என் மலர்
மற்றவை
- உங்களை கொஞ்சி நாவால் வருட ஆரம்பித்தால், அதற்கு பசி என்று புரிந்து கொண்டு, அதன் பசியை போக்குங்கள்.
- நாய்களின் எச்சிலில் பாக்டீரியாக்களை கொல்லும் நொதிகள் உள்ளது.
நீங்கள் வீட்டில் வளர்க்கும் நாயை, நிச்சயம் கொஞ்சி மகிழ்ந்திருப்பீர்கள். அதேபோல, உங்களது நாயும், உங்களோடு விளையாடி இருக்கும்.
அதுசரி...! நாய்கள் ஏன் மனிதர்களை கொஞ்சி, முத்தம் கொடுக்கிறது, நாவால் வருடுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா...? அதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள்.
* குட்டி நாய்கள் பசிக்கும்போது, அதை வெளிப்படுத்த தெரியாமல், உரிமையாளரை கொஞ்சி நாவால் வருட ஆரம்பிக்குமாம். ஆகவே உங்கள் வீட்டில் குட்டி நாய் இருந்தால், அது உங்களை கொஞ்சி நாவால் வருட ஆரம்பித்தால், அதற்கு பசி என்று புரிந்து கொண்டு, அதன் பசியை போக்குங்கள்.

* சில நேரங்களில் நாய்கள் தங்களது உணர்ச்சியை முத்தம் கொடுத்தும், நாவால் வருடுவதன் மூலமும் வெளிப்படுத்தும். உதாரணமாக, வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினாலும், கடைகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினாலும் நாய்கள் ஓடி வந்து, உங்களை கொஞ்ச ஆரம்பிக்கும். ஏனெனில் அது உங்களை அவ்வளவு நேசிக்கிறது. ஆகவே நீங்கள் வந்த சந்தோஷத்தை கொஞ்சுவதன் மூலம் வெளிப்படுத்துகிறது.
* நாய்களுக்கு காயம் அல்லது வலி இருந்தால், அதனை சரிசெய்ய, அது தம்மை தாமே நாவால் வருடிக்கொள்ளும். ஏனெனில் நாய்களின் எச்சிலில் பாக்டீரியாக்களை கொல்லும் நொதிகள் உள்ளது. இருப்பினும் அதிகமாக நக்கும்போது, அது காயத்தை இன்னும் பெரியதாக்கிவிடும். எனவே நாய்கள் அப்படி காயத்தின் மீது நாவால் வருட ஆரம்பித்தால், உடனே மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளித்து, கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

* மனிதர்களின் உடலில் சுரக்கும் உப்பின் சுவையானது நாய்களுக்கு பிடிக்கும். அதன் காரணமாகவும், நாய்கள் அவ்வப்போது நாவால் வருடுகின்றன.
* நாய்கள் கூட மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும். இத்தகைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு, நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்துவதற்கு, நாய்கள் தம்மை தாமே நாவால் வருட ஆரம்பிக்கும்.
- அருமையான வாழ்க்கை. நல்ல உணவு. மகிழ்ச்சியான ஆட்டம் பாட்டம்.
- பணியாள் சில நாட்கள் விடுமுறை கேட்டுப் போனான்.
கடவுளின் பணியாளன் அவரிடம் சில நாட்கள் விடுமுறை கேட்டான். கடவுள் கொடுத்தார்.
"நீ திரும்பி வந்ததும், நீ கண்டவற்றையும், கேட்டவற்றையும் பொய்யில்லாமல் சொல்ல வேண்டும்" என்று கூறி அவனை அனுப்பினார்.
ஒரு வாரத்திற்குப் பின் பணியாளன் திரும்பி வந்தான்.
"நாட்களை எப்படிக் கழித்தாய்?' என்று கேட்டார் கடவுள்.
"அருமையான வாழ்க்கை. நல்ல உணவு. மகிழ்ச்சியான ஆட்டம் பாட்டம். ஆனால் அங்கு யாருமே உங்களைப் பற்றிப் பேசவில்லை. அது எனக்கு வியப்பளித்தது" என்றான் பணியாள்.
ஆறு மாதங்கள் சென்றன. பணியாள் சில நாட்கள் விடுமுறை கேட்டுப் போனான். ஆனால் அடுத்த நாளே திரும்பி வந்தான். கடவுள் அதன் காரணத்தைக் கேட்டார்.
"கடவுளே! அங்கு எதுவுமே சரியில்லை. மக்கள் வறுமையால் வாடுகின்றனர். தொற்றுநோய் பரவியுள்ளது. சிலர் மடிந்தனர். எங்கும் கடவுளே! கடவுளே! என்ற குரல்கள் ஒலிக்கின்றன. அதனால் நான் உடனே வந்துவிட்டேன்" என்றான் பணியாள்.
"துன்பம் வந்தால்தான் மக்களுக்கு என் நினைவு வரும். ஓயாமல் என்னை அழைப்பார்கள், வேண்டுவார்கள்" என்றார் கடவுள்.
இது ஒரு பிரெஞ்சு கதை.
-சச்சிதானந்தம்
- நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது.
- வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.
மருத்துவ குணம் நிறைந்த உணவுகளில் வாழைத்தண்டு மிக சிறந்த உணவாகும். . சிறுநீரக கற்களை நீக்கவும், உடல் எடை அதிகரிக்க காரணியாக இருக்கும் கொழுப்பை கரைக்கவும் பெருமளவு வாழைத்தண்டு உதவுகிறது.
மருத்துவ ரீதியாக வாழைத்தண்டினை உபயோகிக்கும் முறை:
வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும். நீர் எரிச்சல், நீரில் இரத்தம் கலந்து போவதைக் குணப்படுத்தும்.
வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும். கோடைக் காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்பம் குறையும். இது உடலில் உள்ள நச்சுப் பொருளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும் ஒரு சிறந்த மருந்தாகும். வாழைத்தண்டு சாறு ஒரு நாள் மற்றும் பார்லி கஞ்சி ஒரு நாள் என்று சாப்பிட்டு வர சிறுநீர்க்கற்கள் பொடிப்பொடியாகி சிறுநீருடன் வெளியேறும்.
வாழைத்தண்டு சூப் (வாழைத்தண்டு சிறு துண்டுகள், இஞ்சி, எலுமிச்சைச் சாறு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் ஆகியவற்றை கொதிக்கவைத்து சூப் செய்துகொள்ளவும்.) 200 மி.லி. வாரத்தில் மூன்று நாள் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்து குறையும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகவும் உணவாகவும் உள்ளது. வாழைத்தண்டுடன் வாழைப்பூ சேர்த்து உட்கொண்டால் மாதவிடாய் கோளாறுகளால் உண்டாகும் அதிகப்படியான இரத்தப் போக்கு, வயிற்று வலி நீங்கும்.
வாழைத்தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள் ஆறும். வாழைத்தண்டு சாற்றுடன் திரிபலா சூரணம் சேர்த்து அருந்த மலச்சிக்கல் நீங்கி அதனால் ஏற்பட்ட மூல நோய் மற்றும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
சிறுநீரை அதிகரிக்கச் செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. வாழைத்தண்டை வாரத்தில் மூன்று நாள்களுக்கு மேல் சேர்த்துக் கொள்வது உசிதமல்ல. வாழைத்தண்டு குளிர்ச்சியானது என்பதால், அதை உண்ணும் நாட்களில் மற்ற குளிர்ச்சியான பொருள்களைக் குறைத்துக்கொள்ளவும்.
-ஆறுமுகம் கென்னடி
- ஒரு தலைமுறை என்பது இருபது ஆண்டுகள் என்று வைத்துள்ளார்கள்.
- ஏழு தலைமுறைக்கு எழுச்சி வேகம் பெறும்.
கேள்வி: மகரிஷி அவர்களே முன் ஏழு பிறவி பின் ஏழு பிறவிகள் என்று சொல்கிறார்களே அதன் பொருள் என்ன?
