என் மலர்
பிரிட்டன்
- மன்னர் மூன்றாம் சார்லஸ் ரிஷி சுனக்கை பிரிட்டிஷ் பிரதமராக நியமினம் செய்து உத்தரவிட்டார்.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக இங்கிலாந்து பிரதமராக தேர்வானார்.
லண்டன்:
பிரிட்டனில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் கடந்த 20-ந்தேதி ராஜினாமா செய்தார். பொருளாதார நெருக்கடியை தீர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சொந்த கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின.
இங்கிலாந்தில் ஆளும் கட்சித் தலைவர் தான் பிரதமர் பதவியை வகிக்கமுடியும். இதையடுத்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பெண் தலைவரான பென்னி மார்டண்ட் ஆகியோர் போட்டியிட முடிவு செய்து எம்.பி.க்களின் ஆதரவை திரட்டினர்.
357 எம்.பி.க்கள் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியில் ரிஷி சுனக்குக்கு அமோக ஆதரவு கிடைத்தது. அவருக்கு 140-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர்.
இதற்கிடையே கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறித்தார். அதே வேளையில் வேட்பு மனுதாக்கல் கால அவகாசம் முடிய சில மணி நேரங்களுக்கு முன்பு போரிஸ் ஜான்சன், தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதே போல் 100 எம்.பி.க்களின் ஆதரவை திரட்ட முடியாததால் பென்னி மார்டண்ட்டும் போட்டியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் அவர் இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ரிஷிசுனக் புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் இன்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அப்போது அவரை பிரதமராக நியமினம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
புதிய பிரதமராக தேர்வான ரிஷி சுனக்குக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
- முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
- பதவியேற்ற 45 நாட்களில் லிஸ் டிரஸ் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.
முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் தனது கடைசி அமைச்சரவை கூட்டத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
அவசரமாகவும் தீர்க்கமாகவும் கடினமாக உழைக்கும் குடும்பங்களுக்கு உதவுவதோடு, திவால் நிலையைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான வணிகங்களுக்கு உதவியும் வழங்கியது.
நமது நாடு புயலால் தொடர்ந்து போராடி வருகிறது. நான் பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் மக்களை நம்புகிறேன். மேலும் பிரகாசமான நாட்கள் வரப்போகிறது என்பதை நான் அறிவேன்.
புதினின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனின் துணிச்சலான போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும். உக்ரைன் மேலோங்க வேண்டும். நம் நாட்டின் பாதுகாப்பை நாம் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். அதைத்தான் நான் சாதிக்க பாடுபட்டு வருகிறேன்.
ரிஷி சுனக் நம் நாட்டின் நன்மைக்காக எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
- ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அலுவலகத்துக்கு ரிஷி சுனக் சென்றார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இங்கிலாந்து மக்களுக்காக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உழைப்பேன்.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அலுவலகத்துக்கு ரிஷி சுனக் சென்றார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கட்சியினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் விரும்பும் கட்சிக்கும் என் நாட்டுக்கும் சேவையாற்றுவது எனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம்.
எம்.பி.க்களின் ஆதரவை பெற்றதற்காகவும், கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்காகவும் பெருமை அடைகிறேன்.
இங்கிலாந்து மக்களுக்காக தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உழைப்பேன். நேர்மையுடனும் பணிவுடனும் உங்களுக்கு சேவை செய்வேன் என்று உறுதியளிக்கிறேன். இங்கிலாந்து ஒரு சிறந்த நாடு. ஆனால் நாம் ஆழமான பொருளாதார சவாலை எதிர்கொள்கிறோம். நமக்கு தற்போது ஸ்திரத்தன்மையும் ஒற்றுமையும் தேவை என்றார்.
- பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
- ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார்.
லண்டன்:
பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம் மினி - பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின.
பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளி எம்.பி. ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டன்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்குவதாக ரிஷி சுனக் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியில் 140க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்தனர். இதேபோன்று போரிஸ் ஜான்சனும் போட்டியிடுவது குறித்து முறைப்படி அறிவிப்பார் என என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்று போரிஸ் ஜான்சன் இன்று திடீரென அறிவித்தார். அதன்பின்னர், போதுமான எம்.பி.க்கள் ஆதரவு இல்லாத நிலையில், பென்னி மோர்டன்டும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரிஷி சுனக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு 190க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதன்மூலம் பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதல் முறையாக பிரதமர் ஆகிறார். ரிஷி சுனக் பிரிட்டனின் 57வது பிரதமராக பதவியேற்க உள்ளார். 42 வயது நிரம்பிய ரிஷி சுனக், நாட்டின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
- இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக ரிஷி சுனக் இன்று அறிவித்தார்.
- ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டன்:
பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், மினி பட்ஜெட் சர்ச்சை போன்ற காரணங்களால் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கி உள்ளன. பிரதமர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ரிஷி சுனக்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ளனர்.
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ள ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் களமிறங்கியுள்ளதாக ரிஷி சுனக் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிடுகிறார்.
பெரும்பாலான எம்.பி.க்களின் ஆதரவு ரிஷி சுனக்கிற்கு உள்ளதால் அவர் இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக அதிக வாய்ப்புள்ளது.
- ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- கட்சியை தன்னால் மட்டுமே காப்பாற்ற முடியும் என போரிஸ் ஜான்சன், கட்சி எம்.பி.க்களிடம் கூறியிருக்கிறார்.
லண்டன்:
பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரே பிரதமராக நியமிக்கப்படுவார். தலைவர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்களவை தலைவர் பென்னி மார்டண்ட் ஆகியோர் உள்ளனர். அநேகமாக அடுத்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு, லிஸ் டிரசிடம் தோல்வியைத் தழுவிய ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ரிஷி சுனக்கை போட்டியில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், லிஸ் டிரசுக்கு பதிலாக மீண்டும் தான் பிரதமர் ஆவதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தி வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு அவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிசம்பர் 2024-ல் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் பின்னடைவை சந்திக்க உள்ள கட்சியை தன்னால் மட்டுமே காப்பாற்ற முடியும் என போரிஸ் ஜான்சன், கட்சி எம்.பி.க்களிடம் கூறியிருக்கிறார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ஆளுங்கட்சிக்கு மக்கள் செல்வாக்கு குறைந்துவிட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள், முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
லண்டன்:
பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்ததால், இங்கிலாந்தின் வரலாற்றில் மிகக்குறுகிய காலம் பதவியில் இருந்த பிரதமர் என்ற பெயரை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் தற்போது அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஜெரேமி ஹண்ட், தான் தேர்தலில் போடியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்வதற்கு முன்பு YouGov எனும் அமைப்பு கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அப்போது தற்போதைய நிலையில் பிரதமராக யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என கன்சர்வேட்டிவ் கட்சியினரிடம் கேட்டனர். லிஸ் ட்ரஸ் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரை அடிப்படையாக கொண்டு கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு கருத்து தெரிவித்தவர்களில் 55 சதவீதம் பேர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு தெரிவித்தனர். 25 சதவீதம் பேர் மட்டும் லிஸ் ட்ரசுக்கு ஆதரவாக இருந்தனர். இதனால் பிரிட்டனின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ரிஷி சுனக்கிற்கு உள்ளதாக அந்த கருத்து கணிப்பு தெரிவித்தது.
அதே சமயம் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் தவிர கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பென்னி மார்டண்ட், பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலஸ் ஆகியோரும் பிரதமர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகே, வெற்றி வாய்ப்புகளை கணிக்கும் சாத்தியங்கள் ஏற்படும்.
இருப்பினும் இந்த தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால், பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பதவியேற்ற 45 நாட்களில் லிஸ் டிரஸ் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என லிஸ் டிரஸ் தெரிவித்தார்.
லண்டன்:
பிரிட்டனின் பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.
நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன்பின்னர் நிதி மந்திரி குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகினார். தான் ஒரு தவறு செய்து விட்டதாகவும், அரசு விதிகளை மீறி விட்டதாகவும் கூறிய அவர், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டதாக கூறினார். அதன்பின்னர் முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியுள்ளனர். இதனால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது.
இவ்வாறு அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்னை தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ் டிரஸ் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்தார்.
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் போது தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட டிரஸ், கட்சியின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறினார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதை அறிவிப்பதற்காக மன்னரிடம் பேசியதாகவும் தெரிவித்தார்.
