search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்
    X

    அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதற்கு கவுதம் காம்பீர் ஐசிசி மீது சாடியுள்ளார்.
    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நாடடிங்காமில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

    மழை 2-3 மணி நேரத்தில் நின்றுவிட்டது. அவுட்பீல்டு (பவுண்டரி லைன் அருகில்) ஈரப்பதம் காணப்பட்டதால் பீல்டிங் செய்வதற்கும், கேட்ச் பிடிப்பதற்கும் கடினமாக இருக்கும் என்பதால் ஆட்டம் கைவிட்டப்பட்டது.

    இதற்கு முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கவுதம் காம்பிர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘பாதுகாப்பான வசதிகளை ஐசிசி இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியும். மழை 2-3 மணி நேரத்திற்குள் நின்றுவிட்டது. இருந்தாலும் போட்டி தொடங்கப்படவில்லை.

    கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யும் என்பது எதிர்பார்க்கபட்ட ஒன்றுதான். ஆகவே, மைதானம் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அவுட்பீல்டு தயார் ஆவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை தவிர்த்திருக்கலாம்.



    போட்டி வெளிச்சமின்மை, மின்சார கோபுரம் கோளாறு என மற்ற ஏதாவது காரணத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், அதை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், இது அதுபோன்ற விவகாரம் கிடையாது. ஐசிசி இதுகுறித்து முக்கிய கவனம் செலுத்துவது அவசியம். ஏனென்றால் உலகளாவிய தொடர். பல மணி நேரம் காத்திருக்கும் ரசிகர்களுக்கும், டிவி-யில் போட்டியை பார்க்க காத்திருந்தவர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும்’’ என்றார்.
    Next Story
    ×