என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • ரிஷி சுனக், லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவர், பிரதமராக நியமிக்கப்படுவார்.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2ந் தேதி முடிவடைந்தது.  இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்துள்ளனர்.வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகிறது.

    இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக நியமிக்கப்பட்டவுடன், அதிகரித்து வரும் எரிசக்தி கட்டண குறைப்பு மற்றும் விநியோக சீராமைப்பு நடவடிக்கை உடனடியாக எடுக்க உள்ளதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

    தமக்கு ஆதரவளித்த சகாக்கள், பிரச்சாரக் குழுவினர் மற்றும் அனைத்து கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ரிஷசுனக் குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தத் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற சிறப்பைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று வாக்குகள் எண்ணப்பட்டு 5-ந்தேதி முடிவு அறிவிக்கப்படும்.
    • இவர் இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன்.

    லண்டன் :

    இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். புதிய தலைவர் (பிரதமர்) பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லிஸ்டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பிரதமர் பதவிக்கான ஓட்டுப்பதிவு இன்று 5 மணிக்கு முடிகிறது. 1.60 லட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணையவழியில் வாக்கு அளிக்கிறார்கள். இதையொட்டி ரிஷி சுனக், லண்டன் நகரில் வெம்ப்லியில் உள்ள கச்சேரி அரங்கில் நேற்று முன்தினம் தனது கடைசி பிரசார கூட்டத்தில் பெற்றோர் யாஷ்விர், உஷா மற்றும் மனைவி அக்‌ஷதா மூர்த்தி ஆகியோருடன் தோன்றிப் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த இறுதிக்கட்ட பிரசாரம் எனக்கு சிறப்பு வாய்ந்தது.

    ஏனென்றால் என்னை பொதுவாழ்க்கையில் ஈடுபடத்தூண்டிய 2 பேர், அதாவது என் அம்மா, அப்பா இங்கே இருக்கிறார்கள். அவர்களின் சேவையும், மக்களுக்கு அவர்கள் செய்த செயல்களும்தான் நான் அரசியலில் குதிக்க உத்வேகம் தந்தன. அம்மா, அப்பா, எப்போதும் நீங்கள் தியாகம் செய்ததற்கும், உங்கள் குழந்தைகளுக்கு உங்களது வாழ்க்கையை விட ஒரு சிறப்பான வாழ்க்கையை அளிக்க பாடுபடுவதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும் கடின உழைப்பு, நம்பிக்கை, குடும்பத்தின் மீதான உங்கள் அன்பு ஆகியவற்றால் நம் நாட்டில் யாரும் எதையும் சாதிக்க முடியும், அதற்கு எல்லையே கிடையாது என்று எனக்கு கற்பித்திருக்கிறீர்கள். அதற்காக நன்றி. என் மனைவி அற்புதமானவர், அன்பானவர். 18 ஆண்டுகளுக்கு முன்பாக தனது உயரங்களை விட்டுக்கொடுத்து விட்டு, எளியவனான என்னை தேர்ந்தெடுத்ததற்கு மிகுந்த நன்றி.

    நான் கடந்த 2 வருடங்களாக ஒரு நல்ல கணவராகவும், தந்தையாகவும் இருக்கிறேன். நான் என் குழந்தைகளை அளவற்று நேசிக்கிறேன். என் மனைவியை அளவற்று நேசிக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் வாழ்க்கையில் நான் உடன் இருக்க விரும்பியும், அது முடிந்ததில்லை.

    நான் நமது நாட்டைப்பற்றி மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். கோடிக்கணக்கான மக்களுக்கு நன்மை பயக்கும் ஒன்றை என்னால் வழங்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அதனால்தான் இந்தப் போட்டியில் உள்ளேன். மக்களின் ஆதரவைப்பெறுவதில் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று முடிகிற பிரதமர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு 5-ந் தேதி முடிவு அறிவிக்கப்படும். இந்தத் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற சிறப்பைப் பெறுவார். இவர் இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனர் நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி தம்பதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இளவரசி டயானா 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி கார் விபத்தில் பலியானார்.
    • இங்கிலாந்தை சேர்ந்த நபர் காரை ஏலத்தில் எடுத்தார்.

