என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேலுடனான அமெரிக்காவின் கூட்டு வான்வழித் தாக்குதல் தொடரும்- டிரம்ப்
    X

    இஸ்ரேலுடனான அமெரிக்காவின் கூட்டு வான்வழித் தாக்குதல் தொடரும்- டிரம்ப்

    • ஈரானின் தலைமை வேகமாக சிதறி வருகிறது.
    • ஏவுகணைகளின் ஆயுதக் கிடங்கு விரைவாக அழிக்கப்பட்டு வருகிறது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாங்கள் போர் முனையில் சிறப்பாக செயல்படுகிறோம். 10 மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண் பெற்றது போல் சிறப்பான நிலையில் இருக்கிறோம்.

    நாங்கள் இப்போது மிகவும் வலுவான நிலையில் இருக்கிறோம். ஈரானின் தலைமை வேகமாக சிதறி வருகிறது. அங்கு ஒரு தலைவராக இருக்க விரும்பும் அனைவரும் இறந்து விடுகிறார்கள்.

    ஈரானின் பாலிஸ்டிக் (கண்டம் விட்டு கண்டம் பாயும்) ஏவுகணைகளின் ஆயுதக் கிடங்கு விரைவாக அழிக்கப்பட்டு வருகிறது.

    பைத்தியக்காரர்கள் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் போது கெட்ட விஷயங்கள் நடக்கும். இஸ்ரேலுடனான அமெரிக்காவின் கூட்டு வான்வழித் தாக்குதல் தொடரும் என்றார்.

    Next Story
    ×