என் மலர்

  செய்திகள்

  அமெரிக்க மாட்டிறைச்சியை சுவைக்க ஆவலுடன் காத்திருக்கும் சீன மக்கள்
  X

  அமெரிக்க மாட்டிறைச்சியை சுவைக்க ஆவலுடன் காத்திருக்கும் சீன மக்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகின் மாட்டிறைச்சி அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக உள்ள சீனா 14 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது.
  பெய்ஜிங்:

  உலகில் மக்கள் தொகை அதிகமுள்ள சீனாவில் இறைச்சி உண்பவர்களின் மனதில் மாட்டிறைச்சி வேகமாக முதலிடத்தை பிடித்து வருகிறது. பன்றி இறைச்சியை அதிகமாக உட்கொண்ட சீன மக்கள், தற்போது அதற்கு தட்டுப்பாடு நிலவுவதால் பன்றிக்கு பதிலாக மாட்டிறைச்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

  அதிக புரதம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மாட்டிறைச்சியை விரும்புவதாக அந்நாட்டு அசைவ விரும்பிகள் தெரிவித்துள்ளனர். இதனால், சீன சந்தையில் மாட்டிறைச்சிக்கான தேவை அதிகரித்து வருகிறது.  கடந்த 2003-ம் ஆண்டு வரை சீனாவின் மாட்டிறைச்சி தேவையை அமெரிக்கா பெருமளவில் பூர்த்தி செய்து வந்தது. ஆனால், இரு நாடுகளுக்கு இடையே உள்ள பனிப் போரை மனதில் வைத்து, நோய்வாய்ப்பட்ட மாடுகளின் இறைச்சியை அமெரிக்கா ஏற்றுமதி செய்வதாக கூறி மாட்டிறைச்சி வர்த்தகத்தை சீனா துண்டித்தது.

  கடந்த ஆண்டில் மட்டும் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சீனா மாட்டிறைச்சியை இறக்குமதி செய்துள்ளது. இதனால், மூக்கு வியர்த்த அமெரிக்கா முன்னாள் மாட்டிறைச்சி வர்த்தக உறவை மீண்டும் புதுப்பிக்க சீனாவுக்கு தூது விட்டது. சீனாவிலும் மாட்டிறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளதால், வேறு வழியின்றி அமெரிக்காவோடு சீனா தற்போது கைகோர்த்துள்ளது.

  அமெரிக்க மாட்டிறைச்சி சுவையாகவும், தரமாகவும் இருக்கும் என சான்றிதழ் கொடுத்துள்ள சீன அசைவ விரும்பிகள் வாயில் எச்சில் ஊற இப்போதே காத்துக் கிடக்க தொடங்கிவிட்டனர்.
  Next Story
  ×