என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் கூடுதல் சலுகை வழங்கப்படவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் ஜூலை 28-ம் தேதி பாத யாத்திரை செல்ல முடிவுசெய்துள்ளார். இந்த பாதயாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். ராமேசுவரத்தில் தொடங்கும் பாதயாத்திரையின் முதல் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்படி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக சார்பில் இன்று அழைப்பு விடுக்கப்பட்டது.

    மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார். இதுகுறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். உணர்வுபூர்வமான விவகாரத்தில் உண்மை என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்வது அவசியம் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்தார்.

    உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், டுவிட்டரின் புதிய லோகோவாக X மாற்றம் செய்யப்பட்டுள்ளது என எலான் மஸ்க் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வை மேற்கொள்வதற்கு தடை விதிக்க கோரி மசூதி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வாரணாசி கோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதை தொடர்ந்து ஞானவாபி மசூதியில் அறிவியல் ஆய்வு பணி நிறுத்தப்பட்டது.

    மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங்கை சஸ்பெண்டு செய்து மாநிலங்களவை தலைவர் ஜெகதீப்தன்கர் உத்தரவிட்டார். மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் தெற்கு பா.ஜ.க. சார்பில் விக்கிரவாண்டி பஸ் நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி, கனிமொழி எம்.பி., மு.க.ஸ்டாலின் சகோதரி செல்வி ஆகியோர் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பான புகாரில் போலீசார் கைது செய்துள்ளனர்.

    தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முகாமை தொடங்கி வைத்து பயனாளியிடம் அவர் கலந்துரையாடினார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்தும் பெண்களிடம் கேட்டறிந்தார்.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடந்துவருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. விராட் கோலி சதமடித்து 121 ரன் எடுத்தார். ரோகித் சர்மா, ஜடேஜா, ஜெய்ஷ்வால், அஷ்வின் அரை சதமடித்தனர். தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம். மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறைக்கு பிற மாநில பிரச்சினைகளில் இருந்து எப்படி பரிகாரம் தேடிக்கொள்ள முடியும்? எப்படி அதனை மன்னிக்கமுடியும்? மணிப்பூர் பா.ஜ.க. அரசு வீழ்ச்சியடைந்து விட்டது. மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளது என தெரிவித்தார்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், நாடாளுமன்ற தேர்தல் அழைக்கிறது. வாக்குச்சாவடி வீரர்களே ஆயத்தமாகுங்கள். நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்திலும், வரலாம், முன்கூட்டியும் வரலாம். தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

    கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியின், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் இவர்கள் இந்தோனேசியாவின் ஆல்பியன்- ஆர்டியாண்டோ ஜோடியை  17-21, 21-23, 21-14 என்ற செட்கணக்கில் வீழ்த்தினர். 

    ×