்தியில் இருந்த பெரிய ஏரி உடைந்து, ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது. விவசாய பயிர்கள் அழிந்தன.
அடுத்தகட்டமாக தங்களது உடமைக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதை புரிந்தவர்கள், அதுநாள் வரை மறந்திருந்த இறைவழிபாட்டை நினைத்து, ஒன்றுகூடி சிவபெருமானை தொழுதனர்.
இதையடுத்து ஒரு வாலிபன் உருவில் அங்கு வந்த சிவபெருமான், ஒவ்வொருவர் வீட்டிலும் வைத்திருந்த நெல் மூட்டைகளை கேட்டுப் பெற்றார். அந்த நெல் மூட்டைகளைக் கொண்டு, ஏரியின் கரையை பலப்படுத்தி வெள்ளத்தைத் தடுத்தார்.
பின்னர் வருணபகவானை அழைத்து மழையை நிறுத்தும்படி பணித்தார். தக்க சமயத்தில் வந்து தங்கள் உடமைகள், பொருள்களை காத்ததுடன், அனைவரின் உயிரையும் காத்த அந்த வாலிபனிடம், "நீதான் எங்கள் தெய்வம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.
அப்போது வாலிபனாக இருந்த சிவபெருமான், "உங்களின் அனைத்து உயர் நிலைக்கும் இறைவனே காரணம். இனிமேல் எந்த சூழ்நிலையிலும் நல்வழியை கைவிடாதபடி வாழுங்கள். அதோடு இறைவனையும் மறக்காதிருங்கள்" என்று கூறினார்.
மேலும் சொர்ணம் நிரம்பிய குடங்களை அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து, 'இழந்த பொருட்களை இதன் மூலம் மீட்டுக்கொள்ளுங்கள்' என்று கூறி அனைவருக்கும் தான் யார் என்பதை காட்டி மறைந்தார்.
பரவசம் அடைந்த மக்கள் அனைவரும் அந்த இறைவனுக்கு அங்கே ஒரு ஆலயம் எழுப்பினர். சிவனே வந்து நெல் மூட்டைகளைக் கொண்டு அணை கட்டிய தலம் என்பதால், இந்த ஊர் 'நெல் அணை' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி காலப்போக்கில் 'நெய்வணை' என்றானதாக சொல்கிறார்கள்.
இத்தல இறைவனுக்கு 'நெல்வணை ஈசர்' என்றும், 'பொற்குடநாதர்' என்றும் பெயர்கள் உண்டாயின. இத்தல ஈசனை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தங்களின் தேவாரப் பாடலால் போற்றியுள்ளனர்.
2 ஆயிரம் ஆண்டு பழமையும், பெருமையும் கொண்ட இக்கோவில் யாரால் கட்டப்பட்டது என்ற குறிப்பு இல்லை. ஆனால் சோழமன்னர்களில் முதலாம் குலோத்துங்கசோழன், விக்கிரமசோழன், பல்லவமன்னர் சகலபுவன சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கதேவர், விஜயநகர மன்னர் கிருட்டிணதேவ மகாராயர் ஆகியோரால் இவ்வாலயத்திற்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.

ஆலய அமைப்பு
ஆலயத்தின் முன்பாக திருக்குளம் உள்ளது. முகப்பு வாசல், அதற்கு முன்பாகவே நந்தி, கொடிமரம், பலிபீடம் உள்ளன. கோவிலின் உள்ளே மகா மண்டபம், அதில் பலிபீடம், நந்தியம்பெருமான் இருக்கின்றனர். இந்த அதிகார நந்தி இரண்டு கால்களையும் இணைத்து கைகூப்பி வணங்குவது போன்ற அமைப்பில் இருக்கிறது.
இடதுபுறமாக விநாயகர் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னிதியின் வாசலுக்கு வெளியே, திருமகளுடன் சங்கு-சக்கரம் ஏந்தியபடி திருமால் வீற்றிருக்கிறார்.
அர்த்த மண்டபத்தில் துவாரபாலகர்கள் காவல்புரிய, கருவறையில் மூலவரான நெல்வணை நாதர், சுயம்பு மூர்த்தியாக சிவலிங்க வடிவத்தில் ருத்ராட்ச பந்தலின் கீழ் அருள்கிறார். பிரமாண்டமான இந்த பந்தலில் 7 ஆயிரத்து 500 ருத்ராட்சங்கள் இருக்கிறது.
சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் சுவாமியை வணங்கிய நிலையில் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் நடராஜருக்கு தனிச் சன்னிதியும், உற்சவருக்கான சன்னிதியும் உள்ளன. சூலத்தின் மத்தியில் நின்ற கோலத்தில் உற்சவர் அருள்பாலிக்கிறார்.
சிவமும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீசுவரர் வடிவத்தை இந்த வடிவம் உணர்த்துகிறது. கருவறைக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, கிழக்கில் லிங்கோத்பவர், வடபுறத்தில் துர்க்கை, பிரம்மா வீற்றிருக்கின்றனர். அவர்களுக்கு எதிரில் சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது.
தென்கிழக்கில் செல்வ விநாயகர், தொடர்ந்து வள்ளி- தெய்வானை உடனாய சுப்பிரமணியர் வீற்றிருக்கின்றனர். அடுத்ததாக மகாவிஷ்ணு, கைகூப்பிய கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்தியபடி லட்சுமி நாராயணராக தனிச் சன்னிதியில் அருள்கிறார்.

