என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) வெடித்ததில் 15 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 5 ஊர்க்காவல் படை வீரர்கள் ஆகியோர் அடங்குவர். பலர் காயமடைந்தனர். 

    தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. குவாட்டருக்கு ரூ. 10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ. 320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என டாஸ்மாக் அறிவித்துள்ளது.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தை சுமூகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைக்கவும் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை சார்பில் இதுகுறித்து அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கவும், விவாதங்களில் பங்கேற்குமாறும் அமைச்சர் பிரகலாத்ஜோஷி, தேனி எம்.பி. ரவீந்திரநாத்துக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் அ.தி.மு.க. சார்பில் "வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு" என்ற தலைப்பில் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது. மாநாடு சிறப்புடன் நடைபெறுவதற்கு 11 மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் வருகிற 28-ந் தேதி முதல் நடக்கிறது. இதில் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் உத்தரவுகளுக்கு ரஷிய ராணுவம் அடிபணிய மறுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்திற்குப் பிறகு இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது ''இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படும் அரசாக மத்திய அரசு உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் அதற்கு துணை நிற்கின்றன. எனவே பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 330 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெறும என்று நம்புகிறோம்'' என்றார்.

    'டெட்ராபேக்' என்னும் அட்டை பாட்டில்களில் மது விற்பனை செய்ய பயன்படுத்தலாம் என 4 விவசாய சங்கள் ஆதரவு தெரிவித்து அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

    சபரிமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் நனைந்தது.

    வட அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா, ஆசியா வரை வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும் என்று ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின் மூத்த வெப்ப ஆலோசகர் ஜான்நேர்ன் கூறி உள்ளார்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி இன்று சந்தித்தார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் 2 நாள் பெங்களூரு சென்ற நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. முதலமைச்சர் பெங்களூருவில் இருந்தபோது தொலைபேசியில் அமைச்சர் பொன்முடியுடன் பேசிய நிலையில் தற்போது சந்தித்துள்ளார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணி முதல் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு பெற்றது.

    ×