என் மலர்tooltip icon

    வியட்நாம்

    • குறுகிய தெருவில் கட்டிடம் அமைந்துள்ளதால் மீட்புப்பணியில் சிக்கல்
    • மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

    வியட்நாம் மாநில தலைநகர் ஹனோயில் உள்ள 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    10 மாடி கட்டிடத்தின், பார்க்கிங் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அது வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப்படையினர் 70 பேரை மீட்டனர். அவர்களில் 54 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் பலர் உயிரிழந்ததாக, அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய பெரிய தீ விபத்து எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம், குறுகிய தெருவில் அமைந்துள்ளதால், தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் அருகில் உள்ள கட்டிடத்தில் வசித்து வந்த பெண் ஒருவர், எங்களால் மிகப்பெரிய அளவில் உதவ முடியாத நிலை ஏற்பட்டது என்று கவலையுடன் தெரிவித்தார். மிகவும் குறுகிய தெருவில் கட்டிடம் உள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உயிர்ப்பலி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    • இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார்.
    • அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவில் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்து உள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வந்திருந்தார்.

    இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட ஜோ பைடன், மாநாடு நிறைவு பெறுவதற்குள் இந்தியாவில் இருந்து கிளம்பி வியட்நாமிற்கு சென்றார். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் மனித உரிமைகள் அதிகளவில் மறுக்கப்படுவதாக செயற்பாட்டாளர்கள் மற்றும் உரிமை குழுக்கள் குற்றம்சாட்டி வருகின்றன.

    2014 ஆண்டு நரேந்திர மோடி ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு, சிறுபான்மையினர்- குறிப்பாக இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்து இருப்பதாக பா.ஜ.க. தலைமையிலான அரசு மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இவை அனைத்தையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

    இது குறித்து ஹனோயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் ஜோ பைடன், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்து உள்ளார்.

    இதோடு, "எப்போதும் நான் செய்வதை போன்றே, மனித உரிமைகளை மதிப்பது, அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் ஊடக சுதந்திரம் எப்படி வலுவான நாட்டை கட்டமைக்கும் என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்," என்று அதிபர் பைடன் தெரிவித்து இருக்கிறார்.

    சமீபத்தில் வெளியான ஊடக சுதந்திரம் தொடர்பான ஆய்வறிக்கையில், ஊடக சுதந்திரம் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11 இடங்கள் பின்தள்ளி 180 நாடுகளில் 161-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளியானது.

    • வியட்னாம் போர் 20 வருடங்கள் நடந்தது
    • 1973ல் அமெரிக்க படை வியட்னாமில் இருந்து வெளியேறியது

    1955 முதல் 1975 வரை வட வியட்னாம் மற்றும் தெற்கு வியட்னாம் ஆகியவற்றுக்கிடையே நீண்ட போர் நடந்தது. இப்போரில் சீனாவும், ரஷியாவும் வட வியட்னாமிற்கு ஆதரவு வழங்கின. தெற்கு வியட்னாமிற்கு அமெரிக்கா மற்றும் கம்யூனிஸத்திற்கு எதிரான நாடுகள் கூட்டாக ஆதரவு வழங்கின.

    வியட்னாம் போர் என அழைக்கப்படும் இப்போர், சுமார் 20 ஆண்டுகள் நடைபெற்றது. இதில் தீவிரமாக பங்கேற்ற அமெரிக்க ராணுவத்தால் வியட்னாம் நாட்டு கொரில்லா போர்முறையினை சமாளிக்க முடியவில்லை. இதனையடுத்து, 1973 ஆண்டு அமெரிக்க படை தெற்கு வியட்னாமை விட்டு வெளியேறியது.

    இந்நிலையில், ஜி20 18-வது உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்று வியட்னாம் தலைநகர் ஹேனோய் சென்றார். அங்கு அவர் அந்நாட்டுடன் ஒருங்கிணைந்த மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.

    வியட்னாம் போர் முடிந்து சுமார் 50 வருட காலம் கழித்து, அந்நாட்டுடன் முக்கிய இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் நீண்டகால நட்பு நாடான வியட்னாம் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் புரிவது சீனாவை அமெரிக்கா தனிமைப்படுத்த எடுக்கும் நடவடிக்கையாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    ஆனால், இதனை மறுத்த ஜோ பைடன், "பனிப்போர் காலத்தை கடந்து நாம் சிந்திக்க வேண்டும். அமெரிக்காவின் முன்னேற்றத்திற்கு ஒரு நிலையான, வளரக்கூடிய பொருளாதார தளத்தை அமைத்து கொள்வதற்கு நாங்கள் பல முயற்சிகள் எடுக்கிறோம். சர்வதேச சமூகத்தில் வியட்னாம் ஒரு நட்பான, நம்பிக்கையான மற்றும் பொறுப்புள்ள கூட்டாளி. சீனாவை கட்டுப்படுத்தவோ, தனிமைப்படுத்தவோ அமெரிக்கா விரும்பவில்லை," என்று தெரிவித்தார்.

    அமெரிக்காவிற்கு வியட்னாம் 127 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்வதும், 2022-ல் வியட்னாமை விட 4 மடங்கு அதிகம் சீனா அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

    உலக வர்த்தகத்தில் சீனாவின் உள்நாட்டு தயாரிப்பும், ஏற்றுமதியும் மிக பெரியது என்றும் அதனை வியட்னாம் ஈடு செய்வது கடினம் என்பதாலும் இந்த ஒப்பந்தத்தின் பலன் சில வருடங்கள் கடந்துதான் தெரிய வரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஒட்டுண்ணிகள் அவளது தோலின் கீழ் ஊர்ந்து செல்ல தொடங்கியது.
    • சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகி அவர் முடங்கியிருப்பார் என்று மருத்துவர்கள் கூறினர்.

    வியட்நாம் நாட்டை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க பெண் பச்சை ரத்தம் மற்றும் சமைத்த இறைச்சியைக் கொண்ட 'டைட் கேன்' எனப்படும் உள்ளூர் சுவையான உணவை உட்கொண்டார்.

    இதனால் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அந்தப் பெண் ஹனோயின் புறநகரில் உள்ள அன் பின் கம்யூனைச் சேர்ந்தவர்.

    மேலும் ஒட்டுண்ணிகள் அவளது தோலின் கீழ் ஊர்ந்து செல்ல தொடங்கியது. அந்த ஒட்டுண்ணி புழுக்கள் அவரது மூளைக்கும் சென்றது. இதில் அவர் தலைவலியால் அவதிப்பட ஆரம்பித்தாள்.

    சாப்பிட்ட பிறகு வீட்டில் பலமுறை சுயநினைவையும் இழந்தாள். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஊழியர்கள் முதலில் அவளுக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக நினைத்தனர்.

    இருப்பினும், சில ஸ்கேன்களில் ஒட்டுண்ணி புழுக்கள் உண்மையில் அவளது தோலின் கீழ் ஊர்ந்து சென்றன. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகி அவர் முடங்கியிருப்பார் என்று மருத்துவர்கள் கூறினர்.

    சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால், தற்போது அவர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    ×