பதில்: பிறவிகள் ஏழு மட்டும் என்பதல்ல. அவை பெருங்கடலாக நீளும். செயல்பதிவு அல்லது வினைப்பதிவு என்பது ஒரு முறை நம்மிடம் பதிந்துவிட்டதென்றால், அது மீண்டும் பிரதிபலிக்காமல் செயலிழக்கச் செய்ய ஏழு தலைமுறைகள் ஆகும்.
அதாவது ஒரு தலைமுறை என்பது இருபது ஆண்டுகள் என்று வைத்துள்ளார்கள். ஒரு செயலின் பதிவுக்கு நூற்று நாற்பது ஆண்டுள்ளவரை திரும்பத் திரும்பப் பிரதிபலிக்கும் வேகம் உண்டு. அதன் பிறகு அது வான்காந்த ஆற்றலால் தானாகவே மறைந்துவிடும்.
இதில் எந்தத் தலைமுறையில் அந்தப் பதிவுக்குப் பிரதிபலிக்கும் வாய்ப்பைக் கொடுத்தாலும், அந்தப் பதிவைப் புதுபித்துக் கொண்டதாகும். அங்கிருந்து அது மேலும் ஏழு தலைமுறைக்கு எழுச்சி வேகம் பெறும். அதனாலேயே ஒரு செயலின் பதிவுக்கு ஏழு தலை முறைகளிலும் விளைவு வரும் என்பதை ஏழு பிறவிகள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
தனக்கு முன்பு தாய் தந்தை வழியாக ஏழு தலை முறைகளில் பெற்ற பதிவை முன் ஏழு பிறவி என்றும், அப்பதிவுகள் புதுப்பிக்கப்பட்டாலோ அல்லது புதியன செய்தாலோ அவை மேலும் ஏழு தலை முறைகள் தொடரும் என்பதைப் பின் ஏழு பிறவிகள் என்றும் கொள்ள வேண்டும்.
- வேதாத்திரி மகரிஷி.
- பொய்மை, கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை.
- எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர்.
1 . பெண் இன்றிப் பெருமையும் இல்லை, கண் இன்றிக் காட்சியும் இல்லை.
2 . பெண் கிளை, பெருங்கிளை.
3 . பெண் மிரண்டால் வீடு கொள்ளாது.
4 . பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
5 . பெண்ணுக்கு பொன் இட்டுப் பார்.
6 . பெண்ணுக்கு முன் பூட்டிக் கொள்.
7 . பெண் பாவம் பொல்லாதது .
8 . பெண் வாழ, பிறந்தகம் மகிழ.
9 . பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி - வில்சன் மிஸ்னர்.
10 . காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம் - ஷேக்ஸ்பியர்.
11 . பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப் போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள் - வேட்லி.
12. பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது - நேரு.
13 . பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது - லார்ட் பைரன்.
14 . பொய்மை, கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள் பெரிதும் வெறுப்பவை - ஷேக்ஸ்பியர்.
15 . பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது - ஷேக்ஸ்பியர்.
16 . பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்தலே குடும்ப இன்பத்தின் அடிப்படை - லாண்டர்.
17 . எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்
18. தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்
19 . பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் - தேசிக விநாயகம் பிள்ளை.
20 . ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம், கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்.
-ஜோசப் அந்தோணி ராஜ்
- பெரிய பணக்காரர் ஆனதும் பெரியவருக்கும் மகனுக்கும் சொத்து பணம் குறித்து கருத்து வேறுபாடு.
- பெரியவர் மகனுக்கு ஒரு கழுதை குட்டியையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து துரத்தி விட்டார்.
ஒரு பெரியவரும் மகனும் ஒரு மகான் சமாதியை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
சுத்தமாக பராமரித்தார்கள். வேறு எந்த வேலையும் இல்லாததால் அங்கேயே இருந்து நன்றாக பராமரித்தார்கள்.
மகானின் புகழ் பரவ ஏராளமான கூட்டம்.
காணிக்கை குவிந்தது.
பெரிய பணக்காரர் ஆனதும் பெரியவருக்கும் மகனுக்கும் சொத்து பணம் குறித்து கருத்து வேறுபாடு.
