search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
    X
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

    இந்தியாவுக்கு இலவசமாக வென்டிலேட்டர்கள் வழங்கப்படும் - அதிபர் டிரம்ப்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொரோனாவை எதிர்த்து போராடி வரும் இந்தியாவுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நிற்கும் இந்திய மக்களுக்கும், பிரதமர் மோடிக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும்.

    கொரோனாவை எதிர்த்து போராடி வரும் இந்தியாவுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்பதை நான் பெருமையுடன் தெரிவிக்கிறேன் என்று அவர் கூறி உள்ளார். மேலும் அவர் கூறும் போது, “பிரதமர் மோடி எனக்கு மிகவும் நல்ல நண்பர் என்பது உங்களுக்கு தெரியும். கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற எதிரியை வீழ்ந்த இந்தியாவுக்கு அமெரிக்க உறுதுணையாக நிற்கும்.

    பிரதமர் மோடியுடன் அதிபர் டொனால்டு டிரம்ப்


    இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கிடைத்துவிடும் என்று நம்புகிறேன். தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது.

    இதில் இந்திய- அமெரிக்கர்கள் சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள். கொரேனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒரு குழுவை அமெரிக்க நியமித்துள்ளது. இக்குழு நூற்றுக்கணக்கான மில்லியன் டோஸ் மருந்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரிக்க உள்ளது.

    3 விதமான மருந்துகளை தயாரிக்க இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 10 மில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா ஒதுக்கி உள்ளது.”

    வென்டிலேட்டர் - கோப்புப்படம்


    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த மலேரியா தடுப்பு மருந்துகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தியா நடவடிக்கை எடுத்தது. இதற்கு இந்தியாவை டிரம்ப் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×