என் மலர்tooltip icon

    மற்றவை

    • நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு.
    • தலைசுற்றல், மலச்சிக்கல், கை-கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும்.

    திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சில பேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.

    அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க... அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை-கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும்.

    நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு. மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ந்த திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம்.

    குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும். எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட விசேஷமானது.

    - மரியா பெல்சின்

    • சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.
    • சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

    சாம்பிராணி போடுவது வீட்டில் ஹோமம் செய்வதற்கு நிகரான ஒன்றாகும்.

    ஹோமம் செய்வதால் ஏற்படும் அனைத்து நன்மைகளும் சாம்பிராணி போடுவதின் மூலம் கிடைத்து விடும்.

    சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

    சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.

    சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

    சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

    சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

    சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

    சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.

    சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.

    சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.

    சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

    சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

    -ஸ்ரீராம் கோவிந்த்

    • உணவு மூலம் உண்ணும் கொலஸ்ட்ராலுக்கும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலுக்கும் ஓரளவுக்கு தான் தொடர்புபடுத்த முடிகிறது.
    • உயிர் பிழைக்க உதவும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அனைத்துக்கும் கொலஸ்ட்ரால் தேவை.

    பெரும்பான்மை அறிவுரைகளில் முட்டையின் வெள்ளைக்கரு மட்டுமே உண்ண வேண்டும் என்றும் மஞ்சள் கருவை தீண்டுவது தவறு என்றும் கூறப்படுகிறது. அந்த அறிவுரைகளில் அளவற்ற அச்சம் இருக்கிறதே அன்றி அறிவியல் இல்லை.

    முட்டையின் மஞ்சள் கரு மேல் இந்தப் பழி ஏன் வந்தது? அதில் கலந்திருக்கும் கொலஸ்ட்ரால் எனும் பொருளால் மட்டுமே அது தீண்டத்தகாத பொருளாக மாறி நிற்கிறது. கொலஸ்ட்ரால் என்பது அத்தனை தீண்டத்தகாத பொருளா?

    முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் ஏ - கண் நலம்.

    கால்சியம் / விட்டமின் டி - எலும்பு நலம்

    பொட்டாசியம் / மெக்னீசியம் - இதய நலம்

    விட்டமின் பி6 / பி12 - நரம்பு மண்டல நலன்

    ஆகிய அனைத்து நல்லவைகளையும் வைத்திருக்கும் மஞ்சள் கருவை அதில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்ற ஒரு காரணத்தைக் கூறி குப்பையில் வீசுவதும் தகுமோ?

    உணவு மூலம் உண்ணும் கொலஸ்ட்ராலுக்கும் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலுக்கும் ஓரளவுக்கு தான் தொடர்புபடுத்த முடிகிறது.

    நமது ஒவ்வொரு செல்களின் பாதுகாப்பு அரண்களான ப்ளாஸ்மா மெம்ப்ரேன் எனும் சுவர் பாஸ்ஃபோ லிபிட் எனும் கொலஸ்ட்ரால் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    உயிர் பிழைக்க உதவும் ஸ்டீராய்டு ஹார்மோன்கள் அனைத்துக்கும் கொலஸ்ட்ரால் தேவை. நம் இனம் தளைத்தோங்க உதவும் இனப்பெருக்க ஹார்மோன்களுக்கு கொலஸ்ட்ரால் தேவை.

    இதன் காரணமாகத் தான் நாம் உண்டாலும் உண்ணாவிரதத்தில் இருந்தாலும் கொலஸ்ட்ராலை நமது கல்லீரல் உற்பத்தி செய்யும் ஆற்றலுடன் விளங்குகிறது.

    இதய நோய்க்கும் இதய ரத்த நாள அடைப்புக்கும் மூளை ரத்த நாள அடைப்புக்கும் உணவில் மாவுச்சத்து அதிகமாக உட்கொள்வதும், இனிப்பு சுவை கொண்ட உணர்வுகளுக்கு அடிமையானதும், மது புகை போன்ற போதை வஸ்துகளும், உடல் உழைப்பற்ற மன அழுத்தம் நிரம்பிய பணத்தை மட்டுமே நோக்கி ஓடக்கூடிய நமது வாழ்க்கை முறை தான் காரணம்.