இவர்கள் இருவரும் கண்களை மூடி தியானத்தில் இருப்பது தனிச்சிறப்பு. இந்தச் சன்னிதிகளுக்கு பின்புறம் பாலமுருகனும், விசாலாட்சி உடனாய விசுவநாதரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி, தனிக்கோவிலாக அமைந்திருக்கிறது. நீலமலர்கன்னி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
இவ்வாலய மூலவருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், பாவங்கள் நீங்கும், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிவனுக்கு சாத்தப்படும் வெண்ணெய் காப்பு மறுநாள் வரை உருகாமல் இருக்கிறது.

மறுநாள் அந்த வெண்ணெயை பக்தர்களுக்கு வழங்க, அவர்கள் வீட்டில் விளக்கேற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கபட்டிருக்கும்.
அமைவிடம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருநெய்வணை திருத்தலம்.
- தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக குறிப்பிடப்படுபவள் துர்க்கை அம்மன்.
- வன துர்க்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்திலும் பிரசித்தம்.
தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக புராணங்களில் குறிப்பிடப்படுபவள், துர்க்கை அம்மன். இந்த அன்னையை ஒன்பது வகை துர்க்கையாக பிரித்து வழிபடுபவர்களும் இருக்கிறார்கள்.
வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, லவண துர்க்கை, தீப துர்க்கை, ஆசுரி துர்க்கை ஆகியோரே, 'நவ துர்க்கை' என்று அழைக்கப்படுகின்றனர்.

வன துர்க்கை:
பண்டைத் தமிழ் இலக்கியங்களில் 'கொற்றவை' என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள் வனதுர்க்கை. அகத்திய முனிவரும், ராவணனும் இந்த தேவியை வழிபட்டதாக கூறப்படுகிறது.
ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக, அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்க்கையை வழிபட்டதாகவும் சொல்கிறார்கள்.
வன துர்க்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்திலும் பிரசித்தம். லலிதா சகஸ்ரநாமத்தில் 'மகாவித்யா' என்ற வரி வரும். அது வன துர்க்கையை குறிப்பிடுவதே ஆகும்.
தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கதிராமங்கலம், மயிலாடு துறைக்கு அருகில் உள்ள தருமபுரம் என அபூர்வமாகவே வன துர்க்கை கோவில்கள் காணப்படுகின்றன.

சூலினி துர்க்கை:
துர்க்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். சரபேஸ்வரரின் இறக்கை ஒன்றில் இவள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. சிவனின், உக்ரவடிவ தேவி இவள். திருவாரூர் மாவட்டம் பேரளம் எனும் ஊருக்கு அருகில் உள்ளது, அம்பர் மாகாளம் எனும் பாடல் பெற்ற தலம்.
இங்கே மாகாளி அன்னை, சூலினி துர்க்கையாக காட்சி தருகிறாள். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை மற்றும் ஆடைகளை அணிவிக்கிறார்கள்.

ஜாதவேதோ துர்க்கை:
சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவையே முருகனாக மாறின. நெற்றிக் கண்ணில் உருவான தீப்பொறிகளை ஏற்றுக் கொண்டு கங்கை நதியில் சேர்த்ததால் இந்த துர்க்கைக்கு 'ஜாதவேதோ துர்க்கை' என்று பெயர்.
யஜுர் வேதத்தில், துர்க்கா ஸுக்தம் என்ற பகுதி உண்டு. மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸுக்தம் ஜாத வேதஸே என்றே தொடங்குகிறது.

சாந்தி துர்க்கை:
இறை வழிபாட்டால் விளையும் பயன்களில் மிகவும் சிறந்தது உள்ளத்துக்கு கிடைக்கும் அமைதியே ஆகும். 'ஓம் சாந்தி.. சாந்தி..' என்றே வேதங்களும் பிரார்த்திக்கின்றன. தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவச் வழிசெய்பவள் சாந்தி துர்க்கை என்று அழைக்கப்படுகிறாள்.

சபரி துர்க்கை:
ஒரு சமயம் சிவபெருமான் வேடுவன் உருவத்தைத் தாங்கியபோது, பார்வதி தேவி வேடுவப் பெண்ணாக வடிவம் கொண்டு அவருடன் வந்தாள். வேடுவச்சி உருவம் எடுத்த துர்க்கையையே, 'சபரி துர்க்கை' என்று அழைக்கிறார்கள்.