- இந்திய வம்சாவளியான இங்கிலாந்து பெண் மந்திரி சுவெல்லா பிரேவர்மென் பதவி விலகியுள்ளார்.
- ஒரு வாரத்திற்குள் லிஸ் டிரஸ்சின் அமைச்சரவையில் இருந்து பதவி விலகியுள்ள 2-வது மந்திரி இவர்.
லண்டன்:
இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் (42), உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், ஒரு தவறு செய்து விட்டேன். அரசு விதிகளை மீறிவிட்டேன் எனக்கூறி அவர் மந்திரி பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தனது பதவி விலகல் கடிதம் ஒன்றை லிஸ் டிரஸ்சுக்கு அனுப்பியுள்ளார். எனினும், பிரதமர் டிரஸ்சின் உத்தரவின் பேரிலேயே செயல்பட்டேன் என அவர் கூறியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி நிதி மந்திரி பதவியில் இருந்து குவாசி வார்தெங் நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
ஒரு வாரத்திற்குள் லிஸ் டிரஸ்சின் அமைச்சரவையில் 2-வது மந்திரி பதவியில் இருந்து விலகி சென்றுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடித்து வரும் சூழலில் அமைச்சரவையில் இருந்து பெண் மந்திரி வெளியேறி உள்ளார்.
- இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
- குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி தீபாவளிக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையில் அமைந்திருக்கும் பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடத்தில் இந்த விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகள் ஏற்றி, பின்னர் அமைதி வேண்டி தீபாவளிக்கான சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் இங்கிலாந்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இஸ்கான் அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இங்கிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் சர் லிண்ட்சே ஹாயில், உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து சமூகங்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பெற வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.
- 2022ம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இலங்கை எழுத்தாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
லண்டன்:
இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து இந்த நாவல் அமைந்துள்ளது. புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இறுதிப் போட்டிக்கு தேர்வான 6 புத்தகங்களில் இருந்து இலங்கை எழுத்தாளர் எழுதிய புத்தகத்துக்கு புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.
புக்கர் பரிசை பெறும் இரண்டாவது இலங்கை எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்தில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.
- லிஸ் டிரசை நீக்கி விட்டு ரிஷி சுனக்கை பிரதமராக்க கன்சர் வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.பிக்.கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்.
லண்டன்:
இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் கன்சர் வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் உறுப்பினர்கள் இடையே ஓட்டுப்பதிவு நடத்தப் பட்டது. இதில் லிஸ்டிரஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் 43 சதவீத ஓட்டுகள் பெற்று தோல்வியை சந்தித்தார்.
இதையடுத்து லிஸ் டிரஸ் வரி குறைப்பு நடவடிக்கை எடுத்தார். 23ந் தேதி நிதி மந்திரி குலாலி குவாரிடெப் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் 4.15 லட்சம் கோடி வரி குறைப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது இங்கிலாந்தில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. வரிகுறைப்பு முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஆளும் கன்சர் வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள்கோரிக்கை விடுத்தனர்.
எதிர்ப்பு அதிகமானதால் நிதி மந்திரி குவாலி குவாரி டெப்பை பதவி நீக்கம் செய்து பிரதமர் லிஸ்டிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இந்த நிலையில் லிஸ் டிரசை நீக்கி விட்டு ரிஷி சுனக்கை பிரதமராக்க கன்சர் வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.பிக்.கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முந்தைய போரிஸ் ஜான்சன் ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்து நல்ல பெயர் வாங்கிய ரிஷி சுனக்கை பிரதமராக்கி விட்டு தேர்தலில் 3-வது இடத்தை பிடித்த பென்னி மார்டன்டை துணைப் பிரதமராக்க எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் வரி குறைப்பு நடவடிக்கைகளால் கடும் பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளதால் லிசி டிரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
யுகவ் என்ற ஆய்வு நிறுவனம் தற்போது எடுத்த கருத்துக்கணிப்பில் தவறான நபரை பிரதமராக தேர்ந்தெடுத்ததாக 62 சதவீத வாக்காளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். 15 சதவீதத்தினர் மட் டுமே லிஸ்டிரசை ஆதரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






