என் மலர்tooltip icon

    உலகம்

    Go Back To Your F****** Country: கனடாவில் இந்திய ஊழியர் மீது இனவெறியை கொட்டிய இளைஞர் - வைரல் வீடியோ
    X

    'Go Back To Your F****** Country': கனடாவில் இந்திய ஊழியர் மீது இனவெறியை கொட்டிய இளைஞர் - வைரல் வீடியோ

    • மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் பணியாற்றி வந்தார்.
    • வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கனடாவில் ஓக்வில்லில் உள்ள மெக்டொனால்ட்ஸ் கடையில் இந்திய ஊழியர் ஒருவர் இனவெறி கருத்துக்களால் தவறாக நடத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    வீடியோவில் ஒரு இளைஞர் இந்திய ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, "உடனடியாக உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்.. அருவருப்பான இந்தியரே" என்று கூறுவது பதிவாகியுள்ளது.

    இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது கவலையை ஏற்படுத்தி வருகிறது.

    இதற்கிடையே இங்கிலாந்தின் ஓல்ட்பாரி நகரத்தில் கடந்த வாரம் 20 வயதுடைய இந்திய வம்சாவளி சீக்கிய பெண் சாலையில் நடந்துசென்றபோது 2 இளைஞர்கள் அவரை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த பெண்ணிடம் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என ஆக்ரோஷமாக கூறி உள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×