என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். இதில் அல்காரஸ் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

    சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் மத்திய அரசால் வழங்கப்படும் ரூ.5,000 தொகையுடன் மாநில அரசின் சார்பில் கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 27 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.

    டெல்லியில் யமுனை நதிக்கரையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

    அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    டெல்லி அரசின் நிர்வாகப் பணிகள் தொடர்பான மத்திய அரசு அவசரச் சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அரசு ஒதுக்கீடு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு உள்பட 3 வகையான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேலம் மாணவி கிருத்திகா 569 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

    நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தூரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது. விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என இஸ்ரோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40,193 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 16-ம் தேதி வெளியிடப்படுகிறது. கிண்டியில் நாளை காலை 10 மணிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதனை வெளியிடுகிறார்.

    கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இன்று தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடினார். முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலம் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், மு.க.ஸ்டாலின் பேசுகையில், " சென்னை தமிழகத்தின் தலைநகர் என்றால், மதுரை தமிழகத்தின் கலை நகர். கண்ணகி எரித்த மதுரையில் அறிவு தீ பரவ போகிறது" என்று குறிப்பிட்டார்.

    மதுரை புது நத்தம் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக நூலக வளாகத்தில் கருணாநிதியின் சிலையையும் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி, டி.ஆர்.பாலு எம்.பி., உள்ளிட்டோர் பங்றே்றனர்.

    ×