search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது
    X

    விக்கெட் வீழ்த்திய பிராட்

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் - தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது.

    மான்செஸ்டர்:

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட்கள் சீராக விழுந்தன.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 53.2 ஓவரில் 151 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் ரபாடா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 38 ரன்னும், ஜாக் கிராலே 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    Next Story
    ×