    அதை விடுத்து முட்டையில் உள்ள மஞ்சள் கரு மேல் மட்டும் பழியைப் போட்டு நாம் தப்பித்துக்கொள்ள முடியுமா ? கொலஸ்ட்ராலை வில்லனாகப் பார்க்கும் போக்கு மாற வேண்டும்.

    - டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா

    • குறட்டை வராமல் தடுக்க தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.
    • மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

    நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை தூங்கும்போது மட்டும் வருகிறது. ஏனெனில், தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான்.

    அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.

    சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சினை, உடல் பருமன், கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகள் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு. புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு.

    குறட்டையைச் சாதாரணமானது என்று அலட்சியப்படுத்தவும் முடியாது. இதில் ஆபத்தும் உள்ளது. குறட்டையின் சத்தம் ஒரே சீராக இல்லாமல், அடிக்கடி கூடிக் குறைவதுடன், சில நேரம் அறவே சத்தம் இல்லாமல் போவது 'அப்ஸ்டிரக்டிவ் ஸ்லீப் ஏப்னியா' எனப்படும். அப்போது மூச்சுக் குழாயில் முற்றிலுமாக அடைப்பு ஏற்பட்டு, ஒட்டுமொத்த சுவாசமும் நின்றுவிடும். இதனால், மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக்குறைந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நின்றுவிடும்.

    ஆனால், இந்த மாதிரி நேரத்தில் மூளை விழித்துக்கொண்டு, உடலில் ஒருவித அதிர்வை உண்டாக்கி, சுவாசப்பாதை மீண்டும் திறந்து கொள்ள வழி செய்து விடுகிறது. இதனால்தான், தூங்கிக் கொண்டிருப்பவரின் குறட்டைச் சத்தம் திடீரென்று நின்றுவிடுவதும், அடுத்த சில நொடிகளில் அவர் உடம்பைக் குலுக்கிக் கொண்டு மீண்டும் சுவாசிக்கத் தொடங்குவதும் நிகழ்கிறது.

    குறட்டை வராமல் தடுக்க தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    மல்லாந்து படுக்க வேண்டாம்.

    ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.

    உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

    மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

    மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்.

    தேவையில்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடக் கூடாது.

    - அருண் நாகலிங்கம்

    • பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
    • பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.

    நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

    நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

    நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

    நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

    நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

    இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

    பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

    - அருள் ராம்

    • திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள்.
    • உலகிலேயே போர்ச்சுகல் நாட்டில் தான் அதிகளவு திருமண முறிவுகள் நடக்கின்றன.

    திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். ஒரு காலத்தில் அரிதாக காணப்பட்ட விவாகரத்து இன்று அதிகரித்து விட்டது. காதல் திருமணம் செய்தவர்கள் கூட பிரிந்து சென்று விடுகிறார்கள். உலகிலேயே போர்ச்சுகல் நாட்டில் தான் அதிகளவு திருமண முறிவுகள் நடக்கின்றன. இதில் இந்தியா கடைசி இடத்தில் இருப்பது ஆறுதலான விசயம்.

    நாடுகள் வாரியாக விவாகரத்து விகிதம்:

    இந்தியா: 1%

    வியட்நாம்: 7%

    தாஜிகிஸ்தான்: 10%

    ஈரான்: 14%

    மெக்சிகோ: 17%

    எகிப்து: 17%

    தென்னாப்பிரிக்கா: 17%

    பிரேசில்: 21%

    துருக்கி: 25%

    கொலம்பியா: 30%

    போலந்து: 33%

    ஜப்பான்: 35%

    ஜெர்மனி: 38%

    யுனைடெட் கிங்டம்: 41%

    நியூசிலாந்து: 41%

    ஆஸ்திரேலியா: 43%

    சீனா: 44%

    யுனைடட் ஸ்டேட்ஸ்: 45%

    தென் கொரியா: 46%

    டென்மார்க்: 46%

    இத்தாலி: 46%

    கனடா: 47%

    நெதர்லாந்து: 48%

    ஸ்வீடன்: 50%

    பிரான்ஸ்: 51%

    பெல்ஜியம்: 53%

    பின்லாந்து: 55%

    கியூபா: 55%

    உக்ரைன்: 70%

    ரஷியா: 73%

    லக்சம்பர்க்: 79%

    ஸ்பெயின்: 85%

    போர்ச்சுகல்: 94%

    -சி.பி. சரவணன்

    • அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும்.
    • பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும்.

    ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பிறந்து சித்திரை மாதம் 21-ஆம் நாள் முதல் வைகாசி மாதம் 14-ஆம் நாள் வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை "அக்னி நட்சத்திரம்" என்று சொல்வர்.

    அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை. என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் காலில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறும்.

    இவ்வருட அக்னி நட்சத்திர காலம் சோபகிருது வருடம் சித்திரை:21, மே 4 ந்தேதி துவங்கி, வைகாசி:15 மே 29 ந்தேதி நிவர்த்தியாகிறது.

    இந்த காலத்தில் சூரியனின் வெப்பம் அதிகரிக்கும் நேரம். அப்போது சூரியனுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுக்கப்படுகிறது. சூரியன் என்பது விண்மீன் தான். மற்ற காலங்களில் நாம் அதனை சூரியன் என்கிறோம்.

    அக்னி நட்சத்திரம் என்பது சூரியனுடைய சஞ்சாரம் தொடர்பாக அமையும் காலப்பகுதியாகும். பெரும்பாலும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும் வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இணைந்த பகுதியாகும்.

    இந்நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும், இடையில் ஏழு நாட்கள் மிக அதிகமாகவும் கடைசி ஏழு நாட்கள் சுமாராகவும் வெப்பத்தை தரும்.

    இந்த காலகட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளில் வெப்பத்தின் காரணமாக வெடிப்புகள் ஏற்படும். அதன்வழியாக பூமியின் வெப்பம் வெளியேறும். அந்தப் பிளவுகளில், காய்ந்த இலைகளும் சருகுகளும் நுழைந்துவிடும். அக்னி நட்சத்திரம் முடிந்து வைகாசி பிற்பகுதியில் வீசும் காற்றால் பூமி குளிரும்.

    அதனையொட்டி மழை பெய்தால், நிலத்தின் வெடிப்புகள் மூடப்பட்டுவிடும். இதனை "கர்ப்ப ஓட்டம்' என்பார்கள். இந்த முறையில் இயற்கையாகவே வயலுக்கு நல்ல உரம் கிடைக்கிறது. அடுத்த வேளாண்மைக்கு வயல் வளம் பெற்றுவிடுகிறது.

    பொதுவாக சித்திரை, வைகாசி மாதங்களில் பூமியானது சூரியனுக்கு அருகே செல்வதால் வெப்பம் கடுமையாக இருக்கிறது. ஜோதிட ரீதியில் காணும்போது, உத்திராயண புண்ணிய காலத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்கிறார்.

    இதன்படி தை ஒன்றாம் நாள் முதல் தன் வடக்குத் திசைப் பயணத்தைத் தொடங்குவார். சித்திரை ஒன்றாம் தேதி அவர் பூமிக்கு நெருக்கமாக இருப்பார். ஆனி மாதக் கடைசியில் அவர் வடகோடி எல்லையை அடைந்துவிடுகிறார். வெயிலின் கடுமை அதிகமாக இருப்பதால் இதைக் கத்திரி வெயில் என்று குறிப்பிட்டார்கள்.

    -சிவசங்கர்

    • சாக்ரடீஸ் ஒருமுறை கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.
    • ஆடம்பர மோகத்தில் அத்தியாவசியத்தை தவற விட்டு விடக்கூடாது.

    சாக்ரடீஸ் ஒருமுறை கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்ஸின் அங்காடித் தெருக்களில் சுற்றிக்கொண்டே வந்தார்.

    நாலைந்து தெருக்களின் உள்ளே நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் கூர்ந்து கவனித்தார். எதுவும் வாங்கவில்லை.

    பின்னர், மறுநாளும் அங்காடித் தெருவில் நுழைந்து கடைகளில் உள்ள பொருட்களைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் நடந்து சென்று விட்டார்.

    இப்படியே ஒரு வாரமாக அங்காடித் தெருக்களில் பல கடைகளை சுற்றிப் பார்த்து விட்டுச்சென்று விட்டார்.

