என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வாஷிங்டன் நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) விசாரணைக்காக ஆஜரானார். அப்போது தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த டிரம்ப், ''நான் குற்றமற்றவன். தன்மீது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது'' என தன் வாதத்தை முன்வைத்தார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வழக்கின் சாட்சியாகள் எவருடனும் தொடர்பு கொள்ளக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்க, டிரம்ப் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. முதல் கூட்டம் பீகாரிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் அணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது. இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 30-ம் தேதி மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி சீனாவுடன் மோதியது. ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தியது. இறுதியில் இந்தியா 7-2 என்ற கோல்கணக்கில் சீனாவை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது.

    ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில், தென் கொரியா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் தென்கொரிய அணி 2-1 என வெற்றி பெற்றது. 

    நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் 2-வது சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலமாக மின் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கன்வேயர் பெல்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்போவதாக யு.எஸ். கேப்பிட்டோல் அலுவலகத்தில் உள்ள 911 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில் எந்த ஆயுதமும், யாரும் சிக்கவில்லை. இறுதியில் அந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மனைவி சோபி கிரிகோரியை பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார். இதன்மூலம் இவர்களது 18 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ஜஸ்டின் ட்ரூடோவும், சோபி கிரிகோரியும் தங்கள் முடிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 11-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. ஆணைய தலைவர் ஹல்தார் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரள அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறைப்படி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இதில் வலியுறுத்த உள்ளனர்.

    காயத்ரி தேவி என்ற பெண், பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மீது தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். உடன்பிறவா சகோதரனாக நினைத்து பழகி வந்த ஓ.பி.ரவீந்திரநாத், தன்னை தவறான நோக்கத்துடன் அணுகியதாக தெரிவித்தார். அதற்கு மறுப்பு கூறியதால், செல்போனில் ஆபாச வார்த்தைகளில் பேசி வருவதாகவும், அவரது நண்பர்கள் மூலம் தொடர்ந்து தனக்கு மிரட்டல் அளித்து வருவதாகவும் கூறினார்.

    பொது பாடத்திட்டத்தை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். பொது பாடத்திட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை. பாடத்திட்டத்தை மாற்ற உயர்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது. உயர்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

    இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 351 ரன்களை குவித்தது. இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா அரை சதமடித்தனர். அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 151 ரன்னில் ஆல் அவுட்டானது. இதனால் 200 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் (I.N.D.I.A.)கூட்டணியினர் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்தும் முறையிட உள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்துப் பேசினார்.

    ×