என் மலர்

  செய்திகள்

  அமெரிக்க அதிபர் டிரம்ப்
  X
  அமெரிக்க அதிபர் டிரம்ப்

  அமெரிக்க அதிபர் முன்னிலையில் வரும் 15-ம் தேதி இஸ்ரேல்-அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் வெள்ளைமாளிகையில் வைத்து வரும் 15-ம் தேதி இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  வாஷிங்டன்:

  1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக அரபு நாடுகளான எகிப்து,ஜெர்டான்,லெபனான்,ஈராக், சிரியா, பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. ஆனாலும், இஸ்ரேல் உடனான மோதல் போக்கு அதிகரித்து வந்தது.

  அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான ராஜாங்கம், வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்,1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.

  இதற்கிடையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகமும் இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது.

  இஸ்ரேலை தனிநாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காதால் இஸ்ரேல் பாஸ்போர்டை வைத்திருப்பவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய ஐக்கிய அரபு அமீரகம் தடைவிதித்திருந்தது. 

  இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே நேரடி விமான பபோக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளும் இல்லாமல் இருந்தது. 

  பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஐக்கிய அரபு அமீரகம்-இஸ்ரேல் இடையேயான மோதல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் 
  முயற்சியால் முடிவுக்கு வந்தது.

   ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் , டிரம்ப், பெஞ்சமின்

  இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. இதன் மூலம் ஜோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இஸ்ரேலுடன் 
  அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட அரபு நாடு என்ற பட்டியலில் அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு அமீரகம் தான்.

  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இரு நாடுகளும் தங்கள் உறவில் சுமூக நிலையை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளன.
  இதன் பயனாக இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையே விமானப்போக்குவரத்து நடைபெற உள்ளது. மேலும், முதலீடு,தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா, சுகாதாரத்துறை என பல்வேறுத்துறைகளில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

  இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அமைதி உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாக உள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் வரும் 15 ஆம் தேதி அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளைமாளிகையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது  பின் ஜாயித் அல் நஹ்யான் இந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதற்கிடையில், ’இஸ்ரேல்-அமீரகம் இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் பங்கேற்பதற்காக அடுத்த வாரம் நான் வாஷிங்டன் செல்ல உள்ளேன்’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று தனது டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

  வரலாற்று நிகழ்வான இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் இஸ்ரேல் மற்றும் இதர வளைகுடா நாடுகளுக்கு இடையே மேலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  Next Story
  ×