பெரியவர் மகனுக்கு ஒரு கழுதை குட்டியையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து துரத்தி விட்டார்.
மகன் வேறொரு ஊரில் வந்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
கழுதை குட்டியை கொன்று புதைத்து, கையில் இருக்கும் பணத்தை கொண்டு சமாதி எழுப்பி, மகானின் சமாதி என்று கூறி எல்லோரையும் நம்ப வைத்தான்.
கூட்டம் வர ஆரம்பித்தது. புகழ் பரவியது.
அவனும் விரைவில் பணக்காரன் ஆகி விட்டான்.
கேள்விப்பட்ட பெரியவர் அவனை வந்து பார்த்து எப்படி இந்த வளர்ச்சி என்று கேட்டார்.
மகனும் உண்மையை சொன்னான். கழுதை குட்டி தான் இங்கே மகான் என்று சொல்லி சிரித்தான்.
பெரியவரும் சிரித்தார். அங்கே என் சமாதியில் இருப்பது இந்த கழுதை குட்டியின் தாய்தான் என்றார்.
மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள்..?
யார் எதைச் சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்புகிறார்கள் சுய சிந்தனை இல்லாமல்.
ஓஷோவின் இக்கதையை சுவைபட சொன்னவர் தென்கச்சி சுவாமிநாதன்.
- ஒரு ஏழை சிறுவனைத் தவிர...
- நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகின்றேன் என்றான்.
அமெரிக்காவில் ஒரு தேவாலயத்தில் பாதிரியார் ஒருவர் " நாம் அனைவரும் சொர்க்கத்திற்கு செல்வதற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும் " என்று போதனை செய்தார்.
அவர் தன் உரையை முடித்தவுடன் " யாரெல்லாம் சொர்க்கத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள் ? " என்று கேட்டார். அனைவரும் கை தூக்கினர். ஒரு ஏழை சிறுவனைத் தவிர..
உடனே அந்த பாதிரியார் அந்தச் சிறுவனிடம், " தம்பி நீ சொர்க்கம் செல்ல விரும்பவில்லையா? நரகம்தான் செல்ல விரும்புகிறாயா" என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுவன், " சொர்க்கத்தையும் விரும்பவில்லை நரகத்தையும் விரும்பவில்லை, நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக விரும்புகின்றேன் " என்றான்.
உடனே கோபம் கொண்ட பாதிரியார் " இந்தச் சிறிய வயதில் மனம் கடவுளை விட பதவியைத்தான் விரும்புகிறதா?" என்று கேட்டார்.
அந்தச் சிறுவனோ அமைதியாக "இங்கே கருப்பு இன மக்களை நாயை விட கேவலமாக கொடுமையான முறையில் நடத்துகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய அமெரிக்க ஜனாதிபதி என்ற அதிகாரம்தான் சரியாக இருக்கும்" என்று கூறினான். அவன் சொன்னதோடு மட்டுமல்லாமல் செய்தும் காட்டினான். அந்தச்சிறுவன்தான் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.
-சந்திரன வீராசாமி
- ராகு-கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை.
- சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும்.
ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை?
ராகு காலம் என்று சொல்கிறோம். கேது காலம் என்பது இல்லை என்று சொல்லக் கூடாது. அதனைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம்.
நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு (ஆட்சி) உண்டு. ராகு-கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமைகள் இல்லை. அப்படியென்றால் ராகு- கேது பலமில்லாத கிரகங்களா? அல்ல!
நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும், அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம்.
ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.
சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் -ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும்.
-ஆர். குருமூர்த்தி
- எத்தனை பெற்றோர்கள் அதை சாதிக்கிறார்கள்.
- பொருத்தத்தை பெற்றோர்களின் இதயம் தீர்மானிப்பதில்லை.
தனது பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் பெற்றோர்கள் முதலில் சொல்கிற ஒரு வார்த்தை,
'என் மகனுக்கு எல்லா விதத்திலும் பொருத்தமான பெண்ணாக பார்த்து மணம் முடிக்க வேண்டும்' என்பதுதான்.
