என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மத்திய கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெடிமருந்து கிடங்கில் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு எழுந்தது.

    திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று மீண்டும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர். திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், நெல்லை, புதுக்கோட்டை உள்ளட்ட 9 மாவட்டங்களில், 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்கின் வீடு நெல்லை மேலப்பாளையத்தில் உள்ளது. அந்த வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் காலை முதலே சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் முத்தமிழ் பேரவை 42ஆம் ஆண்டு இசை விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.  விழாவில் பேசிய அவர், இந்த ஆண்டு முதல் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரால் விருதினை, முத்தமிழ் பேரவை சார்பில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    முதியோர் மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. மகளிர் ரூ.1000 திட்டத்துக்கு விண்ணப்பிக்க 36 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது.

    இரண்டு பெண்களுக்கு எதிராக மணிப்பூரில் நடைபெற்றது வருத்தமான சம்பவம்தான். அதற்கான ஒட்டுமொத்த மணிப்பூர், வடகிழக்கு மாநிலங்களை இழிவு படுத்தக்கூடாது. ஏற்கனவே வீடியோ உள்ள நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முந்தைய நாள் வெளியானதில், அரசியல் விசயம் அடங்கியுள்ளது என அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  அதன்பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசுகையில், மீனவர் பிரச்சனையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்றார். இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் பதவியைப் பெறுவதில் காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என கூறினார். இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய பா.ஜ.க. அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய நோக்கம். எங்களுக்கு எந்த நாற்காலியும் வேண்டாம் என்றார்.

    இலங்கை அதிபர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இருநாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள்கட்டித்தரவும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

    ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இந்த வழக்கில் குஜராத் அரசும், எதிர்மனுதாரர் புர்னேஷ் மோடியும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 4ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

    மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்தில் முக்கிய நபரான ஹூப்ரீம் ஹிரதாஷ் சிங் கைது செய்யப்பட்டார். நேற்று இரவு அவனது வீட்டை சூழ்ந்த மர்ம நபர்கள் பெட்ரோல் வீசி தீ வைத்து எரித்தனர். வீடியோவில் இடம் பெற்றுள்ள கும்பலில் உள்ளவர்களில் பலர் தலைமறைவாகி விட்டனர். இன்று காலை வரை 657 பேரை பிடித்து விசாரித்து வருவதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சீத்தா ராமய்யர் பஞ்சாங்க குறிப்பில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தக்காளி விலை உயரும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது.

    ×