என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மாதிரி பாடத்திட்டத்தால் பல்கலை மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆசிரியர்களின் பணிநிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சிவகிரி வட்டம், தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த இரண்டு பெண்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை. ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் "முதலமைச்சர் கோப்பை 2023" மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்ட அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளையும், 27-வது தேசிய மகளிர் கால்பந்து போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாடு அணியைச் சார்ந்த 22 வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 60 இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்று இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மக்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார். இந்த முக்கியமான விஷயம் குறித்து விவாதம் நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு INDIA எனப் பெயரிட்டுள்ளனர். இதை பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, மிஸ்டர் மோடி, நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம். நாங்கள் INDIA என பதில் அளித்துள்ளார்.

    பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிப்பார் என மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

    அனைத்து கட்சி தலைவர்கள், பிரதிநிதிகளுடன் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று ஆலோசனை நடத்தினார்.

    பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது. இதுபோன்ற திசையற்ற ஒரு எதிர்க்கட்சிகளை இதுவரை கண்டதே இல்லை. இன்னும் நீண்ட காலம் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்ந்திருக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துவிட்டனர். எதிர்க்கட்சிகளின் தலைவிதி இதுதான் என்று பா.ஜ.க. பாராளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

    பத்மநாபபுரம் அரண்மனையில் பணி செய்யும் 55 தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர்.

    ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக ஐ.ஆர்.சி.டி.சி. தகவல் தெரிவித்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம் காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று தொடங்கியது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×