    லண்டன்

    உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த கார் விபத்தில் பலியானார். அவரது 25-வது நினைவு தினம் விரைவில் கொண்டாடப்படவுள்ளது.

    இந்த நிலையில் இளவரசி டயானா 1985 முதல் 1988 வரை பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் வகையைச் சேர்ந்த ஒரு கார் இங்கிலாந்தில் நேற்று முன்தினம் ஏலத்தில் விடப்பட்டது.

    இந்த ஏலத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    1 லட்சம் பவுண்டில் (சுமார் ரூ.93 லட்சம்) ஆரம்பிக்கப்பட்ட ஏலம், பலத்த போட்டிக்கிடையே 6 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டில் (சுமார் ரூ.6 கோடியே 10 லட்சம்) நிறைவடைந்தது. இங்கிலாந்தை சேர்ந்த நபர் காரை ஏலத்தில் எடுத்தார்.

    • 94 வருட வரலாற்றில் ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இதுவே முதல் முறையாகும்.
    • இவர் அக்டோபர் 17-ந்தேதி நடைபெறும் இறுதி போட்டியில் 40 பெண்களுடன் போட்டியிடுகிறார்.

    லண்டன் :

    இங்கிலாந்தில் 'மிஸ் இங்கிலாந்து' அழகி போட்டி 94 ஆண்டுகளாக பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அங்கு 94-வது 'மிஸ் இங்கிலாந்து' அழகி போட்டி நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த போட்டியில் லண்டனை சேர்ந்த 20 வயதான மெலிசா ராவ்ப் என்கிற அழகி ஒப்பனையே (மேக்அப்) இல்லாமல் கலந்து கொண்டு இறுதி சுற்று வரை முன்னேறியுள்ளார். மிஸ் இங்கிலாந்து போட்டியின் 94 வருட வரலாற்றில், அழகி ஒருவர் ஒப்பனை இல்லாமல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் மெலிசா ராவ்ப் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    கல்லூரியில் அரசியல் படித்து வரும் அவர் அக்டோபர் 17-ந்தேதி நடைபெறும் இறுதி போட்டியில் 40 பெண்களுடன் போட்டியிடுகிறார். அந்த போட்டியிலும் ஒப்பனை இல்லாமல் கலந்து கொள்ள போவதாக அவர் கூறியுள்ளார்.

    இதுபற்றி மெலிசா ராவ்ப் கூறுகையில், "எனது இயற்கையான உள்ளார்ந்த அழகை வெளிப்படுத்தவும், சமூக வலைத்தளங்களில் அழகு குறித்து முன்வைக்கப்படும் கூற்றுகளை மாற்றவும் போட்டியில் ஒப்பனை இல்லாமல் கலந்து கொண்டேன். பல பெண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், சமூக அழுத்தம் காரணமாக ஒப்பனை செய்து கொள்கிறார்கள். நமது இயற்கையான தோல் நமக்கு பிடித்திருந்தால் அதை ஒப்பனை என்ற பெயரில் பிறருக்காக மூடி மறைக்க வேண்டாம்" என கூறினார்.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆண்டர்சன் 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு வழங்கப்பட்டது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார்.

    இதுவரை டெஸ்டில் 664, ஒருநாள் போட்டியில் 269 மற்றும் டி20-ல் 18 என 367 போட்டிகளில் மொத்தம் 951 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

    முன்னதாக, இலங்கையின் முத்தையா முரளிதரன் (1347), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் (1001), இந்தியாவின் அனில் கும்ப்ளே (956) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னிலும், 2வது இன்னிங்சில் 179 ரன்னிலும் சுருண்டது.
    • 2வது டெஸ்டில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் வென்றது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ரபாடா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 415 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பென் போக்ஸ் 113 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பென் ஸ்டோக்ஸ் 103 ரன்னில் அவுட்டானார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நூர்ஜே 3 விக்கெட்டும், மகாராஜ், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 264 ரன்கள் பின்தங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களிடம் சிக்கிய தென் ஆப்பிரிக்கா திணறியது. அந்த அணியில் பீட்டர்சன் 42 ரன்னும், வான் டெர் டுசன் 41 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து 179 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதையடுத்து, டெஸ்ட் தொடர் 1-1 என சமனிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது பென் ஸ்டோக்சுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 415 ரன்கள் குவித்தது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ரபாடா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 38 ரன்னும், ஜாக் கிராலே 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஜாக் கிராலே 38 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் பேர்ஸ்டோவ் 49 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ், போக்ஸ் ஜோடி பொறுப்புடன ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தது. பென் ஸ்டோக்ஸ் 103 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 106.4 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 415 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பென் போக்ஸ் 113 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் நூர்ஜே 3 விக்கெட்டும், மகாராஜ், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது.

