என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அமித்ஷா நேற்று வந்தாரே புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவா வந்தார்? ஏதோ பாத யாத்திரை தொடங்கி வைக்க வந்திருக்கிறார். அது பாத யாத்திரை அல்ல. பாவ யாத்திரை. 2002-ல் குஜராத்தில் நடந்ததற்கும், இப்போது மணிப்பூரில் நடக்கும் சம்பவத்துக்கும் மன்னிப்பு கோரும் பாவ யாத்திரை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் குழு இன்று மணிப்பூர் செல்கிறது. அங்கு, இன்றும் நாளையும் மாநிலத்தில் வன்முறையால் உண்டான பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர்.

    அறுவை சிகிச்சை முடிந்து 6 மாதங்கள் ஆன நிலையில், லாலு பிரசாத் யாதவ் நேற்று முழு ஆற்றலுடன் பேட்மிண்டன் விளையாடும் காட்சி காண்போரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஆஷஸ் 5வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 103.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்தது.இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    நெய்வேலியில் கால்வாய் அமைக்கும் பணிக்காக விளை நிலங்களை என்எல்சி நிறுவனம் தோண்டுவது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார். 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது பயிர்கள் அறுவடை செய்யும் வரை 2 மாதம் காத்திருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார். நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சாமிதரிசனம் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் சந்திப்போம். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்விலும் சேர்ந்துதான் பயணிப்போம். பாராளுமன்ற தேர்தலில் அமமுக நிலைப்பாடு குறித்து டிசம்பரில் தெரிவிக்கப்படும் என்றார்.

    'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்குகிறார். இதன் தொடக்க விழா ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று அண்ணாமலையின் நடைபயணத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகிறார். இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் அரை சதமடித்து 52 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு சுருண்டது. ஷாய் ஹோப் ஓரளவு தாக்குப் பிடித்து 43 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் சினிமா துறைக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கவும் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு, கடுமையான விதிகளுடன் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருட்டுத்தனமாக திரைப்படங்களை பிரதி எடுப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்றும், வழக்கை மணிப்பூரில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்படி மத்திய அரசு கேட்க உள்ளதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். அவரது 8-வது நினைவுநாளான இன்று ராமேசுவரம் அருகே உள்ள மணிமண்டபத்தில் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அரசு சார்பில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பங்கேற்றனர்.

    ×