என் மலர்
இலங்கை
- அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று இலங்கை வந்தடைந்தது.
- ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா கடனுதவி, எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வரிசையில் அமெரிக்காவும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க உயர்மட்டக்குழு இன்று கொழும்பு வந்தடைந்தது. இதில் ஆசியாவுக்கான கருவூலத்துறை துணை உதவி செயலாளர் ராபர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை உதவி செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உள்ளிட்டோர் அடங்குவர்.
இந்நிலையில், அமெரிக்க உயர்மட்டக் குழுவினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இன்று சந்தித்தனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்தும், எதிர்காலத்தில் நிலையான வளர்ச்சிக்கு திட்டமிடுவது குறித்தும் விவாதித்தனர்.
மேலும், இலங்கையின் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து அமெரிக்க குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.
- ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்துள்ளது.
- ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்துள்ளது.
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே, இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருட்கள் முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் இன்று உயர்ந்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்து ரூ.470க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்து ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து, சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து, ரூ.520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று இலங்கை வருகிறது.
- ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா கடனுதவி, எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இந்த வரிசையில் அமெரிக்காவும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், அமெரிக்க உயர்மட்டக்குழு இன்று கொழும்பு வருகிறது.
ஆசியாவுக்கான கருவூலத்துறை துணை உதவிச்செயலாளர் ராபர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை உதவி செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழுவினர் 29-ந்தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்பட அரசு உயர்மட்ட தலைவர்களை அவர்கள் சந்தித்து பேசுகின்றனர். அத்துடன் அந்நாட்டின் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் அமெரிக்க குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்தும், எதிர்காலத்தில் நிலையான வளர்ச்சிக்கு திட்டமிடுவது குறித்தும் விவாதிக்க உள்ளனர். இதேபோல் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது.
- ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துவிட்ட ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
- முதலில் விளையாடிய இலங்கை 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கொழும்பு:
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இந்த தொடரை இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில்.இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் தனுஷ்க குணதிலக்க 8 ரன்னுக்கும், மற்றொரு வீரர் பாத்தும் நிசங்கா 2 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். குசல் மெண்டிஸ் 26 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக சாமிக கருணாரத்னே 75 ரன்கள் குவித்தார்.
இலங்கை அணி 43.1 ஓவர் முடிவில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 39.3 ஓவர் முடிவில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிபட்சமாக அலெக்ஸ் கேரி 45 ரன்களும், மார்னஸ் லாபுசேன் 31 ரன்களும் குவித்தனர்.
- பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்து இருக்கிறார்கள்.
- இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, கடன் உதவி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்தனர்.
கொழும்பு:
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் உணவு மற்றும் எரிபொருட்கள் எதுவும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் மற்ற நாடுகளில் இருந்து எண்ணெய், பெட்ரோல், டீசல், உரம் போன்றவற்றை இறக்குமதி செய்யமுடியாமல் அந்த நாடு திணறி வருகிறது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் அத்தியாவசிய பணிகள் எதுவும் நடக்காமல் முடங்கிபோய் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் சில அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது இலங்கை பாராளுமன்றமும் முடங்கி போய் உள்ளது.
தேவை இல்லாமல் பெட்ரோல் செலவாவதை தடுக்க பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பங்குகளில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்து இருக்கிறார்கள். ஆனாலும் எரிபொருள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இன்றும் நாளையும் பங்குகளுக்கு குறிப்பிட்ட அளவு பெட்ரோல் வினியோகம் செய்யப்படும் என இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
இந்த சூழ்நிலையில் டீசல் வாங்குவதற்காக இலங்கையில் உள்ள ஒரு பங்கில் 5 நாட்களாக காத்திருந்த 63 வயது லாரி டிரைவர் மயங்கி விழுந்து இறந்தார்.
பொருளாதார ரீதியாக இலங்கை கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் சூழலில் இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தலைமையிலான 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இலங்கை சென்றனர்.
அவர்கள் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபச்சே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி னார்கள்.
இந்த சந்திப்பின்போது இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, கடன் உதவி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்தனர். அப்போது இந்திய அதிகாரிகள் இந்தியாவின் நட்பு நாடாக திகழும் இலங்கை பொருளாதார பாதிப்பில் இருந்து மீளுவதற்கு தேவையான உதவி வழங்கப்படும் என்றும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்றும் உறுதி அளித்தனர்.
- இலங்கையில் நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருள் நிரப்பும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
கொழும்பு
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களில் நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருள் நிரப்பும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் மேற்கு மாகாணத்தின் அங்குருவடோட்டாவில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையம் ஒன்றில் 63 வயதான லாரி டிரைவர் ஒருவர் கடந்த 5 நாட்களாக டீசலுக்காக வரிசையில் காத்திருந்தார். அவர் நேற்று தனது வாகனத்திலேயே இறந்து கிடந்தார்.
நீண்ட நேரம் வரிசையில் நின்றதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இவரையும் சேர்த்து எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. இவ்வாறு எரிபொருள் நிரப்பும் மையங்களில் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப்பலிகளால் இலங்கையில் பெரும் சோகம் நிலவுகிறது.
- இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்துப் பேசினாா்.
- கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.
கொழும்பு:
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா சந்தித்துப் பேசினாா்.
இந்தச் சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும், இந்தியாவின் ஆதரவு குறித்தும் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்தன. மேலும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்தல், பொருளாதார தொடர்பை வலுப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் விரைவான பொருளாதார மீட்சிக்கு உதவ, இந்தியா தயாராக இருப்பதாக அவா்கள் தொிவித்தனா்.
இந்தச் சந்திப்பின் மூலம் இருநாட்டு உறவுகளும் மேம்படுத்துவதற்கான உறுதியை இருதரப்பினரும் உறுதிபடுத்தி உள்ளனர் என மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டாில் தொிவித்துள்ளாா்.
- கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது.
- இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும் என இலங்கை பிரதமர் தெரிவித்தார்.
கொழும்பு:
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அன்னிய செலாவணி நெருக்கடியால் இறக்குமதி செய்யவும் போதிய பணம் இன்றி இலங்கை தவித்து வருகிறது. இதனால் உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
கடும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தாராளமாக உதவி அளித்து வருகிறது. இதன்படி, உணவுபொருட்கள், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றை இலங்கை இந்தியாவிடம் கடனாக பெற்ற தொகை மூலம் இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் நாம் 31 ஆயிரம் கோடி அளவுக்கு கடனாகப் பெற்றுள்ளோம். மேலும் கடனுதவி அளிக்க வேண்டும் என்று இந்திய தலைவர்களிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஆனால் இந்தியாவாலும் இந்த முறையில் தொடர்ந்து உதவி அளிக்க முடியாது. அவர்கள் அளிக்கும் உதவிக்கு சில வரைமுறைகள் உள்ளன. மறுபுறம் இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பிச் செலுத்த வேண்டும். இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை.
நமது பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. நமக்கு முன்னால் இருக்கும் மிகத்தீவிரமான பிரச்சினை இதுதான். இலங்கை பொருளாதாரம் மீட்சி அடைவதன் மூலம் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதற்காக அன்னிய செலாவணி நெருக்கடியை நாம் முதலில் தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
- பலம்வாய்ந்த நாடுகள், இலங்கையில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
- இந்தியாவுடன் நமக்கு கலாசார தொடர்பு உள்ளது.
கொழும்பு :
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. இந்தநிலையில், இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது, பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாசா, ''பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அதனால் நாடாளுமன்றத்தில் நேரத்தை செலவிடுவது வீண்வேலை. கூட்டத்தொடரை புறக்கணிக்க போகிறோம்'' என்று கூறினார்.
ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமார திசநாயகேவும் அதே அறிவிப்பை வெளியிட்டார். அதையடுத்து, அவை முன்னவர் தினேஷ் குணவர்த்தனே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்றத்தின் பணி நாட்கள் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இந்த வாரம் 4 நாட்கள் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றம், 21 மற்றும் 22-ந் தேதிகளில் மட்டும் நடைபெறும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, இலங்கை மக்களின் உடனடி தேவைக்காக அமெரிக்கா மேலும் 57.50 லட்சம் டாலர் (ரூ.44 கோடி) நிதி உதவி அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரம் இதை அறிவித்துள்ளது.
இந்த நிதி உதவி கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்றடைய விரும்புவதாக தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய உள்துறை மந்திரி கிளாரே ஓ நீல், இலங்கைக்கு வந்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவையும் சந்தித்து பேசினார். இலங்கையின் அவசர உணவு, சுகாதார தேவைகளுக்காக ஆஸ்திரேலியா 5 கோடி டாலர் (ரூ.375 கோடி) நிதி உதவி அளிக்கும் என்று அவர் அறிவித்தார்.
இதற்கிடையே, இலங்கையின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே அளித்த பேட்டி வருமாறு:- இலங்கை சிறிய நாடு. பலம்வாய்ந்த நாடுகள், இலங்கையில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்தியாவுடன் மட்டும் நாம் அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக இணைந்து செயல்படலாம் என்பது எங்கள் கருத்து.
இந்தியாவை புறக்கணிக்கக்கூடிய எந்த அரசியல், பொருளாதார செயல்திட்டத்தையும் இலங்கை கடைபிடிக்கக்கூடாது. இந்தியாவுடன் நமக்கு கலாசார தொடர்பு உள்ளது. இந்திய சந்தைகளில், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் நாம் நுழைவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும் என்று அவர் கூறினார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
- இலங்கைக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
கொழும்பு:
இலங்கை சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகள் இலங்கை 2-1 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரித் அசலங்கா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 110 ரன்னில் ஆட்டமிழந்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த தனஞ்செய டி சில்வா அரை சதமடித்து 60 ரன்னில் அவுட்டானார்.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், மேத்யூ குனமென் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 259 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் நிதானமாக ஆடி அரை சதமடித்தார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 99 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பாட் கம்மின்ஸ் 35 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 4 ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 3-1 கைப்பற்றி அசத்தியது. இலங்கை அணியின் அசலங்கா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.
- 21-வது சட்டத்தின் படி அதிபா் அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்பாவாா்.
- மக்கள் போராட்டம் காரணமாக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
கொழும்பு:
இலங்கையில் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிக்கு வந்தபோது அவருக்கு மட்டற்ற அதிகாரங்களை வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா-20 ஏ நிறைவேற்றப்பட்டது.
தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிற அந்த நாட்டில், இந்த நிலைக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே குடும்பம்தான் காரணம் எனக் கூறி அவர்கள் பதவி விலகக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதில் நெருக்கடி முற்றிய நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கே பதவி ஏற்றார்.
இதையடுத்து, இலங்கையில் அதிபரின் மட்டற்ற அதிகாரங்களைப் பறித்து பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தின் 21-வது திருத்தம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை அரசியலமைப்பின் 21-வது சட்டத்திருத்தத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அமைச்சா் ஒருவா் தொிவித்தாா்.
- எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளது.
- நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது.
கொழும்பு :
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் கியாஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு உள்ளது.
நாளொன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு நிலவுகிறது. இந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை இன்று (திங்கட்கிழமை) முதல் மூட அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேநேரம் சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதைப்போல பள்ளிகளும் மூடப்படுவதாக கல்வித்துறை அறிவித்து உள்ளது.
மேலும் கடுமையான மின்வெட்டும் நிலவுவதால் ஆன்லைன் வகுப்புகளையும் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை மக்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.






