என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் பேசியதாவது, " வருகிற 2024 தேர்தலை மையமாக வைத்து பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. 2024ம் ஆண்டு புதிய இந்தியா உருவாகும். யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

    டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, 2024 பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அனைத்து கட்சிகளும் வளர்ச்சியை எடுத்துச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும். நாம் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். 

    அமைச்சர் பொன்முடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் (PMLA) அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி. தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது ரூ.81.7 லட்சம் பணம், ரூ.13 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை கூறி உள்ளது.

    எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசும்போது, பிரதமர் பதவியை பெறுவதிலோ அதிகாரத்தை பெறுவதிலோ காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை என்றார்.  மேலும், மாநில அளவில் நம்மிடையே உள்ள கட்சிகளுக்குள் சில வேறுபாடுகள் உள்ளன. அந்த வேறுபாடுகள் சித்தாந்தம் சார்ந்தவை அல்ல. ஆனால் அவை மக்கள் நலனுக்காக ஒதுக்கி வைக்க முடியாத அளவுக்கு பெரிய விஷயம் இல்லை என்றும் தெரிவித்தார்.

    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் 105 பழங்கால கலைப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. அந்த பொருட்கள் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண் ஜித்சிங் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

    சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆடி மாத அம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலாவினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000 மற்றும் ரூ.800 ஆகிய கட்டணங்களில் இச்சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது.

    பரந்து விரிந்த நமது இந்தியத் துணைக்கண்டத்துக்கு அழகு சேர்ப்பது, இங்குள்ள பன்முகத்தன்மையே! 1967 ஜூலை 18-ல் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டினோம்! வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கிடப் பாடுபட உறுதியேற்போம்! தனித்துவமிக்க தமிழ்நாட்டின் ஒளி இந்தியா முழுதும் பரவட்டும்! ! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    2047-ம் ஆண்டு உலகில் இந்தியா முன்னேறிய நாடாக இருக்கும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத்தலைவர் பிபேக் டெப்ராய் கூறியுள்ளார்.

    டிஐஜி விஜயகுமார் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்ட 2 யூடியூபர்கள் இன்று விசாரணைக்கு ஆஜராகினர். அவர்கள் 2 பேரிடமும் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று காலமானார். அவரது உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய ஆர்.எஸ்.பாரதி மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. 2018 ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து பவன் கல்யாண் மட்டுமே பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

    ×