    ஏழாம் நாள்... சாக்ரடீஸ் அங்காடித் தெருவில் உலா வருவதைக்கண்ட ஒரு கடைக்காரர்,

    "அய்யா நானும் கடந்த ஆறு நாட்களாகப் பார்த்துக்கொண்டே வருகிறேன். கடைத்தெரு வழியே வருகிறீர்கள்.. கடையில் உள்ள பொருட்களைப் பார்க்கிறீர்கள்.. ஆனால் இது நாள் வரையிலும் எந்தப் பொருளையும் வாங்கவே இல்லை!

    உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டும் என்று சொன்னால், நான் அந்தப் பொருளை வரவழைத்துத் தருவேனே?" என்று கேட்டார்.

    அதற்கு சாக்ரடீஸ், அன்புள்ளம் கொண்ட கடைக்காரரே... இங்குள்ள பல கடைகளில் உள்ள பொருட்கள் எவையும் என் வீட்டில் இல்லை!

    'இந்தப் பொருட்கள் எவையும் இல்லாமல் என்னால் வாழ முடிகிறதே!' என்று எண்ணிப் பார்த்து ஒவ்வொரு நாளும் மகிழ்கிறேன்... எனக் கூறினாராம்.

    கடைக்காரர் வியந்துபோய் விக்கித்து நின்று விட்டாராம்!

    ஆம், நமது வாழ்க்கைக்கு தேவைப்படாத பொருட்கள் நம்மிடம் இருப்பதை விட இல்லாதபோது தான் அதிக சந்தோஷத்தை கொடுக்கும்...

    ஆகவே, ஆடம்பர மோகத்தில் அத்தியாவசியத்தை தவற விட்டு விடக்கூடாது...

    - ஜோசப் அந்தோணி ராஜ்

    • பேப்பரை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அப்படியே பூஜை அறையில் ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள்.
    • நீங்கள் அந்த பேப்பரில் எழுதிய விஷயம் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

    எந்த பிரச்னையாக இருந்தாலும் தீர்ப்பதற்கு எளிய வழி இருக்கிறது.

    பச்சைக் கற்பூரத்தையும் படிகாரத்தையும் வீட்டில் இப்படி வைத்தால் பற்றாக்குறையாகவே இருக்கும் பணம் பல மடங்கு உங்களிடத்தில் சேமிப்பாக தங்கும்.

    இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு தேவையான பொருள் 2.

    சிறிதளவு பச்சை கற்பூரம்,

    ஒரு சிறிய துண்டு படிகாரம்.

    முதலில் இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

    அதில் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனையை எழுத வேண்டும்.

    அது எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, கடன் தொல்லை ஆக இருக்கலாம். வேலை கிடைக்காமல் இருக்கலாம். வருமானம் குறைவாக இருக்கலாம். உங்கள் வீட்டில் சுப காரிய தடை இருக்கலாம். உங்கள் பிள்ளை சரியாக படிக்காமல் இருக்கலாம். எதுவாக இருக்கட்டும்.

    எடுத்து வைத்திருக்கும் வெள்ளை காகிதத்தில் உங்களுடைய பிரச்சனையை சுருக்கமாக எழுதி அந்த காகிதத்திற்கு நடுவே ஒரு பச்சைக் கற்பூரத்தையும், ஒரு சிறிய துண்டு படிகாரத்தையும் வைத்து அந்த பேப்பரை மடித்து கொள்ளுங்கள்.

    இந்த பேப்பரை ஒரு மஞ்சள் துணியில் கட்டி அப்படியே பூஜை அறையில் ஒரு அலமாரியில் வைத்து விடுங்கள்.

    அவ்வளவு தான். இந்த பரிகாரத்தை செய்யும்போது நீங்கள் உங்களுடைய குல தெய்வத்தை மட்டும் மனதார நினைத்து கொண்டால் போதும்.

    உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் இன்னல்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விடிவுகாலம் பிறக்கும். குறிப்பாக அந்த பேப்பரில் உங்களுடைய பிரச்சினையை எழுதி வைத்துள்ளீர்கள் அல்லவா. அந்த பிரச்சனையை இந்த பிரபஞ்சம் சீக்கிரத்தில் தீர்த்துக் கொடுக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

    இது ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

    நீங்கள் அந்த பேப்பரில் எழுதிய விஷயம் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

    - ஆர்.எஸ். மனோகரன்

    • உங்களால் சுலபமாக தூக்கக்கூடிய பொருள் கூட உங்களை வென்று விடுகிறதல்லவா!
    • ஒரே எடை கொண்ட டம்ளர் எப்படி தன் பாரத்தைக் கூட்டிக்கொண்டே போனது எனப் பார்த்தீர்களா?.

