என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திருச்சி கேர் என்ஜினீயரிங் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த விழா 29-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான இன்று முதலமைச்சர் வேளாண் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.

    திருச்சி ராம்ஜி நகரில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், இந்தியாவின் கட்டமைப்பை பா.ஜ.க. சிதைத்துவிட்டது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே யாராலும் காப்பாற்ற முடியாது என்றார்.

    திருச்சியில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மணிப்பூர் விவகாரத்தை திசை திருப்பவே பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளார். தி.மு.க.வினர் மீதான அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்தித்து வருகிறோம் என தெரிவித்தார்.

    சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்யக்கோரி 2012, 2015-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தாக்கலானது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் விளக்கமளித்தார். அப்போது, அவர் கூறுகையில், சட்டசபை நிகழ்வுகளை தற்போது நேரலை செய்ய இயலாது என தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது. அனைத்து அம்சங்களை பரிசீலித்து சபை நிகழ்வுகளை படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை சந்தித்தார். நாளை மறுநாள் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் கவர்னருடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி வழங்கியுள்ளார். அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி விவாவதத்திற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.

    கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கும், மதுபான விலை உயர்விற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. மதுபான விலை உயர்வு என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

    டெல்லி விமான நிலையத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்றில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு என்ஜினில் திடீரென்று தீப்பிடித்தது.

    மனித பிறப்பில் எத்தனையோ அதிசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் ஒன்றுதான் மனித உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் நலம் விசாரித்துக்கொள்ளும் என்பதாகும்.

    கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. முகாம்களில் இன்று காலை வரை 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

    கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று பிற்பகல் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளார். கவர்னரை சந்திக்கும் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்களின் 2ம் கட்ட சொத்து பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

    ×