என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தி.மு.க.வின் தூண்டுதலின் பெயரில்தான் ஆகஸ்ட் 1-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்துகிறார் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    அசாமில் மியா வியாபாரிகள்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். அசாம் மக்கள் வியாபாரியாக இருந்தால், விலையை உயர்த்திருக்கமாட்டார்கள் என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்மா சர்மா குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பதில் கருத்து தெரிவித்த ஒவைசி ஒரு சில குரூப்புகள் அசாமில் உள்ளன. அவர்களின் வீட்டில் எருமை பால் கொடுக்கவில்லை என்றாலும் மியா மீது குற்றம்சாட்டுவார்கள் எனத்தெரிவித்துள்ளார்.

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர் இந்திய வீரர்களின் அணிவகுப்பை கண்டுகளித்தார். பின்னர் பிரான்ஸ் நாட்டில் இருந்து புறப்படும்முன், அணிவகுப்பில் இந்திய வீரர்களை பார்த்தது அற்புதம் எனத் தெரிவித்துள்ளார்.

    சென்னை நங்கநல்லூர் அரசு பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காமராஜரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தனக்கு பரிசாக கிடைத்த 7,740 புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு அவர் பரிசாக வழங்கினார்.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டது. இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 171 ரன், ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 130 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இத்திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின. இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டது. வரும் 20-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 171 ரன், ரோகித் சர்மா 103 ரன், விராட் கோலி 76 ரன்கள் எடுத்தனர்.

    அனைத்தும் சரியாக இருந்தால், சந்திரயான்- 3, ஆகஸ்ட் 1ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தவும், ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு தரையிறங்கும் என்றும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று செலுத்தி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது. சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

    வருகின்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, கவர்னர்களின் அத்துமீறல்களை, பா.ஜ.க. ஆட்சியில் ஜனநாயகத்திற்கு-மதச்சார்பின்மைக்கு-சமூக நீதிக்கு-அடிப்படை உரிமைகளுக்கு-மாநில உரிமைகளுக்கு ஏற்பட்டிருக்கும் பேராபத்தை விளக்கிடும் வகையில், தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் உரக்கக் குரல் எழுப்பி, தமிழ்நாட்டு மக்களுக்காகவும்-இந்தியாவுக்காகவும் செயல்படுவோம் என்று தி.மு.க. எம்.பி.க்களின் கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.

    யமுனா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி சென்ற தண்ணீரின் அளவு குறைய தொடங்கியுள்ளதால் டெல்லியில் வெள்ளம் வடிகிறது.

    ஈரோடு புறநகர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சசிகலா நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ×