என் மலர்
உலகம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை சீனாவுடன் சேர்ந்து வங்கதேசம் கைப்பற்ற வேண்டும் - முன்னாள் ராணுவ தலைவர்
- வங்கதேச ரைபிள்ஸ் ராணுவ படையின் முன்னாள் தலைவர் ஆவார்.
- சீனாவுடன் கூட்டு ராணுவ அமைப்பை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் இந்தியா பாகிஸ்தான் இடையே ராஜாங்க ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வங்கதேச இடைக்கால அரசுத் தலைவர் முகம்மது யூனுஸுக்கு நெருக்கமானவரும் வங்கதேச ரைபிள்ஸ் ராணுவ படையின் முன்னாள் தலைவருமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான் கருத்து அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
பஸ்லூர் ரஹ்மான் தனது பேஸ்புக் பதிவில், "பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், இந்தியாவில் உள்ள 7 வடகிழக்கு மாநிலங்களையும் (அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் மிசோரம் ஆகியவற்றை) வங்கதேசம் ஆக்கிரமிக்க வேண்டும் என்று முகமது யூனுஸுக்கு பரிந்துரைத்துள்ளார்.
இதற்காக ராணுவ ஒத்துழைப்புக்கு வங்கதேசம், சீனாவை அணுக வேண்டும் என்றும் சீனாவுடன் கூட்டு ராணுவ அமைப்பை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்த வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் நிலையின்மை நீடித்து வரும் சூழலில், முன்னாள் ராணுவ தலைவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.






