என் மலர்
பிரிட்டன்
- வாக்குப்பதிவு அடுத்த மாதம் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
- ரிஷி சுனக்கும், லிஸ் டிரஸ்சும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகினர்.
லண்டன் :
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்கும், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகினர்.
அவர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலமும், ஆன்லைன் மூலமாகவும் வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு அடுத்த மாதம் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் இடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பில் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
570 கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் லிஸ் டிரஸ்சுக்கு 61 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்ததாகவும், 39 சதவீதம் பேர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
- சல்மான் ருஷ்டி மீதான கத்திக்குத்து தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்தார்
லண்டன்:
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, கடந்த 20 ஆண்டாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் விரிவுரை அளிக்க இருந்தபோது திடீரென எழுந்த மர்ம நபர் ஒருவர் சல்மான் ருஷ்டியை நோக்கிச் சென்று, கத்தியால் அவரது கழுத்து, வயிற்றுப் பகுதியில் குத்தினார்.
இதில் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனே அவர் மருத்துவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஹாரி பாட்டர் கதையை எழுதிய பிரபல எழுத்தாளர் ஜே.கே.ரவ்லிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இவர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இரங்கல் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி. உடல்நிலை சரியில்லாதது போல் உணருகிறேன். அவர் நலமுடன் இருக்கட்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ஜே.கே.ரவ்லிங் டுவிட்டர் பதிவிற்கு கீழே கருத்து பதிவிடும் பகுதியில், மீர் ஆசிப் அஜீஸ் என்ற பெயரில் டுவிட்டர் கணக்கு கொண்ட நபர், 'கவலைப்படவேண்டாம் அடுத்து நீங்கள் தான்' என கொலை மிரட்டல் விடுத்து டுவிட் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இங்கிலாந்தில் உள்ள தேம்ஸ் ஆறு இதுவரை இல்லாத அளவுக்கு வறண்டுள்ளது.
- நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி நிலவியது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் ஏற்பட தொடங்கியது. தேம்ஸ் நதி உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது.
1935-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மிகவும் வறண்ட மாதமாக கடந்த ஜூலை மாதம் திகழ்கிறது. ஜூலை மாதத்தில் மழை பொழிவு மிகவும் குறைவு என இங்கிலாந்து வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜூலையில் வறட்சி நிலவியதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்தின் தெற்கு, மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகள் வறட்சி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லண்டன் நகரம் முழுதும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வறண்ட காலநிலைக்கு நாங்கள் முன்பை விட சிறப்பாக தயாராக இருக்கிறோம், ஆனால் பாதிப்புகள் உள்பட நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
- அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
- நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை ஷரத் கமல் மற்றும் நிகாத் ஜரீன் ஏந்திச் சென்றனர்
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கின. 72 நாடுகள் பங்கேற்ற இந்த பிரம்மாண்ட விளையாட்டு திருவிழாவில் 5,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்களின் முடிவில் ஆஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் (67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம்) முதலிடத்தில் போட்டியை நடத்திய இங்கிலாந்து 176 பதக்கங்களுடன் (57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம்) இரண்டாவது இடத்தையும் பிடித்தன.
கனடா 92 பதக்கங்களுடன்(26 தங்கம்,32 வெள்ளி, 34 வெண்கலம்) மூன்றாவது இடத்தில் இருந்தது. இந்தியா 61 பதக்கங்களை (22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம்) வென்று நான்காவது இடத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டி நிறைவு விழா பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகள் நிறைவடைந்ததை இளவரசர் எட்வர்ட் முறைப்படி அறிவித்தார்.
அடுத்த காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் 2026 ஆம் ஆண்டு நடைபெறுகிறது. இதனை அடுத்து காமன்வெல்த் விளையாட்டுக் கொடி விக்டோரியா ஆளுநரிடம் வழங்கப்பட்டது.
பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றிருந்தன. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசிய கொடியை டேபிள் டென்னிஸ் வீரர் அச்சந்தா ஷரத் கமல் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் ஆகியோர் ஏந்திச் சென்றனர்.
- இந்தியா 22 தங்கம்,16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது.
- இதன்மூலம் பதக்க பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து நிறைவு செய்துள்ளது.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. ஜூலை 28-ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் தொடங்கிய இத்தொடர் நாளை நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. இன்றுடன் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகின்றன.
இன்று இந்தியா தனது அனைத்து விளையாட்டு போட்டிகளையும் விளையாடி முடித்துள்ளது. குறிப்பாக, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, இளம் வீரர் லக்சயா சென் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கம் வென்றனர். பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
ஆடவர் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
- இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோற்று வெள்ளி வென்றது.
- இதனால் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.
இன்று பேட்மிண்டன் போட்டியில் 3 தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கப் பதக்கத்துக்கான இறுதிப்போட்டியில் இன்று விளையாடியது.
இதில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது.
இதன்மூலம் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றுள்ளது.
- பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது.
- இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன், சீன் மெண்டி ஜோடியை எதிர்கொண்டது.
இதில், இந்திய ஜோடி 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
இதன்மூலம் இந்தியா 22 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
- டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சரத் கமல் தங்கம் வென்றார்
- இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 21 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழக வீரர் சரத் கமல், இங்கிலாந்து வீரர் லியாம் பிட்ச்போர்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்
இதன்மூலம் இந்தியா 21 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
- டேபிள் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சதயன் வெண்கலம் வென்றார்.
- இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என 58 பதக்கம் வென்றுள்ளது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டேபிள் டென்னிசில் ஆண்கள் ஒற்றையரில் தமிழக வீரர் சதயன் ஞானசேகரன், இங்கிலாந்தின் டிரிங் ஹாலை 4-3 என்ற கணக்கில் வென்று வெண்கல பதக்கம் வென்றார்.
இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 58 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
- பேட்மிண்டன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் லக் ஷயா சென் தங்கம் வென்றார்
- இதன்மூலம் கானம்வெல்த் போட்டியில் இந்தியா 20 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பேட்மிண்டன் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசியாவின் சீ யாங் விளையாடினர்.
முதல் செட்டை 19-21 என கோட்டை விட்ட லக்ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்
இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
- காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.
- பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
பர்மிங்காம்:
காமன்வெல்த் விளையாட்டு குத்துச் சண்டை பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 92 கிலோ எடைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகர் அலாவத், இங்கிலாந்தின் டீலிசியஸ் ஓரியை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் சாகர் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

காமன்வெல்த் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய கலப்பு இரட்டையர் ஜோடியான சவுரவ் கோசல் மற்றும் தீபிகா பல்லிகல் வெண்கலப் பதக்கம் வென்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் 5-வது இடத்தில் உள்ளது.
- இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி, மலேஷிய ஜோடியை எதிர் கொண்டது.
- ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்றைய போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்தனர்.
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடி சரத் கமல், ஸ்ரீஜா அகுலா, மலேசிய ஜோடியான சூங் ஜாவன் மற்றும் லைன் கரேன் ஆகியோரை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய கலப்பு ஜோடி 11-4, 9-11, 11-5, 11-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
முன்னதாக டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல், ஜி.சத்யன் ஜோடி, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.