நியாயமான ஆசைதான்..
ஆனால், எத்தனை பெற்றோர்கள் அதை சாதிக்கிறார்கள்.?
பெரும்பாலும், எந்த பெற்றோர்களாலும் அதை சாதிக்க முடியாது.
காரணம், 'பொருத்தம்' என்பதை தீர்மானிப்பது, பெற்றோர்களின் மனம்.
இதயமல்ல..
பொருத்தத்தை பெற்றோர்களின் இதயம் தீர்மானிப்பதில்லை.
தேடுகிறார்கள்..
தேடி தேடி கடைசியில் அனைத்தும் பொருத்தமாக உள்ளது என்று ஒரு பெண்ணை, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இப்படி நடக்கும் திருமணங்களில்,
கணவன் மனைவி இருவரும் அமைதியாக வாழ்வது போல் வெளி பார்வைக்கு தெரிந்தாலும் அக வாழ்க்கையில் எலியும், பூனையுமாக, வாழ்வது போன்ற வாழ்க்கை தான் பெரும்பாலும் அமைந்து விடும்.
அன்பு, நேசம், பாசம் இந்த உணர்வுகளை வைத்துதான், இறைவன் மனிதனை படைத்திருக்கிறான்.
பெற்றோர்கள் இவற்றை நினைத்துப் பார்ப்பதில்லை.
அவர்களது ஆசைதான் இங்கு 'தலைமை பீடத்தில்' இருக்கிறது.
இயற்கையின் காந்த தத்துவம் என்ன சொல்கிறது என்றால்,
"மாறுபட்ட துருவங்களுக்கு தான் ஈர்ப்பு சக்தி உள்ளது.
பொருத்தமான ஒத்த துருவங்களுக்கு விலக்கும் தன்மை தான் உள்ளது."
உடல் ஜீவ காந்தத்தினால் நிரம்பியது.
குணம் என்பதே அந்த காந்தத்தின் துருவ சக்தி.
மாறுபட்ட குண நலன்களை உடைய மணமக்களே, சண்டையிட்டு கொண்டாலும் ஒருவரை ஒருவர் எந்த நிலையிலும் பிரியாமலும், தங்களது அக வாழ்வில் ஈர்ப்புடன் வாழ்கிறார்கள்.
-ஓஷோ
- உடலை நிர்வாகம் செய்வதே மனம் தான்.
- மனிதன் உணர்ச்சிகளை நீக்கி உணர்வுகளில் வாழ முயற்சிக்க வேண்டும்.
மனிதர்களுக்கு இரண்டு வகைகளில் நோய்கள் ஏற்படுகின்றன. உணவு, காற்று, நீர் இவைகளால் உடலுக்கு நோய் உருவாகும். கவலை, துக்கம், பயம், கோபம், பெருமை, பொறாமை, கர்வம் போன்றவை உணர்ச்சிகளாலும் நோய் உருவாகும்.
உடலை நிர்வாகம் செய்வதே மனம் தான். உங்கள் உடலை ஆட்டிப்படைக்கும் கவலை, துக்கம், பயம், கோபம், பெருமை போன்றவை உணர்ச்சிகளே.
உணர்வு பூர்வமாக வாழ்வது என்பது அமைதி, நிம்மதி, சாந்தி, சமாதானம் வாழ்வது. மனிதன் உணர்ச்சிகளை நீக்கி உணர்வுகளில் வாழ முயற்சிக்க வேண்டும்.
கவலை என்கிற உணர்ச்சி மண்ணீரல், வயிறு சம்பந்தப்பட்டது.
பசி என்பது வயிற்றை சார்ந்தது. ஒருவர் நல்ல பசியில் சாப்பிட தொடங்குகிறார். அப்பொழுது கவலையான ஒரு செய்தி வருகிறது. பசி காணாமல் போய் விடுகிறது. கவலை ஒன்று வந்தால் பசி உணர்வு இருக்காது. ஜீரண நீர் சுரக்காது. உங்கள் வயிறு, 'உன்னுடைய பிரச்சனை முடித்து விட்டு வா'என்று சொல்லும்.
கவலையோடு வேண்டா வெறுப்யோடு சாப்பிடும் உணவு சரியான முறையில் செரிப்பதில்லை. அந்த உணவில் இருந்து வரக்கூடிய சர்க்கரை சத்தானது கெட்ட சர்க்கரை மாறுகிறது. வயிற்றில் உப்புசம், தேவையில்லாத வாயுக்களும் உற்பத்தி ஆகின்றன.
துக்கம், அழுகை என்கிற உணர்ச்சி நுரையீரல், பெருங்குடல் சம்பந்தப்பட்டது.
துக்கமான செய்தி வருகிறது. அந்த செய்தி கேட்டு சிலர் அழுது விடுவார்கள். அந்த அழுகையின் காரணமாக மூச்சு மூட்டும். அதிக துக்கம் என்பது நுரையீரலையும், பெருங்குடலையும் பாதிக்கும். அதாவது காற்று மூலகத்தை பாதிக்கும்.
பயம் என்கிற உணர்ச்சி சிறுநீரகம், சிறுநீரக பை சம்பந்தப்பட்டது.
குழந்தைகளை பயமுறுத்தினால் அவர்கள் உடனே சிறுநீர் கழித்து விடுவதை காணலாம். பயம் என்கின்ற உணர்ச்சி நீர் மூலகத்தை பாதிக்கும். பயம் ஏற்படும் போது, உடலின் செயல் திறன் குறைகிறது. முகம் கருத்து விடுகிறது. பயத்தின் காரணமாக சிறுநீரக இயக்க சக்தி குறைந்து நோய்கள் உருவாக ஆரம்பிக்கிறது. ஒரு மனிதனை பயம் ஆட்கொள்ளும் போது, சாப்பிட்ட உணவு சரியான முறையில் செரிப்பதில்லை. அந்த உணவில் இருந்து வரக்கூடிய சத்தானது, கெட்ட சக்தியாக மாறுகிறது.
கோபம் என்கிற உணர்ச்சி கல்லீரல், பித்தப்பை சம்பந்தப்பட்டது.
கோபம் கொள்வது மிகவும் தீய பண்பாகும். உடல் நலம் பெரிதும் பாதிக்கப்படும். ஒரு மனிதனின் கோபம் மற்றவர்களை பாதிக்கிறதோ இல்லையே நிச்சயமாக கோபம் கொண்ட மனிதனை பாதிக்கும்.
நீங்கள் கோபத்தில் இருக்கும் போது, 'என் இரத்த கொதிக்கிறது' என்று சொல்கிறீர்கள். என் வயிறு எரியும் படி செய்து விட்டான் என்று சொல்வோம். அதனால் கோபம் கொள்ளும் போது இரத்த கொதிப்பு அதிகரிக்கும். வயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் கெட்டுப் போய் விடும். நீங்கள் கோபம் அடையும் போது இரத்த நாளங்கள் கடினமாகி, முறுக்கேறுகின்றன. அதனால் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. பெரும்பாலானவர்களுக்கு பக்கவாதம் கோபத்தில் தான் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்ல தற்பெருமை, கர்வம், பொறாமை கொண்டாலும் உடல் நலம் பாதிக்கப்படும். இதனால் இதயம் மற்றும் சிறுகுடல் பலவீனப்படும்.
எனவே உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் எதிலும் நிதானத்துடன் இருந்தால் நிம்மதியாக மகிழ்வாக வாழலாம்.
-சிவசங்கர்
- இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியா விட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி.
சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருளாகும். தேவி பாகவதம் என்ற நூல் அன்னைக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும் அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானவை என்று கூறுகிறது. ஆனால் தந்திர சூடாமணியில் 51 சக்தி பீடங்கள் என்று உள்ளது. இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
51 சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும் 18 சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும் 4 சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன.
சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியா விட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி.
1) அஸ்ஸாம் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில்
2) கல்கத்தாவின் காளிகாட் காளி கோவில்
3) ஒடிசாவின் பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி சக்தி பீடக் கோவில்
4) ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னதி ஆகிய நான்கும் ஆதி சக்தி பீடங்களாகும்.