    மனோதத்துவ வல்லுனர் ஒருவர் சிறப்பு அழைப்பாளராக அந்த கல்லூரிக்கு வந்திருந்தார். ஒரு வகுப்பில் பாடம் எடுக்க வந்தார்.

    மாணவர்கள் இந்த ஆள் ஏதோ பெரிய பிரசங்கத்தை எடுத்து கடுப்பேத்தப்போகிறார் என நினைத்தனர்.

    வல்லுனர் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு தன் உதவியாளரிடம் சொன்னார். அவரும் ஒரு கண்ணாடி டம்ளரில் குடிநீர் கொண்டு வந்தார்.

    வல்லுனர், "நான் பெரிதாக உங்களிடம் எதுவும் பேசப்போவதில்லை. இந்த குடிநீர் டம்ளரை வைத்து ஒரு சின்ன பரிசோதனை செய்யப்போகிறோம்" என்றார்.

    மாணவர்கள் குழம்பிப் போயினர். இது என்ன வேதியியல் வகுப்பா?. இவர் இதை வைத்து என்ன பரிசோதனை செய்யப் போகிறார்?. என ஆவலுடன் காத்திருந்தனர்.

    ஒரு மாணவனை தன் அருகே அழைத்தார். கையை நீட்டச் சொல்லி அவன் கையில் அந்த தண்ணீர் டம்ளரை வைத்தார். "எவ்வளவு பாரமாக இருக்கிறது?'' எனக் கேட்டார்.

    மாணவன் இது ஒன்றும் பாரமில்லை என்றான். அப்படியே வைத்திருக்குமாறு சொல்லிவிட்டு தன் கையில் இருந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டார்.

    பத்து நிமிடம் ஆனவுடன் அந்த மாணவனிடம் "டம்ளர் பாரமாக இருக்கிறதா?'' எனக் கேட்டார். "ஆமாம்.. கொஞ்சம் பாரமாக ஆகிவிட்டது'' என மாணவன் சொன்னான்.

    அரைமணி நேரம் கையில் வைத்திருந்தவன் "கைகள் இந்த பாரத்தை சுமக்கும் வலிமையை இழந்துவிட்டது'' எனச் சொல்லி டம்ளரை கீழே வைத்துவிட்டான்.

    வல்லுனர் மாணவர்களிடம் "ஒரு மணி நேரம் இந்த டம்ளரை கையில் வைத்திருந்தால் என்ன ஆயிருக்கும்..'' என கேட்டார்.

    மாணவர்கள் "அந்த டம்ளரின் எடை ஒரு டன் அளவிற்கு கூடியிருக்கும்'' என்றனர்.

    "ஒரு நாள் வைத்திருந்தால்..?''

    "அந்த பாரம் நம்மை அழுத்தியிருக்கும்''.

    "இரண்டு நாள் வைத்திருந்தால்..?''

    "மயங்கி கீழே விழுந்திருப்போம். மருத்துவமனைக்கு செல்லும் நிலை வந்திருக்கும்'' என்றனர்.

    வல்லுனர் சொன்னார்.. "ஒரே எடை கொண்ட டம்ளர் எப்படி தன் பாரத்தைக் கூட்டிக்கொண்டே போனது எனப் பார்த்தீர்களா?.

    உங்களால் சுலபமாக தூக்கக்கூடிய பொருள் கூட உங்களை வென்று விடுகிறதல்லாவா!. அதனால் மிக சாதாரணமான எண்ணங்கள் என நினைத்து நீங்கள் முதலில் சேர்த்து வைக்கிறீர்கள். அதுவே நாட்கள் செல்ல செல்ல பாரம் கூடி உங்களையே அழித்து விடுகிறது'' என்றார்.

    மாணவர்கள் கைதட்டி அவர் கருத்தை வரவேற்றனர். அதனால் எல்லா எண்ணங்களையும் அதன் முதல் கட்டத்திலேயே இறக்கி வைத்துவிடுங்கள். அப்போது தான் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

    - சதீஸ்

    • உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் பப்பாளி.
    • பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக்குணங்கள் நிறைய உள்ளன.

    செரிமானமடைய வைக்கும் பப்பாளியின் என்சைம், பப்பாளி பழத்தில் உள்ளது. அதனால் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய இப்பழம் உதவும்.

