என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தொடங்கும் யாத்திரையை அவர் உருண்டு புரண்டாலும் மக்கள் ஏற்க போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்து உள்ளார்.

    மணிப்பூரில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

    சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தின் ஒரு பகுதிக்கு கலைஞர் நூற்றாண்டு பெவிலியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்துப் பேசுகிறார். அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஏற்கனவே 3 கட்டமாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்ட நிலையில், இன்று 4-வது முறையாக சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''குற்றவாளி யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். சட்டம் அதன் முழு வலிமையுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும். மணிப்பூர் மகளுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியை நாளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்க உள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் ஒன்றான, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்பட இருக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது. சென்னையில் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது. ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணை இன்று வெளியானது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை நேபாள அணி ஆகஸ்ட் 30-ம் தேதி எதிர்கொள்கிறது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 2-ம் தேதி இலங்கையின் கண்டி நகரில் நடைபெறுகிறது.

    கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஈடுபடுத்தியதற்கு எதிராக அவர்கள் அவையில் கூச்சல் எழுப்பினர். அப்போது துணை சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் பணியிடை நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.

    பருத்தி நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் பருத்தி நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி உள்ள அவர், இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    டாஸ்மாக் நிறுவனங்களுக்கு மதுபானங்கள் எந்தெந்த நிறுவனங்களில் இருந்து, எவ்வளவு விலைக்கு வாங்கப்படுகின்றன? என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ×