என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஜூலை மாதத்தில் மொத்தமாக ரூ.1,65,105 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய் கிடைத்துள்ளது. அதில் மத்திய சரக்கு சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.29,773 கோடியும், மாநில சரக்கு சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,623 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.85,930 கோடியும் வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.11,779 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவையில் டெல்லி சேவைகள் மசோதா தொடர்பாக பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி தொடர்பாக எந்த மசோதாவையும் கொண்டு வருவதற்கு மக்களவைக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில் ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறினார். 

    இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் சுமார் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக மத்திய நிதி மந்திரி, நிதித்துறை செயலர் மற்றும் சிபிடிடி தலைவரை தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து நன்றி கூறினார்.

    இந்தியாவில் முதல் முறையாக தமிழகம்-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி விரைவு சாலையின் 3-ம் கட்ட கட்டுமானப்பணி நடைபெற்று வந்தது. இந்த பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருவர் மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. 5 கட்டமாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில், இந்த மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்திய அணி அடுத்த மாதம் அயர்லாந்து சென்று 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி கேப்டனாக பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அணியின் விவரம்: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்) யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), ஜிதேஷ் சர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், ஆவேஷ்கான்.

    மக்களவையில் இன்று கடும் அமளிக்கிடையே ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாளை காலை 11 மணிக்கு இனி மக்களவை கூடும். ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த 27ம்தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மக்களவையில் நிறைவேறியிருக்கிறது. 

    மாநிலங்களவையில் இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குறுகிய நேரம் விவாதிக்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விதி எண் 267ன் கீழ்  அவையின் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீண்ட நேரம் விவாதிக்கவேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னரும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகள் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டன.

    ஓடும் ரெயிலில் 4 பேர் சுட்டுக்கொலை: ரெயில்வே பாதுகாப்பு போலீஸ்காரர் வெறிச்செயல்ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு சென்று கொண்டிருந்த ரெயிலில், ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய வீரர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

    ×