    மான்செஸ்டர்:

    தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட்கள் சீராக விழுந்தன.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 53.2 ஓவரில் 151 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் ரபாடா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 38 ரன்னும், ஜாக் கிராலே 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 326 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒல்லி போப் 73 ரன் எடுத்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், நூர்ஜே 3 விக்கெட்டும், ஜேன்சேன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் எர்வி 73 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜேன்சேன் 48 ரன்னிலும், கேப்டன் எல்கர் 47 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இங்கிலாந்து சார்பில் பிராட், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 161 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து தடுமாற்றத்துடன் விளையாடிது. அந்த அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லீஸ், ஸ்டுவர்ட் பிராட் தலா 35 ரன்கள் எடுத்தனர்.

    தென் ஆப்பிரிக்க சார்பில் நூர்ஜே 3 விக்கெட்டும், ரபாடா, மகராஜ், ஜேன்சேன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்னில் சுருண்டது.
    • தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 326 ரன்களில் ஆல் அவுட்டானது.

    லார்ட்ஸ்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஒல்லி போப் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் அவுட்டானார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், நூர்ஜே 3 விக்கெட்டும், ஜேன்சேன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எர்வி பொறுப்புடன் ஆடி 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜேன்சேன் 48 ரன்னிலும், கேப்டன் எல்கர் 47 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நூர்ஜே 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து அணியை விட 161 ரன் முன்னிலை வகிக்கிறது.

    இங்கிலாந்து சார்பில் பிராட், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டும், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் லிஸ் டிரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
    • இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பின்தங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.

    பல்வேறு கட்டங்களாக நடந்த முதல் கட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்கும், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சும் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகினர். அவர்களில் ஒருவரை கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் தேர்வு செய்வதற்கு கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலமும், ஆன்லைன் மூலமாகவும் வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு அடுத்த மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் இடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. கன்சர்வேட்டிவ் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் லிஸ் டிரஸ்சுக்கு 58 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்ததாகவும், 26 சதவீதம் பேர் ரிஷி சுனக்குக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இருநாட்டு உறவுகள் அடுத்த 75 ஆண்டுகளில் மேலும் வலுப்பெற வேண்டும்.
    • பிரான்ஸ் எப்போதும் உங்கள் பக்கம் நிற்கும் என்று நீங்கள் நம்பலாம்.

    இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியா – இங்கிலாந்து நாடுகளுக்கும் இடையே செழித்து வரும் உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் உள்ளதாக கூறியுள்ளார்.

    அண்மையில் குஜராத் மற்றும் டெல்லிக்கு வந்திருந்தபோது, நம் நாடுகளுக்கு இடையே செழித்து வளரும் உறவு பாலத்தை நேரில் பார்த்தேன், இருநாட்டு உறவுகள் அடுத்த 75 ஆண்டுகளில் மேலும் வலுப்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


    ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடும் அனைவரையும் வாழ்த்துகிறேன், அனைத்து ஆஸ்திரேலியர்களும் இந்தியாவின் வெற்றிகளைப் பாராட்டுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

    கலாச்சாரம் மற்றும் நாடுகளுக்கு இடையோன தொடர்புகளின் வெற்றிக்கு இந்திய-ஆஸ்திரேலிய சமூகத்தின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    அன்புள்ள நண்பர் நரேந்திர மோடி மற்றும் அன்பான இந்திய மக்களுக்கும் வாழ்த்துக்கள், கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் பிரமிக்க வைக்கும் சாதனைகளை நீங்கள் பெருமையுடன் கொண்டாடுகிறீர்கள், பிரான்ஸ் எப்போதும் உங்கள் பக்கம் நிற்கும் என்று நீங்கள் நம்பலாம் என்றும் தமது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    ×