ஜ்வாலா துர்க்கை:
அன்னை ஆதிபராசக்தி பண்டாசுரன் என்ற அசுரனுடன் கடும்போர் புரிந்தபோது, மற்ற எதிரிகள் பார்வதி தேவிக்கு அருகில் வராமல் தடுப்பதற்காகத் துர்க்கை தேவி அக்னி ஜ்வாலையுடன் கூடிய மிகப்பெரிய நெருப்பு வட்டத்தை அமைத்தாள். இந்த செயலை செய்த துர்க்கை தேவியே, 'ஜ்வாலா துர்க்கை' எனப்படுகிறாள்.

லவண துர்க்கை:
ராமாயண காலத்தில் லவணாசுரன் என்றொரு அரசன் இருந்தான். அந்த அசுரனை அழிக்க புறப்பட்ட லட்சுமணன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு வழிபட்ட துர்க்கையே 'லவண துர்க்கை' ஆவாள். லவணாசுரன் அழிவதற்குக் காரணமாக இருந்ததால், இவள் லவண துர்க்கை எனப்பட்டாள்.

தீப துர்க்கை:
தீபமாகிய விளக்கு புற இருளை அகற்றி ஒளி வழங்குகிறது. பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்னும் அக இருளை நீக்கி மெய் ஞானமான ஒளியை வழங்கும் தீபலட்சுமியே 'தீப துர்க்கை' என்று போற்றப்படுகிறாள்.

ஆசுரி துர்க்கை:
பக்தர்களிடம் உள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்துக்கு அழைத்துச் செல்பவள், ஆசுரி துர்க்கை ஆவாள்.
- படை வீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.
- இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் அபிஷேகம் அலங்காரம் வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-8 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: அஷ்டமி காலை 7.06 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: பூசம் நண்பகல் 1 மணி வரை. பிறகு ஆயில்யம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் அபிஷேகம் அலங்காரம் வழிபாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை தலங்களில் திருவீதி உலா. சோளிங்கபுரம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் ஸ்ரீபக்தோசிதப் பெருமாள் திருக்கல்யாணம். கரூர் தோன்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. படை வீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-நலம்
மிதுனம்-லாபம்
கடகம்-பரிவு
சிம்மம்-நன்மை
கன்னி-திடம்
துலாம்- தனம்
விருச்சிகம்-பணிவு
தனுசு- ஆக்கம்
மகரம்-நற்செயல்
கும்பம்-அமைதி
மீனம்-சாதனை
ஒவ்வொருவருக்கும் எந்த தசா புத்தி நடப்பில் இருக்கிறதோ அந்த திசைக்குரிய அல்லது அந்த புத்திக்குரிய கிழமைகளில் ஸ்ரீ கருட பகவானுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, அமுத கலசம் என்னும் இனிப்பை படைத்து வழிபட்டு வந்தால் தசா புத்தியால் ஏற்படும் இன்னல்கள் உடனே நீங்கும்.
நேரங்களில் கருட தரிசன பலன்
ஒவ்வொரு கிழமைகளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் கருடனை தரிசிக்கும்போது யோகமான பலன்கள் கிடைப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவற்றை கீழே கொடுத்துள்ளோம். இங்கு குறிப்பிட்டுள்ளவை பகல் நேரப் பொழுதையே குறிக்கும்.
எல்லா நேரங்களிலும் கருட தரிசனம் சிறப்பானதுதான் என்றாலும், மிகவும் சிறப்பான நேரத்தில் அது அமையும் போது இன்னும் நன்மைகள் உண்டாகும்.
எனவே நீங்கள் கருடனை தரிசிக்கும் நேரம் இதுவாக இருந்தால், மேற்குறிப்பிட்ட பலன்கள் உங்களுக்கு மிகவும் விரைவில் நன்மையாக அமையும்.
ஞாயிறு - 6-7, 8-10, 11-12, 3-5, 6-7.
திங்கள் - 6-7, 8-9, 11-2, 3-4, 6-7.
செவ்வாய்- 6-9, 11-12, 1-4, 6-7.
புதன் - 6-8, 9-10, 12-3, 4-5, 6-7.
வியாழன்- 6-7, 11-12, 1-2, 6-7.
வெள்ளி- 6-7, 8-9, 1-2, 3-4
சனி- 6-7, 10-11, 12-5, 5-6.
- ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர்.
- இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிழமைகள், பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவானதாகும்.
ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஸ்ரீகருட பகவானை, அந்தந்த ராசிக்குரிய கிழமைகளில் வழிபட்டு வர, அதிக நன்மைகளை அடைவர்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள கிழமைகள், பெண்கள் ஆண்கள் இருவருக்கும் பொதுவானதாகும்.
மேஷம்-புதன், சனி
ரிஷபம்-செவ்வாய், வியாழன்
மிதுனம்-திங்கள், செவ்வாய், வியாழன்
கடகம்-புதன், வெள்ளி
சிம்மம்-திங்கள், வெள்ளி
கன்னி-திங்கள், செவ்வாய், வியாழன்
துலாம்-வியாழன், வெள்ளி
தனுசு-திங்கள், செவ்வாய்
மகரம் -திங்கள், வியாழன்
கும்பம் -புதன், வியாழன்
மீனம்-வெள்ளி, சனி