    பப்பாளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் காரணமாக உடலில் மூப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது. இளமையான தோற்றத்தைத் தக்க வைக்கிறது.

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் இது. இதில் குறைந்த அளவு கலோரியும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.

    நார்ச்சத்து மிக்கது, உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும். கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும் என்சைம்களைக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

    வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். காய்ச்சல், சளி, நாள்பட்ட காய்ச்சலுக்கு இது சிறந்த நிவாரணி.

    டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பப்பாளி இலைச்சாறைப் பருகக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், டெங்கு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரத்த அணுக்கள் பெருகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பப்பாளி பழத்தில் இருக்கும் அழற்சியைத் தடுக்கும் என்சைம்கள் மூட்டுவலியைக் குறைப்பதற்கு உதவுகின்றன. இதிலிருக்கும் மேலும் சில என்சைம்கள் புற்றுநோய் வருவதைத் தடுப்பதிலும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக்குணங்கள் நிறைய உள்ளன. குடல் புழுக்களை அகற்றுவதில் பப்பாளி விதைகள் பெரும் பங்காற்றுகின்றன.

    பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளிகளில் வருவதற்கு பப்பாளி பழம் உதவுகிறது.

    - கலை தமிழ் பாலா

    • இந்தியாவில் மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
    • மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்க அதற்கு மூலகாரணமான கொசுக்களை ஒழிக்க வேண்டும்.

    இன்று உலக மலேரியா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மலேரியா காய்ச்சல் பரவுவதை தடுக்கவும், அதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏறபடுத்தவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    மனிதர்களுக்கு வாழ்க்கையில் நோய், பிரச்சினை என எதுவாக இருந்தாலும் வந்தபின் காப்பதைவிட, வரும்முன் காப்பதே என்றும் சிறந்தது. அந்த வகையில் உலகில் மனிதர்களை ஏராளமான தொற்று நோய்கள், வைரஸ் காய்ச்சல்கள் அச்சுறுத்துகின்றன. இதில் மலேரியா காய்ச்சலும் ஒன்றாகும். அனாபிளஸ் வகை பெண் கொசுக்கள் கடிக்கும்போது மனிதர்களுக்கு மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது. அதாவது, அனாபிளஸ் வகை பெண் கொசு கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது 'பிளாஸ்மோடியம்' என்ற 5 வகையான ஒட்டுண்ணிகள் மனிதனின் ரத்தத்துடன் கலந்துவிடுகிறது. இதையடுத்து அந்த ஒட்டுண்ணிகள் ரத்தத்தின் சிவப்பணுக்களை தாக்கி மலேரியா காய்ச்சலை உண்டாக்குகிறது. மலேரியா காய்ச்சலின் அறிகுறிகளாக தலை சுற்றல், வாந்தி, சுவாசித்தலில் சிரமம், கடுங்குளிர் ஏற்படும்.

    இந்த காய்ச்சலின் தீவிரத்தால் மரணம்கூட ஏற்படும். ஆனால் மலேரியா காய்ச்சலை முன்னரே அறிந்து தகுந்த சிகிச்சை பெற்றால் குணப்படுத்திவிடலாம். ஊட்டச்சத்து உணவுகள், பழங்கள் சாப்பிட்டு ரத்த சிவப்பணுக்களை வலுவடைய செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் மலேரியா காய்ச்சலை விரட்டலாம். இந்தியாவில் மலேரியாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 15,000 என்று உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மேலும் 2010-ல் ஒரு ஆண்டில் மட்டுமே உலகளவில் 6,55,000 பேர் மலேரியாவால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆவர்.

    எனவே, மலேரியா காய்ச்சல் வராமல் தடுக்க அதற்கு மூலகாரணமான கொசுக்களை ஒழிக்க வேண்டும். இதற்கு நம் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மழைகாலங்களில் டயர், பிளாஸ்டிக் பொருட்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளில் மருந்து தெளித்து மூடிவைக்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். இரவு தூங்கும்போது அவர்களுக்கு கொசுவலை பயன்படுத்துவது நல்லது.

    2007-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு, ஏப்ரல் 25-ந்தேதியை உலக மலேரியா தினமாக கடைப்பிடிப்பதாக அறிவித்தது. இதைதொடர்ந்து 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ந்தேதி உலக மலேரியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    ×