ஆதி சக்தியின் ரூபமான சதி தேவியின் (தாட்சாயிணியின்) உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோவில்களே சக்தி பீடமாகும்.
1) மூகாம்பிகை : கொல்லூர்
- (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2) காமாட்சி : காஞ்சிபுரம்
- (காமகோடி பீடம்), தமிழ்நாடு
3) மீனாட்சி : மதுரை
- (மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4) விசாலாட்சி : காசி
- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5) சங்கரி : மகாகாளம்
- (மகோத்பலா பீடம்), ம.பி.
6) பர்வதவர்த்தினி : ராமேஸ்வரம்
- (சேது பீடம்), தமிழ்நாடு
7) அகிலாண்டேஸ்வரி : திருவானைக்காவல்
- (ஞானபீடம்), தமிழ்நாடு
8) அபீதகுஜாம்பாள் : திருவண்ணாமலை
- (அருணை பீடம்), தமிழ்நாடு
9) கமலாம்பாள் : திருவாரூர்
- (கமலை பீடம்), தமிழ்நாடு
10 பகவதி : கன்னியாகுமரி
- (குமரி பீடம்), தமிழ்நாடு
11) மகாகாளி : உஜ்ஜையினி
- (ருத்ராணி பீடம்), ம.பி.
12) மங்களாம்பிகை : கும்பகோணம்
- (விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13) வைஷ்ணவி : ஜம்மு
- (வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14) நந்தா தேவி : விந்தியாசலம்
- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15) பிரம்மராம்பாள் : ஸ்ரீ சைலம்
- (சைல பீடம்), ஆந்திரா
16.) மார்க்கதாயினி-ருத்ரகோடி
- (ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17) ஞானாம்பிகை : காளஹஸ்தி
- (ஞான பீடம்), ஆந்திரா
18) காமாக்யா : கவுகாத்தி
- (காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19) சம்புநாதேஸ்வரி : ஸ்ரீநகர்
- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20) அபிராமி : திருக்கடையூர்
- (கால பீடம்), தமிழ்நாடு
21) பகவதி : கொடுங்கலூர்
- (மகாசக்தி பீடம்), கேரளா
22) மகாலட்சுமி : கோலாப்பூர்
- (கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23) ஸ்தாணுபிரியை : குருஷேத்ரம்
- (உபதேசபீடம்) ஹரியானா
24) மகாகாளி : திருவாலங்காடு
- (காளி பீடம்) தமிழ்நாடு
25) பிரதான காளி : கொல்கத்தா
- (உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26) பைரவி : பூரி
- (பைரவி பீடம்) ஒரிசா
27) மாணிக்காம்பாள் : திராக்ஷராமா
- (மாணிக்க பீடம்) ஆந்திரா
28) அம்பாஜி : துவாரகை
- (பத்ரகாளி சக்தி பீடம்) குஜராத்
29) பராசக்தி : திருக்குற்றாலம்
- (பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30) முக்தி நாயகி : ஹஸ்தினாபுரம்
- (ஜெயந்தி பீடம்) ஹரியானா
31) லலிதா : ஈங்கோய் மலை, குளித்தலை
- (சாயா பீடம்) தமிழ்நாடு
32) காயத்ரி : ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்
- (காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33) சந்திரபாகா : சோமநாதம்
- (பிரபாஸா பீடம்) குஜராத்
34) விமலை, உலகநாயகி : பாபநாசம்
- (விமலை பீடம்), தமிழ்நாடு
35) காந்திமதி : திருநெல்வேலி
- (காந்தி பீடம்), தமிழ்நாடு
36) பிரம்மவித்யா : திருவெண்காடு
- (பிரணவ பீடம்), தமிழ்நாடு
37) தர்மசம்வர்த்தினி : திருவையாறு
- (தர்ம பீடம்), தமிழ்நாடு
38) திரிபுரசுந்தரி - திருவொற்றியூர்
- (இஷீபீடம்), தமிழ்நாடு
39) மகிஷமர்த்தினி : தேவிபட்டினம்
- (வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40) நாகுலேஸ்வரி : நாகுலம்
- (உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41) திரிபுர மாலினி : கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம்
- (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42) திரியம்பக தேவி : திரியம்பகம்
- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43) சாமுண்டீஸ்வரி : மைசூர்
- (சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44) ஸ்ரீலலிதா : பிரயாகை
- (பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45) நீலாம்பிகை : சிம்லா
- (சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46) பவானி : துளஜாபுரம்
- (உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47) பவானி பசுபதி : காட்மாண்ட்
- (சக்தி பீடம்) நேபாளம்
48) மந்த்ரிணி : கயை
- (திரிவேணிபீடம்) பீகார்
49) பத்ரகர்ணி : கோகர்ணம்
- (கர்ணபீடம்) கர்நாடகா
50) விரஜை ஸ்தம்பேஸ்வரி : ஹஜ்பூர்
- (விரஜாபீடம்) உ.பி.
