என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்காது. மேற்கு தொடர்ச்சி மலைகள் இங்கு இருப்பதால் அரபிக்கடலில் உருவாகி வரும் காற்றை அது தடுக்கிறது. அதனால் கேரள பகுதிக்கு தான் மழை பொழிவு அதிகமாக இருக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் இதுபோன்று வெயில் தாக்குவது இயல்பான ஒன்றுதான் என்று வானிலை மைய அதிகாரி கீதா கூறினார்.

    புதுச்சேரியில் மக்கள் பிரச்சினைகள் சரியாக கவனிக்கப்பட்டு தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை. புதுச்சேரி வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    புதுவையில் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தகப் பை இல்லாத தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி கைகளை வீசியபடி பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்தல் விளையாட்டு, கலை நிகழ்ச்சி, வினாடி வினா, விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    கடந்த 2019-21ம் ஆண்டுகளில் மட்டும் நாடுமுழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10.61 லட்சம் பெண்களும், 18 வயதுக்கு கீழ் உள்ள 2.51 லட்சம் சிறுமியரும் மாயமாகி உள்ளனர். இவற்றில் மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் காணாமல் போயுள்ளனர் என தேசிய குற்ற ஆவணம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

    மணிப்பூரில் தற்போதைய கள நிலவரம் குறித்து ஆராய காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தது. இன்று டெல்லி திரும்பியபின் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, மணிப்பூரில் இன்னும் அமைதி திரும்பவில்லை. அங்கு நிரந்தர அமைதி உருவாவதற்கான சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தவேண்டும் என்றார்.

    அமெரிக்காவில் நடந்த கச்சேரி ஒன்றில் பிரபல ராப் பாடகி கார்டி பி மேடையில் நடனமாடி பாடிக்கொண்டிருந்தார். அப்போது ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த சிலர் அவர்மீது குளிர்பானத்தை வீசி எறிந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கார்டி பி தான் வைத்திருந்த மைக்கை அவர்களை நோக்கி வீசி எறிந்தார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

    வன்முறையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கள ஆய்வு செய்வதற்காக, எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்றும் இன்றும் ஆய்வு செய்த அவர்கள் இன்று மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்தனர். அப்போது மணிப்பூர் வன்முறை தொடர்பான கள நிலவரத்துடன் தங்கள் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.

    தீ விபத்தை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து 125 நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.

    மணிப்பூரில் கலவர கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரை, எதிர்க்கட்சிகளின் எம்பி.க்கள் கனிமொழி மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, அந்த பெண் தன் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கண்ணீர்மல்க கூறியிருக்கிறார். கலவரத்தின்போது கொல்லப்பட்ட தனது மகன் மற்றும் கணவரின் உடல்களைப் பார்க்க எனக்கு உதவுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சீருடை, பாடப் புத்தக கட்டணத்தை அரசே வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கூடாது என்றும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற தலைமை நிதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    ×