என் மலர்
உலகம்

அகமதாபாத் விபத்து: ஏர் இந்தியா விமான பராமரிப்பில் தொடர்பில்லை என துருக்கி மறுப்பு
- இந்த குற்றச்சாட்டு தவறானது என்று துருக்கியின் தகவல்தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
- துருக்கிய நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாழக்கிழமை (ஜூன் 12) விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் பராமரிப்பில் துருக்கிய நிறுவனம் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை துருக்கி மறுத்துள்ளது. இந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில் துருக்கி மீதான குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தவறானது என்று துருக்கியின் தகவல்தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
துருக்கிய டெக்னிக் நிறுவனம் B777 ரக விமானங்களுக்கு மட்டுமே பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது என்றும், விபத்துக்குள்ளான Boeing 787-8 ரக விமானம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வராது என்றும் துருக்கி குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, ஒரு மாதத்திற்கு முன்பு ஆபரேஷன் சிந்துரின் போது பாகிஸ்தானுக்கு துருக்கியின் ஆதரவு காரணமாக, இந்தியாவில் ஒன்பது முக்கிய விமான நிலையங்களில் சேவைகளை நிர்வகித்து வந்த துருக்கிய நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.