51) தாட்சாயிணி : மானஸரோவர்
- (தியாகபீடம்) திபெத்,
-சிவசங்கர்
- பண வரவுகளுக்கும் பஞ்சாமில்லாமல் போகும்.
- சுக்கிரதிசை இருக்கும் இடத்தை வைத்து நற்பலன்களை கொடுக்கும்.
சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும் என்பது மக்களின் பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அது தவறாகும். சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான நற்பலன்களை பெற முடியும்.
பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்து குழந்தை பருவத்தில் சுக்கிர திசை நடைபெற்றால், நல்ல ஆரோக்கியம், சுகவாழ்வு, சத்தான உணவுகளை சாப்பிடும் அமைப்பு கொடுக்கும்.
இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல், பரந்த மனப்பான்மை அழகான உடலமைப்பு மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரம், சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் அமையும். மத்திம வயதில் திசை நடைபெற்றால் சுகவாழ்வு சொகுசுவாழ்வு, பெண்களால் அனுகூலம், வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். பெண்களால் அனுகூலம், மணவாழ்வில் மகிழ்ச்சி, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, வசதி வாய்ப்புகளுடன் வாழும் யோகம் உண்டாகும்.
முதுமை பருவத்தில் நடைபெற்றால் அனுகூலமான பயணங்கள், தாராள தனக்சேர்க்கை, குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற யாவும் அமையும்.
சுக்கிரன் பலம் பெற்றிருந்து நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன், சனி போன்றவற்றின் வீட்டில் அமைந்தோ, சேர்க்கைப் பெற்றோ இருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாக கூடிய யோகம், செல்வம் செல்வாக்கு சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம். ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்றயாவும் அமையும். பண வரவுகளுக்கும் பஞ்சாமில்லாமல் போகும். கடன்கள் யாவும் நிவர்த்தி யாகும். பொதுவாக சுக்கிரன் கிரக சேர்க்கைகளின்றி தனித்து அமைவதே சிறப்பு.
சுக்கிரன் நீசம் பெறுவதும் நல்லதல்ல. நீசம் பெற்றாலும் உடன் புதன் சேர்க்கையுடன் இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகி ஒரளவுக்கு சாதகப் பலனை தருவார். சுக்கிரன் செவ்வாய்க்கு கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் பிருகு மங்கள யோகம் உண்டாகிறது.
அது போல சுக்கிரன் உச்சம் பெற்று கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் மாளவியா யோகம் ஏற்படும். இத்திசை காலங்களில் இந்த யோகங்களால் வாழ்வில் எதிர்பாராத வகையில் முன்னேற்றங்கள் ஏற்படும்.
சுக்கிர திசை நடக்கும் போது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் குடும்பத்தில் லட்சுமி கடாட்சம், சொந்த வீடு கட்டும் யோகம் என நல்ல பலன்கள் நடைபெறும்.
மொத்தத்தில் சுக்கிரதிசை இருக்கும் இடத்தை வைத்து நற்பலன்களை கொடுக்கும்.
- ஜோதிடர் சுப்பிரமணியன்.






