என் மலர்
உலகம்

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஈரானில் பலி எண்ணிக்கை 787 ஆக அதிகரிப்பு
- இந்தியாவும் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்காக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்தது.
- வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
டெஹ்ரான்:
ஈரான் நாட்டின் மீது கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல்
மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களிலும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்றவை அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்துள்ளன. இந்தியாவும் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்காக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும் ஈரான் தனது தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதலைத் தொடர்ந்தது. மத்திய கிழக்கில் போர்பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தாக்குதல்களும் தொடர்ந்துவருகின்றன.
இந்நிலையில், ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய குடியரசில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 787 ஆக அதிகரித்துள்ளது என ஈரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது. போரில் இதுவரை 130க்கு மேற்பட்ட நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின எனவும் தெரிவித்துள்ளது.






