மாநிலங்களவை தேர்தலில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவற்றில் மேற்கு வங்காளத்தில் 6 இடங்கள், குஜராத்தில் 3 இடங்கள், கோவாவில் ஓர் இடத்தில் வாக்கெடுப்பு நடைபெறாது. பா.ஜ.கவில் 5, திரிணாமுல் காங்கிரசில் 6 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் எஸ்.ஜெய்சங்கர் 2-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.